Thursday, September 02, 2004

பெரியார் சர்ச்சை

பெரியாரின் பெயரை வைத்து மறுபடியும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது ரா.கா.கி நண்பர்கள் மத்தியில்.

யாரோ ஒரு முகமூடி தனக்குப் பூணுல் மாட்டி விட்டு வேடிக்கை பார்த்து எழுதுவதாக ஆப்பு எழுதியபோது புலம்பிய நண்பர் திருமலை, அப்படி எழுதப்பட்டதற்கான காரணம் சரியென நிரூபித்து வருகிறார். எப்போது பிராமணர்கள் பற்றிய விமரிசனங்கள் முன் வைக்கப்பட்டாலும், கச்சை கட்டிக் கொண்டு இறங்கி, அவர்கள் ஏதும் செய்வதில்லை. அவர்கள் செய்வதை விட ஆதிக்க ஜாதியினர்தான் அதிகம் செய்கிறார்கள். அவர்கள் பாவம். என்று ஹூங்காரம் செய்கிறார்.

பிராமணர்களின் ஜாதி உணர்வு பெருவாரியாக இன்றில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது எல்லாம் ஆரம்பித்த இடம் எங்கே..??
வர்ணாஸ்ரம தர்மத்தை வேதங்கள் மூலம் உபதேசிக்க ஆரம்பித்தவர் யார்..??
இன்னமும் எண்ணிலடங்காத கொடுமைகளை, அரசர்களுக்கு தங்களிடம் இருந்த செல்வாக்கின் மூலமும், அதன் மூலம் தாங்கள் பெருக்கிய செல்வத்தின் மூலம், பரம்பரை பரம்பரையாக தாங்கள் திரட்டிய புத்திக் கொழுப்பை வைத்து பேயாட்டம் ஆடியதும், மறக்கக்கூடிய கடந்த காலங்களா..?? அவர்கள் உபதேசித்த ஜாதியை, ஜாதிபெருமையை ஆதிக்க ஜாதிகளின் மனதில் விதைத்து விட்டு " எங்கள் வேலை முடிந்தது" என்று ஓய்வெடுக்கிறார்கள் என்று நாமெல்லொரும் நினைப்பதற்கும் முகாந்திரமிருக்கிறது அல்லவா..??

திருமலையின் சட்டையை கயட்டி முப்புரி நூலும், முத்தணி மார்பும் தேடி, அவரை காய்ச்சுகிறேன் என்று அவர் சொல்வதற்கு முன்னால், என்னுடைய பிராமண நண்பர் ஒருவர் எழுதிய கவிதையை இங்கே தருகிறேன். அந்த நேர்மை எல்லார்க்கும் இருக்கிறதா..??

எச்சிலை முழுங்கினேன்!

தண்ணீர் தெளித்தவர்களிலிருந்து,
இரண்டு குவளை வைத்தவர்கள் வரை
கேள்வி கேட்கக் குரலெடுத்தேன்...
'பூணூலை உதறிவிட்டு வா' என்றொரு
குரல் எனக்கு ஆணையிட்டது.

இயற்கையை வணங்கவும்,
உலக அமைதிக்குப் பிரார்த்தனை செய்யவும்
சொல்லிக் கொடுத்தப் பூணூலை
எனக்குப் பிடிக்குமேஎன்று பதில் சொன்னேன்.
என் பதிலை ஏளனம் செய்து
பூணூலையும் அறுத்தனர் சிலர்.

ஆலயத்துக்குள் நுழையவும்,
தேரை இழுக்கவும் அனுமதி
மறுத்துவர்களைஅறைவதற்குக்
கையை ஓங்கினேன்...
'பிள்ளையார் சிலைக்குசெருப்பு
மாலை போடு' என்று ஒரு கை
எனது கையை முறுக்கியது.

பாலும் தேனும் கொடுக்காமலே
சங்கத்தமிழும் சந்தோஷங்களும்
தந்த தும்பிக்கை கணபதியைப் பிடிக்குமே
என்று பதில் சொன்னேன்.

எனது பதிலை நையாண்டி செய்து
என் கழுத்திலும் செருப்பு மாலை
அணிவித்தனர் சிலர்.

இந்தச் சிலரின் மீதுஎனது
வெறுப்பையெல்லாம் உமிழலாம்
என்று தயாரான தருணத்தில்
இன்று அவர்களின் வலியை
நான் உணர்ந்தாற்போல்,
எனது ரணங்களை
அவர்களின்வழித்தோன்றல்கள்
உணரக்கூடுமென்று நம்பி...

எச்சிலை முழுங்கினேன்.

- அருண் வைத்யநாதன்

ஜெயலலிதா பண்ணுகிற அட்டுழியங்களை, ஊழல்களை பேசும்போது "இவையெல்லாம் கருணாநிதி ஆரம்பித்து வைத்த திருக்காரியங்கள். இதை விட அதிகமாக பண்ணி இருக்கிறார் அந்தாள்" என்று ரிஷிமூலம் எல்லாம் பார்த்து கனஜோராய் பேசுகிற திருமலை, இதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்தவரை போல நடந்து கொள்வதேன் என்பது எனக்குப் புரியவில்லை.

உங்களுக்கு..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...