
ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது
மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா நம்மளை எல்லாம் கூப்பிடறாங்களேன்னு.
படிக்கிறவங்களுக்கு அதை விட... :-) :-) :-)
தேடிச்சோறு நிதந்தின்று ...... ..... வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற பாரதியில் தெரிவது நம் எல்லாரிலும் துணுக்காய் தெரிகிறதோ என்றொரு எண்ணம். எல்லாருக்கும், மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.
கடவுள் படைப்பு ரகசியமே நாம் எல்லோரும் வியர்டாக, ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் பேசிக்கொண்டே இருக்கும் பையனுக்கு பேசா மடந்தையைப் பிடிக்கிறது. வெண்ணைக்கட்டி அழகிகளுக்கு பனைவெல்லத் தூண்களைப் பிடிக்கிறது. நெட்டைக் கொக்குகளுக்கு சுண்டுவிரல் சுந்தரிகளையும், பயந்தாங்கொள்ளி கோழைகளுக்கு நெஞ்சுர நாயகிகளையும் பிடிக்கிறது. இத்தனை வியர்ட் கலவைகளுக்கு பிறக்கின்ற வியர்டுகள் வியர்டாகத்தானே இருக்க வேண்டும்.
அதனால்தான் சாரு நிவேதிதா லூசு மாதிரி எழுதுகிறார். கலைஞர் ஜேகேவைக் கூப்பிட்டு முரசொலி விருது கொடுக்கிறார். அவரும் அதை வாங்கிக் கொண்டு தமிழ் சிஃபியில் உப்புத்தாள் குரலில் முழ நீளத்துக்கு சுகதேவுக்கு வழாவழா கொழ கொழா
விளக்கம் கொடுக்கிறார்.
அதனால்தான் உலகம் சுவாரசியமாக இருக்கிறது.
சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை விளையாட்டாகவும், விளையாட்டாக எடுத்துக் கொள்கிற விஷயங்களை சீரியஸாகவும், தினமும் ஆபிஸுக்கு வேறு வேறு பாதைகளில் போகின்ற விருப்பம் இருந்தாலும் செக்கு மாடு மாதிரி தெரிந்த ரூட்டிலேயே செல்வதையும், பெண்களுடன் ரொம்ப மரியாதையாக, கண்ணியமாக பழகுகிறவன் என்கிற மாதிரி நடந்து கொண்டு உள்ளுக்குள் அல்பத்தனமாய் நினைப்பதையும், டீ.ராஜேந்தர் சிட்டிபாபுவுடன் சரிக்கு சரி சவடால் விடுவதை திட்டிக் கொண்டே அந்த மாதிரி பஜாரித்தனம் செய்ய முடியாத தன் கோழைத்தனத்துக்காக ரகசியமாக குமைவதையும், சாப்பிடுவதில் அதீத ரசனை இருந்தாலும், " உணவை ரசித்து உண்பது பாவம். இந்த வெண்டைக்காய்க்காகவே மோர்க்குழம்பை நக்கி நக்கி சாப்பிடலாம் என்பது, அவ மாருக்காகவே அவளை லவ் பன்ணலாம் என்று சொல்வது போல குரூரமானது" என்று யாரோ ( பாலகுமாரன்???!!! ) சொன்னதற்காக கஷ்டப்பட்டு உணவு பற்றிய ரஸனை குறைந்து விட்டதாக காட்டிக் கொள்கிற அயோக்கியத்தனத்தையும், மாய்ந்து மாய்ந்து லவ்வி விட்டு அல்வாவியதும் அதற்காக கட்டுக் கட்டாக தன்னிரக்கக் கவிதைகளும் எழுதிவிட்டு தான் உண்மையாகத்தான் நேசித்தோமா என்கிற அறிவுஜீவித்தனமான ஆத்ம விசாரத்தையும், இணையத்தில் எப்போது நல்ல "கலர்ப்படங்கள்" பார்த்தாலும் லஜ்ஜையில்லாமல் My pictures ல் சேகரித்துக் கொள்கிற சபலத்தையும், தனக்கு எதிரியாயிருக்கிறவர்களின் திறமைகளை ரசிப்பதையும், ரொம்ப நெருக்கமானவர்களின் அருகாமையை அலட்சியமாக நினைப்பதையும் வியர்டு என்றெல்லாம் நான் நினைக்கவில்லை :-)
கட்டுப்பெட்டி சமத்துக் கடைக்குட்டியாக, மடிநாயாக வளர்க்கப்பட்டு, கல்லூரி சுதந்திரம் கிடைத்ததும் முதல் ஒன்றரை வருடம் அத்துமீறிப்போய் ஆட்டம் போட்டு விட்டு பயந்து போய் மறுபடியம் டே ஸ்காலராகி, சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்ததால் காதல் கத்தரிக்காய் என்று அலையாமல், கிடைத்ததும் அதிலும் நுனிப்புல் (சிறுவீட்டு மேய்ச்சல்!!!!! ) மேய்ந்து விட்டு, பிறகு சொந்த சாதியில் பந்தப்பட்டு பந்தாடப்பட்டு, எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு யாருக்காகவோ வாழ்வதாக பீலா விட்டுக் கொண்டு இருக்கும்
சர்...ர்ர்ர்ர்ரியான சராசரி.
நான் அதற்குமேல் எவ்வளவு பெரிய வியர்டு என்பது என்னுடன் புழங்குகிற புண்ணியாத்மாக்களுக்கு தெரியும்.
என் பெருமையை நானே எப்படி சொல்லிக் கொள்வதாம்.. !!!!!!!!!
நன்னி
மதி.இதுவரை கூப்பிடப்பட்டார்களா என்றெல்லாம் தெரியாது. நான் அழைக்க விரும்புபவர்கள் கீழே
சுந்தரவடிவேல்தங்கமணிடிசே தமிழன்மீனாக்ஸ்எம் கே குமார்