Thursday, March 18, 2004

ஜய ஜய சங்கர....???
==============

அரசியலும் மதமும் கலக்கவே கூடாது. அதைப்போல அபாயகரமான கலவை
எங்கும் கிடையாது என்று எல்லாரும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.ஆனால்
இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. காபூலில் இஸ்லாமிய
சட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சி புரிந்த தலிபான்களை , இஸ்லாமிய
அடிப்படைவாத அரசு, கொடுங்கோல் அரசு என்கிறோம். ஆனால் இந்தியாவில்
சாமியார்கள், மத குருமார்கள் போன்றவர்கள் அரசுக்கு யோசனை சொல்கிறவ
ர்களாகவும், அரசியல்வாதிகள் காரியம் சாதித்துக் கொள்ள பயன்படும் இடைத்தரக
ர்களாகவும் இப்போது ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். 'கடவுளுக்கும் பக்தர்களுக்கும்
அவர்கள் இடைத்தரகர்களாக இருந்து பயனை அனுபவித்துக்கொள்கிறார்கள்' என்று
பகுத்தறிவுக் கோஷம் பாடிய கழக ஆசாமிகள் எல்லாம் 'சங்கரா..சங்கரா ' என்கிறார்கள்.

குறிப்பிடத்தகுந்த சாமியாய் மைய அரசிலும், மாநில அரசிலும் சகலவிதமான
செல்வாக்குடன் சுற்றி வருபவர் ஜெயேந்திரர். வாழும் தெய்வம் என்று சாதி மத
வேறுபாடுகள் இல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்ட காஞ்சி மகாப் பெரியவர்
இருந்து பரிபாலனம் செய்த பீடத்தில் சர்ச்சைக்குரிய ஜெயேந்திரர் இப்போது.
மகாப் பெரியவர் உயிருடன் இருந்தபோது, இருவருக்கும் முளைத்த கருத்து
வேறுபாடுகளால், ஜெயேந்திரர் மடம் விட்டு நீங்கி வடதேசம் சென்றார். பின்
திரும்பி வந்தார். ஜன் கல்யாண் என்று ஒரு இயக்கம் கண்டார். அவர் மடாதிபதியாய்
பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைகள் தொடர்ந்தன.

காஞ்சியில் மடத்தினால் நிர்வாகம் செய்யப்பட்ட கல்லூரியில் மாணவர்கள்
சாதி அடிப்படையில் நடத்தப்பட்டார்கள் என்றொரு குற்றச்சாட்டு. அயோத்தி
விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பாரபட்சமானது என்று சர்ச்சை
கிளம்பியது. தலித்துகளைப் பற்றி அவர் அடித்த கமெண்ட் சர்ச்சை கிளப்பியது.
அரசியல்வாதிளையும், அதிகார மையங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்துக் கொண்டு நிர்வாகத்தின் மத ரீதியான முடிவுகளை ஊக்குவிக்கிறார்
என்று ஒரு சர்ச்சை. தமிழில் அர்ச்சனை செய்தால் இறைவனுக்கு ஆகாது என்று
அவர் திருவாய் அருளியதில் சர்ச்சை. மகாமகத்தில் சர்ச்சை. கடைசியாக இப்போது
ஜீயர் சுவாமிகளிடம் இருந்து.

ஒரே ஆளைப்பற்றி நிறைய பேர் புகார் சொன்னால், அந்தப் புகாரில் சற்றேனும்
உண்மை இருக்கலாம் என்று சாதாரணர்கள் நினைப்பர்.

ஸ்....ஸ்ஸ்வாமிகள் என்ன நினைக்கிறாரோ..??
saami

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஈசன் என்ன நினைக்கிறாரோ..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...