Friday, January 28, 2005

புதிய வலைப்பதிவர்களுக்கு

பல அடிப்படை விஷயங்கள் Blogger.com லேயே இருக்கிறது. புதிதாக வருபவற்றை தெரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்க்க முதலில் ஒரு யாஹூ குழுமம் இருந்தது. இப்போது வலைப்பதிவர் மேடை. ஆனால் யாஹூ குழுமத்தில் உள்ள பழைய இடுகைகளை கூட ஒரு முறை பார்த்து விடுவது நல்லது. சேர்த்த தகவல்களை, புதிதாக வரும் பதிவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்பினால் விக்கி க்குஅளிக்கலாம் - அங்கே எழுதலாம்.

எழுத்துரு, யுனிகோடு செயலி முதலான இடங்களுக்கு புது மாப்பிள்ளை முகுந்தராஜின் தமிழா.காம்.

எழுத்துரு மாற்றி மற்றும் பொங்குதமிழ் செயலியை பின்னுட்டப் பெட்டியில் செரும் முயற்சிகளுக்கு சுரதா.காம். உங்கள் வலைப்பூவை படித்துக் கொண்டிருக்கும் வாசகருக்கு, அந்த க்ஷணத்தில் தமிழ்மணத்தில் என்ன இடுகை வந்திருக்கிறது என்ற விவரமும் தர விரும்பினால், தர முடிவதாக ஒரு எளிய code block கொடுத்திருந்தார். இப்போது அந்த இடுகையை கானவில்லை. க்ளிக்குகளை மிச்சமாக்கும், ஜன்னல் அசைவுகளை குறைக்கும் உபயோகமான விஷயம் இது. அவர் விருப்பப்பட்டால் மறுபடியும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சமீபமாக ஒரு தமிழ் HTML editor ஐ உருவாக்கி, ராவணன் என்கிற பெயரிட்டு வெளியிட்டிருக்கிறார். Microsoft Frontpage போல மிக உபயோகமான செயலி அது. செயலியின் பேர் பலபேரை துன்புறுத்தி விட்டதோ என்னவோ, அற்புதமான அந்த செயலியும் சரியாக உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது.

ப்ளாக்கர் கமெண்ட் பாவிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்களின் வேலையை எளிதாக்க வெண்டுமானால், பாவிக்க வேண்டியது இது. இந்த முறையில் ப்ளாக்கர் கமெண்ட்டே தனி பெட்டிக்குள்/ pop-up க்குள் வரும். எனக்குத் தெரிந்து இந்த உபயோகமான வசதியை, உணர்ந்து அனுபவிப்போர் கொஞ்சமே. கோபியை பிடியுங்கள் இதற்கு. பின்னூட்ட வசதிக்கு ஹாலோஸ்கான் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் குறைந்த வரிகளே எழுத முடியும். அவ்வபோது மக்கர் பண்ணும்

போட்டோ போட்டால் பதிவு கொஞ்சம் ஜகஜகவென்று இருக்கும். எழுத்திலேயே அதைக் கொண்டு வர முடியுமானால் கேள்வி இல்லை. இதற்குத் தேவையும் இல்லை. நான் வெப்லாகிமேஜஸ்.காம் பாவிக்கிறேன். Basic Account ல் அத்தனை வசதி இல்லை. மாசம் இரண்டு டாலர் கொடுத்தால் Basic Plus Account. கொஞ்சம் வதியாக இருக்கிறது. ஹலோ.காம் உபயோகிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னை இங்கே தள்ளியது. ஹலோ.காம்மை வெற்றிகரமாக உபயோக்கிப்போர் பாலாஜியும், ரமணிதரனும். விவரம் வேண்டுவோர் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். மாயவரத்து மருமகள் தாரா இமேஜ்ஷாக்.யுஎஸ் என்ற தளத்தை உபயோகிக்கிறார். விவரம் வேண்டுவோர் அவரை தொடர்பு கொள்ளுங்கள். அதைப் போலவே picserver.org க்கு பரிசல் வினோபா கார்த்திக்.

உங்கள் குரலில் பேசியோ, பாடியோ, மிமிக்ரி செய்தோ ஒரு பதிவு போடவேண்டுமென்றால் ஆடியோப்ளாக்கர்.காம். நான் அதைத் தான் உபயோகித்தேன்.

Site statistics, hit counter எல்லாம் உபயோகமில்லாத வேலை என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அதில் ஒரு கிக் இருப்பது உண்மை. மேலும் துன்புறுத்தும் முகமூடி வாசகர்களை அடையாளம் கண்டுகொள்ள உபயோகப்படும். எக்ஸ்ட்ரீம் ட்ராக்கிங் தான் பாவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது Statcounter ம் பாவிக்கிறேன். இரண்டுமே உபயோகமாக இருக்கிறது. ( கிக்குக்கு எனக்கு வேறு சமாசாரம் இருக்கிறது :-) )

ப்ளாக்கில் வரும் விளம்பர வருவாயை வைத்து வீடு வாங்க விரும்புவோர் Adsense உபயோகிக்கலாம். நான் ஏற்கனவே இரண்டு வீடு வாங்கி விட்டேன். ஆனாலும் பணம் கொட்டுவது நிற்கவில்லை. :-) :-)

இத்தனை வசதிகள் இருந்தும் எழுத சேதி இல்லாவிட்டால் கதை கந்தல். வீட்டில் சன் டீவி / ஜெயா டீவி/ ராஜ் டீவி இணைப்பு கூட இல்லாமல் எழுத விஷயம் தேடி நான் அலைவதை தனியே ஒரு சோக நாவலாக எழுதலாம்.

வழக்கமாக இந்த இடங்களில் பொறுக்குவது வழக்கம்.

1. ராயர் காப்பி க்ளப், மரத்தடி, தினம் ஒரு கவிதை போன்ற மடலாடற்குழுக்களில்
2. npr.org , cnn.com, rediff.com, timesofindia.com ( samachar.com)

3. thatstamil.com, dinakaran.com, dinamani.com, tamil.sify.com, vikatan.com, thinnai.com

4. maraththadi.com - பழைய படைப்புகளுக்கு

5. சக வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகள்.

6. Hollywood/BlockBuster/ Kaveri Grocery ( Tamil-Hindi DVD ) - சினிமா விமரிசனங்களுக்காக.


இத்தனைக்கும் மேல் லொட்டு லொட்டென்று கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து தட்டுவதை தொந்தரவு பண்ணாத மனைவி மற்றும் மேனேஜர்.

இன்னமும் ஏதாவது புது விஷயங்கள் தெரிந்தால் என் பின்னூட்டப் பெட்டியில் பகிர்ந்து கொள்வதை விட மன்றத்தில் முழங்குங்கள் .

ஊருக்கு உபயோகமாக இருக்கும்.

1 comment:

  1. தமிழரசன்,

    வணக்கம். அது நானில்லை. அவர் பெயர் ரமேஷ்குமார். அவர் வலைப்பூ http://mayavarathaan.blogspot.com/
    மனநிலை சிகிச்சை எடுத்துக் கொள்ள ஒரு "தலைவீங்கி" யால் அறிவுறுத்தப்பட்டதில் இருந்து அவரைக் காணவில்லை.

    ஆனால் நானும் மாயவரத்தான்தான்.

    ஹி..ஹி..நானும் அவரும் ஒரே ஊர் என்று சொன்னேன்.:-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...