Monday, March 01, 2004

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, நேற்று ஒலிபரப்பானது.Red carpet என்று செல்லமாக அழைக்கப்படும் இது, யாருக்கு அவார்டு கிடைக்கிறதோ என்று பார்ப்பவர்களை விட , ஜொள்ளர்களை அதிகமாக ஈர்க்கிறது. ( ஹி..ஹி..)

அந்தப் பளபளப்பும், உடையலங்காரமும், நகைகளும், காலணிகளும் எங்கிருந்துதான் நடிகைகளுக்கு வருகிறதோ என்று நான் வருடா வருடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வருடம் ஜெ.லோ, மெல், டெமி மூர் பென் ஆ·ப்லெக் , ரஸ்ஸல் க்ரோவ் , டென்ஸல் வாஷிங்டன், ஹாலி பெர்ரி, ஆகியோர் கண்ணை உறுத்தும் 'வரவில்லை' லிஸ்ட். வந்தவர்களில் ஆச்சரியப்படுத்தியவர் காதரின் ஸீடா ஜோன்ஸ். போன வருட விழாவில் பாட்டி மாதிரி இருந்தவர் இப்போது 'சிக்' கென்று இருந்தார். அவர் பதில் சொல்ல சொல்ல பக்கத்தில் மைக் டக்ளஸ் அவரை தேவதா விசுவாசத்தோடு பெருமிதமாக பார்த்துக் கொண்டிருதார். அவரென்று இல்லை...நடிகைகளோடு வரும் கணவர்கள் / ஆண் நண்பர்கள் எல்லாமே 'தேமே' என்றுதான் நிற்கிறார்கள். Lord of the Rings தான் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை அள்ளியது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த பில்லி க்ரிஸ்டல் படு காமெடி ஆசாமி.உறுத்தாமல் எல்லாரையும் வாரிக் கொண்டிருந்தார். lost in Trnsalation திரைக்கதைக்காக சோ·பியா கப்போலா ( கொஞ்ச்ச்ச்சூண்டு வயசுக்காரர்) பரிசு பெற்றார். ·ப்ரான்ஸிஸ் போர்டு கப்போலாவின் பரம்பரை. ஆஸ்கார் பரம்பரையென்று விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள். அவர் பரிசு பெறும்போது, நிகொலஸ் கேஜ் - இவரும் கப்போலா குடும்பம்தான் - பெருமிதத்துடன் கை தட்டிக் கொண்டிருந்தார்.

விழா முழுக்க anti-bush, anti-war கோஷங்கள் அங்கங்கே கேட்டுக் கொண்டிருந்தன. நல்லவேளை 'வாய்ஸ் கொடுக்கிறேன் ' என்று யாரும் தனியே கிளம்பவில்லை. யார் யார் பரிசு வாங்கினார் என்று நான் தனியே பட்டியல் தரப் போவதில்லை. ஆனால் என்னென்ன படங்கள் பார்க்க வேண்டும் என்று தனி பட்டியல் தயாரித்து விட்டேன்.

Sea Biscuit
Mystic River
Lost in Transalation

Mathy had also recommended some films in her blog. I should check it again....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...