Skip to main content

Posts

Showing posts from February, 2007

காமெடி டைம்

சன் டீவி சிட்டிபாபு கூட இதைப் போல முயற்சிக்கலாம். கொஞ்ச நாளில் கட்டாயம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சி ஒன்றின் ஜாக்கி ஒருவருக்கு நேயர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அழைத்த பெண் நேயர், தன் கணவனின் சமீபகால நடவடிக்கையைப் பற்றி புகார் செய்கிறார். தன் கணவர் சமீபகாலமாகவே வெகு அமெரிக்கராக நடந்து கொள்வதாகவும், தங்களிடையே கொஞ்ச நாட்களாகவே இணக்கமான உறவு இல்லாததாகவும் சொல்கிறார். தன் கணவர் எங்கேயாவது "கன்னம்" வைக்கிறாரா என்று சந்தேகமாக இருப்பதாகவும், அந்த ரேடியோ ஜாக்கி அதை துப்பறிந்து சொல்லவுமாக வேண்டுகொள் வைக்கிறார். சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும் இந்தியர்கள்.

மிகுதியை இங்கே கேளுங்கள்.

உண்மையாகவே நடந்ததோ, செட்டப்போ, விஷயம் அது அல்ல.. இதில் மறைந்து கிடைக்கின்றன ஏராளமான விஷயங்கள்.

இப்போது சொல்லுங்கள். இது போல இந்தியாவில் நடக்குமா..?? நம்ம மக்கள் அவ்வளவு இலகுவாக ஏமாறக்கூடியவர்களா..??

இறக்கும் இதயம்

நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்க
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்

சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது

ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான…

Eternal Sunshine of the Spotless Mind

ரொம்ப நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த படம்
ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.

அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்க்க ஆரம்பித்து, டைட்டில் ஓடுவதற்குள்ளேயே தூங்கிப் போய் விட்டேன். திருப்பித் தரவேண்டிய நாள் வரவும், அவசர அவசரமாக முதல் நாள் இரவு பார்த்தேன்.

ஒரு சாதாரண கதைக்கு, கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தூவி, அதை மிக வித்தியாசமான முறையில் பரிமாறி இருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி Pause பண்ணிவிட்டு, இது நான் நினைப்பதுதானா என்று வீட்டு அம்மணியிடம் ருசுப்படுத்தி விட்டு பார்க்க வேண்டி இருந்தது மொத்தப் படமும்.

பீச் பார்ட்டியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஹீரோ. காதலாகி சேர்ந்து கொஞ்ச நாள் ஊர் சுற்றுகிறார்கள். பிறகு சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போகிற அந்தப் பெண் சும்மா இருக்காமல், டாக்டரிடம் போய் தன் மூளையில் ஹீரோவை பற்றிய ஞாபகமே இல்லாமல் போகும்படியான சிகிச்சை செய்து கொள்கிறாள். அடுத்த நாள காலை, தன்னைப் பார்க்க வரும் ஹீரோவை அவள் "நீ யார்..? " என்று கேட்க ஸாருக்கு அதிர்ச்சி. கொஞ்ச ந…