Monday, May 17, 2004

சதவீதக் கணக்கு
===============

தோற்றுப் போனபின் கருணாநிதி ஒவ்வொரு தரமும் சதவீதக் கணக்கு தருவது வழக்கம். அதையே இம்முறை அதிமுகவும் செய்திருக்கிறது. அதிக சதவிகித ஓட்டு பெற்றது அதிமுக என்று காட்டும் அவர்கள், காங்கிரஸ் பெற்ற 14 சதம் ஓட்டுக்களும் அவர்களுடைய தனித்த செல்வாக்கினால் பெற்றது என்று சொல்வார்களானால், அது நகைப்புக்கு உரியதே.

சப்பைக்கட்டு கட்டுவதில் கழகங்கள் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.


நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தனித்தனியாக எவ்வளவு சதவீதம் ஒட்டு பெற்று உள்ளது என்கிற புள்ளிவிவரம்:

அ.தி.மு.க - 29.77%

தி.மு.க - 24.6%

காங்கிரஸ் - 14.4%

பா.ம.க - 6.71%

ம.தி.மு.க - 5.85%

பா.ஜ.க - 5.07%

இ.கம் - 2.87%

வ.கம். - 2.97%

சுயேச்சை

மற்றவர்கள் - 7.76%


தூங்குபவர்களை மட்டும்தான் எழுப்ப முடியும். அப்படி நடிப்பவர்களின் போர்வையை உருவி, முகத்தில் தண்ணீர் வாளியை கவிழ்த்தால்தான் எழுவார்கள்.


மாறாதவை
==========

முந்தைய பதிவில் நான் உபயோகப்படுத்தியது முன்னர் எடுத்த புகைப்படம் தான். தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடுக்கபட்டதல்ல. ஆயினும், உபயோகப்படுத்த வைத்தது ஜெ யின் அறிக்கை. மாநில பிரச்சினைகளை முன் வைத்து சந்தித்த தேர்தல் இது என்று தமிழகமே அறியும். ஆயினும் தோற்ற பிறகு, "இதற்கும் மாநில பிரச்சினைகளுக்கும் சம்பந்தமல்ல" என்று கூசாமல் அறிக்கை விட்டிருக்கிறார். தவறுகளைத் திருத்திக்கொள்ளும் எண்ணம் அவருக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதை காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.
அப்படி இருக்கையில், முந்தைய ஃபோட்டோ மட்டுமல்ல, இந்த ஃபோட்டோவும், அவருக்கு என்றும் பொருந்தும் என்றே இதையும் பதிப்பிக்கிறேன்.


kevalam

Friday, May 14, 2004

பராக் ... பராக்
==============


FP


வர்றது யாருய்யா.... சோனியாவா...?? தேர்தல் ரிசல்ட் எஃபெக்ட்டா..??

இல்லப்பா..... இது நம்ம "அம்ம்ம்ம்...மா.."

நாப்பதுல இல்ல..நானூறுல தோத்தாலும் "இது" மட்டும் கொறையாது.


நாள்தோறும்

============

பெருக்கத்துவங்கி மின்விசிறி நிறுத்த
பகல்தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க
காபி தந்து காய்கறி நறுக்கி காலையில் கட்டடுக்க
தோசைக்கரைத்து முகம் கழுவி வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்கவைத்து
சமையல் செய்து பரிமாறி தரை துடைத்து
பாத்திரம் ஒழித்துப் போட்டு
பசங்களை படுக்கையில் விட்டு
மேயப் பாக்கி இல்லாத பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து, இருட்டில்
மாடியேறி உலர்ந்த துணியும், விரிப்பில்
வடகமும் மொத்தமாக சுருட்டிவந்து
வாசல் கதவடைத்து, கூடம் விளக்கனைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள் , பெய் என்றாள்.


(நன்றி : தினம் ஒரு கவிதை இணையக்குழு )


கவிதையை எழுதினவர் யார் என்று சொல்லத் தேவை இல்லை. கவிஞர், படிப்பவர்களை கடைசி வரிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறார்.... சரியான அறை.

சோகம் - இவர் இப்போது கவிதை எழுதுவது இல்லையாம்.

Thursday, May 13, 2004

மறுபடியும் நான்
===============

வெத்தலை போட்ட வாய் நம நம ன்னு இருக்கு...கொஞ்சம் ஏதாவது மென்னா தேவலை என்று எங்களூர் திண்ணைகளில் அடிக்கடி ஒரு வார்த்தையை கேட்கலாம்.

அது போல...

சரக்கு மாஸ்டராக இல்லை...சப்ளையராக கொஞ்ச நாள் அவதாரம் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.

என்ன செய்வது...சமைக்க நேரம் இல்லையே.......( திரிசூலம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

Tuesday, May 04, 2004

ரசனைக்குறைவு
============

பிரபலங்களை பார்த்தது பற்றி நான் எழுதிய பதிவு , பல எதிர்வினைகளை உண்டாக்கி, திண்ணை இணைய இதழ் வரை எதிரொலித்திருக்கிறது. என் பதிவில் தான் ரசித்த கமெண்ட்டை , காசி தன் பதிவில் எழுதியதும், அதை அங்கேயே எழுதப்பட்டதாய் நினைத்து ( லிங்க் கொடுக்க மறந்து) , மதுவந்தி என்பவர் திண்ணையில் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கட்டுரையை நேற்று திண்ணையில் தேடித் தேடி இளைத்தேன். நண்பர்கள் கண்டால் எனக்குச் சொல்லவும்.

மேற்படி விஷயத்தில் காசியின் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாளாவிருந்ததற்கு காரணம், எழுதுவது மட்டும் தான் என் வேலை என்று நினைத்ததால். நறுமணம் கமழும் என் மூக்கைப் போலவே அவர்களுக்கும் உண்டென்பதால். ஆனால் நேற்று காசியின் சமீபத்திய பதிவில், திண்ணைக்கு எழுதியதாய் அவர் சொன்ன அவர் விளக்கத்தைப் படித்த பிறகு, நான் என்ன நினைத்து அதை எழுதினேன் என்று சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

முதலாவது கழுவும் கமெண்ட் பற்றி சொன்னது நான் தான். சொன்னது 'பெரிசு' என்றாலும், அதை ஞாபகம் வைத்து என் பதிவில் போடுகிறேன் என்றால் என்னை அந்த அளவு பாதித்திருக்கிறது என்று அர்த்தம். எனவே அது என் கமெண்ட என்றுதான் கொள்ள வேண்டும். அதை 'ரஸனைக் குறைவு " என்று யாராவது சொன்னால் எனக்கு ஆட்சேபம் இல்லை. அப்படிப் பார்த்தால் சித்தர்களின் மெய்ஞானப் புலம்பல்களே ரசனைக் குறைவுதான்.

காதலில் கண்மண் தெரியாமல் , படிப்பை மறந்து அலையும் ஒருவனிடம் போய் காதலின் மேன்மையையும், மனிதனின் மிருக குணத்தை தெய்வீகமாக்கி அது பண்படுத்தும் மாயாஜாலத்தையும் , அழகியல் உணர்ச்சியோடு யாரும் பேச மாட்டார்கள். அப்படி பேசினால அது முட்டாள்தனம். அவனை அந்த உணர்விலிருந்து விடுவிக்க வேண்டுமானால் "நட்ட ... தொட்ட .... " என்றுதான் பேச முடியும். பேச வேண்டும். அழகியல் வேறு . யதார்த்தம் வேறு. இரண்டும் பின்னிப் பிணைந்தும், ஒன்றை ஒன்று மிகாமலும் போவது தான் வாழ்க்கை.

பிரபலங்களை,முக்கியமாக நடிகர்களை, தான் தந்த அவன் பிரபல்யத்துக்காக ஆராதித்து அவன் பின்னால் அலைந்து, நெக்குருகி, புல்லரித்து, புளகித்து அவன் பின்னால் அலையும் ரசிக மகா குஞ்சுகளின் மண்டையில் போட விழைவதே, அந்தப் பதிவின், முக்கியமாக, அந்த வாசகத்தின் நோக்கம்.

நோக்கம் நிறைவேறி விட்டதாகத் தான் தோன்றுகிறது.

Monday, May 03, 2004

அறிவிப்பு
=======

இறையருளால் எனக்கு கிட்டியிருக்கும் என் புதிய இல்லம் சம்பந்தமான பணிகளால், எனக்கு முன்புபோல உங்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்யும் 'பாக்கியம்' கிட்டாது என எண்ணுகின்றேன்.

எனினும் இயலும்போது எழுதுவேன்.

வேலைகளை முடித்து விட்டு விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...