Thursday, March 11, 2004

வயசுப்பசங்க சமாச்சாரம்
=========================

நிஜவாழ்க்கையில் இல்லையென்றாலும் சினிமா பார்த்துத்தான்
பாடல்கள் அறிமுகமாகியது. அதுபோலத்தான் லவ் சீன்களும்,
சண்டைக்காட்சிகளும் கவர்ச்சி ஆட்டங்களும்.
சண்டையும் , பாடல்களும் யதார்த்தத்தோடு ஒட்டவில்லை
என்கிற நாம் மற்ற இரண்டையும் அப்படி நினைப்பதில்லை.

காரணம் படைப்பு ரகசியம்.

மேற்சொன்ன இரண்டில் காதல் கூட காஸ்ட்லி. இறங்கும்
வரைதான் ஜாலி. ஆனால் மற்றையது இருக்கிறதே...அதைப்
பற்றித்தான் இந்தப் பதிவு.

மும்பையில் தங்கி இருந்த போது என் காலேஜ் நண்பன் அலுவலக
விஷயமாக செம்பூர் வந்திருந்தான். பப்ஸ் என்று அழைக்கப்படுகிற
அவன் சரியான பழம். காலேஜ் நாட்களில் தானுண்டு , தன் புக்ஸ்
உண்டு என்று சுற்றி வந்த அப்பாவி. அந்த 'அப்பாவி' மும்பையில்
என்னைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி.." இங்க எங்க டான்ஸ்
பார்க்கலாண்டா..?? " சிவனே என்று இருந்த என் உடம்புக்குள்ளும்
ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்ய, தகவல் திரட்டினோம். யாரிடம்
கேட்பது என்று கூடத் தெரியவில்லை. கேட்டால் போலிஸ் பிடிச்சுக்குமோ
என்ற பயம். கடைசியா கொலாபா என்ற இடத்தில் Blue Nile என்பது
கொஞ்சம் டீசண்டான இடம் என்று தெரிந்தது. 'தடக் தடக் என்று மனசு
அடித்துக் கொள்ள, டாக்ஸி பிடித்துப் போய் இறங்கினோம். இது நடந்தது
1993 ல்.

அக்மார்க் திருட்டு முழியோடு வாசலில் சில விடலைகள் காத்திருக்க,
தலைக்கு 200/- கொடுத்து உள்ளே போனோம். அடுத்த 1.5 மணி நேரம் ஒரே
குஜால் தான். அரைகுறை ஆடைகளில் , மேடையை ஒட்டிய மாடிப்படியின்
வழியே இறங்கி வந்த பெண்கள் இருப்பதையும் கயட்டி விட்டு ஒரு மாஜிக்
நொடி வெளிச்ச உதறலில் , கடைசி வஸ்திராபரணத்தியும் துறந்து
பர்த்டே ட்ரஸ்ஸில் போஸ் கொடுக்க , வெளியே வந்த எங்களுக்கு ஜன்ம
சாபல்யம். காட்டமாக ரம் அடித்துவிட்டு , சமர்த்தாக ரூமில் வந்து படுத்துக்
கொண்டோம்.

அடுத்த தரிசனம் பாண்டிச்சேரி மாஸ் ஹோட்டலில். நெக்ஸஸ் கம்ப்யூட்டர்
கம்பெனியின் Training அவ்வபோது வரும். தலைமை அலுவலகம் பாண்டியில்
இருப்பதால், 10 நாட்கள் அங்கே சற்குரு ஓட்டலில் தங்கி க்ளாஸ் போக வேண்டும்.
பகலில் க்ளாஸ் , இரவில் Glass. தண்ணி அடித்து அடித்து போர் அடித்துப் போக,
தமிழ் நாட்டில் ஒர்ரே இடத்தில் கலாசார நடனம் ( அதாங்க ...காபரே...) நடத்த
அனுமதி பெற்ற மாஸ் ஹோட்டலில் காபரே பார்த்தோம். இது blue nile அளவுக்கு
வரவில்லை. ஒருவேளை முதல் அனுபவமாக இல்லாமல் போனதாலோ என்னவோ..??

இதுதான் இந்தியாவில்.

கடல் கடந்து செய்த காலித்தனங்களை நாளை எழுதுகிறேன்.

பி.கு1 :

வலைப்பூக்களில் அந்தரங்கத்தொனி இருக்க வேண்டும் என்று மாலன் சொன்னதற்கும்
இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...வ்.


பி.கு 2 :

என் ஆயுசிலேயே அதிகமான தட்டச்சுப் பிழைகளை திருத்தியது
இந்தப் பதிவில்தான். சரோஜாதேவி புத்தகங்களின் ·ப்ரூப் ரீடர்களை
திட்டிக்கொண்டே படித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...