Thursday, September 16, 2004

ஹம் தும் - ஒரு ஆச்சரியம்

ஹிந்தி படங்களின் அளவுக்கு மீறிய வியாபார உத்திகளில் எனக்கு எப்போதும் எரிச்சல் உண்டு. இந்த அதீதமான வர்த்தக உத்தியே என்னை அந்தப் படங்களை அடிக்கடி பார்க்க விடுவதில்லை என்றாலும், என் ரசனையை ஒத்த நண்பர்களின் கருத்து கிடைத்தால், சில படங்கள் பார்ப்பது வழக்கம்.

still12

நேற்றிரவு "ஹம் தும்" பார்த்தேன். நல்ல படம். ரொப்ம வித்தியாசமான படம் கூட. படமும் ஆடம்பரமாகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை கேரளத்து கால்வாய்களில் துடுப்பைத் தொடாமல், நீர் போக்குக்கு போவது போல, நியூ யார்க், பாரிஸ், மும்பை என்று சுற்றி வந்தாலும், நம்பமுடியா சினிமாத்தனங்கள் அங்கங்கே தலை நீட்டினாலும், நல்ல வசனங்களாலும், நல்ல நடிகர்களாலும் காப்பாற்றப்பட்டு
நிறைவைத் தந்தது.

படத்தின் நாயகன் ஒரு ஜொள்ளுப் பார்ட்டி ( படம் எனக்குப் பிடித்த காரணம் இது மட்டுமல்ல...) . எந்தப் புள்ளியிலும் மையம் கொள்ளாமல் சந்து முனையில் சிந்து பாடும் ரகம் ( நன்றி : சபாநாயகர்) . அவனுடைய ஜொள்லீலைகளில் குறுக்கே வரும் பெண்ணொருத்தி அவனுடைய வாழ்க்கையில் மறுபடியும், மறுபடியும் வருகிறாள். ஒவ்வொரு முறை குறுக்கிடும்போதும், முற்றிலும் வேறான குணமுள்ள அவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி மெல்ல மெல்ல குறைகிறது. இந்த விஷயம் அவளுக்கு முதலில் தெரிந்து, அவனை நேசிக்க துவங்க, அவனோ தான் அவளை நேசிப்பதையே குற்றம் என தாழ்வுணர்ச்சியில் நினைத்துக் கொண்டு தவிக்க, கடைசியில் அவள் நேசம் தெரிந்து அவளை நோக்கி ஓடும்போது அவள் பறந்து விடுகிறாள். அவனுக்குள் இருந்த சிறுவன் அடிபட்டு, அவன் மெளனமாகி விடுகிறான்.

சைஃப் அலிகானும், ராணியும் நடித்திருக்கும் இந்தப் படம் சர்வ நிச்சயமாக இந்தி சினிமாவுக்கு புதுசு. பாதி பேருக்கு வசனங்களின் உண்மையான, உன்னதமான அர்த்தம் புரிந்திருக்குமா என்பதே சந்தேகம். எல்லா parallel சினிமாக்களிலும் காணப்படும் இரண்டடுக்கு அம்சத்தை டைரக்டர் அட்டகாசமாக கையாண்டிருக்கிறார். பாடல்களும் நன்றாயிருக்கிறது. ராணி வழக்கம்போல அந்த "டெமி மூர்" குரலிலும், கதை பேசும் கண்களிலும் "ஊடு" கட்டி அடித்திருக்கிறார். சல்மான்கானுக்கு அட்டகாசமாக பொருந்தி இருக்கக்கூடிய பாத்திரத்தை சைஃப், சட்டையை அடிக்கடி கயட்டிக் கொண்டு, விளையாட்டுப் பிள்ளையாக அருமையாக செய்திருக்கிறார். கதையின் ஓட்டத்தோடு ஒரு கார்ட்டூன் ஸ்ட்ரிப் கூடவே வருகிறது. கதையின் போக்கை துரிதப்படுத்த, கதையை எளிமையாக சொல்ல பயன்பட்டிருக்கும் இந்த உத்தி எனக்கு ரொம்ப புதுசு.

still1

பழுத்துபோன ரத்தி அக்னிஹோத்ரியும், ராயல் தாடியோடு ரிஷிகபூரும் நடித்திருக்கிறார்கள். ராணியின் அம்மாவாக வரும் டீவி நடிகையும், ஓரிரு காட்சிகளில் விளக்குக் கம்பம் போல வந்து போகும் அபிஷேக்கும் பாந்தம்.
தாராளமாக, தைரியமாக நீங்களும் முயற்சி செய்யலாம்.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...