Skip to main content

Posts

Showing posts from March, 2004
விட்டுடுங்க ஸீனியர் எல்லே...

===============================

பாஸ்டன் பாலாவின் வலைப்பூவில் இன்று ரங்கபாஷ்ய லீலைகள் என்று
ஒரு புராணம் ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே கொடுத்திருந்த சுட்டிகளில்
தட்டி தட்டி முட்டி மோதி வெளியே வந்த பிறகும் ராயர் காப்பி கிளப்பின்
மலரும் நினைவுகள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தன. சேர்ந்த புதிதில்
எது செக்கு, எது சிவலிங்கம் என்று தெரியாமல் காத்தடிக்கும் திசைக்கு
அங்கே 'American Beauty ' இலைக்குப்பை போல சுழன்றாகிக்கொண்டிருந்தது
நினைவுக்கு வந்து, கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்து பைத்தியம் போல
சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

மரத்தடிக்கு வந்து ரங்கபாஷ்யம்காருவின் அறிமுக மடல்கள், அவரைப் பற்றி
அவர் குழுவைப் பற்றி, எல்லே சுவாமி ஸார் எழுதிய ட்ராமாவைப் படித்து விட்டு
மணி சுவாமிநாதனின் மடலையும் படித்து விட்டு, ' இத்தனை பேரில எழுத
இவங்களுக்கெல்லாம் எங்கய்யா நேரம் கிடைக்குது ' என்று அலுத்துக் கொண்டே
கடைசியில் இங்கே தட்டினேன்.

சிரிக்க ஆரம்பித்தவன் இதுவரை நிறுத்த முடியவில்லை. இன்னமும்
என் பீர்த்தொப்பை குலுங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லே சீனியருக்கு Inte…
அட தேவுடா ...தேர்தல்டா..
==========================

தேர்தல் மேடையில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதா 'மம்முத ராசா'
பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். சுற்றியிருந்த மக்கள் எல்லாம் ' அம்மா ஆட்டத்தை
பாத்து எவ்வளவு நாளாச்சு ' என்று மெய்மறந்தனர் - தினமலர் செய்தி 30-03-2004.

மேலே கூறியது போல சீக்கிரமே ஏதாவது நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.
தேர்தல் நேரம் எது வேணுமானாலும் நடக்கலாம்.போனவாரம் ஓசூர் பகுதி கிராமத்தில்
நடந்தது போல. தேர்தல் செய்திகள் கவர் செய்யும் விகடன், கூட்டத்தில் கலைஞர்
தெலுங்கில் மாட்லாடினார் என்று புளகாங்கிதப்பட்டுப் போயிருக்கிறது.தமிழ், தமிழ் என்று முழங்கும் இனமானக் காவலர், சங்கத்தமிழ், குறளோவியம்
தொல்காப்பியப் பூங்கா , உரோமாபுரிப்பாண்டியன் போன்ற தமிழ் படைப்புகளின்
சொந்தக்காரர், தன்னுடன் மாறுபாடு கொண்டவர்களை மொழியின் பேராலும்,
இனத்தின் பேராலும் ( மலையாளி எம்.ஜி.ஆர், மலையாளி ஜெயமோகன், கன்னட
ஜெயலலிதா, புதுடில்லி வடவர்...... ) வம்புக்கிழுத்து பகடி செய்யும் கலைஞர்
தேர்தலுக்காக இன்னமும் என்னவெல்லாம் 'பாண்டி' ஆடப்போகிறாரோ
என்று வேடிக்கை பார்ப்பது விநோதம்…
Sea Biscuit
=======

டாகுமெண்டரி ஸ்டைலில் ஆரம்பிக்கும் படம் முதலில்
ஹென்றி ·போர்டைப் பற்றி பேசுகிறது. முற்றிலும் ஆட்டோமேட்
செய்யப்பட்ட அவருடைய தொழிற்சாலையில் தன் கற்பனாசக்தியை
விரயம் செய்ய விரும்பாத ஒரு தொழிலாளி சார்லஸ் வேலையை
ராஜினாமா செய்து விடுகிறான். சைக்கிள் கடை வைத்துப் பிழைக்கும்
அவன் கடை வாசலில் நின்றுபோன ஒரு செல்வந்தரின் காரை விஷயமே
தெரியாமல் 'சரி செய்கிறேன் பேர்வழி' என்று ஒத்துக்கொண்டு
கார் தொழில்நுட்பம் கற்கிறான். ஒரு பாட்டிலேயே பணக்காரன்
ஆகிவிடும் தமிழ் சினிமா ஸ்டைலில் அவனும் மிக சீக்கிரமே
"ப்யூக்" கார் டீலர் ஆகிறான். நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும்
இருக்கும் அவன் வாழ்வில் ஸ்டாக் மார்க்கெட் க்ராஷ் ஒரு பெரிய
மாறுதலை உண்டு பண்ணுகிறது. செல்வம் அனைத்தையும் இழந்த அவன்
தன் செல்ல மகனையும் ஒரு கார் விபத்தில் இழக்கிறான். விளைவாக அவன்
மனைவியும் விட்டு விலகுகிறாள்.

மார்த்தா இரண்டாம் மனைவியானபின், அவளுக்குச் சொந்தமான குதிரைத்
தொழுவத்தில் டாம் ஸ்மித் என்பவனை சந்திக்கிறான். குதிரைகளடு பழகி,
குதிரைகளோடு பேசி, அவற்றின் நுணுக்கம் அறிந்த மனித நேயமுள்ள ஸ்மித்,
சார்லஸை கவர , ரேஸ் குதிரைகளை தயார…
மகேந்திரதனுஷ்
================

பாலுமகேந்திரா.

காமிராக்காரர் டைரக்டராகவும் இருந்தால் நிகழக்கூடிய
எல்லா அற்புதங்களையும் தன் படத்தில் செய்து காட்டியவர்.
காதல் கதை என்றாலும், த்ரில்லர் என்றாலும், நகைச்சுவை
என்றாலும், ஸ்கூல் பசங்களின் கதை என்றாலும், டீவி தொடர்
என்றாலும் அவருக்கே உரித்தான மயிலிறகால் வாசனை தூவும்
'டச்' எல்லாப் படத்திலும் இருக்கும்.ஒருபடைப்பாளியாக அவரை
மிகவும் பிடிக்குமென்றாலும், விகடனில் வரும் 'இவன்தான் பாலா'
அவரை ஒரு தோழனாகவும் அறிமுகப்படுத்துகிறது. அவருடைய
நாயகிகள் எல்லோருமே எனக்கு பிடிக்கும். ஷோபா, அர்ச்சனா,
ஈஸ்வரிராவ், மெளனிகா என்று எல்லாமே 'ப்ளாக் ப்யூட்டீஸ்'.

தனுஷை வைத்து புதுப்படம் எடுப்பதாக கேள்வி. காதாநாயகி
கலைப்பிதா பாரதிராசாவின் கண்டுபிடிப்பு ப்ரியாமணி. வயசின் வேகம் ,
மனசின் தாகம் என்று விகடன் எழுதி இருந்த அவர் பேட்டியை எல்லாரும்
கண்டிப்பாய் படித்திருப்பீர்கள். 'அழியாத கோலங்கள்' இந்து டீச்சரையே
என்னால் மறக்க முடியவில்லை. இந்தப் படம் என்ன பாடு படுத்த்..தப் போகிறதோ...??


இந்த ஸ்டில் ( ஹி..ஹி) 'அது ஒரு கனாக்காலம்' படத்…
வேதனையாய் இருக்கிறது
=========================

மதி நடந்தது என்ன என்பதை தெளிவாகச்
சொல்லி விட்டார். இப்போது பாரத்தை இறக்கி வைத்த
நிம்மதியில் திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் , இந்த விஷயத்தை அணுகுவதில் மக்களின்
அணுகுமுறைகள் , நாகரீகம் மீறி, ஒரு எல்லையை கடந்து
கொண்டு இருப்பதைப் பார்த்து நரக வேதனையாய்
இருக்கிறது.

ஆப்பு அடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவரின்
வலைப்பதிவில், பின்னூட்டம் தந்திருக்கும் ஆட்கள்
இரண்டு தரப்பையும் ரெப்ரசண்ட் செய்வதாய் நினைத்து
கொண்டு முகமூடி பெயர்களில் கேட்கக்கூசும் வார்த்தைகளை
உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

சண்டையோ, சச்சரவோ, மனிதர்கள் போடுவதாக இருக்கட்டும்
..எல்லை மீறாதீர்கள்.

வலைப்பதியும் நண்பர்களே, பின்னூட்டங்கள் தரம் தாழ்ந்த
முறையில் எழுதப்பட்டிருந்தால், அதை தயவு செய்து நீக்கி
விடுங்கள்.

அது உங்கள் கடமை...


கோவில் ...???
=========

நான் இருக்கும் இடம் கலி·போர்னியா மாநிலம் என்றாலும், தென்னிந்தியர்கள்
அதிகமில்லை. எனக்கு இருக்கும் நண்பர் கூட்டத்திலே பாதிக்கும் மேல்
மராட்டியர்கள். எனவே கோயில்கள் என்று அதிகம் ஏதும் கிடையாது.
அல்லது கோயில் என்று நான் நினைக்கும் லட்சணங்களோடு ஒன்றும்
இல்லாமல் இருந்தது. லிவர்மூர் என்ற இடத்தில் இருக்கும் பிரசன்ன
வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு போக வேண்டுமென்றால் கிட்டத்தட்ட
200 மைல் போகவர ஆகும். எனவே கடந்தும் உள்ளும் இருப்பவனை,
'உள்'ளேயே கும்பிட்டு வந்தேன்.

மளிகை சாமான் வாங்கும் கடையில் புது கோவில் ஒன்று
வருவதாய் எழுதி இருந்தது. முதன்முறை சென்றபோது சந்தோஷமாய்
இருந்தது. ஆனாலும் தலைமை போல தெரிந்தவர், எப்போது பார்த்தாலும்
'சிலை வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும். மண்டபம் கட்ட
வேண்டும் ' என்று ஒரே அறிவிப்பாக செய்து கொண்டிருந்தார்.
'சரி..பரவாயில்லை,,,ஆரம்ப நிலையில் இருக்கும் கோயிலுக்கு இம்
மாதிரியான வியாபார முகம் இருப்பது தப்பில்லை ' என்று சமாதானப்படுத்திக்கொண்டு,
விசேஷமான பூஜைகள் இல்லாத, கோயிலில் அதிகம் கூட்டம் இல்லாத வார
நாள் மாலை ந…
சின்னா
=======

எப்போது சொன்னாலும் 'சின்னா கம்மினாட்டி' என்று சொல்வதே வழக்கம்.
செல்லமாக கூப்பிடும்போது ஜித்து என்றே கூப்பிடுவேன். இந்திரஜித் என்பதன் சுருக்கம் அது.
பெரியவர்களுடன் பிரச்சினை செய்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுபவன்.
இரண்டு சகோதரிகள், ஆறு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் கடைக்குட்டி
யாகையால், பெரியவர்களின் தவறுகள், கபடங்கள், சூது-வாதுகள், அதட்டல்கள்,
அமட்டல்கள் , அலட்டல்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்ட மலை
முழுங்கி மகாதேவன். முறுக்கு மீசை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கல்யாணத்தில்
பார்த்தபோது பளபளவென்று 'தேவர்மகன்' கமல் போல இருந்தான்.சொல்லும் வார்த்தையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். கூரான அடிப்பார்வையோடு, தொண்டைக்குள் எழும்
அவுட்டு சிரிப்போடு அவன் பேசுதைக் கேட்டால் திருவாளர் பசுபதி ' வினை வழியுது பாரு '
என்பார். என்றோ அவர் கூட போட்ட சண்டையில் இன்றுவரை அவன் எங்கள்
வீட்டு வாசல்படி மிதித்து இல்லை. விசேஷங்களுக்கெல்லாம் கல்யாண சத்திரம்
வந்து ஓதியிட்டு , சாப்பிடாமல் போய் விடும் ரோஷக்காரன். குளிரோ மழையோ
25 வருஷமாக காலையில் எழுந்து எங்க…
ஷேம்....???
===========

அட என்னப்பா...

பெரிய மனுசன்களை வம்புக்கு இழுத்துட்டு
ஒண்ணுமே ஆதாரம் சொல்லாம போனா
எப்படி..??

அப்படிங்கற கேள்விய இதை விட
காரமா கேக்க ஏலுமா..??

http://groups.yahoo.com/group/Maraththadi/message/13336

திராவிடர் இதை கேக்கும்போது நமட்டுச் சிரிப்பு
சிரிச்சிகிட்டே கேட்டா மாதிரி ஒரு பிரமை..

சரியா ஸார்..??
எல்லாம் நன்மைக்கே....
=======================

இப்போதுதான் மரத்தடியிலும், ரா.கா.கியிலும்
நடந்த முழு விவாதங்களின் தொகுப்பைப் படித்து
நிமிர்ந்தேன். எல்லாவற்றையும் பற்றி மிக ஆழமாக
நான் எழுதுவது எருதின் புண்ணைக் கிழித்து இன்னமும்
மோசமாக்குவதற்கு ஒப்பாகும்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

இன்னார் பெரியவர், இன்னார் இலக்கியப் புலி,
இன்னார் மதிப்புக்குரியவர், இன்னார் தெரிந்தவர்
இன்னார் பலவான் என்று எந்தவித மன மாச்சரியங்களும்
வேறுபாடுகளும் இல்லாமல் , பிரச்சினையை தீர
விவாதித்து ஒரு முடிவுக்கு வருதல் நலம்.

அது இல்லாமல், இவர் சார்பில் அவர் மன்னிப்பு
கேட்கிறேன் என்றோ, பொதுவில் விவாதிப்பது
சம்பந்தப்பட்டவர்களின் மரியாதைக்கு இழுக்கு என்றோ
மூடி மறைத்தால், இன்னமும் பிரச்சினை சீரியஸ் ஆகும்.

ஏனெனில் நமக்கு நல்ல இலக்கியகர்த்தாக்களை விட
நல்ல மனிதர்கள் முக்கியம். நடந்திருக்கும் சம்பவங்களைப்
பற்றிக் கேட்டால், இலக்கியத்துக்கும் ஈரத்துக்கும் சம்பந்தம்
உண்டா என்ற எண்ணமே எழுகிறது.

இது போல தனிப்பட்ட எண்ணங்களை தன் வலைப்பதிவில் எழுத
முகமூடி தேவை இருப்பதே, நிலைமையின் தீவிரத்துக்கு ஒரு மாதிரி.


Joke for today
=========

மடலாடற்குழுக்கள் எல்லாம் அதீத வெப்பத்தில் த்கித்துக் கொண்டு இருக்கிறது.

மாறுதலுக்கு ஒரு ஜோக்அமெரிக்க கணிணி வேலைகள் எல்லாம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் outsource செய்யப்படுவது சம்பந்தமாக
சமீபத்தில் வெளிவந்த, வாய்விட்டுச் சிரிக்க வைத்த கார்ட்டூன்...
தா(த்)தா நெ.2
==============

பின்னனியில் மலை. போர்ப்பயிற்சி பெறும் வீரர்கள். தேங்காய்ப்பூவும்,
காப்பிப்பொடியும் கலந்தாற்போல அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் தாடி,
பருப்புத் தேங்காயை முகவாய்க்கட்டைக்குக் கீழே வைத்தமாதிரி இருக்கிறது.
தடியை பிடித்து ஊன்றிக் கொண்டு , இருவரும் தள்ளாடித் தள்ளாடி வருகிறா
ர்கள். சி.என்.என் ல் அடிக்கடி காண்பிக்கப்படும் செய்திப்படத் துண்டு இது.
அவர்களில் ஒருவர் அய்மான் அல் ஜவஹிரி. இன்னொருவர் லேடன்.
அமெரிக்கா அலறுகின்ற தீவிரவாதிகளில் இருவர்.

அய்மான் அல் ஜவஹிரி சுற்றி வளைக்கப்பட்டதாய் பாக்கிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்க மீடியா அலறுகிறது. திவிரவாத ஸ்பெஷலிஸ்டுகள் பேட்டி காணப்
படுகிறார்கள். ஜவஹிரியின் வாழ்க்கை வரலாறு அலசப்படுகிறது.உயிருடன்
பிடிப்பது கடினம். கொன்றாவது பிடித்து விடுவார்கள் என்று செய்தி
ஆசிரியர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

முன்னெரே நான் பலமுறை சொன்னபடி, இந்தத் தாத்தாக்கள் பிடிக்கப்பட்டாலும்,
செத்துப் போனாலும் பிரச்சினை தீரப் போவதில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்
கண்டுகொள்ளப்படாத வரை உலகின் ஏதாவது ஒரு மூலையில், எங்காவது ஒரு
ரூபத்தில் தீவிரவாதம் த…
ஜய ஜய சங்கர....???
==============

அரசியலும் மதமும் கலக்கவே கூடாது. அதைப்போல அபாயகரமான கலவை
எங்கும் கிடையாது என்று எல்லாரும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.ஆனால்
இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. காபூலில் இஸ்லாமிய
சட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சி புரிந்த தலிபான்களை , இஸ்லாமிய
அடிப்படைவாத அரசு, கொடுங்கோல் அரசு என்கிறோம். ஆனால் இந்தியாவில்
சாமியார்கள், மத குருமார்கள் போன்றவர்கள் அரசுக்கு யோசனை சொல்கிறவ
ர்களாகவும், அரசியல்வாதிகள் காரியம் சாதித்துக் கொள்ள பயன்படும் இடைத்தரக
ர்களாகவும் இப்போது ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். 'கடவுளுக்கும் பக்தர்களுக்கும்
அவர்கள் இடைத்தரகர்களாக இருந்து பயனை அனுபவித்துக்கொள்கிறார்கள்' என்று
பகுத்தறிவுக் கோஷம் பாடிய கழக ஆசாமிகள் எல்லாம் 'சங்கரா..சங்கரா ' என்கிறார்கள்.

குறிப்பிடத்தகுந்த சாமியாய் மைய அரசிலும், மாநில அரசிலும் சகலவிதமான
செல்வாக்குடன் சுற்றி வருபவர் ஜெயேந்திரர். வாழும் தெய்வம் என்று சாதி மத
வேறுபாடுகள் இல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்ட காஞ்சி மகாப் பெரியவர்
இருந்து பரிபாலனம் செய்த பீடத்தில் சர்ச்சைக்குரிய ஜெயேந்திரர் இப்…
அய்யய்யோ அய்யா...
=====================

எதிர்பார்த்தது போலவே, டாக்டர் அய்யாவுக்கு இந்த தேர்தல் சோதனையாகத்தான் இருக்கும்
போல் இருக்கிறது. அவர் தேர்தல் டிக்கெட் கொடுக்காத ஆட்கள், அவருடைய வன்னிய சமூக
எதிரிகள் எல்லாரையும் எதிர்தரப்பினர் வளைத்துப் போட்டுக் கொண்டு பா.ம.க வை கலகலக்க
வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தர்மபுரியில் பு.தா.கி க்கும், சேலத்தில் ஜெகட்ரட்சகனுக்கும் பா.ஜ.க சீட் கொடுத்து
இருக்கிறது. டாக்டர் கலந்து கொள்ளும் கூட்டங்களில், பேசும் இடங்களில் எல்லாம் கூட்டணிக்
கட்சி தொண்டர்களே சவுண்டு விடுகிறார்கள். சிதம்பரத்தில் டாக்டர்.பொன்னுசாமிக்குக்கும், விழுப்புரத்தில்
பா.ம.க வேட்பாளருக்கும் பலத்த எதிர்ப்பு.

இந்த தேர்தலில் பா.ம.க வுக்கு பலத்த அடி விழுவதன் மூலம், எல்லா ஜாதிக் கட்சிகளின் அரசியல்
ஆசைகளிலும் மண் விழுந்தால் எல்லோருக்கும் நல்லது.
இது எப்படி இருக்கு ..??
=================

'உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறான் ' என்று கேள்விப்பட்டு இருந்ததை ,
மெய்ப்பிக்கும் நிகழ்ச்சியாய் , நியூயார்க் டைம்ஸ் பதிப்புப் பிரிவில் உட்கார்ந்த
இடத்திலேயே ஒருவர் உயிர் விட்டு இருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க்
நகரில் நடந்த சம்பவம் இது.விஷயம் இதோடு நிற்கவில்லை. இவர் இறந்ததை, ஒரு வாரம் கழித்துத்தான்
சக ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ' எப்பவும் நாங்க ஆ·பிஸ் வரும்போது
அவர் இங்க இருப்பாரு. நாங்க சாயங்காலம் வீட்டுக்கு போனப்புறம்தான் அவர்
போவாரு. அதனால எங்களால கண்டு பிடிக்க முடியலை.நல்ல உழைப்பாளிக் கட்டை
' என்றார்களாம் . அலுவலக் துப்புரவுப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை வந்த ஆட்கள்
" hey Man...what are you doin here on Sunday " என்று அன்னாரை உலுக்கியபோதுதான்
அவர் அமரரானது வெளியே வந்திருக்கிறது

கஷ்டப்பட்டு உழைக்காதீங்கய்யா...என்ன வேலை பாத்தாலும் யாருமே
'பார்க்கலை' ங்கிரது இப்பவாவது தெரிதா..??
உஷார்..... உஷார்
=====================

மாட்ரிட் நகரில் நடந்த 3/11 கோரச்சம்பவம் அல்-கொய்தா
வின் வேலை என்று ஆளுக்கு ஆள் சொல்ல ஆரம்பித்து
உள்ளார்கள். CNN ல் நேற்று அது சம்பந்தமாக ஒரு
செய்திப்படம் பார்க்க நேர்ந்த போது குலை நடுங்கியது.
வெடித்த நாலு குண்டுக்கே இந்தக் கதி என்றால் ,
வெடிக்காமல் போன மற்ற குண்டுகளும் சேர்ந்து வெடித்து
இருந்தால், எத்தனை பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.


எத்தனை படையெடுப்புகள் என்ன, எத்தனை புதிய
கருவிகள் என்ன, எத்தனை புது Homeland security department
மற்றும் சட்டங்கள் வந்து என்ன...?? இந்த சிக்கல்களை
விடுவிக்க தேவையான பொறுமை, அன்பு, இணக்கம்
இல்லாவிடில், இந்த ஒரு பின் லேடனைப் பிடித்தாலும்
இன்னமும் ஆயிரம் பேர் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

இதனுடன் சேர்ந்த இன்னோர் கவலை, சந்தேகத்தின் பேரில்
பிடிக்கப்பட்ட குற்றவாளிகளில் மூன்று பேர் இந்திய
பாஸ்போர்ட் வைத்திருந்தார்களாம். 9/11 சம்பவத்துக்குப் பிறகு
ஏற்கனவே அமெரிக்கர்கள், ப்ரவுன் தோலர்களை எல்லாம்
தீவிரவாதி ரேஞ்சுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனுடன்
இந்தப் புது செய்தியும் சேர்த்து என்ன ஆகப்போகிறதோ தெரியவில…
·
===

தேக்கடையின் புண்ணியத்தில் இன்று எங்கெங்கு
காணிணும் "ஆய்த எழுத்து". பாஸ்டன் பாலாவின்
ஈடமில் , எல்லாப் பாட்டுகளிலும் ஒரு விள்ளல்
கொடுத்து ஏமாற்றி விட்டது. mp3 link தான்
இப்படி என்றால் Real player அதற்கும் மேல்....


கொஞ்சம் கவனீங்க பாலா..??மூக்கினால் மூக்குக்கு ஆபத்து
=============================

பிரசித்தி பெற்ற அந்தக் கடைசி பதிவை எழுதியதும்
என் மூக்கு மக்கர் செய்ய ஆரம்பித்ததும் தற்செயல்தான்.
சங்கப்புலவர்களுக்கும், தற்கால தமிழ்க்கவிஞர்களுக்கும்
உவப்பான , பூக்கள் பூத்து, வண்டினங்கள் ரீங்காரம் இடும்
வசந்தம், என் மூக்குக்கு மட்டும் எதிரி.

அச்சு..அச்சு என்று வார இறுதியெல்லாம் தும்மி தும்மி
கண்கள் சிவந்து, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய ,
கைக்குட்டையோடு அலைந்ததில் , தமிழ்த்தாய்க்கு
இரண்டு நாளாய் சோறு (:-) ) போட முடியவில்லை. தமிழிலக்கிய
பெருமக்கள் எல்லால் விசித்து விசித்து அழுது கொண்டிருப்பதால்
இன்று எழுதுகிறேன்.

பெயரிலி தன் தற்போதைய முகமூடியை கடாசியது இப்போதுதான்
தெரிந்தது. என் பங்குக்கு நானும் வேடம் கலைந்த மார்ச்-11 தேதியில்
ஒரு பின்னூட்டம் அளித்து விட்டு வந்தேன். இந்த சூட்டோடு ரமணி சார்
ஒரு வெப்சைட்/மடலாடும் குழு ஆரம்பிக்கலாம். பத்தோடு பதினொன்றாக
இல்லாமல் , விமரிசனக் கண்ணோட்டத்தோடு, தீவிரமாக, நடுநிலையாக
எழுதக்கூடிய எல்லோரும் அதில் எழுதுவார்கள்.ஆனால் கவிஞர் சார் இவ்வளவு
இளமையான ஆள் என்பது தெரியாமல் போயிற்று. எழுத்தில…
வயசுப்பசங்க சமாச்சாரம்
=========================

நிஜவாழ்க்கையில் இல்லையென்றாலும் சினிமா பார்த்துத்தான்
பாடல்கள் அறிமுகமாகியது. அதுபோலத்தான் லவ் சீன்களும்,
சண்டைக்காட்சிகளும் கவர்ச்சி ஆட்டங்களும்.
சண்டையும் , பாடல்களும் யதார்த்தத்தோடு ஒட்டவில்லை
என்கிற நாம் மற்ற இரண்டையும் அப்படி நினைப்பதில்லை.

காரணம் படைப்பு ரகசியம்.

மேற்சொன்ன இரண்டில் காதல் கூட காஸ்ட்லி. இறங்கும்
வரைதான் ஜாலி. ஆனால் மற்றையது இருக்கிறதே...அதைப்
பற்றித்தான் இந்தப் பதிவு.

மும்பையில் தங்கி இருந்த போது என் காலேஜ் நண்பன் அலுவலக
விஷயமாக செம்பூர் வந்திருந்தான். பப்ஸ் என்று அழைக்கப்படுகிற
அவன் சரியான பழம். காலேஜ் நாட்களில் தானுண்டு , தன் புக்ஸ்
உண்டு என்று சுற்றி வந்த அப்பாவி. அந்த 'அப்பாவி' மும்பையில்
என்னைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி.." இங்க எங்க டான்ஸ்
பார்க்கலாண்டா..?? " சிவனே என்று இருந்த என் உடம்புக்குள்ளும்
ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்ய, தகவல் திரட்டினோம். யாரிடம்
கேட்பது என்று கூடத் தெரியவில்லை. கேட்டால் போலிஸ் பிடிச்சுக்குமோ
என்ற பயம். கடைசியா கொலாபா என்ற இடத்தில் Blu…
பேரழகன்
==========

ஆனந்தவிகடனில் "சூர்யாவா இது?" படித்திருப்பீர்கள்.
மலையாளத்தில் வெற்றிபெற்ற குஞ்சுக்கூனன் படம்
தமிழில் பேரழகன் ஆகிறது . சூர்யா வின் கெட்டப் அசத்தல்
ரகம். அவரது சினிமா வாழ்க்கை படிப்படியாக
முன்னேறிக்கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில் குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி
இரண்டாம் ஹீரோவாகவே வந்து கொண்டிருந்தார்.
நேருக்கு நேர், ·ப்ரெண்ட்ஸ் எல்லாமே அப்படித்தான்.
பாலா கொடுத்த ப்ரேக் நந்தா. தாலியறுத்தான் படம் என்று
சாரு போன்றவர்கள் கிண்டலடித்தாலும் படம் சூப்பர் ஹிட்.
அங்கு ஆரம்பித்தது அவர் டேக் ஆ·ப். பிதாமகனில்
சூப்பர் ஸ்டாரையே புறந்தள்ளி விட்டார்.

'காக்க காக்க' படம் பார்த்தபோது சினிமா மாதிரியே இல்லை.
சூர்யா-ஜோதிகா நெருக்கத்தை கெளதம் நன்றாக
உபயோகப்படுத்தி இருந்தார். ஏகப்பட்ட டைட் க்ளோஸ்அப்
காட்சிகளில் , ஜோதிகாவின் வெட்கமும், சூர்யாவின் கனிவு
வழியும் கண்களும் பதிவாகி இருந்தன. பார்க்கும்போது
'அடப் பாவிகளா..இவர்களாவது கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா..??"
என்று மனசு அரற்றியது நிசம்.

சிவகுமார் சார் இதைப் படித்தால் என்னை சுட்டு விடுவார்.
அதனால் என்ன..?? சிவா எ…
ரசிகன் ·பாஸ்ட்
=================

ரஜினி மீதான விமரிசனத்துக்கு எங்க ஊரு ராமகிருஷ்ணனின் பதில்


"கொஞ்சம் காசு பார்க்கலாம்னு ரசிகர்கள் நினைச்சிருந்தால்
இன்னும் ரஜினியை பிடித்தே தொங்கிட்டிருக்க மாட்டார்களே!ரஜினியை நம்பி
(?) அரசியல் பிழைப்பு நடத்துமளவுக்கு சோ முட்டாள் என்பதையும் நம்ப
முடியவில்லை! ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும்னு
லதா மட்டுமல்ல ரஜினியின் பாப்புலாரிட்டி பற்றி தெரிந்தவர்கள் கூட
ஓத்துக்கொள்ள மாட்டார்கள்! தேர்தல் முடிஞ்சதும் மரம் வெட்டிகள் சாட்டையை
சொடுக்கப் போவது நிச்சயம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நல்லாவே தெரியும்..

அது சரி, ஜு.வி, குமுதம் ரிப்போர்ட்டர் ரொம்பவும் கவனமாக எழுதியிருப்பதை
கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, ரஜினியிடமிருந்த
இந்த தேர்தலிலும் சிக்னல் கிடைக்காத சிக்கல் தொடரும்...! "ரஜினி ராம்கி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அவருக்கு இருக்கும்
இருக்கும் ஆர்வம் போலவே மா¡யவர்த்துக்காரர் அவர் என்று சொல்வதில்
எனக்கு சந்தோஷம்.

மாயவரத்துக்கென்று ஒரு வெப்சைட் நடத்தி வருகிறார். இப்போது ப்ளாக்குகிறா…
தெப்பக்கட்டை விமரிசனத்துக்கான கவிஞர் சேவியரின் பதில்
==========================================

பாலுணர்வு பற்றி நான் குறிப்பிட்ட கருத்தோடு எனக்கு மாற்றுக் கருத்து
இல்லை. பாலுணர்வு எழுதுதல் தவறில்லை. பாலுணர்வு பற்றி எழுதுதல்
தான் நவீன இலக்கியம் என்றொரு மாயை இருக்கிறது பாருங்கள்
அதைத் தான் நான் சொன்னேன்.

காலச்சுவடு இதழில் முதல் பரிசுக் கதையைப் படித்திருப்பீர்கள் தானே ?
பாலுணர்வு பற்றி எழுதாத ( குறைந்த பட்சம் 25% கவிதைகள் ) ஒரு நவீன
தொகுப்பேனும் ( சமீபத்தில் வெளிவந்தவற்றில்) காட்ட இயலுமா நண்பரே
உங்களால் ?

அன்புடன்
சேவியர்

புலிவால் பிடித்த ஜூ.வி
======================

எல்லாம் முடிந்து சமாதானக் காற்று
வீசக்கூடும் என்று நிலை வருகையில்
இலங்கையில் குழப்பம். இம்முறை
விடுதலைப்புலி முகாமுக்குள்ளேயே...

என்னவென்று புரியவில்லை. ஏதென்று
தெரியவில்லை. கருணாவைக் கொல்ல
படை ரெடி என்றும், இலங்கை அரசு
வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைய
விடாமல் பிளவு படுத்த செய்யும் சதி என்றும்
பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதுகின்றன

எம் இலங்கை சகோதரர்கள் யாரேனும்
இதுபற்றி விளக்கமாக எங்கேனும் எழுதினால்
மகிழ்ச்சி.
ரஜினி லேட்
============

வந்தே விட்டார் ரஜினி...

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு எதிராக ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்த
கடந்த ஆட்சிக் காலத்தில், கலைஞர்ஜி-மூப்பனார்ஜி என்று
பிரசாரம் செய்து, தமிழக மக்களை உய்விக்க வந்த தேவனாக
வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அப்போது போல் ரஜினி அலை
அடுத்த தேர்தலில் அடிக்கவில்லை.

தொடர்ந்து பல சறுக்கல்கள். அரசியலும் சரி, சினிமாவும் சரி
ரஜினியோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தன. இதை
சாக்காக வைத்து டாக்டர் ஐயா வேறு அவரை சீண்டிக் கொண்டே
இருந்தார். பாபா படம் வெளிவந்தபோது பல இடங்களில்
பா.ம.க வினருக்கும் ரஜினி ரசிகருக்கும் வெளிப்படையாக மோதல்கள்.

இப்போது, பாமக போட்டி இடும் எல்லா இடங்களிலும் தன் ரசிகர்களை
வேலை பார்க்கச் சொல்லி அவரே கட்டளை இட்டதாக ஜூ.வி சொல்கிறது


* கலைஞரின் ஒரு காலத்திய நண்பரை வைத்தே அவர் கூட்டணியை
கலகலக்க வைப்பதில் அம்மாவுக்கு சந்தோஷம்.

*பாமக தோற்றுப் போனால் அவர்கள் கொட்டம் அடங்குமென்று
கலஞருக்கு(ம்) உள்ளுர சந்தோஷம்

* அறநிலையத்துறை அமைச்சராகலாம் என்று சத்தியநாராயணாவுக்கும்,
'கொஞ்சம் காசு பார்க்கலாம்' என்று ரசிகக்குஞ்சுகளுக்கும் சந்தோஷம்.

* தான் …
நேற்று நான் 'ஙே' ஆகிப் போனேன்.
=====================================

டோக்கியோ.

பளபளக்கும் வெளிச்சப்பூக்கள் நடுவில் சோம்பலாக ஊர்ந்து போகும்
அந்தக் காரினுள் பாப் ஹாரிஸ். நடுவயதைக் கடந்திருக்கும் அந்த அமெரிக்க நடிகன்
விஸ்கி விளம்பரத்தில் நடிக்க அங்கே வந்திருக்கிறான். எதிலும் ஒட்டுதல் இல்லாத
கண்கள், சோம்பலான நடை. கலாச்சார/மொழி குழப்பத்தில் தடுமாறி, ஆங்கிலமே
தெரியாத அந்த விளம்பர ஏஜென்ஸியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறான்.
25 வருட மணவாழ்க்கையில் அவன் அருகாமை தேவைப்படாத, அவனுக்கு
அன்பைத்தர விழையாத மனைவி. புருஷன் என்றால் 'பொருளாக' பார்க்கத் துவங்கி
விட்ட அவள், அலமாரி டிசைனையும், கார்ப்பெட் கலரையும் அகாலத்தில் ·பேக்ஸில்
அனுப்பி, கடனுக்கு அவ்வப்போது தொலை பேசுகிறாள். ( மம்மி...ஐ காண்ட் ஈட் -
குழந்தையின் தொலைபேசிக் குரல்).மொத்தத்தில் மிட் ·லைப் க்ரைஸிஸ்.

அதே டோக்கியோ ஹோட்டலில் இன்னொரு ஜீவன். யேல் பல்கலையில்
பிலாஸபி படித்த இளம்பெண், தன் கணவனுடன் தங்கி இருக்கிறாள்.
பகலில் ·போட்டொகிராபர் வேலை..இரவில் கடுந்தூக்கம் என்றிருக்கும் அந்தக்
கணவன் அவளுக்கு வெறும் அலுப்பு. அவனை க…
சேவியரின் விமர்சனத்தை முன்வைத்து
============================

இந்த வாரத் திண்ணையில் கவிஞர் யுகபாரதியின் 'தெப்பக்கட்டை'
தொகுப்பைப் பற்றி நம்ம சேவியர் எழுதி இருந்தார். அந்த விமரிசனம் படிக்க
இங்கே க்ளிக்குங்கள்

சேவியரை, அவர் கவிதைகளை, அவர் எழுத்து நடையைப் பற்றி
ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் , நவீன கவிதைகளைப் பற்றிய
அவற்றின் பூடகத்தைப் பற்றிய, பெரியவர்கள் போற்றும் அந்த 'இறுக்கமான'
சொற்செட்டுகளைப் பற்றி அவரது கருத்துக்கள் எனக்கு ஏற்கனவே தெரியும்
- நானும் கவிதைகளில் எளிமையையே வலியுறுத்துபவன் என்ற முறையில்.
எங்காவது புதுக்கவிதைகளை பரிகசிக்கும் குரல்கள் கேட்டு , அதற்கு நான்
பதில் தந்தால், ரகசியமாவேனும் ஆதரவாய் தோளில் விழும் முதல்
கை அவருடையது.

இந்த விமரிசனத்தில் நவீனகவிதைகளை விமரிசிக்கும்போது , கவிதைகளில்
'பால் உணர்வு' பற்றி எழுதுபவர்களையும் ஒரு ரேக்கு ரேக்கி விட்டார் அவர்.
( உள்ள 'குறுகுறு' ங்குது சார்...) .

பால் உணர்வு கவிதைகளில் வருவது என்ன தவறு..?? ஆகாசத்தில் பார்த்துக்
கொண்டு எங்கோ உகாண்டாவில் நடக்கும் விஷயங்களை , முழுக்க முழுக்க
கற்பனை …
இத பார்ரா...பாரா ரெகமண்ட் செய்த ஆளா இது..????
=================================

பாரா குமுதம் ஜங்ஷன் ஆசிரியராய் இருந்தபோது, நாவல் உலகம் என்ற குமுதம்
துணை இதழில் எஸ்.ஷங்கரநாராயணன் என்ற எழுத்தாளரும் ஒரு நாவல் எழுதினார்.
மற்றவர்கள் யார் யாரென்று உங்களுக்கே தெரியும். அந்தக் கூட்டத்தில் தனியே
மாட்டிக்கொண்ட ஆள் என்று இந்த வாரம் எனக்குப் புரிந்தது.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பு படிக்கக்கிட்டியது. 'உயிரைச்
சேமித்து வைக்கிறேன் ' என்ற தலைப்பு கொண்ட அந்த கவிதைத் தொகுப்பில் தினமணி கதிர்
தமிழரசி, புதிய பார்வை, கணையாழி, கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில்
வெளிவந்த கதைகளும், இன்னமும் பிரசுரமாகத சில கதைகளும் இடம் பெற்றிருந்தன. படித்து
முடித்தவுடன் எரிச்சலாக இருந்தது.

அதில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. வெரைட்டி ரைஸ்
சாப்பிடுவது போல உவகை தோன்றுவதற்கு பதிலாக பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததை
பார்த்தாற்போல அருவருப்புத்தான் மிஞ்சியது. அந்த அளவுக்கு ஆசிரியர், 'இன்ன பத்திரிக்கைக்கு
இன்ன மாதிர ¢' என்று வகைப்படுத்திக் கொண்டு எழுதி இருக்கிறா…
இங்கே பின்னூட்டம் இட்டிருந்த பிரசன்னா சில வலைப்பூக்களை பரிந்துரைத்திருந்தார்.

சுந்தரவடிவேல் மற்றும் தங்கமணி ஆகியோரின் வலைபூக்கள் அருமை. தங்கமணியின் உயரம்
சற்றே சிரமப்படுத்தினாலும், தொடர்ந்து படித்தால் புரிந்து விடும் போல் ஒரு நம்பிக்கை.

சுந்தரவடிவேல் எழுத்து அவருக்கு கிடைத்த வரமென்றே சொல்லுவேன். அதிலும் அந்த ' நாயாய், பன்றியாய் ..' கவிதை.
ஊனையும் உயிரையும் உருக்கும் அந்த தாய்தேச சோகம் இப்படித்தான் எழுத வைக்கும். அவர் எழுத்துக்கு
என் மானசீக வணக்கம்...

கூடவே இந்தக் கொடுமை வெகு விரைவில் தீர , என்னைபோல் அவர்களும் இஷ்டம்போல் தாய்நாடு சென்று மீள என் பிராத்தனைகள்.

இணையத்தில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்று நான் தந்த பட்டியல் அன்றைய தேதியில் , என் அறிதல்களுக்குள் அடங்கியது.அந்தப் பட்டியல் மாறி, நீண்டு, வளர்ந்து , தன்னில் இன்னும் பலரையும் சேர்த்துக் கொண்டு
அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

அய்யா இராம.கி எழுதிய இந்தத் திண்ணைக் கவிதையை
இப்போதுத்தான் படித்தேன். அகவயம், எவோகேட்டிவ்
என்று எந்த பம்மாத்தும் பண்ணாமல் நூல் பிடித்தாற்போல் ,
நேருக்கு நேராக சுளீர் சுளீரென்று சவுக்கு வீசுகிறது.

இனி கவிதை :

http://www.thinnai.com/pm0226041.html


அடிக்க அடிக்க
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்

என்ற 'ருத்ரா' வின் கவிதைதான் சட்டென்று
நினவுக்கு வருகிறது.
பிடித்த தமிழ்ப்பட லிஸ்ட் கொடுத்தேன். ஆனால் பிடித்த
ஆங்கிலப்பட லிஸ்ட் என்று தனியே ஒன்றும் இல்லை.
யாஹ¥ மூவிஸ் பார்த்து விட்டும், http://www. imdb.com
பார்த்து விட்டும் தான் வீடியோ லைப்ரரி சென்று
டிவிடி எடுத்து வருவது வழக்கம்.

இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் , அமெரிkகாவிலும்
பார்த்த மொத்த ஆங்கிலப் படங்களின் பட்டியல் இது.
அகிரா குரோசேவோ, ரோமன் போலன்ஸ்க்கி
என்று அறிவுஜீவி டைரக்டர்கள் படங்களை மட்டும்
பட்டியலிடாமல் நல்லது, கெட்டது, ட்ராஷ், வல்கர்
ரொமான்ஸ், காமெடி என்று எல்லாமும் இருக்கும்
என் பட்டியலில்.

இந்த லிஸ்ட் கேவலமோ, sleazy யோ ..
கண்டிப்பாக நேர்மையாக இருக்கும்.

என் வலைப்பூவைப் போலவே....

இனி...

13 th warrior
8MM
A walk in the clouds.
About last night.
About schmdt
Ace ventura - pet detective
AI
airplane 1/2
America's sweethearts
American Desi
American pie (1/2)
American wedding
Anakonda
Analyze this
Angel's eyes.
Apocalpypse now..
Apollo 13
As good as it gets
Austin powers - (The spy who shagged me)
Austin Powers - Internatioanal man of Mystery
Autumn in NY
Baby&…
தவிக்கிறார் ஜார்ஜ் புஷ்
=================

மனுஷனுக்குத்தான் கெட்ட நேரம் என்று வந்து விட்டால் என்னென்ன தான் நடக்கிறது.

எல்லா போட்டியாளர்களையும் முறியடித்துவிட்டு கிட்டத்தட்ட நாமிநேஷனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஜான் கெர்ரி
ஏற்கனவே புஷ்ஷை விட , தேசமெங்கும் எடுக்கப்படும் சர்வேக்களில் முன்னனியில் இருக்கிறார். 1500 லட்சம் டாலர் தேர்தல் நிதியோடு களம் இறங்கி இருக்கும் புஷ்ஷின் முதல் தேர்தல் விளம்பரமே சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

நம் ஊரில் இது சகஜம்தான். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுமே, யார் ..இன்னார் என்று எதுவுமே தெரியாத சூழ்நிலையில், தேர்தலில் 'சதிகாரர்களுக்கா உங்கள் ஓட்டு ' என்று அவர் இறந்து கிடக்கும் ·போட்டோவோடு வோட்டு கேட்டவர்கள் நம் அரசியல்வாதிகள்.

விஷயம் இதுதான்....

புஷ்ஷின் விளம்பரம் 9/11 தாக்குதலை பற்றி பேசி, உருக்குலைந்து கிடக்கும் உலக வர்த்தக மையக் கட்டிடங்களையும் காட்டி, ஒரு தீயணைப்பு வீரர் படத்தின் பின்னனியில் ' you need a steady leadership ' என்று கூறுகிறது. 'That was in bad Taste ' என்று தாக்குதலில் கணவனை இழந்த பெண்மணியும், சர்வதேச தீயனைப்புத்…

இல்லையேல்

==========

பள்ளிஇறுதி முடிக்குமுன்னே
கீரைக்காரி பெண்ணுடன்
ஓடிப்போன கோபாலையும்,
ஷட்டில்காக் ஆடும்போது
பாத்ரூமை விட்டு வெளிவந்த
பத்ரி அக்கா கன்னத்தின்
சிகரெட்டு வாசனையும்
கோயிலில் பெண்ணின்
பின்புறத்தில் கிள்ளிய
கிழவனின் முகத்தையும்
பிரசவத்துக்கு உதவிக்கு வந்த
மச்சினியையே தாயாக்கிய
குருசாமி சாரையும்,
தாய் வயசு பெண்மணியை
ஓடும் பஸ்ஸில்
தேய்த்து நின்ற வயசுப்
பையன் சிவதாணுவையும்
·பாரின் போன
மாமன்காரன் வரும்
வரைக்கும்
சின்ன முதலாளியை
துணைக்கு வைத்த
சொக்கந்தெரு
செல்லம்மாளையும்
காலேஜ் டூருக்கு
கொடைகானல் போய் விட்டு
'பொட்டலம்' தேடிய
கோவிந்தனையும்
புரமோஷன் வேண்டுமென்று
இருக்கும் ஆபிசரைப் பற்றி
'மொட்டை' போட்ட சேகரையும்

நினச்சாலே ....
கலங்கிப் போவுது
மனசெல்லாம்.

கடவுள் பயம்
இருப்பத்தால்தான்
இதையெல்லாம்
நான்
சொல்லுபவனாக
இருக்கிறேன்.
எழுத்தாள சந்திப்புகள்
======================

மரத்தடியில் ஜெயமோகனின் பதில்கள் அருமை. கேட்கிறவர்களின்
மேதாவிலாசங்களை கேள்வி கேட்காமல் , இதமாக எல்லோருக்கும்
பதில் தந்தது நிறைவாக இருக்கிறது. முக்கியமாக உஷாவின் கேள்விக்கு
அவர் தந்த பதில் , எனக்கே பதில் சொன்னாற் போல இருந்தது. கேள்வி
கேட்டவர்களும் கரடிகுளம் ஜெயபாரதிபிரியா, கொங்கணாபுரம் செந்தில்
அயன்புரம் சத்தியநாராயணன் டைப்பில் கேட்காமல் உருப்படியாக
கேள்வி கேட்டதைப்போலவே இனியும் கேட்டால் எழுத்தாளர்களும்
'பொளந்து' கட்டிவிடுவார்கள்

0 0 0

பிரபலமானவர்களிடம் கேள்வி கேட்பதும், கையெழுத்து வாங்குவதும்,
அவர்கள் வீட்டுக்குச்சென்று பார்ப்பதும் தமிழர்களின் நிரந்தரகுணங்கள்.
'இதில் ஒரு சோகம் இருக்கிறது ' என்று சொன்ன வாத்தியார் கூட
அம்பல அரட்டை அடிப்பது வேறு விஷயம்.

என் நண்பன் ஒருவன் பாலகுமாரனின் தீவிர வாசகன். ஒரு முறை அவரைப்
பார்க்கப் போனானாம்.

என்ன பேசினீங்க - நான்

ஒண்ணும் பேசலை. வாங்க என்றார். அமைதியாக உட்கார்ந்திருந்தேன் - அவர்

வேற என்ன பண்ணீங்க..?? ஏன் பேசலை

ஒண்ணும் பேசத் தோணலை..கொஞ்ச நேரம் கழிச்சு ' உங்க வயி…
எனக்குப் பிடித்த சில தமிழ்ப்படங்கள்
==========================

அழகி
முதல் மரியாதை
கடலோரக் கவிதைகள்
சிந்து பைரவி
தேவர் மகன்
உன்னால் முடியும் தம்பி
கேளடி கண்மணி
உதிரி பூக்கள்
புன்னகை மன்னன்
குணா
மஹாநத
ஹே ராம்
ஒரு கைதியின் டைரி
ராஜபார்வை
இருவர்
காதலுக்கு மரியாதை
நாயகன்
குருதிபுனல்
மனதில் உறுதி வேண்டும்
பூவே பூச்சூடவா
கை கொடூக்கும் கை
சலங்கை ஒலி
சிப்பிக்குள் முத்து
மூன்றாம் பிறை
நிழல் நிஜமாகிறது
கன்னத்தில் முத்தமிட்டால்
ரோஜா
மெளனராகம்
அழியாத கோலங்கள்
அலை பாயுதே
மின்சாரக் கனவு
டூயட்
வருஷம் 16
அந்த 7 நாட்கள்
அழகன்
பாரதி
சின்ன கவுண்டர்
கடல் பூக்கள்
சேது
ஆண்பாவம்
மண்வாசனை
மின்னலே
இதயம்
ஜானி
காதல் மன்னன்
கிழக்கு வாசல்
கிழக்கு சீமையிலே
ரிதம்
வாலி
தில்லுமுல்லு
சத்யா
முள்ளும் மலரும்
தூறல் நின்னு போச்சு

எனக்குப் பிடித்த ரொமாண்டிக் கவிதைகள்
=========================================

உறவில்
தேனாய் உருகித் தழதழத்துக்
கடு மூச்சில் கன்னம் சுட்டு
தெய்வம்...தெய்வம் என்று
நெஞ்சுக்குள் நெருங்கிக் கொண்டாய்....
நான் நம்பவில்லை ..

வம்பாக,
ஊமையிருட்டில் உனைத் தேடும் உள்ளங் கைக்குள்
தாழம்பூ முள் தரித்து
ரத்தம் இயங்கியதும்---
நான் சிரிக்கக் கண்டேன்.
உடல் திறந்து
உனை நாடும் மர்மத்தில்
பட்டதெல்லாம் இன்பமாச்சு...
ரத்தம்--தேன்
உடல்--கை பொம்மை
நீ--நான்
கை கோர்த்த புயல்கள்....

- எஸ். வைதீஸ்வரன்

******************************

வயதின் வாசல்
------------------
இந்த மலையை ஜெயித்தாக வேண்டும்
----- ஜெயித்தாக வேண்டும்..
தினந் தினமாய் உயரமாகிக் கொண்டிருக்கிறது
இந்த மலை -

என் கால்களுக்கு இடையில்
திமிர் அடங்கும் குதிரையாக்கி இதன்
ஆளுமையை ஒடுக்க வேண்டும்.
சூழல் கரடு முரடாகி கால் சறுக்கும்
மேடு பள்ளங்கள்,
என் நரம்புகளை உராய்ந்து
உடலை நீளமாக்குகின்றன..

அதிலேறி
முட்டி மோதும் முயற்சிகளால்
கொட்டும் வியர்வை
எனக்கு ஆனந்தமாகின்றன

அசிங்கமாய் சின்ன வயதில்
வெறுப்புடன் தெரிந்த
பல பாறை இடை வெளிகள்
இன்றெனக்கு ரகஸிய அடையாளங்களை
அங்கங்கே காட்டுகின்றன..

காற்று நின்று புதிராய்…
ஒரு தண்ணிமாஸ்டரின் டயரிக் குறிப்புகள்
========================================

நேற்று என் மராத்தி நண்பன் குழந்தையின் பர்த்டே பார்ட்டிக்கு
சென்றிருந்தேன். கேக் வெட்டி முடிந்த பிறகு வழக்கம் போல்
குழந்தைகளெல்லாம் ஒரு ரூமில் விளையாட, பெண்டுகள் எல்லாம்
இன்னொரு ரூமில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்க, கன்சல்டண்டுகள்
ஹாலில் உட்கார்ந்து கொண்டு குடிக்க ஆரம்பித்தோம். அமெரிக்கா
வந்த புதிதில் இந்த மாதிரியான பார்ட்டிகளை எல்லாம் பார்க்க
கொஞ்சம் விநோதமாக இருந்தது. இப்போது இதெல்லாம் பழகிப்போய்
நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

இதுதான் புதிதே தவிர குடிப்பது எனக்குப் புதிதல்ல. கல்லூரி
நாட்களிலெல்லாம் , நான் Golden Eagle கூடக் குடிக்காத சூரப்பழம்.
ஹாஸ்டல் தினங்களில், என்னை யாரவது கலாட்டா செய்ய வேணுமென்றால்,
லேசாக பீர் தெளித்துக் கொண்டு மிரட்டினால் போதும், ஸ்தலத்திலேயே
'உச்சா' போய் விடுவேன். காலேஜ் ·பைனல் இயர் வரை அப்படித்தான்.
கல்ச்சுரல் ·பெஸ்டிவல் சந்தர்ப்பங்களிலும், பிரிவுபசார விழாக்களிலும்
கூட நான் தைரியமாய் 'நோ' சொல்லி வந்தேன். அப்பா கொடுக்கும் பணத்தில்
குடிக்க வேண்டாம் என்று நி…
ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, நேற்று ஒலிபரப்பானது.Red carpet என்று செல்லமாக அழைக்கப்படும் இது, யாருக்கு அவார்டு கிடைக்கிறதோ என்று பார்ப்பவர்களை விட , ஜொள்ளர்களை அதிகமாக ஈர்க்கிறது. ( ஹி..ஹி..)

அந்தப் பளபளப்பும், உடையலங்காரமும், நகைகளும், காலணிகளும் எங்கிருந்துதான் நடிகைகளுக்கு வருகிறதோ என்று நான் வருடா வருடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வருடம் ஜெ.லோ, மெல், டெமி மூர் பென் ஆ·ப்லெக் , ரஸ்ஸல் க்ரோவ் , டென்ஸல் வாஷிங்டன், ஹாலி பெர்ரி, ஆகியோர் கண்ணை உறுத்தும் 'வரவில்லை' லிஸ்ட். வந்தவர்களில் ஆச்சரியப்படுத்தியவர் காதரின் ஸீடா ஜோன்ஸ். போன வருட விழாவில் பாட்டி மாதிரி இருந்தவர் இப்போது 'சிக்' கென்று இருந்தார். அவர் பதில் சொல்ல சொல்ல பக்கத்தில் மைக் டக்ளஸ் அவரை தேவதா விசுவாசத்தோடு பெருமிதமாக பார்த்துக் கொண்டிருதார். அவரென்று இல்லை...நடிகைகளோடு வரும் கணவர்கள் / ஆண் நண்பர்கள் எல்லாமே 'தேமே' என்றுதான் நிற்கிறார்கள். Lord of the Rings தான் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை அள்ளியது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த பில்லி க்ரிஸ்டல் படு காமெடி ஆசாமி.உறுத்தாமல் எல்லா…