Monday, May 16, 2005

காஞ்சிக் கூத்துஎன்ன ஸ்வாமி இது..இடைத்தேர்தல் முடிவு இப்படி ஆய்டுச்சே..??

பரவால்லே கொழந்தே...!! ஜெயலலிதா தான் காஞ்சி காமாட்சின்னு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டா போறது..!! இவ்வளவு நாள் அரசியல் பண்றயே..இது தெரியாதா நோக்கு..?? என்னமோ போ..!!

Sunday, May 15, 2005

பொறி பறந்தது...

தமிழ்புத்தாண்டு விழா சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தால் மே 14 அன்று கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ்க்கை முறையை பெரிதும் விரும்புவது மனைவியரா..?? கணவன்மார்களா..?? என்றொரு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசினேன். நேடுநாள் கழித்து மேடையேறும் வாய்ப்பு என்றாலும், ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு பேசி விட்டேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.


அது சரி...தீர்ப்பு என்னாச்சு என்கிறீர்களா..?? எங்கள் அணியின் இரண்டாவது ஆசாமி திரு.இராதாகிருஷ்ணன் பேசிய பிறகு, நிகழ்ச்சி நடந்த பள்ளி அரங்கில் நெருப்புக்கான அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் பாதியிலேயே பட்டிமன்றம் முடிந்து விட்டது.

பொறிபறக்க பேசுவது என்பது இதுதானோ..??

Monday, May 09, 2005

இடைத்தேர்தல்...??

தமிழ்நாட்டுச் செய்திகளில் இப்போது முதலிடம் பிடிப்பது காஞ்சிபுரம்/ கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்தான். நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகள், வீடியோ ஆதாரங்கள், ஜே.எஸ்.ராவ் அறிக்கைகள் என்று துள் பறந்து கொண்டிருக்கிறது. போட்டி இடும் கட்சிகளில் ஒன்று மாநில ஆளுங்கட்சி. இன்னோன்று மத்திய அரசின் கூட்டணிக்கட்சி. கேட்கவா வெண்டும்..???

கருணாநிதி ஆட்சியில் இல்லாதபோது நடக்கும் எல்லா இடைத்தேர்தல்களிலும் இப்படித்தான் குற்றச்சாட்டுகள் கிளம்பும். தான் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்வோமோ, அதை எல்லாம் இவர்கள் செய்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இவர் ஓவராக சவுண்டு விட, பிரச்சினை தீப்பற்றி எரியும். இப்போதும் அப்படித்தான் நடக்கிறது என நினைக்கிறேன்.

அதற்காக ஆட்சியில் உள்ள அம்மாவும் லேசுப்பட்டவரில்லை. அவரும் எல்லா விதமான தேர்தல் தில்லுமுல்லுகளுக்கும் பேர் போனவர்தான். ஆனால் ஒன்று மட்டும் இவர்களுக்கு புரியவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பேர் இருந்தால், எத்தனைதான் கள்ள ஓட்டு போட்டாலும் தேர்தலின் முடிவை மாற்றி விடமுடியாது. வார்டு தேர்தல், மாநகராட்சி தேர்தல் போன்ற சிறிய அளவிலான தேர்தல் முடிவை மட்டுமே கள்ள ஓட்டினால் மாற்றியமைக்க முடியும். தவிரவும் உன்னிப்பாக பார்த்தால், மாற்றி மாற்றி கழககூட்டணிகளுக்கு வாய்ப்பளிக்கும் தமிழக மக்கள், ஓட்டு வித்தியாசத்தையும் கணிசமான முறையிலேயே தந்து, பெரும்பான்மையை கச்சிதமாக நிறுத்துகிறார்கள். ஆனாலும், எவ்வள்வு முடியுமோ, அவ்வளவு செய்யலாம் என்று இவர்கள் கட்டிப்புரள்கிறார்கள்.

அம்மாவுக்கு இது மானப்பிரச்சினை. ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் போனபிறகு, தன்னுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை எல்லாம் பெருமளவு குறைத்துக் கொண்டு, அதிகார மையத்துக்கு வேண்டப்பட்டவர்களாக கருதப்பட்ட காஞ்சிபுர சாமியார்கள் மீது நடவடிக்கை எடுத்து, நெடுநாள் தலைவலி வீரப்பனை வேட்டையாடி, ஆட்சி செய்து வருகிறார். இதில் அவர் தோற்றுப் போனால், அதை வைத்தே பொதுத்தேர்தல் முடிவையும் தீர்மானித்து விடுவார்களோ என்ற பயம் அவருக்கு. Bi- election , "bye" election ஆகி விடக்கூடாது என்ற பயம். நியாயமான பயம்தான். அவருடைய எதிர்பார்ப்பும் நியாயம்தான். அதற்காக அதை "Buy" election ஆக்க நினைக்க முடியுமா..??

தமிழ்த்தாத்தாவுக்கு வேறு பயம். இந்த இடைத்தேர்தல் முடிவு வேறு மாதிரியாகிப் போனால், கூட்டணிக்கட்சிகள் நம்பிக்கை இழக்கும். இதை வைத்தே ஆளுங்கட்சி, தற்போதைய எதிர்க்கட்சி கூட்டணியை உடைத்து, மள மள என வேலையில் இறங்கும். பொதுத்தேர்தலுக்குள் கூடாரம் காலியாகும். எஞ்சியுள்ள வாழ்நாளுக்குள், இன்னொரு முறை முதல்வர் பதவியில் இருந்து விட்டால், ஜே ஜே எனப் போய்ச்செர்து விடலாம். அது மட்டுமல்ல, புத்திரனுக்கு பதவியைக் கொடுத்துவிட்டு போன மாதிரியும் இருக்கும். இந்த சந்தர்ப்பம் வாய்க்கவிட்டால், ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கிடைப்பதும் ரொம்ப கஷ்டம். முதலாவது அம்மா. தலை விழுந்தவுடன் திமுகவை உடைக்க கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்து, உடையும் பாகத்தில் பெரிய பகுதியை லபக்கிக் கொள்ள வைகோ வேறு. எனவே எப்பாடு பட்டாவது, இதைப் பிடிக்க வேண்டிய கட்டாயம்.

ஆக இரண்டு பேருக்கும் இது இடைத் தேர்தல் அல்ல. கிட்டத்தட்ட கடைத்தேர்தல். பொதுத்தேர்தல்.

என்னைப் பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல. அடுத்த பொதுத்தேர்தலிலும் அதிமுக - குறைந்த வித்தியாசத்தில் - வெற்றி பெற வேண்டும். அதிமுகவின் வெற்றி ஜெவுக்கு தலைக்கனம் ஏற்றாமல் இருந்தால், இன்னமும் ஐந்தாண்டுகளுக்கு, இதைப் போலவே மன்னார்குடி வகையறாக்களின் பல் பிடுங்கப்பட்டு, அதிகார தரகர்களுளின் வாலும் வெட்டப்பட்டிருந்தால் , அவர் ஆட்சியே தமிழகத்திற்குத் தேவை. இந்த ஐந்தாண்டுகளுக்குள் மற்ற கட்சிகளின் நிலைமை ஏகப்பட்ட குழப்படிகளுக்குப் பின் ஓரளவு தெளிவாகி இருக்கும். சாதிக்கட்சிகள், பவுடர் கட்சிகள், தேசியக் கட்சிகள் எல்லாம் வெவ்வேறு கூட்டணிக் காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்து விட்டு, எல்லாருடைய வண்ணமும் தெரிந்திருக்கும் அந்நேரத்திற்கு.

எனவே இத்தேர்தல் குழப்பமில்லாமல், ஒழுங்காக நேர்மையாக நடந்து முடிய வேண்டும் என்பது இரு திராவிடக்கட்சிகளுக்கும் மிக முக்கியம். நியாயமாகப் பார்த்தால் இடைத்தேர்தல் என்பது diagnostics checkup மாதிரி. இதையே கோல்மால் பண்ணி வியாதியை மூடி மறைத்தால் பிறகு வேதனை தலைக்கு வரும்

புரியுமா இவர்களுக்கு...??

Tuesday, May 03, 2005

நிறமிழந்த வானவில்


ஆனை வந்தது முதலில்

அப்புறம் கலைந்துபோனது

குதிரை மீதில் ஒருவன்

கொஞ்ச நேரம் போனான்

பாட்டன் புரண்டு மல்லாந்தான்

பானை வெடிச்சு மரமாச்சு

அலையாய்ச் சுருண்டது கொஞ்சம்

மணலாய் இறைந்தது கொஞ்சம்

கணத்தில் மாறிடும் மேகம்

உண்மையில் எது உன் ரூபம்

மேகத்தைப் பற்றி மாலன் எழுதிய கவிதை, இந்த சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் பற்றிய என் அபிப்ராயங்களுக்கு உருவம் கொடுப்பது மாதிரி இருப்பது வெறும் தற்செயல்தானா..?? :-)

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...