Skip to main content

Posts

Showing posts from March, 2005

தயாராகும் அமெரிக்கா

"Any job which can be reduced to a set of rules is at risk"

BPO வில் இருந்து KPO - Knowledge process outsourcing நோக்கி
போய்க்கொண்டிருக்கிறது என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, வெளிநாட்டுக்குப் போகும் வேலைகளை பற்றி இனிமேல் கவலைப்பட்டு ஆவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது.ஹைடெக் வேலைகள் இப்படியே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தால் அமெரிக்காவில் இனி Service Industry மட்டும்தான் பிழைக்கும் என்கிற பயமுறுத்தல்களுக்கு நடுவே இனி வரும் காலத்தில் பிழைக்க வேண்டுமானால், அமெரிக்கர்கள் எங்கே கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறார் டேனியல் பிங்க்.

இது என்னுடைய சகோதரர்களுக்கு எட்டட்டும் என்று இங்கே தந்திருக்கிறேன்.
அமெரிக்கர்களுக்கு நம்முடைய மேலாண்மை நிபுணர்களைப் பற்றியும், இடம் பாத்து தட்டுபவர்களைப் பற்றியும் சரியாகத் தெரியாதோ என்ற எண்ணம் இந்தக் கட்டுரையை படிக்கும்போது வந்து கொண்டே இருந்தது. என்னதான் ப்ரொக்ராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்தாலும், பர்ஸனல் டச் இல்லாவிட்டால் எந்த வேலையிலும…

46, பாணாதுறை தெற்கு, கும்பகோணம்

இங்கேதான் ஒரு காலத்தில் நெக்ஸஸ் சர்வீஸ் செண்டர் இயங்கிக் கொண்டிருந்தது. முக்கிய கிளை 15-20 ஊழியர்களோடு திருச்சியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தஞ்சாவூர் / மாயூரம்/ திருவாருர்/ கும்பகோணம் பகுதி வாடிக்கையாளர்களுக்கு உடனடி கவனிப்பு வேண்டுமென்பதால் ஒரு சேல்ஸ் ஆசாமியையும், சர்வீஸ் பிரகஸ்பதியையும் பிடித்து, கும்பகோனத்தில் ஒரு வீட்டை பிடித்து, கம்யூட்டர்/ போன்/டெலக்ஸ் மெஷினோடு கொஞ்சம் ஸ்பேர்ஸ் கொடுத்து, உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

சர்வீஸுக்கு நான். சேல்ஸுக்கு வெங்கடேஷ் ராமானுஜம். பேரென்னவோ ரெண்டுபேருக்கும் சுத்த ஐயங்கார் பேரென்றாலும், பண்ணுவதெல்லாம் அதற்கு சம்பந்தமில்லாத வேலைகள். காலை மாயவரத்திலிருந்து சரவணாவோ, தாஜுதீனோ, செந்திலோ பிடித்து நான் வர, ஆர்வி தஞ்சாவூரிலிருந்து வருவான்.
வந்தவுடனேயே Menthol plus/ Gold kings உடன் கொஞ்சம் கதை அடித்து காப்பி செலுத்தி விட்டு, திருச்சிக்கு போன் பண்ணி மேனேஜருக்கு மஸ்கா போட்டு விட்டு, ஒரு பதினோரு மணிக்கு எழுத்து (கொசு விரட்டியாகவும்) உபயோகித்துக் கொண்டிருந்த என் வெஸ்பாவில் உலா போவோம். சோழனோ, சிட்டி யூனியன் பேங்கோ, டெலிகாம் டிபார்ட்மெண்டோ கொஞ்ச நேரம் போய் …

நன்றி ரோசாவசந்த்

நண்பர் ரோசா வசந்துக்கு என் கருத்துக்களை முந்தைய பதிவில் எழுதுவதற்கு உன் நான் என்னையெ ஒரு முறை கேட்டுக் கொண்டேன் - இதை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று. ஏனெனில் கோபத்தில் நானும் அவ்வப்போது நிதானம் இழப்பவன்தான். ஆனால் வெளிப்பார்வைக்கு இனிப்பும், நாகரீகமும் உள்ள கனவான்களாக இருந்து கொண்டு உள்ளே புரையோடிப் போயிருக்கும் எண்ணங்களுக்கு சொந்தக்காரனல்ல. ரோசாவையும் கிட்டத்தட்ட அப்படியோரு மனிதராக நினைப்பதால், "நாம் நமக்கு சொல்லிக் கொள்வதையே கொஞ்சம் உரத்து சொல்லலாம்" என்ற எண்ணத்துடனேயே தயக்கத்தை விலக்கிவிட்டு எழுதினேன்.

எழுதியதை அவர் சரியாகவே புரிந்து கொண்டு பதிலிறுத்தார். இதற்கு மேலும் அந்த பதிவை பதிப்பித்த நிலையிலேயே வைத்திருந்து அது இங்கே ஒரு அறிவுரைத் தூணாக நிற்பதை விரும்பவில்லை. அதுவே அவர் புரிந்துணர்விற்கும், நாகரீகத்துக்கும் நான் கொடுக்கும் மரியாதை. மேலும் மேலும் நண்பர்கள் அந்தப் பதிவிற்கு பின்னூட்டமிட்டு, அந்த திரியை அணையாமல் இருக்க வைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில், அது என் பெட்டகத்தில் Draft ஆக வைக்கப்படுகிறது.

நண்பர் ரோசா தன் கேள்விகளையும், விமரிசனங்களையும் ஆ…

மறுபடியும்

எதிர்பாராமல் கிடைத்த இந்த நீண்ட இடைவெளி நிறைய படிக்க நேரம் தந்தது. ஆரம்பித்தபோது இத்தனை நீண்டதாக இருக்கும் என்பது கூட தெரியவில்லை. தவிரவும் எழுதும் வலைப்பதிவர்களின் அலசலும், வீச்சும், விஷயகனமும் கொஞ்சம் கலவரப்படுத்தியதும் நிசம். ஏதாவது எழுத உட்கார்ந்தால் மண்டைக்குள் ஆட்டோ சத்தம் கேட்க ஆரம்பிக்க, எழுத ஆரம்பித்த பாதி பதிவுகள் Draft ஆகவே இருக்கின்றன. ஆனால் பின்னூட்ட சேவை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

மேலும் நான் பணிபுரியும் இடத்திலேயே என் வீட்டம்மாவும் வேலைக்கு சேர்ந்து விட்டதால், கொஞ்சம் நேர நெருக்கடி வேறு. காலை ஆறு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள், மதியம் இரண்டரை மணிக்கு வருகிறார்கள். எனவே காலை எழுந்து, என் கடன்களை முடித்து, விழித்தவுடன் தென்படும் அம்மா இல்லா வெறுமையை ஈடுகட்ட கொஞ்ச நேரம் சூர்யாவுடன் தாயுமானவனாய் சுற்றி, அந்த விக்கிரத்துக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம்/ நைவேத்தியம் இட்டு டே கேர் என்று சொல்லப்படும் நவீன நரகத்தில் இட்டு விட்டு அலுவலகம் செல்லும்போது தினமும் வலிக்கிறது.

அந்த வலிக்கு சொறிந்து கொள்ள வலைச்சுவரில் கிறுக்கி இருக்கலாம். செய்தவன் தான். ஆனால், இப்போது என்னமோ …