Monday, November 29, 2004

வெகுநாள் கழித்து.....

அப்படி ஒன்றும் பெரிய ஊர்சுற்றல் இல்லை கடந்த நான்கு நாட்களில். ஆயினும் குடாப்பகுதி வரை செல்ல வேண்டி வந்தது. சென்னையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் B1 விசாவில் வேலைவிஷயமாக வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, வசமாக Blade போட்டுவிட்டு, வந்ததற்கு Mysteryspot மற்றும் Santacruz Beach பக்கமாக ஒதுங்கிவிட்டு, வரும் வழியில் இரவில் CA-17 மலைப்பாதை வழியாக அவரை பயமுறுத்திக்கொண்டேகாரை ஒட்டிவந்து, தமிழ் வழக்கப்படி நண்பனின் வீட்டில் மாயவரத்தானால் "பாடல்" பெற்று வரும் சன் டீவி பார்க்க நேர்ந்தது. ( ஹப்பா...ஹப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய வாக்கியம்...)

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\img1040112020_1_1

சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து, பயங்கர ஒல்லியாகிப் போய், Glamour கூடினாலும், இன்னமும் அதே நக்கல். சுற்றிலும் அதே சப்பை பையன்கள்/பெண்கள். என்றாவது ஒரு நாள் இவர் சிட்டி பையன்கள்/பெண்களுடன் இதே மாதிரி உட்கார்ந்து, இப்படியே பேசி பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சாதாரண கோடை பெரிய கோடாக காட்ட, பக்கத்தில் சின்ன சின்ன கோடுகளை வரந்து காட்டும் பீர்பால் தந்திரம்தான் இதுவும். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் ஜூனியர் விகடன் கழுகு இந்த வாரம் ஸ்வர்ண்மால்யாவைப் பற்றி வெளியிட்டுள்ள செய்திகள் நினைவுக்கு வந்து நெருடியது. செய்திகள் உண்மையானால் எதற்காக இந்தப் பெண் இந்த மாதிரி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறது என்று தோன்றியது. சினிமா ஆசையா..?? புகழா..?? பணமா..?? எதை விரும்பினாலும் , அது கிடைத்தவுடன், உடனே தேடியது இதைத்தானா என்று சடாரென்று அலுப்பு வந்து அடுத்ததை தேடும் மானிட வாழ்க்கையின் அந்தமில்லா, அர்த்தமில்லா வேட்டை இந்தப் பெண்ணுக்கு, இத்தனை படித்த பெண்ணுக்கு தெரியாதா..?? அப்படியானால் படிப்பினால் என்ன பயன்...?? சோதனைச்சாலையில் பியூரெட்/பிப்பெட்டுடன் மல்லாடுவதும், கம்ப்யூட்டர் புரொக்ராம் எழுதுவதுடன் படிப்பு நின்று விடுகிறதா..???. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\402833416

மற்றபடி சன் டீவி அதே ஸ்டைல். எல்லாவற்றிலும் நடுநடுவே சம்பந்தமே இல்லாமல் சினிமா பாட்டு, இலவச தேங்காய் எண்ணெய் வழங்கும் பெஸ்ட் கண்ணா பெஸ்ட், என்று வியாபாரம் இன்னமும் கனஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மாறன் பிரதர்ஸ். சர்ச்சைக்குரிய எதையும் நான் பார்த்த வரையில் பார்க்கவில்லை.

சன் டீவி இணைப்பை கூடிய சீக்கிரம் துண்டிக்காவிட்டால், மாயவரத்தானுக்கு ரத்த அழுத்தம் கூடும். துண்டித்துவிட்டால் பாவம் அவர் வலைப்பூவில் என்னத்த எழுதுவார் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

பதில் - அவர் வலைப்பூவின் தலைப்பிலேயே இருக்கிறது.

Thursday, November 25, 2004

உடன்பிறப்பே...மகிழ்ச்சி...

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\TG

அமெரிக்காவில் நியூயார்க் மாநகரிலே வருடா வருடம் நன்றியறிவித்தல் தினத்தன்று ஒரு பேரணி நடக்கும். அண்ணாவும், நானும், பெரியாரும் நடாத்திய பேரணி போலல்லாமல், குழந்தைகள் மனத்தை கொள்ளை கொள்ளும் விதமாக நையாண்டி முக நாயகர்களும், நளின உடை நாரீமணிகளும் , அலங்கார ஊர்திகளும், வண்ண வண்ண பலூன்களும் அணிவகுத்து வரும். இரண்டே முக்கால் மைல் நீளமாய் வந்த அந்த பேரணியிலே, இன்று "ஷககலக்க பேபி,...ஷக்கலக்க பேபி " என்று தமிழன் இசையமைத்த பாட்டுக்கு மங்கையரும், காளையரும் இந்திய முறையில் நடனமாடி, உடல் குலுக்கி, ஆடிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழன் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடாமல், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பாடியது நயவஞ்சக நெஞ்சம் கொண்ட வடவரின் சதி என்றாலும், தமிழன் வரும் காலங்களில் அதையும் முறியடிப்பான் என்று கூறி , உன்னை நான் வாழ்த்துகிறேன் இந்த நாளில்.

- மு.க

( சொன்ன ஆள்தான் நம்ம ரீலு. நியூஸ் நெஜம்தானுங்க...வசுந்தரா தாஸ் வந்திருக்காங்க என்று எல்லே வில்லோன் சொன்னதுக்கும், இதுக்கும் ஏதும் லிங்க் உண்டுங்களா..?? ஹி..ஹி..)

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\v12


Wednesday, November 24, 2004

என்ன தேடறீங்க..??

C:\Thanksgiving

Thanksgiving Dinner ல் கட்டாயம் இடம்பெறும் ஐட்டங்கள் வரிசையில் வான்கோழிக்கும், பூசணி கேக்கிற்கும், சோளரொட்டிக்கும் பெரிய இடம் உண்டு. பொங்கல் அன்று பானையைப் போல், தீபாவளியன்று பட்டாசைப் போல், காரடையான் நோன்புக்கு கயிறு போல் ( அடை போல்..??!!) , இங்கே இன்று வான்கோழி.

இப்போ படம் புரிகிறதா... ?? டின்னர் டேபிளுக்கு போக பயந்து, வேறு டேபிள் லாம்ப் ஆக கோழி.

ஸார் கீழே தேடிக் கொண்டிருக்கிறார்.

Thanksgiving Holidays

அடுத்த நான்கு நாட்களுக்கு அமெரிக்காவில் விடுமுறை. இன்னொரு நீள்வாரயிறுதி. இன்னொரு Sale மேளா. இன்னொரு பரபரப்பு நெடுஞ்சாலைத் தினங்கள். வான்கோழியோடு விருந்துகள்.

இந்த விடுமுறையின் அர்த்தம் தெரிய வேணுமாயின்,

இங்கே க்ளிக் குங்கள்.

Happy Thanksgiving Holidays...!!!

Tuesday, November 23, 2004

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிமை உணர்வைத் தவிர, கிட்டத்தட்ட இங்கிருக்கும் மற்ற எல்லா அசெளகரியங்களும் எல்லா இடத்துக்கும் பொதுவானவையே. தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நம் மக்கள் தனித் தனி தீவுகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மன்றம், அஸோஸியேஷன் என்று வைத்துக் கொண்டால் சச்சரவுகள் இருக்கத்தான் இருக்கின்றன. கோஷ்டி கீதங்கள் இருக்கின்றன. இவையும் இங்கு காணப்படும் புதிய விஷயமில்லை. சுயமாய் சிந்திக்ககூடிய மக்கள் எங்கெல்லாம் கூடி ஒரு செயலில் ஈடுபடுகிறார்களோ அங்கெல்லாம் நிகழக்கூடிய இயல்பான உரசல்கள் அவை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கும் குழப்பம், தமிழில் தொடருவதா..தெலுங்கில் மாட்லாடுவதா.. இல்லை வடமொழியில் கழறுவதா என்பது வரையில் தொடர்கிறது. பார்ட்டிகளில் ஸ்டாக் மார்க்கெட்டைப் பற்றி பேசுகிறார்கள். பச்சை அட்டை கிடைக்காதவர்கள், prioriy date பற்றி பேசுகிறார்கள். வீடு வாங்கிய லோன் APR பற்றி பேசுகிறார்கள். "எப்ப ஊருக்கு போறிங்க. ஐடியா இருக்கா " என்று கேட்டால் மனிரத்னம் ஸ்டைலில் "தெரியலை" என்கிறார்கள்.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\prabanjan_with_kavithapub

பிரபஞ்சன் அமெரிக்கா வந்துவிட்டு ஊருக்குப் போய் ஆற்றிய ஒரு கேவலமான உரையின் சாராம்சத்தை வெங்கடேஷ் எடுத்துப் போட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு வருகிற 15-30 நாட்களில், அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு கருத்து, அதை சரியாகக்கூட அலசிப் பார்க்காமல், ஊருக்குப் போய் மற்றவர்களிடம் இந்த பிமபத்தை பற்றி பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது "கொல்" என்ற சிரிப்புச் சத்தம் எழ ஒரு பேருரையை நிகழ்த்தி இருக்கிறார்.

//அமெரிக்கத் தமிழர்களில் பலர் 30 வருடக் கடன்காரர்கள். வீடு, கார் ஆகியவற்றுக்கு அவர்கள் வாங்கும் 30 ஆண்டுக்கடன், அவர்களைத் திரும்பி வரவே விடாது //

திரும்பி வரவேண்டும் என்று விரும்பி விட்டால், வீடு, கார் ஆகியவற்றை விற்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும், அது எத்தனை எளிது என்பதையும், அத்ல் எத்தனை லாபம் வரும் என்பதையும் யாராவது பிரபஞ்சனுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஒரு நான்கு வருடம் வாங்கிய வீட்டில் இருந்து விட்டு , பிறகு அதை விற்றால் போதும், ஊருக்கு வந்துவிட்டு பிறகு ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

//பெரும்பாலான தமிழ் வீடுகளில், வாரத்திற்கு ஒரு முறை சமைக்கிறார்கள். சனிக்கிழமை இரவு. அதையே அடுத்து வரும் மூன்று நான்கு நாள்களுக்கு வைத்துக்கொண்டு ஓட்டிவிடுகிறார்கள்.//

தினசரி சமைக்க வேண்டும் என்று எந்த ஸ்மிருதியில் எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணுக்கு சமையல்அறையில் இருந்தும், பிள்ளைபேறிலிருந்தும் விடுதலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள் பிறந்த மண்ணில்தான் இவரும் பிறந்திருக்கிறார் என்று நினைக்கவே ஆச்சரியமாயிருக்கிறது. அது சரி...இரண்டு பேரும் வேலை பார்க்கும் சென்னை இல்லங்களில் நிதமும் சமைக்கிறார்களா என்ன..?? பாதி நேரம் Eat-out என்கிறான் தோழன்.

//சமீபத்திய பெரிய சீரழிவு, சன் டிவி. //

சன் டீவி கட்டாயம் இல்லிங்கோவ். இலவசமா கனெக்ஷன் குடுக்கறதில்லை. வேணுன்னா பாக்கலாம். என் வீட்டில் இல்லை. வேலியிற போற ஓணாணை எடுத்து ..சரி சரி..புரியும்.

// நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை //

ஹெஹ்..ஹெஹ்..ஹே....!!!

//அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது //

இதை சென்னவர்தான் இதையும் சொல்லி இருக்கார். நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

1950, 60களில், அந்தணர்கள் படித்தவிட்டு, அமெரிக்காவுக்கு முதலில் குடிபோனார்கள். அவர்களைத் தொடர்ந்து, 70களில், அந்தணர்கள் அல்லாத பிற முற்பட்ட வகுப்பினர் - முதலியார்கள் போன்றோர் - குடியேறினார்கள். அதன் பின்னரே, பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குடியேறினார்கள்.

//நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்//

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி நவீன இலக்கியவாதிகளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எல்லாருக்கும் அவர்களைத் தெரிகிறது. இல்லையா எழுத்தாளர் ஸார்...??

அமெரிக்கா ஒரு பரந்த நாடு. குடியேறிகளின் நாடு. திறமையும், வாக்கு வன்மையும், adaptability யும் இருந்தால் இங்கு கனஜோராக இருக்கலாம். இந்தியர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். எத்த்னையோ துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். மூன்றாவது பெரிய/ வசதியான
வந்தேறி சமூகம் என்று குறுகிய காலத்தில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதி நாள்களில் உழைத்த உழைப்பை பார்த்து விட்டுத்தான், இன்னமும் குறைந்த விலையில் இந்த அறிவை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே என்று வேலைகள் கடல்தாண்டி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தியாவின் அந்நியச்செலாவணி கூடி இருக்கிறது GDP அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களை இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு பகுதி காசில்தான் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

நாமக்கல் ராஜா எழுதியதைப் படித்ததும் தோன்றிய விஷயங்கள் இவை. அது சரி...அந்துமணி கமெண்டைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே என்று கேட்கிறீர்களா...

ஸாரி... அந்துமணிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை...டைம் வேஸ்ட்.

Monday, November 22, 2004

எல்லே ராம் - யார்..??

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Ram_CloseUp3

தட்ஸ்டமில்.காம் என்கிற தமிழ் வலைப்பக்கத்தில் நைட் எஃபக்ட்டில் ஏஞ்சல் ராமச்சந்திரன் என்று(ம்) அழைக்கப்படும் எல்லே ராமின் பேட்டிக்(?)கட்டுரை.


C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\la-ram300

அன்றும், இன்றும் - அவரே -

ச்சே..காலம்தான் எத்தனை குரூரமானது - ஆள் இப்படி மாறிட்டாரே...

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வேறு நிலைகளை கற்பித்து,
நீ கழிப்பறையை சுத்தம் செய், நீ கொல்லையில் வேலை பார்த்து, மாடு கன்றுகளை பார்த்துக் கொள். நீ வீட்டை நிர்வகித்து , வியாபாரம்
பார்த்துக் கொள். நான் பூஜை செய்து, ஊருக்கு கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளேயே பல்வேறு நிலையில் உள்ளவர்களை நீங்கள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மேலானவாக இருந்து நான் மேய்த்துக் கொள்கிறேன் என்றார்கள். பூஜை செய்தவர்களுக்குள் புகுந்த புல்லுருவிகள், பின்கட்டுக்காரர்களை இன்னமும் அடக்கி வைக்க என்னென்ன வழிகள் உண்டோ, அத்தனைக்குமான காரணங்களை வீட்டு உறுப்பினர்களின் கடமை/விதிமுறைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட புத்தகத்தில் புகுத்தினர். பின்கட்டுக்காரர்களில் பிழைக்க விருப்பிய புல்லுருவிக் கூட்டமும், பூஜை செய்தவர்களை அண்டிப் பிழைத்தால், தாங்கள்
பின்கட்டுக்காரர்களிடையே சண்டியர்த்தனம் செய்யலாம் என்று யோசிக்க, வழக்கம்போல ஒற்றுமையின்மை குடிகெடுக்க, காலம் உருண்டோடியது. பூஜைக்காரர்கள் தங்களுக்குள்ளேயே சிலரை பூஜைக்காரியங்களுக்கும், கற்பிக்கும் வேலைக்கும் அமர்த்திவிட்டு, அவர்களில் ஒரு தலைவரை ஏற்படுத்திவிட்டு வெளிவிவகாரங்களில் கவனம் செலுத்தலாயினர். அவர்கள் வேறு வேலை செய்தாலும், தாங்கள் இன்னார்...இன்னது செய்து கொண்டு இருந்தோம் என்பதற்கு அடையாளமாக பூஜைக்காரியத் தலைவரை அடையாளப்படுத்தி வைத்திருந்தனர். அவ்வப்போது முன்கட்டுக் காரர்களிடையே பின்கட்டுக்காரர்களுக்காக பரிதாப்படுபவர்களும் ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த வாழ்வு இனி ஏலாது என்று பின்கட்டுக்காரர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி வேறு வீடு செல்லவும் விழைந்தனர். கடைசியில் ஒரு நாள், பூஜைக்காரர்களிடையே, பூஜை ரூமுக்குள்ளேயே நடந்த தகாத காரியங்கள் வெளிவந்தன. இத்தனை நாள் உயர்வென்றும், தெய்வீகமென்றும், தங்களுக்கு உரியதும், உகந்ததும் ஆகும் என்று சொல்லி கற்பிக்கப்பட்ட ஒரு விஷயத்தில் நடந்த அநியாயம் கண்டு பின்கட்டுக்காரர்கள் எள்ளி நகையாடினார்கள். தங்கள் மேன்மையை உணர்த்துவதற்கான அடையாளமாக தான் வைத்திருந்த ஒரு அமைப்பின் முகம் கிழிந்தது கண்டு கொதித்தார்கள் பூஜைக்காரர்கள். " இத்தனை கேள்விகள் இங்கே கேட்கிறாயே..பக்கத்து வீட்டு மனிதர்கள் இவ்வளவு அநியாயம் எல்லாம் செய்தார்களே...அங்கு போய் கேட்க முடியுமா..?? என்று கேட்கிறார்கள்.

தன் வீட்டுக்குள் இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு, அந்நிய வீட்டானைப் பற்றி என்ன சொல்ல...?? தாங்கள் இழந்த தங்கள் வீட்டின் உரிமையை, தங்களுக்கு தகுதி அதிகமாக இருக்கிரது என்று தாங்களே சொல்லிக் கொண்ட ஒரு கூட்டம் தவறிழைத்த பிறகும் விட்டுக் கொடுத்து விட்டு பஜனை பாடிக் கொண்டிருக்க முடியுமா..?? இனி வேறு எந்த வெளிக்கூட்டம் வந்து இதே வேலையை செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்பக்கூடாது என்பதற்காக, இந்தக் கூட்டம் செய்த வேலையை பின்கட்டுக்காரர்கள் தோண்டித் துருவி அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள்.

( சங்கராச்சாரி- யார் என்ற பேட்டிக்கட்டுரையிலிருந்து - கீழே ஒரு பகுதி - நன்றி. பி.கே. சிவகுமார்)

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சின்னக்குத்தூசி: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

முடியுமா என்று கேட்கும் நண்பர் அருணுக்கு என் பதில் தேவையா என்பதுதான்....!!!

மற்றபடி நான் சன் டீவி பார்க்கவில்லை. அவற்றில் உள்ள விமர்சனப் பிரசாரம் எந்த அளவு என்பது எனக்குத் தெரியாது. சன் டீவி இந்துக்களின் பிரச்சார பீரங்கியல்ல. தன் பிழைப்பை இன்னமும் வளப்படுத்த விரும்பும் ஏமாற்றுக்காரர்களில் இன்னொரு பகுதி அவர்கள்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...