Skip to main content

Posts

Showing posts from January, 2006

வாழ்த்துகள் மலேசியா ராஜசேகரன்!!!!

இந்த வார அவள் விகடனில் ஒரு பணிப்பெண்ணின் தன்மானப் போராட்டம் என்ற தலைப்பில் மலேசியா ராஜசேகரன் சென்ற பதிவில் குறிப்பிட்ட "டிப்ஸ்" சம்பவம் வந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராஜசேகரன் ஐயா.

அவள் விகடனில் இருந்து:

சீனாவின் உட்புறங்களில் பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், கேளிக்கை மையங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்க மறுத்துவிடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘‘சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. செய்யும் வேலைக்கான ஊதியத்தில் நாங்கள் குறியாக இருப்போம். அது அல்லாது, ‘சன்மானம்’ என்று தரப்படுவதை வாங்குவது என்பது எங்கள் கலாசாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது!’’ என்றார்கள்.

இதுகுறித்து நான் நேரில் கண்ட சுவாரஸ்யமான ஒரு சம்பவம்... ஒருமுறை, சீனாவில் உள்ள ‘ஹ§னான்’ மாநிலத்தின் தலைநகரமான ‘சங்ஸா’ என்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு நானும் ஒரு நண்பரும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து இருந்த…

இரண்டு முறை காணாமல் போன பதிவு

1. சீன சமூகத்தில் படிப்பு

சீனர் தம் பிள்ளைகளின் படிப்பில் அளவுக்கு அதிகமான நாட்டம் காட்டுவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சீனர்கள் வீடு வாசல்களை விற்று தம் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஒரு மிச சாதாரண நிகழ்வு. இப்போது எல்லா இன மக்களும் தம் பிள்ளைகளின் படிப்பின்பால் அதிகமான நாட்டம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், சீனர்களிடம் இந்த தாக்கம் எப்போதும் சற்று கூடுதலாகவே இருந்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எனக்கு தெரிய மலேசியாவில் ஒரு 30 - 40 வருடங்களாக மார்க்கட்டில் காய்கறி விற்கும் சீனர் கூட இரவு பகலாக உழைத்து தம் பிள்ளைகளை ஐரோப்பா, அமெரிக்கா என்று அனுப்பி சிறந்த பல்கலைகழகங்களில் நல்ல படிப்புக்களை படிக்க வைத்து விடுவார். இது ஏதோ அத்தி பூத்தார் போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். மலேசியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றுர்களிலும் இது ஆயிரக்கனக்கான சீன குடும்பங்களால் செயல் படுத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
சீனர்கள் படிப்பிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லா இனங்களுக்கும் பொருந்தும்…

பொங்கும் பூம்புனல்

சிலோன் ரேடியோ மேட்டர் இல்லை..லோக்கல் நியூஸ் இது.

சென்னையிலும் சிதம்பரத்திலும் டீவி வழியாக பார்த்த வெள்ளம் சாக்ரமண்டோவுக்கும் வரும் என்று நினைத்தேனா..?? கடந்த ஒரு வார காலமாக கனமழை, சுற்றிசுழன்று அடிக்கும் காற்று என்று எங்கள் ஏரியா அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் வயிற்றில் பயமூட்டை கட்டிக் கொண்டு மணல் மூட்டை மேல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல நெடுஞ்சாலைகள் மண்சரிவுகளால் மூடப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவசர அவசமாக தண்ணீரை வழித்து கொட்டிவிட்டு, மேக்கப் போட்டுக் கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட லெவிகள் எல்லாம் காற்றுக்கும் மழைக்கும் முன்னால் எப்படி தள்ளாடுகின்றன என்று நீர்மானகைத் துறை அதிகாரிகள் கவலை படிந்த முகத்துடன் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். எங்கள் அலுவலகத்துக்கு முன்னே உள்ள ராட்சத மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து, சாலையில் போய்க் கொண்டிருந்த கார் மேல் விழுந்திருக்கிறது. நல்ல வேளை காரோட்டிக்கு காயம் இல்லை. எல்லார…