சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து, பயங்கர ஒல்லியாகிப் போய், Glamour கூடினாலும், இன்னமும் அதே நக்கல். சுற்றிலும் அதே சப்பை பையன்கள்/பெண்கள். என்றாவது ஒரு நாள் இவர் சிட்டி பையன்கள்/பெண்களுடன் இதே மாதிரி உட்கார்ந்து, இப்படியே பேசி பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சாதாரண கோடை பெரிய கோடாக காட்ட, பக்கத்தில் சின்ன சின்ன கோடுகளை வரந்து காட்டும் பீர்பால் தந்திரம்தான் இதுவும். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் ஜூனியர் விகடன் கழுகு இந்த வாரம் ஸ்வர்ண்மால்யாவைப் பற்றி வெளியிட்டுள்ள செய்திகள் நினைவுக்கு வந்து நெருடியது. செய்திகள் உண்மையானால் எதற்காக இந்தப் பெண் இந்த மாதிரி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறது என்று தோன்றியது. சினிமா ஆசையா..?? புகழா..?? பணமா..?? எதை விரும்பினாலும் , அது கிடைத்தவுடன், உடனே தேடியது இதைத்தானா என்று சடாரென்று அலுப்பு வந்து அடுத்ததை தேடும் மானிட வாழ்க்கையின் அந்தமில்லா, அர்த்தமில்லா வேட்டை இந்தப் பெண்ணுக்கு, இத்தனை படித்த பெண்ணுக்கு தெரியாதா..?? அப்படியானால் படிப்பினால் என்ன பயன்...?? சோதனைச்சாலையில் பியூரெட்/பிப்பெட்டுடன் மல்லாடுவதும், கம்ப்யூட்டர் புரொக்ராம் எழுதுவதுடன் படிப்பு நின்று விடுகிறதா..???. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
மற்றபடி சன் டீவி அதே ஸ்டைல். எல்லாவற்றிலும் நடுநடுவே சம்பந்தமே இல்லாமல் சினிமா பாட்டு, இலவச தேங்காய் எண்ணெய் வழங்கும் பெஸ்ட் கண்ணா பெஸ்ட், என்று வியாபாரம் இன்னமும் கனஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மாறன் பிரதர்ஸ். சர்ச்சைக்குரிய எதையும் நான் பார்த்த வரையில் பார்க்கவில்லை.
சன் டீவி இணைப்பை கூடிய சீக்கிரம் துண்டிக்காவிட்டால், மாயவரத்தானுக்கு ரத்த அழுத்தம் கூடும். துண்டித்துவிட்டால் பாவம் அவர் வலைப்பூவில் என்னத்த எழுதுவார் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
பதில் - அவர் வலைப்பூவின் தலைப்பிலேயே இருக்கிறது.
No comments:
Post a Comment