Skip to main content

Posts

Showing posts from September, 2004

பொறுக்கியது.....

தமிழகத் தேர்தல் - என்ன பிரியாணியோ..??
ச்...ச்ச்...மாட்டிக்கிச்சு.

ம்...நடங்க அண்ணாச்சி . பூஜைக்கு நேரமாச்சி


அருண் கொலட்கர்

கமலஹாஸனும் ஹரி அண்ணாவும்...

பிரகாஷ் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையினால், "கல்கி எல்லாம் என்னா நைனா..பிசாத்து. இதுக்கெல்லாம் போய் விரதம் எடுக்கணுமா" என்று நான் எழுதப்போக, மாயவரம் மாஃபியா " ஆஹா..அடுத்தது மூக்கன் பெரும்பத்திரிக்கைகளை தாக்குகிறான் " என்று சிலிர்த்தெழுந்து, மெய் சிலிர்க்க மயிர்பொடிக்க சங்கநாதம் செய்து விட்டார்கள்.

ராம்கியின் பின்னூட்டத்தில் இருந்த என் ஒரு வரிதான் நிசம்.போகட்டும். விகடனில் கற்றது பெற்றதும் பகுதியில் கூட சரியாக பத்தி பிரிப்பதில்லை என்று பார்த்தீர்களா. புத்தகம் முழுக்க மலிந்து விட்ட அச்சுப் பிழைகள் வேறு. தருமத்திற்கு தரப்படுவது என்பதால் இணைய விகடனை அவர்கள் கண்டுகொள்வதில்லையா..?? படிக்கவே எரிச்சலாக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று "ஐ லவ் யூ விகடன் " என்று ஒரு தொடர். ஹரி அண்ணாவுக்கு பிரஷர் ஏற்றக்கூடிய ஒரு கட்டுரையை நம்ம கமலஹாஸன்
எழுதி இருக்கிறார். அதிலிருந்து...

ராவணன் காதலில் நியாயம் இல்லாமல் போனாலும் நேர்மை இருப்பதைப் பாருங்கள் என்பேன்.

பலவந்தம் செய்ய விரும்பாத ராவணனின் காதல் கடிதமே அசோகவனம். ராமன் சோகமாக வனத்தில் தேடி அலைந்தது போலவே, அவள் மனம் மாறம…

மீரா - அண்ணா - பெனகல்

கொஞ்ச நாள் முன்பு சந்தோஷ் வலைப்பூவில் காந்தி - அண்ணா - துக்ளக் என்ற ஒரு பதிவு வந்தது. காந்தியாரை கடவுளாகப் பார்க்கும் மனிதர்களிடையே கொஞ்சம் வித்தியாசப்பட்டு ஷ்யாம் பெனகல் எடுத்த படத்தைப் பற்றி நான் இங்கே எழுதி இருந்தேன். இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கும் இந்த செய்தி காந்தியடிகளுக்கும் மீரா பென் என்ற பெண்மணிக்கும் இருந்த ஸ்நேகிதம் பற்றி சுதீர் காக்கர் என்பவர் எழுதி இருக்கும் புத்தகத்திலிருந்து எடுத்து இட்டு இருக்கிறது.

சும்மா - ஒரு தகவலுக்கு.

தனியே..தன்னந்தனியே...

மாயவரம் பக்கத்தில் உள்ள கோமல் என்ற என் சொந்த கிராமத்துக்கு போகும்போதெல்லாம் அங்குள்ள வீடுகளில் மாமனார், மாமியார், பிள்ளைகள், மருமகள்கள் மற்றும் குழந்தைகளோடு வாழும் குடும்பங்களைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். என் இளமைப் பருவத்திலேயே, மாயவரம் மாதிரியான ஊர்களிலேயே, அம்மாதிரியான பெருங்குடும்ப வாழ்க்கைகள் அருகி வந்த காலம். இத்தனை கூட்டத்தில் இருக்கும் கோப தாபங்களையும், பிரச்சினகளையும் சகித்துக் கொண்டும், ச்ந்தோஷமாக வாழ்ந்தது மட்டுமல்ல, மெரினாபீச் போல கூடம், சமையலறை என இருந்த வீடுகளிலிருந்தே இனிய "இல்லறமும்" நடத்தி இருக்கிறார்கள். மிகப் பெரிய காரியம் இது. கொஞ்சம் அசந்தாலும், மானம் போய் விடக்கூடிய சூழலில், பருவயதில் உள்ள குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, யாருக்கும் எந்த பிரச்சினையும் வராமல் கணவன் மனைவியாக வாழ்வதென்பது சவால்தான்.

அவள் விகடனில் என் டைரி என்ற பக்கத்தில் ஒரு நகர்ப்புற வாசகி எழுதி இருக்கிறார்.

நாங்கள் குழந்தையாக நினைக்கும் எங்கள் மகள் இப்போது பத்தாவது படிக்கிறாள். எப்போதும் அவள், நான், என் கணவர் மூவரும் ஒரே படுக்கையில்தான் படுப்போம். அவள் தூங்கி…

விரதம்..?? !!!

இனிய நண்பர் ஐகாரஸ், நேற்றுடன் தன் விரதத்தை முடித்து விட்டதாக மறுபடியும் வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி இது என்றாலும், விரதம் எடுத்த காரணம் என்ன என்று படித்தபோதுதான் ஆச்சரியமாக இருந்தது.

கல்கியிலோ, விகடனிலோ அல்லது அச்சு ஊடகங்களிலோ, தன் படைப்பை பிரசுரித்தல் என்பது அவ்வளவு பெரிய காரியமா..?? அதுவும் இன்று அச்சு ஊடகங்கள் இருக்கும் தரத்தில் அது என்ன அவ்வளவு சிரமமான காரியமா..?? பிரகாஷுக்கு கைவந்திருக்கும் எழுத்து லாவகத்திற்கும், நகைச்சுவைக்கும், அவருடைய வாசிப்பு அனுபவத்தினையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது அவருடைய அச்சு உலகத்தின் மீதான பிரமிப்பு (?!!!) கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

நான் படிக்கும் இணையப்பக்கங்களில் விகடனுக்குத்தான் முதலிடம். ஆனால் விகடனில் கூட எல்லா பகுதிகளும் படிக்கும் படியாகவா இருக்கின்றன. சிறுகதைகள் படிக்கும் வழக்கம் சுத்தமாக போய் விட்டது. கழுகு, கற்றதும் பெற்றதும், மியாவ், ஹாய் மதன், கவிதைப் பக்கம், தலையங்கம், ரொமான்ஸ் ரகசியங்கள் என்று ரொம்ப செலக்டிவ் ஆகத்தான் படிக்கிறேன் இப்போது. என்னைப் பொறுத்தவரை வலையேறி இருக்கும் அச்சுப்பத்திரிக்கைகளை விட, …

பன்னீரைப் போற்றுதும்....

அடியவரை முன்னிறுத்தி ஆண்டவனைக் கண்ட
வடிவழகி ஆண்டாளைப் போல - விடியுமென்று
வென்னீரை காலிலே ஊற்றித் துடித்திருந்த
பன்னீரைப் போற்றுவோம் வா..!!

கள்ள மறிந்திடார் கண்களால் நன்மை செயும்
உள்ளத்தைக் காட்டி உணர்வுகளை மூடியே
வாளின் நுனிமீது வீற்றிருந்த வல்லவர்தம்
தாளினைப் போற்றுவோம் வா.!!

கண்கள் திறந்திருக்க காதுகளில் கெட்குமொலி
அன்னையின் நாமமென ஆசையாய்ச் சொல்லி
மரபுதனை மீறாமல் மாத(ம்) ஐந்து ஆண்ட
துறவியைப் போற்றுவோம் வா..!

இன்னும் பலவாறாய் ஏதேதோ சொல்லிநாம்
பின்னிப் புகழ்ந்தாலும் பற்றாது - எண்ணியதைச்
சொல்லாமல் விட்டாலும் சோர்வினைக் கொள்ளாத
நல்லோரை நாடுவோம் வா.

பதவியை பாதுகாத்து, அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, பவ்யமாய வெளிவந்த பன்னீரை தமிழகம் மறந்து விடுமோ என்று கவிஞர் சின்னக்கண்ணன் "என் பாட்டுடைத் தலைவன்" என்ற தலைப்பில் தினம் ஒரு கவிதையில் கவி பாடினார். ரொம்ப வித்தியாசமான கருப்பொருள் என்று தெரிவு செய்து சேமித்து வைத்திருந்தேன். ஜெயலட்சுமி "குண்டு" வெடித்திருக்கும் இச் சூழ்நிலையில் சின்னக்கண்ணன் மறுபடி கவிதை எழுதுவாரோ என்னவோ... என் பங்குக்கு ஒரு நாலு வரி....

பொட்டி கொடுத்தேன் என்று சொல்கிறாயே ஏட்…

IKEA

வீடு வாங்கினதின் பக்க விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அபார்ட்மெண்டுகளில் தங்கி இருந்தவரை ஒரு பிரச்சினையும் இல்லை. மாதா மாதம் சமர்த்தாக வாடகை கொடுத்து விட்டு மல்லாந்து
கிடக்கலாம். வேறு உபத்திரவம் இல்லை. ஆனால் சொந்த வீட்டு பொறுப்புகள் அசர அடிக்கிறது. கொல்லை வாசலுக்கு புல் வெட்டுவது முதல், சுவற்றில் ஆணியடித்து ஏதாகிலும் மாட்டுவது வரை, எல்லாமே தமாஷ்தான். ஆணியும் எங்கு பார்த்தாலும் அடித்து விட முடியாது. மேக்கப் போட்ட கோடம்பாக்கத்து தாரகைகள் போல வெளியிலிருந்து பார்க்க அழகா இருந்தாலும், தப்பான இடத்தில் ஆணி அடித்தால், ப்ளாஸடர் ஆஃப் பாரிஸ் பொத்துக் கொண்டு விடும். ஆமாம் ...அட்டை வீடுதான். கலிஃபோர்னியா மாநிலத்தில் நிலநடுக்க சாத்தியங்கள் அதிகம் உள்ளதால் மரத்திலும், அட்டையிலும், தம்தூண்டு காங்க்ரீட்டிலும் தான் வீடுகள்...!!!இந்த வீட்டுக்கு, அதுவும் இத்தனாம் பெரிய வீட்டுக்கு சாமான்கள் வாங்கிப் போடா விட்டால், "தனியே" இருக்க பயமாக இருக்கிறது. பேசினால் வீடு முழுக்க எக்கோ அடிக்கிறது. மாசா மாசம் வீட்டுக் கடன் கட்டுவதற்கே பாதி சம்பளம் கயண்டு விடுவதால், ஃபர்னிச்சர் என்பது …

குழலும் யாழும்

நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இங்குள்ள லக்ஷ்மி நாராயண் கோவிலில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். நண்பரின் மகள் பாடப்போகிறாள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க குழந்தைகளே பாடுகிறார்கள் என்று கீதாபாரதி என்ற அமைப்பு அறிவித்திருந்ததால் இரட்டிப்பு சந்தோஷம் எனக்கு. குழந்தைகள் பேசினாலே மயங்கிப்போய் கேட்டுக் கொண்டிருக்கத் தோன்றும் எனக்கு. அவர்களின் கீச்சுக்குரலை வைத்துக் கொண்டு பாடினால் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயிலும் விழுந்தது போல் அல்லவோ..?? மேலும் சூர்யாவை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போனால், புதிதாய் வால் முளைத்த
வானரம் போல் விடாது துள்ளிக்கொண்டிருக்கும் அவன், ஒரு இடத்தில் உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் பழகுவானே என்ற ஆசையும். யாருக்கும் சொல்லாத அப்பாவின் ஆசையும் அதில் இருந்தது. அது அப்புறம்....:-)

குழந்தைகள் குறை வைக்கவில்லை. அவர்கள் பாடுவதே பெரிய விஷயம். அதிலும் அத்தனை பெரிய ஹாலில், வாத்யங்களோடு, ஸ்ருதியை அமைத்துக்கொண்டு, உச்சரிப்பு சிதறாமல், பயப்படாமல், அவ்வப்போது மக்கர் செய்த மைக் முன் அமர்ந்து பாடுவது என்பது உண்மையி…

அம்மா...அம்மம்மா...

காலையில காப்பியோட
எழுப்பலையிண்ணா
வெந்நீரு மூஞ்சியில

பல்லு வெளக்க
ப்ரஷ்ஷை காணுமுன்னா
நாலஞ்சு தட்டுவாணி பட்டம்

குளிக்கையில துண்டு
வைக்கலைன்னா
உம்ம கொடிக்கம்பு
எம் முதுகு குத்தும்

வெள்ளைச் சட்டை
கொஞ்சம் பழுப்பானா கூட
உம்ம நாக்கு
பாம்பா கொத்தும்

இட்டிலி "பொசு பொசு" ன்னு
இல்லையின்னா
வட்டில் வந்து
எம் மூஞ்சு பேக்கும்

பகலு முழுக்க வேலை செஞ்சு
ஓஞ்சு கெடந்தா
ராவிக்கு வந்து
மறுபடியும் உசுரை வாங்கும்

அந்த ...

பாழாப்போன பாவி மனுசன்
கட்சி ஆபீசு போனா மட்டும்
கட்சி தலைவி "அம்மா" காலுல
"பொத்து பொத்து" ந்னு
விழுந்து எழும்புதாரு.
கையை, காலை
கட்டிகிட்டு
அசிங்கமா வாலாட்டுதாரு.

பழிவாங்குதுய்யா ஒன்னை
இந்த உலகமுன்னு
நெனைக்க ஏலாம
எம் பாவி மனசு பதறுதய்யா...

-

இப்படிக்கு

ஹேமமாலினி
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மனைவி
சித்தாம்பூர்

இசை என்னும் மாயமான்

எந்தப் பருவத்தில் பாட்டுப் பித்து பிடித்தது என்று தெரியவில்லை. சந்தேகமில்லாமல், பொங்கலுக்காக அப்பாவுடன் சேர்ந்து அதிகாலையில் எழுந்த திருப்பாவைக் காலங்கள் தான் என்று நினைக்கிறேன். அத்தனையும் பாடி முடித்து கோயிலுக்கு போய் விட்டு நேராக காளியாகுடிக்கு போய் சாப்பிடும் பொங்கல் தான் என் இளமைக்கால சங்கீத ஊக்கி. கணீரென்று இருக்கும் குரலால், பாட்டுப் பாடவும் முடியும் என்று தோன்றிய கணத்திலேயே ஸ்கூல் ப்ரேயர் பாடும் கூட்டத்தில் ஒரு ஆளாகி விட்டேன். "அணுத்தோறும் கரந்தே" என்று ஆரம்பிக்கும் பாடலை +2 முடிக்கும் வரை தினமும் பாடிக் கொண்டிருந்தேன். பிறகு லோக்கல் பாட்டுப் போட்டிகளில் பெண் குரலில் பாடி கொஞ்சம் பரிசுகள் . இது மகரக்கண்டம் வருவதற்கு முன்பு. அந்த நாளிலேயே கர்நாடக இசை கற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசை. அப்பாவிடம் கேட்டதில், "ஹிந்தி க்ளாசுக்கு போடா..அதுதான் உபயோகமா இருக்கும்" என்று சொல்லி விட்டார். அதனாலேயே கர்நாடக இசை மேல் தனி பரிவு வந்து விட்டது. பதினொன்றாவது படிக்கும்போது, என் ஜானகி குரல், தடேலென்று இளையராஜா குரலாகி விட்டது. பின்பு மெல்லக் குழைந்து எஸ்.பி.பி மாதிரி நி…

ஹம் தும் - ஒரு ஆச்சரியம்

ஹிந்தி படங்களின் அளவுக்கு மீறிய வியாபார உத்திகளில் எனக்கு எப்போதும் எரிச்சல் உண்டு. இந்த அதீதமான வர்த்தக உத்தியே என்னை அந்தப் படங்களை அடிக்கடி பார்க்க விடுவதில்லை என்றாலும், என் ரசனையை ஒத்த நண்பர்களின் கருத்து கிடைத்தால், சில படங்கள் பார்ப்பது வழக்கம்.நேற்றிரவு "ஹம் தும்" பார்த்தேன். நல்ல படம். ரொப்ம வித்தியாசமான படம் கூட. படமும் ஆடம்பரமாகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை கேரளத்து கால்வாய்களில் துடுப்பைத் தொடாமல், நீர் போக்குக்கு போவது போல, நியூ யார்க், பாரிஸ், மும்பை என்று சுற்றி வந்தாலும், நம்பமுடியா சினிமாத்தனங்கள் அங்கங்கே தலை நீட்டினாலும், நல்ல வசனங்களாலும், நல்ல நடிகர்களாலும் காப்பாற்றப்பட்டு
நிறைவைத் தந்தது.

படத்தின் நாயகன் ஒரு ஜொள்ளுப் பார்ட்டி ( படம் எனக்குப் பிடித்த காரணம் இது மட்டுமல்ல...) . எந்தப் புள்ளியிலும் மையம் கொள்ளாமல் சந்து முனையில் சிந்து பாடும் ரகம் ( நன்றி : சபாநாயகர்) . அவனுடைய ஜொள்லீலைகளில் குறுக்கே வரும் பெண்ணொருத்தி அவனுடைய வாழ்க்கையில் மறுபடியும், மறுபடியும் வருகிறாள். ஒவ்வொரு முறை குறுக்கிடும்போதும், முற்றிலும் வேறான குணமுள்ள அவர்களுக்கு இடையே …

காந்தி - பெனகல் பார்வையில்

சின்ன வயசில் ரிச்சர்ட்டு அட்டன்பரோவின் "காந்தி" பார்த்தது நினைவிருக்கிறது. தனக்கும், தன் பிள்ளைக்கும் புரிகிறதோ இல்லையோ, படத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று மாயவரம் விஜயா தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போன என் தாயாரை இப்போது நினைத்தாலும் வியக்கத் தோன்றுகிறது.

நெடுநாள் கழித்து, நேற்று ஷ்யாம் பெனகலின் " The making of Mahathma" என்ற ஆங்கிலப் படத்தை பார்க்க நேரிட்டது. பெனகல் ஸ்டைல் ரொம்ப ஆச்சரியமூட்டவில்லை. இந்த உத்திகள் எல்லாம் ஏற்கனவே கமலஹாஸனால் அவருடைய தமிழ்ப்படங்களில் எடுத்தாளப்பட்டிருந்ததால் அத்தனை வித்தியாசமாக இல்லை. விவரணப்படத்திற்குரிய களமாக இருந்தாலும், மற்ற படங்களைப் பார்ப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது . அதற்குக் காரணம், ஷ்யாமின் அநாயாசமான டைரக்ஷனாக இருக்கலாம்.

முழுக்க முழுக்க காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று பிறகு எங்கோ படிக்க நேரிட்டபோதுதான் தெரிந்தது. இது முன்னமே தெரிந்திருந்தால் படம் ஆரம்பித்த கணத்திலிருந்து இந்திய சுதந்திர போராட்ட காலத்தை பற்றிய விவரணைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை தவிர்த்திருக்கலாம். ஓரளவ…

SKYPE - எனக்குப் புதுசு

ஸ்கைப் என்கிற இந்தப் புதிய செயலி சர்வதேச தொலைபேச வசதியாயிருக்கிறது. குறைந்த கட்டணம். நல்ல வாய்ஸ் குவாலிட்டி. வலையிலிருந்து இறக்கி, உங்கள் கணிணியில் நிறுவிக்கொண்டால், அமெரிக்க உள்ளூர் நண்பர்களுடன் பேச இலவசம். இந்தியாவிற்கு தொலைபேச யூரோவில் கட்டணம்.

முயன்று பாருங்களேன். தகவல் தந்த வில்லோனுக்கு வந்தனம்.

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ

திருப்பாவையில் மேற்கண்ட வரிகள் வருகிறதென்று நினைக்கிறேன். தேன்சிட்டுக்கு பிறகு "காணாமல் போனவர்கள்" லிஸ்டில் எழுதலாமென்று நான் யோசித்து வைத்திருந்த பெயர் எல்லே ராம் அலையஸ் ஏஞ்சல் ராமச்சந்திரன். தனிப்பட்ட காரணங்களாலும், வேலைகளாலும் இவ்வளவு நாட்கள் எழுதாமலிருந்தவர், ம.ஆ.வி.கொண்டாட்டத்துக்காக, தலை நீட்டினார். நீட்டிய தலையில் பூத்தூவி, மாலை போட்டு, (கழுத்தில் துண்டை இறுக்கி) வலைப்பூவுக்கு கூட்டி வந்தவர்கள் பெயரை நான் மறுபடி சொன்னால், மறுபடியும் யாராவது ஆட்டுவித்தால் யாரொருவர் பாடுவார்கள்.

இணைய சுதந்திரம் மூச்சு முட்டுகிறது

எல்லே ராம் என்ன எழுதுவார்...எப்படி எழுதுவார் என்று நான் சொல்லத் தேவையே இல்லை. வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன் என்று அவர் சொன்னவுடன் திரண்டு வந்து வரவேற்றவர்களில் பலபேர் சொல்வார்கள். எதை எழுதினலும், அதை அலுப்புத் தட்டாமல், படிக்கும் விதத்தில், சுவாரஸ்யமாக மீ(னா)னோ, தேனோ, மானோ கலந்து, விருந்து படைப்பதில் வல்லவர். சேதுவை வைத்து இவர் விளையாடி இருக்கும் சித்து விளையாட்டைப் பார்த்து இன்று காலையிலிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

கூடிய சீக்கிரம் மானமிழந்த மூக்கன்…

நன்றி

பெற்ற தாய்க்கும்
தமிழூட்டிய அப்பனுக்கும்
அறிவூட்டிய
ஆசிரியருக்கும்
நம்பிக்கை தரும்
அபிராமிக்கும்
தைரியம் தந்த
புத்தகங்களுக்கும்
மென்மையூட்டிய
கவிதைகளுக்கும்
அங்கீகாரம் தந்த
விகடன் தாத்தா
மற்றும்
ராயர் மாமாவுக்கும்
அலை பட்டு உருவம் மாறும்
கரையைப்போல
அடித்துத் திருத்தி
அணைத்துக் களித்து
புத்தி சொல்லும்
நேசர்களுக்கும்
துரோகத்தின்
வலியுணர்த்தியவர்க்கும்
இலவசமாக இணையத்தில்
இடம் தந்த
ப்ளாக்ஸ்பாட்டுக்கும்
இதயத்தில் இடம் தந்த
இனிய ஸஹ்ருதயர்க்கும்

என் நன்றிகள்.


இது என் இருநூறாவது பதிவு.


நேரானவர்களுக்கு

இனிய ராஜ்குமார்,

சார்வினையோ, எதிர்வினையோ இல்லை என்ற அறிவிப்போடு நீ எழுதி இருந்தாலும், நேராக, நேர்மையாக, உன் பெயரிலேயே அதை எழுதி இருப்பதால் அந்த விஷயத்தை தொட்டவன் என்ற முறையில் இதற்கு பதில் அளிப்பது என் தார்மீகக் கடமையாகிறது.

சமகால நிகழ்வுகளை குறித்து கவனமில்லாமல் பழைய கதை பேசித் திரியும் வலைப்பூக்கள் கொஞ்சம் கூட இல்லை என்பது நமக்குத் தெரியும். " எதில் பார்த்தாலும் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும், தமிழக நடப்புகளை மட்டுமே அயலகத்தமிழர்கள் முழங்கி வருகிறார்கள். அயல்நாட்டைப் பற்றியும் அவர்கள் எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்" என்று நீ கூட எழுதி இருந்தாய். ஆனால், பெரியாரின் 125 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தியை மடற்குழுவில் பகிர்ந்து கொண்ட உடனேயே, பெரியாரின் பிராமண எதிர்ப்பு நிலையை காரணம் காட்டி, அதை திசை திருப்பும் நிகழ்ச்சி நடந்தது.

இது மட்டுமல்ல, இதற்கு முன்னர் கூட அவர் இதைப் போலவே முழங்கி வந்திருக்கிறார். யாரும் இதைப் பொருட்படுத்துவது இல்லை என்ற நிலை இருந்தாலும், பதில் சொல்லாமலேயே மெளனம் காத்தால், திரும்பித் திரும்பி சொல்லப்படும் பொய், உ…

பெரியார் சர்ச்சை

பெரியாரின் பெயரை வைத்து மறுபடியும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது ரா.கா.கி நண்பர்கள் மத்தியில்.

யாரோ ஒரு முகமூடி தனக்குப் பூணுல் மாட்டி விட்டு வேடிக்கை பார்த்து எழுதுவதாக ஆப்பு எழுதியபோது புலம்பிய நண்பர் திருமலை, அப்படி எழுதப்பட்டதற்கான காரணம் சரியென நிரூபித்து வருகிறார். எப்போது பிராமணர்கள் பற்றிய விமரிசனங்கள் முன் வைக்கப்பட்டாலும், கச்சை கட்டிக் கொண்டு இறங்கி, அவர்கள் ஏதும் செய்வதில்லை. அவர்கள் செய்வதை விட ஆதிக்க ஜாதியினர்தான் அதிகம் செய்கிறார்கள். அவர்கள் பாவம். என்று ஹூங்காரம் செய்கிறார்.

பிராமணர்களின் ஜாதி உணர்வு பெருவாரியாக இன்றில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது எல்லாம் ஆரம்பித்த இடம் எங்கே..??
வர்ணாஸ்ரம தர்மத்தை வேதங்கள் மூலம் உபதேசிக்க ஆரம்பித்தவர் யார்..??
இன்னமும் எண்ணிலடங்காத கொடுமைகளை, அரசர்களுக்கு தங்களிடம் இருந்த செல்வாக்கின் மூலமும், அதன் மூலம் தாங்கள் பெருக்கிய செல்வத்தின் மூலம், பரம்பரை பரம்பரையாக தாங்கள் திரட்டிய புத்திக் கொழுப்பை வைத்து பேயாட்டம் ஆடியதும், மறக்கக்கூடிய கடந்த காலங்களா..?? அவர்கள் உபதேசித்த ஜாதியை, ஜாதிபெருமையை ஆதிக்க ஜாத…