==========
பள்ளிஇறுதி முடிக்குமுன்னே
கீரைக்காரி பெண்ணுடன்
ஓடிப்போன கோபாலையும்,
ஷட்டில்காக் ஆடும்போது
பாத்ரூமை விட்டு வெளிவந்த
பத்ரி அக்கா கன்னத்தின்
சிகரெட்டு வாசனையும்
கோயிலில் பெண்ணின்
பின்புறத்தில் கிள்ளிய
கிழவனின் முகத்தையும்
பிரசவத்துக்கு உதவிக்கு வந்த
மச்சினியையே தாயாக்கிய
குருசாமி சாரையும்,
தாய் வயசு பெண்மணியை
ஓடும் பஸ்ஸில்
தேய்த்து நின்ற வயசுப்
பையன் சிவதாணுவையும்
·பாரின் போன
மாமன்காரன் வரும்
வரைக்கும்
சின்ன முதலாளியை
துணைக்கு வைத்த
சொக்கந்தெரு
செல்லம்மாளையும்
காலேஜ் டூருக்கு
கொடைகானல் போய் விட்டு
'பொட்டலம்' தேடிய
கோவிந்தனையும்
புரமோஷன் வேண்டுமென்று
இருக்கும் ஆபிசரைப் பற்றி
'மொட்டை' போட்ட சேகரையும்
நினச்சாலே ....
கலங்கிப் போவுது
மனசெல்லாம்.
கடவுள் பயம்
இருப்பத்தால்தான்
இதையெல்லாம்
நான்
சொல்லுபவனாக
இருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment