Monday, September 27, 2004

கமலஹாஸனும் ஹரி அண்ணாவும்...

பிரகாஷ் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையினால், "கல்கி எல்லாம் என்னா நைனா..பிசாத்து. இதுக்கெல்லாம் போய் விரதம் எடுக்கணுமா" என்று நான் எழுதப்போக, மாயவரம் மாஃபியா " ஆஹா..அடுத்தது மூக்கன் பெரும்பத்திரிக்கைகளை தாக்குகிறான் " என்று சிலிர்த்தெழுந்து, மெய் சிலிர்க்க மயிர்பொடிக்க சங்கநாதம் செய்து விட்டார்கள்.

ராம்கியின் பின்னூட்டத்தில் இருந்த என் ஒரு வரிதான் நிசம்.

khvsha

போகட்டும். விகடனில் கற்றது பெற்றதும் பகுதியில் கூட சரியாக பத்தி பிரிப்பதில்லை என்று பார்த்தீர்களா. புத்தகம் முழுக்க மலிந்து விட்ட அச்சுப் பிழைகள் வேறு. தருமத்திற்கு தரப்படுவது என்பதால் இணைய விகடனை அவர்கள் கண்டுகொள்வதில்லையா..?? படிக்கவே எரிச்சலாக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று "ஐ லவ் யூ விகடன் " என்று ஒரு தொடர். ஹரி அண்ணாவுக்கு பிரஷர் ஏற்றக்கூடிய ஒரு கட்டுரையை நம்ம கமலஹாஸன்
எழுதி இருக்கிறார். அதிலிருந்து...

ராவணன் காதலில் நியாயம் இல்லாமல் போனாலும் நேர்மை இருப்பதைப் பாருங்கள் என்பேன்.

பலவந்தம் செய்ய விரும்பாத ராவணனின் காதல் கடிதமே அசோகவனம். ராமன் சோகமாக வனத்தில் தேடி அலைந்தது போலவே, அவள் மனம் மாறமாட்டாளா என்ற ஏக்கத்தில் ராவணனின் மனமெல்லாம் அசோக வன வாசம் செய்தது. இந்த நியாயமில்லாத... ஆனால், நேர்மையான காதலுக்காக ராமனின் படையைப் போரில் எதிர்கொள்ளவும், போரில் மாளவும் துணிந்தான் ராவணன். சாகும்தறுவாயில்கூட காதலோடுதான் செத்திருப்பான் ராவணன். ராமனுக்குக் கடைசி வரையில் அப்படியரு வெறித்தனமான காதல் இருந்ததாகத் தகவல் இல்லை. அயோத்தித் துணிகளைச் சலவை செய்யும் தொழிலாளி, ராமனின் மனதைக் கறைப்படுத்தியதாகத்தான் நமக்கு வந்தடைந்த கதைகள் சொல்கின்றன.


ம்...ம்.. இன்ட்ரஸ்டிங்....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...