எனது பள்ளிப் பருவத்திலே இருந்த நான், சாஸ்திரியின் அழைப்பை ஏற்ற லட்சக்கணக்காண இந்திய மக்களில் ஒருவனாகி, விரதம் இருக்க ஆரம்பித்தேன். சாஸ்திரி சொன்னபடியே உனவுப்பஞ்சம் மட்டுப்பட்டு, அமெரிக்க மிரட்டல் உதிர்ந்து போனது. ஆனால், போர் முடிந்த பின்னும் நான் விரதத்தை விடவில்லை. என்றாவது ஒரு நாள் அமெரிக்காவுக்கு உணவு உதவி புரியும் நிலைக்கு இந்தியா வரும். அன்று என் விரதத்தை விடலாம் என்று முடிவு எடுத்து , நாற்பது வருடங்களாக தைத் தொடர்ந்தும் வந்தேன்.
அந்த விரதம் சமீப காலத்தில் முடிவுக்கு வந்தது.
காத்ரீனாவால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உதவி தரும் முகமாக, இந்தியா இரு விமானங்கள் நிறைய உணவு/உதவிப் பொருட்களும், ஐம்பது மிலியன் பண உதவியும் வழங்கிய தருணத்தில், என் நாடு இத்தனை காலத்தில் வளர்ந்திருக்கும் வளர்ச்சியை நினைத்து ஆனந்தமாக என் விரதம் முடித்தேன்.
- விஜய் க்ராந்தி, டீன், ஐ.ஐ.டி மதராஸ்
ஃபுல்லா...அரிக்குதுபா
காலேஜ் நாட்களில் ஏரியா கமல் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படும் நண்பர் ஒருவர் இப்போது ஒரு மடல் அனுப்பி இருந்தார். இது உண்மையா என்றி ஐ.ஐ.டி பஸ் மண்டைகளோ அல்லது அந்தக்கால பெரிசுகளோ சொன்னாத் தேவலை.
ஊத்தல்னா பின்னூட்டம் ஏதும் கொடுக்க வேணாம். நண்பருக்கு மெயில் போட்டு தாக்குங்க :-) ஹி.ஹி.ஹி..
http://www.indiandownunder.com.au/forums/topic.asp?TOPIC_ID=2533
ReplyDeleteஇங்க கொஞ்சம் சரக்கு இருக்கு - இது சம்பந்தமா.
வித்தியாசமாக இருக்கிறது.
ReplyDeleteவிஜய் இருந்த விரதம் சுரேஷ்க்கு எப்படி தெரியும்? எதற்கும் உண்மையா என ஒரு மெயில் போட்டுக் கேட்டிருக்கிறேன்.