Saturday, November 20, 2004

லேட்டா அடிச்ச ஷாக்

வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.

ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!

'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். மீனா..ம்ஹூம்..என்ன்மா இருந்த பொண்ணு...sintex Tank மாதிரி ஆயிட்டுது.

அந்தக் காலத்தில் குமுதத்தில் வந்த "கோஸ்ட்" ( கிருஷ்ணகுமார் - ரா.கி.ரங்கராஜன்..??) மற்றும் குங்குமம்/சாவியில் வந்த "துளசிதளம்" - எண்டமூரி வீரேந்திரநாத கதைகளும் எவ்வளவோ தேவலை. ராஜேந்திரகுமார் கூட " இயங்கினான்.இயங்கிக்கொண்டே இருந்தான்" என்று A சமாசாரங்கள் தூவி கொஞ்சம் பேய்க்கதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு சின்ன வயதில் எல்லாம் பேய்ப்படங்கள் பார்க்கும்போது பீதியில் பேதியே ஆகிவிடும். "நூறாவது நாள்" படத்தைக்கூட என் அண்ணனின் மடியில் படுத்துக் கொண்டேதான் பார்த்தேன்.

இத்த்னை அபத்தங்கள் இருந்தாலும் மேற்சொன்ன படத்தைக்கூட இரவில் பார்க்க ஆரம்பித்து, பாதியிலேயே அணைத்து விட்டு காலையில்தான் பார்த்தேன்.

அது சரி...பெயரென்ன "ஷாக்". மீனாவுக்கு ஷாக்..?? மீனாவால் பிரசாந்துக்கு ஷாக்..?? திரும்பி வந்த மஞ்சுவால் வாட்ச்மேனுக்கு ஷாக்..?? சரத்பாபுவுக்கு..?? தியாகராஜனுக்கு..?? அப்பாஸுக்கு..?? அப்பாஸ் அப்பாவுக்கு..??

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\meena010

எனக்கென்னவோ, இத்தனை குண்டா ஆயிட்டுதே மீனா..?? என்று "கர்ணன் பட நாயகி" மீனாவின் தாய்க்குலம், ராஜ்மல்லிகாவுக்குத்தான் ஷாக் ஆக இருந்திருக்கும்.

சீக்கிரம் மஹிளா காங்கிரஸ் பதவி இடம் மாறலாம்.

Friday, November 19, 2004

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்க வேண்டி இருந்திருக்கும்.

Thursday, November 18, 2004

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\is_p1

அட..அட..அட...

கலர் என்னமா மாறீட்டுது...

( முதல்வரோட பச்சை கலர், திருமதி ரஜினி புடைவையில்....அதைச் சொன்னேன்)

எப்படி கட்டுப்படியாகிறது...???

காரைக்குடி காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். சுப்ரமணியபுரம் சுகுமார் பில்டிங் அருகே உள்ள ஒரு ஷாப் கடையில் ( ஹி... ஹி..நடு செண்டர், க்யூ வரிசை மாதிரி) ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். 15 ரூபாய். வீட்டுக்கு கொண்டு வந்து இங்க் போட்டுவிட்டு, சட்டைபையில் செருகிக் கொண்டு காலேஜ் போனேன். போய் இறங்கியவுடன் பார்த்தால், பாக்கெட் எல்லாம் இங்க். என்னடா இது என்று டென்ஷனாகிப்போய், சாயங்காலம் மறுபடியும் அதே கடைக்குப் போய், " என்னங்க இது..?? நேத்துதான் உங்க கடையில பேனா வாங்கிப்போனேன். இப்படி ஒழுகுதே. இப்படி ஏமாத்தலாமா நீங்க..? " என்று நியாயம் கேட்க, அந்த வீணாப்போன கடைக்காரன் ஒரு முன்னாள் ரெளடியாம். கடையை விட்டு வெளியே வந்து ஓங்கி ஒரு அறை விட்டான். " என்னடா சொல்ற...?? ஏமாத்திட்டேன்னா..?? ஆமாம்..இப்ப என்னங்கிற..என்ன வேணா பண்ணிக்கோ.." என்றான் பாதகன். நேராக போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, பிரச்சினையாக்கிய பின், ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, புது பேனா கொடுத்தான். பின்னாளில் என் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியபோது கூட " என்னா மச்சி ..இப்படி விட்டுட்ட..ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கடையில பூந்து நாஸ்தி பண்ணி இருக்கலாமே" என்றார்கள். முக்கியமாய் எங்கள் "தலை" சகாயமணி. கேவலம் ஒரு பதினைந்து ரூபாய் பேனாவுக்காக, இத்தனை லொள்ளு பண்ணினான் அந்தக் கடைக்காரன்.

அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் குறித்து நண்பர்களிடம் இருந்து எத்தனையோ கேள்விப்பட்டு இருந்தாலும், நேற்று எனக்கு நிகழ்ந்ததை பார்த்தவுடன், என்னால் நம்பவே முடியவில்லை. மூன்றரை வருடங்களுக்கு முன் காஸ்ட்கோவில் ஒரு யுரேகா வேக்குவம் க்ளீனர் வாங்கினேன். இத்த்னை காலம் ஜம் என்று வேலை செய்து கொண்டிருந்தது. சமீப காலமாக கார்ப்பெட்டில் உள்ள குப்பைகளை சரியாக எடுப்பதில்லை. சரி..புதுசு வாங்க வேண்டியதுதான் என்று மார்க்கெட் வேட்டையை ஆரம்பித்தேன். இதற்கிடையில், யாரோ " காஸ்ட்கோவுக்கே கொண்டுபோனால், அவன் யுரேகாவுடன் தொடர்பு கொண்டு ஏதாவது செய்வான்" என்று சொல்ல, நேற்று எடுத்துச் சென்றேன். ரசீது இருக்கா என்று கேட்டவன், இல்லை என்றதும், என்னுடைய மெம்பர்ஷிப் ஹிஸ்டரியை கம்ப்யூட்டரில் பரிசோதித்து, அந்தப் பொருளை அங்கேதான் வாங்கி இருக்கிறேன் என்று ஊர்ஜிதம் செய்து விட்டு.......நம்பினால் நம்புங்கள்...அதன் மொத்த விலை மற்றும் வரியையும் சேர்த்து $150 ஐ எண்ணி என் கையில் வைத்தான். நம்பவே முடியாமல் திரு திரு என்று விழித்து விட்டு உடனடியாக அங்கேயே ஒரு புது வேக்குவம் க்ளீனர் வாங்கி விட்டு மப்பாகிப்போய் வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகுதான் மக்கள் சொன்னார்கள், காஸ்ட்கோவில் வாங்கும் - அனேகமாக - எல்லா பொருளுக்கும் Life time warranty யாம். வீட்டு உபயோக சாமான் லிஸ்டில் இங்கு கிடைக்காத பொருளே இல்லை எனலாம். costco வில் மேட்ரிமோனியல் சர்வீஸ் கூட ஆரம்பித்தால் தேவலை...ஹி ஹி..

இதன் தொடர்பில் சில அராஜகங்கள்:


1. January 2000: Kathleen Robertson of Austin Texas was awarded $780,000.00 by a jury of her peers after breaking her ankle tripping over a toddler who was running amuck inside a furniture store. The owners of the store were understandably surprised at the verdict, considering the misbehaving tyke was Ms. Robertson's son.

2. June 1998: A 19 year old Carl Truman of Los Angeles won $74,000.00 and medical expenses when his neighbor ran his hand over with a Honda Accord. Mr. Truman apparently didn't notice someone was at the wheel of the car whose hubcap he was trying to steal.

3. October 1998: A Terrence Dickson of Bristol Pennsylvania was exiting a house he had finished robbing , by way of the garage. He was not able to get the garage door to go up, because the automatic door opener was malfunctioning. He couldn't re-enter the house because the door connecting the house and garage locked when he pulled it shut. The family was on vacation, so Mr. Dickson found himself locked in the garage for eight days. He subsisted on a case of Pepsi he found, and a large bag of dry dog food. This upset Mr. Dickson, so he sued the homeowner's insurance claiming the situation caused him undue mental anguish. The jury agreed to the tune of half a million dollars and change.

4. October 1999: Jerry Williams of Little Rock Arkansas was awarded $14,500.00 and medical expenses after being bitten on the buttocks by his next door neighbor's beagle. The beagle was on a chain in it's owner's fenced-in yard, as was Mr. Williams. The award was less than sought after because the jury felt the dog may have been provoked by Mr. Williams who, at the time, was shooting it repeatedly with a pellet gun.

5. May 2000: A Philadelphia restaurant was ordered to pay Amber Carson of Lancaster, Pennsylvania $113,500.00 after she slipped on a spilled soft drink and broke her coccyx. The beverage was on the floor because Ms. Carson threw it at her boyfriend 30 seconds earlier during an argument.

6. December 1997: Kara Walton of Claymont, Delaware successfully sued the owner of a night club in a neighboring city when she fell from the bathroom window to the floor and knocked out her two front teeth. This occurred while Ms. Walton was trying to sneak through the window in the ladies room to avoid paying the $3.50 cover charge. She was awarded $12,000.00 and dental expenses.

7. And just so you know that cooler heads do occasionally prevail: Kenmore Inc., the makers of Dorothy Johnson's microwave, were found not liable for the death of Mrs. Johnson's poodle after she gave it a bath and attempted to dry it by putting the poor creature in her microwave for, "just a few minutes, on low," The case was quickly dismissed.

நண்பர் ஒருவர் அளித்த பின்னுட்டத்தில் இருந்து, மேலே குறிப்பிட்டவை
ஜோக் என தெரிகிறது. அதன் தொடர்பாக இதோ

Wednesday, November 17, 2004

மரத்தடி தந்த யோசனை

மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.

இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தது எது எனவும் கேட்டால், அந்தத் தகவலும் உதவும்.

இப்படிப்பட்ட தகவல்களை சேர்த்து வைத்தாலே போதும். படிக்கத் தோதான வலைப்பூக்களை தேர்ந்தெடுப்பதும், எப்படி மதிப்பிடுவது என்பதும், வாத்தியார் தேர்ந்தெடுக்க சொல்வதும் தேவை இல்லை. ஏனெனில், நாம் எழுதும் பல கட்டுரைகளை நாமே கால ஓட்டத்தில் மறந்து விட வாய்ப்பிருக்கிறது. கண்ணுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வைக்காவிட்டால் இணையத்தில் கோஷ்டி அரசியல் நடக்கிறது. முகமூடி கலாசாரம் தாங்கவில்லை. தனிமனித தாக்குதலும், ஜாதி சண்டைகளும் தான் நடக்கிறது என்று மேலோட்டமாக அறிக்கை விடுபவர்கள் சொல்வதுதான் உண்மை என்று எல்லோரும் நினைக்கும் அபாயம் இருக்கிறது.

மரத்தடி மடலாடற்குவில் கிடைக்கும் விஷயங்களை மரத்தடி.காம் சேகரித்து வைத்து இருப்பது போல, வலைப்பூக்களில் இருந்து தேர்நதெடுக்கப்பட்ட கட்டுரையின் சுட்டிகளை தமிழ்மணம்.காம் தளத்தில் வைக்கலாம்.

இந்த முயற்சிக்காக என் உழைப்பும் பங்களிப்பும் யார் கேட்டாலும், எந்த விதத்திலும் செய்கிறேன்.

Tuesday, November 16, 2004

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நிலம். அங்கே புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" என்று பாவேந்தரைத்தான் துணைக்கு அழைக்க முடியும்.

நிற்க. என் தமக்கைகளை வீட்டில் நன்றாக படிக்க வைத்தார்கள். ஆயினும் அதுவும் போதாமல் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கணவ்ர்களின் ஒப்புதலோடு தொடர்ந்து அஞ்சல் வழி கல்வி பயின்று, பிறகு அவர்களிடம் சண்டை பிடித்து வேலைக்கும் செல்லத் தலைப்பாட்டார்கள். பெணகளை வேலைக்கு அனுப்பவது கவுரவக் குறைச்சல் என்ற மனோபாவம் உடைய தன் கணவர்களை சமாதானப்படுத்தி, வேலைக்கு செல்ல என் சகோதரிகள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம்தான். வேலை செய்ய ஆரம்பித்து இத்தனை வருடம் கழித்து, அதனால் விளைந்த பொருளாதார, சமூக பயன்களைப் பார்த்து, தன் குழந்தைகளை பொறியியல் படிக்க வைத்தார்கள் என் சகோதரிகளின் வீட்டில்.

பொறியியல் படித்து முடித்து என் சகோதரியின் மகள் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். முன்னைபோல படித்து முடித்தவுடன் கல்யாணம் என்றில்லாமல் வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்க முயல்கின்ற பெண்களின் காலம் இது என்று என் சகோதரியும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து கூடத் தங்கிக் கொண்டு இருந்தார். A job is something which keeps you warm between college and marriage என்று பெண்களை பார்த்து பெரியவர்கள் சொல்கின்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
எல்லா பட்டதாரிகளுக்கும் ஏற்படுகின்ற சிரமங்கள் - வேலையில் முன் அனுபவம் - அவளுக்கும் ஏற்பட்டதால் வேலை கிடைக்காமல் NIIT கோர்ஸ் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்த இடைவெளியில், சரி வேலைதான் கிடைக்கவில்லை. நல்ல பையனாக பார்த்து கல்யானம் பண்ணிக் கொடுத்து விடலாம் என்று விளம்பரம் செய்த போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பழைய காலத்தில் சொல்லப்பட்ட (பெண்களின்) கல்யாணத் தகுதிகளோடு இப்போது பெண்ணுக்கு கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் வேலையும் குறைந்த பட்ச தேவையாகி விட்டது. கேட்பவர்கள் தங்கள் தகுதியைக் கூட அதற்கு முன் நினைத்துப் பார்ப்பது இல்லை. பெண்ணின் சுயசார்புக்காக நாம் உபதேசித்த படிப்பும், வேலையும் அவளுடைய சுதந்தரத்தை பாதித்து, அவள் தகுதியையே கீழிறக்குவது நல்லதற்கா, கெட்டதற்கா என்று தெரியவில்லை. வேலைக்குப் போவதும் , போகாததும் அவளுடைய இஷ்டம் என்றில்லாமல், இவையாவும் அவளாய் தேடிப் பூட்டிக் கொண்ட கொள்கின்ற
பொன் விலங்காய் ஆகிப் போகுமோ..??

ஏகத்துக்கும் எல்லாரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்க நேற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு நேற்று வேலை கிடைத்த செய்தி அறிந்தேன். இனி குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாள் அந்தக் குழந்தை.

இனி வருவார்கள் ....21 ஆம் நூற்றாண்டின் இளவரசர்கள் வரிசை வரிசையாய்.

Friday, November 12, 2004

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பணம் கொடுக்காமல் யாரோ பொருளை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதை சொல்லும் விதமாக பீப்.பீப் என்றது. ( சிங்கப்பூரில் உள்ள ஸ்டோர்களில் இது கொஞ்சம் சத்தமாகவே கத்தும். தொடர்ந்து கேட்டால் " ஓடறான். ஓடறான்." என்று கத்துவதுபோல் இருக்கும்)
உடனே கவுண்டர் அம்மணி, ஓடினாள். ஒரு மெக்ஸிகன் இளைஞன், இரண்டு தோள்களிலும் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு சர்வசாதாரனமாக நடந்து போனான். கவுண்டர் அம்மணி ஓடிவருவதிப் பார்ததும், சர்வசாதாரணமாக ஓவர் கோட்டை நெகிழ்த்தி, முழங்கைக்கும் சற்றே நீளமான கத்தியை எடுத்துக் காட்ட, கவுண்டர் அம்மணி, பேச்சடைத்து நின்று விட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மூச்சு நின்று விட்டது. அத்த்னை பெரிய பளபளப்பான வாளை சமீபகாலங்களில் நான் எங்கும் பார்த்ததில்லை. நல்லவேளை துப்பாக்கி வைத்துக்கொண்டு தாறுமாறாக சுட்டுவிட்டு ஓடியிருந்தால் என்ன ஆகி இருக்கும். "கடைக்குப் போனால் பர்ஸில் பனம் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று நெனைச்சுகிட்டு இருந்தேன். வாள் எடுத்துகிட்டு போனா போறும்போலிருக்கே " என்று திரும்ப காரில் வரும்போது மனைவியிடம் கமெண்ட் அடித்தாலும், கொஞ்சம் உதறலாகவே இருந்தது.

போலிஸுக்கு ஃபோன் பண்ணிவிட்டு, கவுண்டர் அம்மணி மறுபடியும் இரண்டு டாலருக்காக தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்தது தனிக்கதை.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...