Tuesday, September 21, 2004

பன்னீரைப் போற்றுதும்....

19050201

அடியவரை முன்னிறுத்தி ஆண்டவனைக் கண்ட
வடிவழகி ஆண்டாளைப் போல - விடியுமென்று
வென்னீரை காலிலே ஊற்றித் துடித்திருந்த
பன்னீரைப் போற்றுவோம் வா..!!

கள்ள மறிந்திடார் கண்களால் நன்மை செயும்
உள்ளத்தைக் காட்டி உணர்வுகளை மூடியே
வாளின் நுனிமீது வீற்றிருந்த வல்லவர்தம்
தாளினைப் போற்றுவோம் வா.!!

கண்கள் திறந்திருக்க காதுகளில் கெட்குமொலி
அன்னையின் நாமமென ஆசையாய்ச் சொல்லி
மரபுதனை மீறாமல் மாத(ம்) ஐந்து ஆண்ட
துறவியைப் போற்றுவோம் வா..!

இன்னும் பலவாறாய் ஏதேதோ சொல்லிநாம்
பின்னிப் புகழ்ந்தாலும் பற்றாது - எண்ணியதைச்
சொல்லாமல் விட்டாலும் சோர்வினைக் கொள்ளாத
நல்லோரை நாடுவோம் வா.


பதவியை பாதுகாத்து, அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, பவ்யமாய வெளிவந்த பன்னீரை தமிழகம் மறந்து விடுமோ என்று கவிஞர் சின்னக்கண்ணன் "என் பாட்டுடைத் தலைவன்" என்ற தலைப்பில் தினம் ஒரு கவிதையில் கவி பாடினார். ரொம்ப வித்தியாசமான கருப்பொருள் என்று தெரிவு செய்து சேமித்து வைத்திருந்தேன். ஜெயலட்சுமி "குண்டு" வெடித்திருக்கும் இச் சூழ்நிலையில் சின்னக்கண்ணன் மறுபடி கவிதை எழுதுவாரோ என்னவோ... என் பங்குக்கு ஒரு நாலு வரி....

பொட்டி கொடுத்தேன் என்று சொல்கிறாயே ஏட்டி..
கட்சிக்குள்ளெ இரண்டாமிடம் பிடிக்க ஏகப்பட்ட போட்டி
அந்தக் கழக ரத்தங்கள் கூடி கொணர்ந்ததிந்த குட்டி
விட்டதய்யா பன்னீரை மாட்டி...

( ஹி.ஹீ.. சிலம்பரசன் அப்பா எங்க ஊருதான்......)

18201311

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...