Skip to main content

Posts

Showing posts from January, 2005

நன்றியும் வணக்கங்களும்

"டாட்டா" சொல்லும் நேரம் வந்து விட்டது.

கடந்த ஒரு வார நட்சத்திர அந்தஸ்து பல புதிய அனுபவங்களை தந்திருக்கிறது. சாதாரணமாக படிக்காத பல வலைப்பூக்களை படிக்க முடிந்தது. பல உண்மைகள் விளங்கின. திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் யாரும் முனைந்து, அந்தளவு எழுதுவது இல்லை. எனவே புதிதாக வந்திருக்கும் வலைப்பதிவர்கள் மேற்சொன்ன நாட்களீல் நிறைய எழுதினால், நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். அதைப் போலவே சனி, ஞாயிறு எழுதுவோரும் குறைவே.

இங்கே எல்லா விதமான வலைப்பதிவரும் இருக்கிறார்கள். ஜாலிக்கு, கேலிக்கு, லாலிக்கு மற்றும் ஜோலிக்கு என வகைவகையாக இருந்தாலும், ஜோலிக்கு எழுதுபவர் குறைவு. அவற்றிலும் வாசகர் எதிர்வினை கிடைப்பது மிகச் சிலருக்கே. அதனால் சொர்ந்து போகாது அவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். உடனடியாக கிடைக்கும் பின்னூட்ட "பலே" க்களை விட, நீண்டகால பயன் முக்கியம் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. அவர்கள் அவ்வப்போது சில ஜாலி பதிவுகளையும், லாலி பதிவுகளையும் போட்டால், பொழுதுபோக்குவதற்காக வலைமேயும் என் போன்ற சராசரி வாசகர்களையும் தன் பக்கம் இழுக்க முடியும். அதைப் போல கருத்துக் களம் ச…

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இதுவாழ்த்துகள் சபாநாயகம் ஐயா.

புதிய வலைப்பதிவர்களுக்கு

பல அடிப்படை விஷயங்கள் Blogger.com லேயே இருக்கிறது. புதிதாக வருபவற்றை தெரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்க்க முதலில் ஒரு யாஹூ குழுமம் இருந்தது. இப்போது வலைப்பதிவர் மேடை. ஆனால் யாஹூ குழுமத்தில் உள்ள பழைய இடுகைகளை கூட ஒரு முறை பார்த்து விடுவது நல்லது. சேர்த்த தகவல்களை, புதிதாக வரும் பதிவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்பினால் விக்கி க்குஅளிக்கலாம் - அங்கே எழுதலாம்.

எழுத்துரு, யுனிகோடு செயலி முதலான இடங்களுக்கு புது மாப்பிள்ளை முகுந்தராஜின் தமிழா.காம்.

எழுத்துரு மாற்றி மற்றும் பொங்குதமிழ் செயலியை பின்னுட்டப் பெட்டியில் செரும் முயற்சிகளுக்கு சுரதா.காம். உங்கள் வலைப்பூவை படித்துக் கொண்டிருக்கும் வாசகருக்கு, அந்த க்ஷணத்தில் தமிழ்மணத்தில் என்ன இடுகை வந்திருக்கிறது என்ற விவரமும் தர விரும்பினால், தர முடிவதாக ஒரு எளிய code block கொடுத்திருந்தார். இப்போது அந்த இடுகையை கானவில்லை. க்ளிக்குகளை மிச்சமாக்கும், ஜன்னல் அசைவுகளை குறைக்கும் உபயோகமான விஷயம் இது. அவர் விருப்பப்பட்டால் மறுபடியும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சமீபமாக ஒரு தமிழ் HTML editor ஐ உருவாக்கி, ராவணன் என்கிற பெயரிட்டு வெளியிட்டிருக்கிறார். Micr…

காலம் தாண்டிய ஓட்டம்

எங்களை எல்லாம் எங்கள் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது இப்போது நினைக்கும்போது.

முக்கியமாக ஊரிலிருந்து வெளியே வந்து தனியே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு இது புரியுமென்று நினைக்கிறேன். முன் தலைமுறை பெற்றோர்கள் போல இந்த தலைமுறை பெற்றோர் இல்லை. குழந்தைகளிடம் அத்தனை கண்டிப்பு காட்டுவதில்லை. பெற்றுக் கொள்வெதே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு என்றாகி விடுவதால், செல்லம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் போக்கு, சாப்பாடு சாப்பிடுவதில் கூட "இது வேண்டுமா..அது வேண்டாமா..சரி பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு" என்று குழந்தை வளர்ப்பின் முகமும் முறையும் மாறி வருகிறது.

என் இளமைக்காலம் செல்லமாய்த் தான் கழிந்தது. கடைக்குட்டி, ஒரே பிள்ளை என்பதால் அத்தனை செல்லமென்றாலும், கட்டறுத்து விட்டு வளர்ந்ததாய் எப்போதும் நினைவில் இல்லை. எங்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடும், டான்ஸ் ஆடும் , சகலவிதமான புத்தகங்களையும் படிப்பதற்கு அனுமதி தந்திருந்த, என் வகுப்புத் தொழிகள் வீட்டுகு வந்தால் கிண்டலடிக்கும், சினிமா பார்த்து விட்டு கூட உட்கார்…

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது.வாழ்த்துகள் செல்வராஜ்.


கிரீடப்பதிவு என்கிற ஐடியாவே எங்கோ காசி அளித்த பின்னுட்டம் மூலம் கிடைத்த ஐடியாதான். இப்போது ஜெயஸ்ரீ கிரீடப்பின்னூட்டம் என்று ஒரு பகுதியை அறிமுகம் செய்யச் சொல்கிறார். என் கதை முடியப்போகிறது. எனவே வரும் வார நட்சத்திரங்களுக்கு விருப்பம் இருந்தால், அதை தொடரலாம். கிரீடப்பதிவு தேர்ந்தெடுப்பதற்கே நிறைய படித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. கிரீடப்பின்னூட்டத்திற்கு....இன்னமும் நிறைய படிக்க வேண்டும். ஆனால் பின்னூட்டம் இடும் செயலை உற்சாகப்படுத்தும் முயற்சி இது. முடிந்தவர்கள் செய்யுங்கள்.

நாகரீகத்தின் தொட்டில்

மெஸபடோமியா என்று அந்த இடத்தைக் குறிக்கிறார்கள். ஈராக் என்று நான் அறிந்த அதை, பச்சாதாபம் பாக்கி வைத்திருக்கும் அமெரிக்கர்கள் ஐராக் என்று லேசான குற்றவுணர்வோடு குறிப்பிடுகிறார்கள். சதாம் தாத்தாவின் கொடுங்கோலாட்சியிலிருந்து மக்களை மீட்டெடுத்து சுதந்திரம் வழங்கிய குட்டி புஷ், இப்போது அங்கே தேர்தல் நடத்தி , அவர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்யப் போகிறாராம்.

ஜனவரி 30 என்று நாள் குறித்திருக்கிறார்கள். வேட்பாளர்கள் பெயர் வெளியே யாருக்கும் தெரியாது. தெரிந்தால் உயிர் போய்விடும். ஆனால் திசம்பர் 15 முதல் பிரசாரம் ஆரம்பித்து விட்டதாம். ஆச்சரியமாக இருக்கிறது கேட்பதற்கு. ஆனால் இதை எப்படியாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. இராக்கிலிருந்து திரும்பி வரும் ராணுவக்கைதிகளை( வீரர்களை) பேட்டி காண்கிறார்கள் டெலிவிஷனில். "இந்த தேர்தல் நம்மால் அவர்கள் மீது திணிக்கப்படுகிரது" என்கிறார்கள் போர் வீரர்கள். அமெரிக்காவில் வாழும் ஈராக்கியர்கள் " அந்த தேர்தலுக்கு நாங்கள் இங்கிருந்து ஓட்டுப் போட மாட்டோம். எங்களுக்கு அவர்கள் அரசை தீர்மானிக்க உரிமை கிடையாது" என்கிறார்கள் தெளிவாக…

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இதுவாழ்த்துகள் ஸ்டாக் மார்க்கெட் சசி

கைவீசம்மா கைவீசு..உலாப்போகலாம் கைவீசு

தேர்தல் நேரத்தில் வந்தோ அல்லது மற்ற முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளின்போதோ எழுத்தாளர் மாலன் வலைப்பதிவது வழக்கம். ஆனால் இப்போது வாசகன் என்கிற தன் புதிய வலைப்பதிவில் எழுதத்துவங்கி இருக்கிறார். எழுதிய மூன்றுமே அவருக்குள் இருக்கும் வாசகனை பேச விட்டிருக்கும் முயற்சிகள். வாக்கப்பட்ட பூமி புத்தகத்தில் உள்ள ஒரு கிராம தேவதையின் வாஞ்சை குறித்தும், பொன்னியின் செல்வனின் மேல் பித்து கொண்ட ஏராளமான வாசகர்களுக்கான கேள்வியாகவும், கட்டபொம்மன் மரணதண்டணையை நிறைவேற்றிய பானர்மேன் சாட்சியம் பற்றியும் எழுதப்பட்ட பதிவுகள் அவை. சன் டீவி வேலைகளுக்கு இடையேயும், திசைகள் ஒன் மேன் ஆர்மியாக இருப்பதற்கும், மற்ற சமூக/அரசியல்/எழுத்து/இலக்கிய வேலைகளுக்கு நடுவே, தான் வாசகனாக உணர, வலைப்பதிவுக்கு அவரைப் போன்றவர்கள் வருவதில் இருந்து, வலைப்பதிவுகளின் தனித்தன்மையும் முக்கியமும் ஒருவாறு விளங்குமென நினைக்கிறேன். இதைப் போலவே பத்ரியின் கிராம முன்னேற்றம் சம்பந்தமான வலைப்பதிவில் பத்திரிக்கையாளர் சுதாங்கன் பின்னூட்டம் பார்த்தேன். நடு முதுகில் சில்லென்றிருந்தது. இன்னமும் எத்த்னை பிரபலங்கள் நம் எழுத்துகளை எல்லாம் வாசிக்கிறார்களோ...வலைப…

மண்ணு தின்னப் போவதை....

"காயமே இது பொய்யடா" என்றெல்லாம் நவகாலத்தில் சொல்லிக்கொண்டு ஆன்மபலம், அறிவுபலம் என்று ஜல்லியடித்தால், மனைவிமார்கள் தொப்பையில் குத்தி, குளிர் இரவில் வெளியே தள்ளி விடுவார்கள். மாறாக, படிப்புக்கு, மனத்திண்மைக்கு தயார் செய்யும் பருவத்திலேயே உடம்புக்கும் ஏதாவது செய்து திடப்படுத்திக் கொண்டால், என்னைப் போல வயசான காலத்தில் குளிரிரவில் சைக்கிளோட்டிக் கொண்டு ஜிம்முக்கு போய் தங்கு தங்கென்று ஓடத் தேவை இராது.

சின்ன வயசில் சிவாஜியையும், மற்ற தாட்டியான ஹீரோக்களையும் பார்க்கும்போது அவர்கள் நடிப்பு பாதித்த அளவுக்கு, அவர்கள் தொப்பையும், குட்டி ஐஸ் வண்டி போல சிரமப்பட்டு நகரும் அவர்கள் உருவமும் ஏன் தொந்தரவு தரவில்லை என்று தெரியவில்லை. பிறந்தது மூன்று சகோதரிகளுடன் என்பதால் வெறும் பல்லாங்குழி, ஏழாங்கல், ஏரோப்ளேன் தாயம், கேரம்போர்டு , செஸ், சில்லிகோடு, ஐஸ்பாய் ( I Spy யாம் இது!!!) என அதிக தொந்தரவில்லா விளயாட்டுகளாகதான் இளமையில் பழகினேன். ஆரம்பப்பள்ளிகளில் வைக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம், எல்லாரும் என் துரத்தலுக்கு பயந்து முன்னே அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். தப்பித் தவறி ஒருமுறை கி…

கீரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது

வாழ்த்துகள் சித்ரன்.

இணையவெளி வீதியிலே...

நண்பர் ஈழநாதனை சிங்கையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் காலச்சுவடு கண்ணணோடு பார்த்தபோது நம்பமுடியவில்லை. இவரா இத்தனை வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு, வயதுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சீரியஸ் தன்மையுடன் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று. ஆர்ச்சர்ட் ரோட் பார்க்குகளிலும், மலேசியா ஜோஹர் பாஹ்ரூவிலும், செந்தோசா, பத்தாமிலும் நேரம் செலவழிப்பதை விடுத்து, இப்படி உட்கார்ந்து மாங்கு மாங்கென்று எழுதும் தமிழார்வத்திற்கு வந்தனம். சில விடயங்களில் அவரது தீவிரத்திற்கு என்னிடம் மாற்றுக் கருத்து உண்டென்றாலும், தமிழால் கவர்ந்த இளைஞர். சலனச்சுருள் பதிவில் குறும்படங்களைப் பற்றியும், படிப்பகம் பதிவில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்திலக்கியம் பற்றியும், கவிதை என்கிற தன் முக்கிய வலைப்பதிவில் தற்போது, இயல் விருது பெற்ற லண்டன் பத்மநாப ஐயரைப் பற்றியும், அவர் எழுதி வருவது மிக சந்தோஷமான விஷயம். இலங்கை பிரதேசத்தின் இலக்கியச் சுவை நுகர விரும்புவோர் தவறாது நினைவில் கொள்ள வேண்டிய ஈழநாதன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

கடந்த அக்டோபரில் இருந்து வலைப்பதியும் உதயகுமார் சென்னைவாசி. எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்புகள் எல்லாம் சீரியஸான …

மஞ்சூரியன் கேண்டிடேட்

டென்ஸல் வாஷிங்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஆகிருதிக்கும், அசத்தல் பர்சனாலிட்டிக்கும் அவர் நடிப்பு ரொமவே சா·ப்ட். - அங்குசத்துக்கு கட்டுப்படுகிற யானை மாதிரி. ராதிகாவுக்கு கட்டுப்படுகிற நல்லவனுக்கு நல்லவன் ரஜினி மாதிரி. மஞ்சூரியன் கேண்டிடேட் அவருக்காக பார்த்த படம் தான். ஆனால் நிஜமாகவே "படம்" காட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரிஜினல் 1962 ல் ஃப்ராங்க் சினாட்ரா நடிக்க வந்திருக்கிறது. போரின் கோர விளைவுகள் இன்னமும் தொடரும் இந்தக் காலகட்டத்தில், அதையே நவகால நடிகர்களை வைத்து மறுபடியும் செய்திருக்கிறார்கள். அப்போது கொரியன் என்றால், இப்போது இராக். நாளை இரான், ...சிரியா.....?? !! சாகாவரம் பெற்ற கதை என்றால் இதுதானோ..??

இந்தியாவில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ, அதைப் போல அமெரிக்காவில் போருக்கும் அரசியலுக்கும். இங்கு ஒருவர் War Hero என்பது அருமையான பொலிடிசல் அட்வாண்டேஜ். போன தேர்தலுக்கு கூட கெர்ரிக்கும், புஷ்ஷ¤க்கும் இந்த விஷயத்தில் சண்டை வந்தது நினைவிருக்கலாம். புஷ்ஷர் டெக்ஸார் ஏர் நேஷனல் கார்டோடு அல்வா கொடுத்துவிட, கெர்ரி வியட்நாம் போரில் பங்கெ…

இன்றைய கிரீடப்பதிவு

இந்த ஏழு நாளும், தினம் தினம் எழுதப்படும் பதிவுகளில் வாசகர்களின் பாராட்டைப் பெற்ற, உள்ளடக்கம்/ எழுதும் முறை/ காலப்பதிவு / தொனி ஆகிய ஏதோ ஒன்றில் ( ஒன்றிலாவது) சிறந்து விளங்கும் பதிவினை எடுத்து இங்கே அந்த வலைப்பதிவருக்கு கிரீடம் சூட்டி மகிழப் போகிறேன். இதில் புனைவுகள் மற்றும் மற்ற படைப்பாளின் படைப்புகளை தாங்கும் பதிவுகள் வரா.இன்றைய கிரீடப்பதிவு இது.

மனமார்ந்த வாழ்த்துக்கள் பத்ரி.

உலாப்போகும் நேரங்கள் - 1

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில விமரிசனங்களை தருவதாக உத்தேசம். படம் ச்ச்ச்சும்மா...ஜாலிக்கு. கண்டுக்காதீங்க. கொஞ்சம் வாசனையா இருக்கட்டுமேன்னுதான் ஜாஸ்மினைப் போட்டேன்.அஜீவன் என்கிற நண்பரைப் பற்றி, அவர் குறும்படங்களைப் பற்றி ஈழநாதன் மூலமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய Alien Veil என்ற படத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. விஷயம் என்னவென்றால் நண்பருக்கு சினிமா மேல் பயங்கர வெறி. சினிமாவைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் தான் ஏறக்குறைய அவருடைய வலைப்பூ முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் என்ன காரணத்தாலோ, படிக்க சுவாரசியம் ஏற்படாதவாறு ஒரு அயர்ச்சி. வலைப்பூவின் வடிவைமைப்பிலா, இல்லை பத்தி பிரிப்பதிலா, இல்லை வண்ணங்கள் தேர்ந்தெடுத்ததிலா..ஏதோ ஒன்று. அஜீவன்.காம் என்ற தன் வலைத்தளத்தினை கூட, தனியாக வலைப்பூ படிப்பவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் செய்யாது, டிஸ்க்ரிப்ஷன் கூட சேர்த்து இட்டிருக்கிறார். தன் படங்களை பற்றி, சினிமா ஆர்வத்தினை பற்றி, தன் வலைத்தளத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அஜீவன் ஒரு முறை பார்த…

ரெய்ன்கோட்

படத்தை பற்றி ஏற்கனவே இணைய நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்ததால், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. படம் என்ன வகை என்று தெரியாதது ஒரு விதத்தில் நல்லதாய் போனாலும், ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதித்தது.நீருவின் வீட்டு வாசலில் மன்னு அழைப்பு மணியை அடிக்கும் நிமிடத்தில் இருந்து படம் ஒரு கச்சிதமான சிறுகதை. ஐஸ்வர்யா(நீரு) அழகாக கலைந்த ஓவியம் போல் இருக்கிறார் - மனசுக்குள் கடலூர் ஹீரோவைத் திட்டிக் கொண்டேன். மன்னுவுடன் பேசிக் கொண்டே நீரு, தன் வாழ்க்கையை, தன் சந்தோஷத்தை விளக்கும் போது, அவர்களுடைய கடந்த காலத்தினை கோஷ் நடு நடுவே துளித் துளியாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். சம்பாஷணைகள் நடுவே ஐஸ்வர்யாவின் விநோதமான சில செய்கைகளை, அவள் பதட்டத்தை காட்டுவதன் மூலம், "என்னவோ இடிக்கிறதே" என்ற எண்ணம் எழுமாறு செய்திருக்கிறார். ஜன்னல் மூலம் கூப்பிட்டு உள்ளே வந்த ஆசாமி ஒருவர் பேசும் காட்சிகளில் எல்லாம் சஸ்பென்ஸை இன்னமும் வளர்க்கிறது

மெல்ல முடிச்சு அவிழ்ந்து, இருவருடைய பாவனைகளும் இருவருக்கும் தெரிந்து போய், அதை சொல்லிக் கொள்ளாமல் இருவரும் தொடர்ந்து பொய்ப்பந்தலை இறுக்கிக் கட்ட முனைய…

விகடனுக்கு அடுத்து....

வேறென்ன ...ஜூனியர் விகடன் தான்.

வயசில் நான் சீனியரென்றாலும் ( இன்றோடு 33 முடிகிறது ) , போன வாரத்தில் சில சுவாரசியமான விஷயங்களை எழுதி, நல்ல விவாதம் ஒன்றுக்கு - கவனிக்க: சண்டை அல்ல, வழிகோலிய சீனியருக்கு, விகடனுக்கு நன்றி.


ஆளாக்கிய விகடனுக்கும்...


வயசுக்கு வநத பெண்ணுடைய அப்பனின் அடிவயிறு மாதிரி மனசுக்குள் ஞண ஞண என்று இருக்கிறது. என் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஏற்கனவே இரண்டு முறை வலைப்பூ ஆசிரியராக அழைப்பு வந்தும் ஏற்கமுடியாதபடியான சூழ்நிலைகள். இப்போதுதான் செய்ய முடிகிறது.

தமிழும், எழுத்தும் , விமரிசனங்களும் அது விளைவிக்கும் சச்சரவுகளும் எனக்குப் புதிதல்ல என்பதை என்னை தொடர்ந்து அவதானிக்கும் சிலர் அறிவார்கள். அதைப் போலவே என் தடுமாற்றங்களும், ஜல்லிகளும், குழப்பங்களும். என்னைப் பொறுத்தவரை நான் எதையும் தீர்மானித்துவிட்டு செய்வது கிடையாது - ஆஃபிசுக்கு செல்லும் பாதை உட்பட. எந்த தீர்மானங்களும் வைத்துக் கொண்டு எழுதாததால், எல்லா தரப்பையும் எழுத முடிகிறது. எல்லா தரப்பையும் எழுதுவதால், எதற்கும் இணக்கமாவதில்லை. எதனின்றும் விலகிப்போவதில்லை. இது ஊசலாட்டம் மாதிரி தோன்றினால…

காரணம் என்ன..???

மறுபடியும் ஜெயேந்திரர் விவகாரம்.

கூடிய சீக்கிரமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக செய்திகள். ரவி அப்ரூவர் என்று பேச்சு. வழக்கும், அதன் முடிவும் என்ன வேண்டுமென்றாலும் ஆகிவிட்டுப் போகட்டும். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மக்கள் மெளனமாக இருந்து அரசு நடவடிக்கையை ஆதரித்தது பற்றி நண்பர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். " யார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சரி, ஏதாவது ஒருவராவது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பேசுவார்கள்.இவ்வளவு ஏன், வீரப்பன் இறந்ததற்கே கூட, மனித உரிமைகள் மீறப்பட்டதாய் பயங்கர உறுமல் கிளம்பிற்று. ஏன் ஜெயேந்திரரிடம் எல்லோருக்கும் இத்தனை வெறுப்பு..?? " என்றார். எனக்குத் தெரிந்த வகையில், உடனே நினைவுக்கு வந்ததை வைத்து ஜல்லி அடித்தேனே ஒழிய விளக்கமாக சொல்லவில்லை. கீழே உள்ளது விகடன்.காம்மில் இருந்து ஆழமாக கிளறி, தரப்பட்ட அலசல். விகடனுக்கு துவேஷம் ஏதும் இல்லை என்று நான் நம்புகிறேன். இனி ....

---0----0----0---0----

சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஜெயேந்திரருக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல! என்ன தான் சுவையானதாக இருந்தாலும் சதா அதைச் சாப்பிட்டால் நன்ற…

இரண்டாம் ஆட்டம்

பதவியேற்பு விழாவைப் பார்த்துவிட்டு, இப்போதுதான் பணியிடம் வந்தேன்.

ஜார்ஜ் புஷ்ஷின் செகண்ட் இன்னிங்ஸ்...
இந்த விஷயம் காலையில்தான் சி.என்.என்னை மேயும்போது தெரிந்தது. கீழே வந்து உடனடியாக டீவியை போட்டு, பார்க்க ஆரம்பித்தேன். லாரா புஷ் உள்ளே வந்து கொண்டிருந்தார் அப்போது. பின்பு டிக் செனி. பிறகு தனது அமைச்சரவை சகாக்கள் சூழ புஷ். அவரது பதினேழு நிமிட உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. Freedom என்கிற வார்த்தையை இருபத்துமூணு முறையும், Liberty என்கிற வார்த்தையை பதினைந்து முறையும் உபயோகப்படுத்திய yet another "pretty" speech ( as quoted by NPR.org) .

கூடியிருந்த கூட்டத்தின் சோகையான கை தட்டலுக்கும், இறுகிப்போன முகங்களுக்கும் வாஷிங்டன் குளிர்மட்டும்தான் காரணம் என்று நம்ப விரும்புகிறேன்.

ஆனால் இரண்டாம் ஆட்டம் ஆடும் அதிபர்கள் அவ்வளவு "ஆட்டம்" போட முடியாது என்கிறார்கள். ஏனெனில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் இங்கே அதிபராக முடியாது என்பதால், எல்லா முடிவுகளையும் செனட் உறுப்பினர்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் கூடிய சீக்கிரமே அடுத்த அதிபரை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று பேச்ச…

அறிவிப்பு

எனது முந்தைய பதிவின் பின்னூட்டப்பெட்டியில் ஒரு விஷமிக்கும் , எனக்கும் நடந்த வார்த்தைப் பரிவர்த்தனை எனக்கு, என் தரத்துக்கு உகந்ததாக இல்லை. என்னை தூண்டியது மற்றொருவர் என்றாலும், அவருடைய கேள்விக்கு பதில் சொல்கிற முயற்சியில் நானும் கொஞ்சம் கோபத்தில் கலைந்து போனேன்.

எனவே அப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

மாயவரம் பொங்கல்

விவசாயக் குடும்பங்களில் தீபாவளிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட பொங்கலுக்குத்தான் அதிகம் இருக்கும். இருபது வேலி, முப்பது வேலி நிலமெல்லாம் பாதி குத்தகைக்காரனிடமும், மீதி தானே முன்வந்து விற்றதிலுமாய் கழிந்து விட, அரிசி மூட்டையாய் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட்டாலும், பொங்கல் கொண்டாடும்போது மட்டும், முன்னாளைய "சுகஜீவனம்" நினைவுக்கு வந்து விடும்.

எங்கள் இல்லத்திலும் அப்படித்தான். காலையில் இருந்தே அப்பா டென்ஷனாக சுற்றிக் கொண்டிருப்பார். விடிகாலை எழுந்து, ஈரத்துணியோடு, கொல்லையில் சூரியன் தெரியும் இடமாக பார்த்து, பூமியில் செவ்வகமாக குழி தோண்டி, அந்த மண்னை வைத்தே உருண்டைகள் செய்து, குழிக்கு இரண்டு புறமும் கொஞ்சம் இடைவெளி விட்டு வைப்பார். பிறகு மண்பானைகள் வைத்து, இஞ்சிக் கொத்து மஞ்சள் கொத்துடன் அடுப்பில் வைத்து, பொங்கல் பொங்கி இறக்கி சாமிக்கு படைப்பதற்குள் முதுகு விரிந்து விடும். பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அருகம்புல் சொருகி, சூரியகாந்திப் பூவை மேலே வைத்து, பொங்கல் வைத்து படைத்து முடித்ததும்தான் காலையில் இருந்து மறந்திருந்த பசி விறு விறு என்று மண்டைக்கு ஏறும்.

மறுநாள் இன்…

சாமியார்கள் சளைப்பதில்லை

எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மெஷர்மெண்ட்ஸ் லேப் க்ளாஸ். காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு, ஐந்து ஐந்து பேராக பிரித்து விடபட்ட க்ரூப்பில் மக்கள் எல்லாரும் கடலை போட்டுக் கொண்டு இருந்தோம். பத்மாவதி மேடம், லேபில் துணைக்கு இருக்கும் இன்னொரு இளவயசு மேடத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ந.ப. சுந்தர்ராஜன்ங்கிறது யாரு..?? என்கிற கனத்த குரல் எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. கேட்டவரை நான் அதற்குமுன் எங்கும் பார்க்கவில்லையாதலால், குழப்பம் விலகாமல் வெளியே வந்தேன். வெளியே வந்தபின்தான் தெரிந்தது, வந்தவர் தனியாக வரவில்லை. கூட ஐந்தாறு பேர் வந்திருந்தார்கள். அவர்களில் அண்ணனாகப் பட்டவர் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு, ஒற்றைக் காலை பின்னே முட்டுக் கொடுத்து, கைகளை மேலே தூக்கிக் கோர்த்துக் கொண்டு, எழுத்தெழுத்தாக சொன்னார். " தம்பி, படிக்கிற வேலையைப் பாக்காம, பத்திரிக்கைக்கு எழுதறது; ஃபோட்டோ பிடிக்கறதுங்கிற வேலையெல்லாம் வெச்சிகிட்டீங்கன்னா நல்லா இருக்காது; சொல்லிட்டு வரச்சொன்னாஹ" என்றார்.

அதன் பின்தான் முதல் வாரம், ஜூனியர் விகடனுக்காக சிவகங்கை சென்று முத்துக்காமாட்சி சுவாமிகளை பற்றி தகவல் சேகரித…

கோ.கா --- க.கா கண்ணாலம்

நண்பர் கொஸப்பேட்டை குப்ஸாமிக்கு கண்ணாலமாம். மரத்தடி ராஜா மெயில் போட்டிருக்கிறார். ( ஹி..ஹி..இருவரும் ஒருவரே...)

நண்பர் ராஜாவும் இணையம் மூலமாகத்தான் பழக்கம். எங்க ஊர்க்காரர் என்பதால் தனி பாசம். இந்த வலைப்பூவை ஆரம்பித்து, இயங்கு எழுத்துரு/ தனிக் குறியீடு என்றெல்லாம் தண்ணியில்லாமலே தள்ளாடிக்கொண்டிருந்தபோது, ஆபத்பாந்தவன், அனாத ரட்சகனாக சவூதியில் இருந்து உதவிக்கரம் நீட்டினார். அவர் சொன்ன சில ஜிகிடிகள் புரியாததால், என்னுடைய பயனர்/ கடவுச்சொல்லையே அவரிடம் கொடுத்து விட, கன்னிப்பெண்ணை கைவைக்காமல் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்ட வயசுப்பிள்ளை போல், பொறுப்பாக நடந்து கொண்டார். அவருக்கு கண்ணாலம். கன்னி ராசிக்காரருக்கே கண்ணாலமென்றால் பெர்ரிய விஷயம்தான். ஆளை கொஞ்ச நாள் காணவில்லையே எனக் கேட்டபோது, "அவருக்கு தலைப்பூவை பற்றி யோசிக்கவே நேரமில்லை. வலைப்பூவுக்கென்ன அவசரம்" என்றார் பாய்.

காதல் திருமணமென்று நினைக்கிறேன். பத்திரிக்கை சின்னதாக, கச்சிதமாக, இந்தக் காலத்து செல்ஃபோன் போல இருக்கிறது. கலர் கொஞ்சம் "அடிக்கிற" கலர். பத்திரிக்கையை தளபதியே வடிவமைத்திருக்கிறார் போல. - கண்ணாலப் பத்திரிக்கை…

அமெரிக்காவின் அழுகுரல்

கையைக் காலை உதைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து கதறும் பிடிவாதக் குழந்தையை பார்த்த மாதிரி இருக்கிறது இதைப் பார்த்து. நம் வீட்டுக் குழந்தையாக இருந்தால் கன்னத்தில் ஒரு திருகு திருகி, முதுகில் ஒரு வெடி போடலாம். ஆனால் ஊரான் வீட்டுக் குழந்தை ஆயிற்றே, கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க ரேடியோ ஸ்டேஷன் ஜாக்கி ஒருவர், கால் சென்டர் வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பும் ஒரு கம்பெனி எண்ணைத் தொடர்பு கொண்டு, கன்னா பின்னா என்று ஃபோனில் பேசி இருக்கிறார். அமெரிக்க பொருட்களை, கலாசாரத்தை பற்றித் தெரியாத இந்திய அம்மணி, எப்படி தனக்கு சர்வீஸ் செய்வது என்கிற வெறி அவருக்கு. பதிலுக்கு "ஸ்டீனா" என்கிற அந்த இந்திய அம்மணி, பொறுமையாக பதில் சொன்னதையும் கேட்காமல், Bitch என்றும், Rat eater என்றும், I will choke the f**k out of you என்றும் அநாகரிகமாக பேசி ஃபோனை அறைந்து சாத்தி இருக்கிறார். இப்போது அந்த ஸ்டேஷனின் மானேஜர் ரிச்சர்ட் வருதம் தெரிவித்து இருக்கிறார் என்றாலும், சம்பந்தபட்ட ஜாக்கிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சிரிப்புத்தான் வருகிறது.

உங்களுக்கு இந்தியர்களுடன் பேச சங்கடமாக இருந்தால், அவு…

ம.குமரன் தா/பெ மகாலக்ஷ்மி

படத்தின் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் சலிப்பாக இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை நம்பி, ரிஸ்க் எடுத்தேன். நம்பிக்கை வீண்போகவில்லை.

செல்வராகவன்/தனுஷ்/கஸ்தூரிராஜா ஃபேமிலி போல இதுவும் ஒரு ஃபேமிலி படம்தான். ஆனா கொஞ்சம் ரீஜண்டான ஃபேமிலி போல. எடிட்டர் மோகன்/ராஜா/ரவி படம். இப்படி ரெண்டு புள்ளைகளை பெத்தா கோடம்பாக்கத்துல நல்லா பொழைச்சிக்கலாம்போல. இவர்கள் முதல் படம் "ஜெயம்" கொஞ்சம் தான் பார்த்தேன். ஆனா போரடிச்சுதுன்னு எழுந்து போய் ப்ரவுஸ ஆரம்பிச்சுட்டேன். இந்தப் படம் பரவால்லை. கதைன்னு ஒண்ணும் பெரிசா இல்லாட்டியும், எல்லா சரக்கையும் சரிவிகிதமா கலந்து, குடும்பத்தோடு பாக்கிற மாதிரி தர முயற்சி பண்ணி இருக்காங்க.

ஹீரோ ரவி செமையா உடம்பு ஏத்திட்டார். ஆள் நல்லா, ஓங்கு தாங்கா, ஜம்முனு இருந்தாலும், மூஞ்சு ரொம்ப சாஃப்ட். அதை ஈடுகட்டற மாதிரி காட்சிகளிலும், வசனங்களிலேயும், முரட்டுத்தனத்தை ஏத்தி, கதாநாயகனை ரஃப் அண்டு டஃப்பாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். முயற்சி வெற்றி என்றாலும், சில இடத்தில் யதார்த்தத்தை மீறிய முரட்டுத்தனம் தெரிகிறது. இவர் போதாதென்று அப்பா பிரகாசராஜர் வேறு. களம் கிக்பாக்ஸ…

நரி புலி ஆட்டம்

உடனடியாக சங்கரமடம் சம்பந்தப்பட்ட வழக்குகளை தமிழக அரசு சாராத அமைப்பு, அது சி.பி.ஐ ஆகக்கூட இருக்கலாம் - விசாரிக்க வேண்டும்.

இப்படி சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஜெயேந்திரர் கைது நடவடிக்கை ஆரம்பித்தபோது எனக்கு தமிழக அரசு மீது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. ஏனெனில், சங்கரமடத்தின்பால் பாசமும், நேசமும் வைத்திருந்த ஜெ இம்மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இல்லாமற் போகாது என்கிற எளிய நம்பிக்கை அது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் போலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையும், வெளி வந்த தகவல்களும் நம்பிக்கை கொடுத்தன.

அப்புவின் கைது நடவடிக்கையை தொடர்ந்து வெளிவந்த, செய்திகள் அவரை அண்ணாநகர் ரமேஷ் கொலைக்கும் சாட்சியாக சேர்த்து ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள் என்ற ரீதியில் அமைந்தன. அது மட்டுமல்லாமல், அந்த கொலையில் சாட்சியம் தந்தால், சங்கர்ராமன் கொலைப்பழி அவர் மீது ஏறாது என்றும் உறுதி தரப்பட்டதாகவும் வதந்திகள். அதைத் தொடர்ந்து அவர் மீது அரசு காட்டிய பரிவு, அவருக்கு ஏஸி ரூமில் அளிக்கப்பட்ட அவசர மற்றும் விசேஷ சிகிச்சை ( ஜெயேந்திரருக்கு கூட மறுக்கப்பட்ட கவனிப்பு இது..…

Spyware

நான்கு நாட்களாக கதறிக் கொண்டிருக்கிறேன்.

எ ன்னுடைய அலுவலக கணிணியில், Alumni.net க்கு போனபோது, வந்த ஏதோ ஒரு பாப்-அப்புக்கு யெஸ் சொல்லித் தொலைக்க, தொடர்ந்து தொல்லைகள். தானாக WebSearch Toolbar என்ற மென்கலனை நிறுவிக்கொண்டது. பிறகு ஏகத்துக்கு பாப்கார்ன் பொரிவது போல பாப்-அப்புகள் வரத்துவங்கவும், லேட்டாக விழித்துக் கொண்டு அந்த மென்கலனை நீக்கினேன். பிறகும் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த உலாவியும் திறக்காதபோதே ஏகத்துக்கு ஜன்னல் ஜன்னலாக திரை முழுக்க திறந்து கொண்டிருக்கிறது. என்னுடைய வைரஸ் மென்கலன் அவ்வபோது, இங்கே வைரஸ், அங்கே வைரஸ் என்று அதன் பங்குங்கு ஜன்னல் திறக்கிறது.

என்னுடைய பணியிடத்து சப்போர்ட் இஞ்சினியர் வந்து பார்த்துவிட்டு உதடு பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார். காரணம், AD-Aware, spybot போன்ற எந்த மென்கலன்களாளும் நீக்க முடியாமல், VX2- Malware என்ற திருடன் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன் உயிர்நாடி xxxxx.dll என்ற ஃபைலில் இருக்கிறது. ஏன் xxxxx என்று சொல்கிறேனென்றால், ஒவ்வொருமுறை ஸ்பைவேர் க்ளீனர் பாவிக்கும்போதும், அது தன் பெயரை மாற்றிக் கொள்கிறது. Winlogon என்கிற System crit…

பேர் கொல்லும் பிள்ளை

எல்லோராலும் பாராட்டப்பற்ற , புகழ்பெற்ற , பாடல்பெற்ற " மன்மதன் " படம் பார்த்தேன். தீபாவளிக்கு வந்த படங்களிலேயே நன்றாக ஓடிய படம் இதுவென்று சொன்னார்கள். மற்ற படங்கள் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யோசிக்கவே கதிகலங்குகிறது. தமிழ்நாட்டில் இன்ன படம் ஓடும்; இன்னது ஓடாது என்று தெளிவாகவே சொல்ல முடியாத குழப்ப நிலை.

* படம் முழுக்க சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அனுபவத்தின் சாயலோ, அறிவின் அடையாளமோ துளிக்கூட இல்லை. குமுதத்தில் ஒரு பக்க கதையை படித்துவிட்டு, எழுத்த்தாளர் ஆகப் போகிறேன் என்று எழுதக் கிளம்பிய மாதிரி இருக்கிறது.

* படத்தில் கெட்ட பெண்கள் எல்லாம் கரெக்ட்டாக இங்க்லீஷ் பேசுகிறார்கள். ஆனால் ஹீரோ மட்டும் தப்பு தப்பாக பேசுகிறார். (உதா: நீங்களும் யூத்தா இருக்கிங்க. நானும் யூத்தா இருக்கேன் / ஆன் தி வே ல வரும்போது வாங்கிட்டு வந்துர்றேன். ஒருவேளை அவர் கொலை செய்வதற்கு அதுகூட காரணமா இருக்கலாம். சிம்பு சார், ஒண்ணு நல்ல இங்க்லீஷ் பேசுங்க. இல்லாட்டி தமிழ்லயே பேசுங்க. எதுக்கு பொண்ணுகளோட சேத்து, இங்க்லீஷையும் படம் முழுக்க கொல்றீங்க..??

* ஜோவுக்கும், சிம்புவுக்கும் காதல் டெவலப் ஆகும் வி…

பொழைச்சிகிட்ட பாய்(ஸ்)...

பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல் நாயகன் பரத்-சுசீலா ( ஆம்..பனியன் சுசீலாதன்...) என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு பிரபலங்களில் பரத் என்கிற பெயர் எங்குமே வராத பழைய பெயராகி விட்டது. நேத்து பாத்த "செல்லமே" பரத் தான் இப்போ தமிழ்நாட்டுல "வெல்ல(லா)மே" பரத். இந்தப் படத்தை முன்னமே ஒரு முறை நண்பர் வீட்டில திரவத்தை ஊத்திகிட்டே பாத்தது. அதனால நேத்து பாத்த அளவுக்கு உன்னீப்பா பாக்கலை.சும்மா சொல்லக்கூடாது. பயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஷங்கர் கண்டுபிடிப்பு, பாய்ஸிலேயே கதாநாயகனாயிருக்க வேண்டியது- ரங்கராஜன் ஸார் கைங்கர்யத்தில் ஸைட் ரோலுக்கு போனார். பின்ன, மல்லு மக்கள் தூக்கி விட, அண்ணன் காட்டில் இப்போ ஜோர் மழை. அரங்கேற்றம்/ அவள் ஒரு தொடர்கதை கமல் மூஞ்சி போல, பால் வடியும் முகம். நல்லா டான்ஸ் ஆடற பையன்னு நினைக்கிறேன் . முகத்துல சட் சட்டுன்னு மார்ற உணர்ச்சிகள், நயவஞ்சக சிரிப்பு, எகத்தாளப் பேச்சு என்று ஊடு கட்டி அடிச்சிருக்கார். ஓங்குதாங்கா இன்னோரு ஆள் படத்தில் ஹீரோவா நடிச்சிருந்தாலும், இவர்தான் ஸ்கோர் பண்றார். அதென்னங்க பக்கா தமிழ்முகம் உள்ள ஹீரோவுக்கு விஷால்ன்னு வடமொளியில பேரு…

இந்தியாவில் ஸ்பைடர்மேன்

"சிக்கல் நிறைந்த எழுத்தே படிக்கும்போது வாசகனை உள்ளிழுக்கிறது - அவனை மண்டை காய வைப்பதன் மூலம். மற்ற எழுத்தெல்லாம் தட்டையாக இருக்கின்றன" என்பது போன்ற வார்த்தைகளே கேட்காத வயதில் படித்ததெல்லாம் இன்றைக்கும் நினைவில் இருப்பவை. குட்டிக்குரங்கு கபிஷ், முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி ( அ.கொ.தீ கழகம்) , மந்திரவாதி மாண்ட்ரேக், சூப்பர்மேன்- வேதாளர், மேலும் குமுதத்தில் வந்த மியாவ் மீனா போன்ற கதைகள் காணாமற்போன குழந்தைப்பருவத்தினை நினைவுபடுத்தும் விஷயங்கள். ஜட்டி போட்டு பேண்ட் போட்டா நார்மல் மேன். பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர்மேன் என்று சன் டீவி சேகர் கூட கமெண்ட் அடித்திருப்பது நியாபகம் வருகிறது.என் பையன் ஸ்பைடர்மேனைத்தான் விழுந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட டிவிடி தேஞ்சே போச்சு. நடக்கும்போது, தாவும்போது, கைகளை பாபா முத்திரை காட்டிக்கொண்டு வலைநூலை வெளியிடுவது என்று ஒரே ஆட்டம்தான். ஸ்பைடர் மேன் தட்டு, ஸ்பைடர்மேன் காஸ்ட்யூம், ஸ்பைடர்மேன் கார், ஸ்பைடர் மேன் பஞ்சு பொம்மை என்று அவன் அறை முழுக்க இறைந்து கிடக்கிறது.

ஸ்பைடர்மேனின் இந்தியவடிவம் தயார் இப்போது. இங்கே பீட்டர் பா…

ஆ(த்)தீ....

" நம்ம ப்ளஸ் மைனஸொடு, நாம யாருன்னு காட்டிகிறதுக்கு என்னைக்கும் வெக்கமே படக்கூடாதுடா" என்று கல்லூரி நாட்களில் என் நண்பன் "தடியன்" தியாகு சொல்லி இருக்கிறான். தமிழையே தடவித் தடவிப் பேசும், பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவுமே வாசித்தறியாத அவனிடம் இருந்து அந்த வாக்கியத்தைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வாக்கியம்தான் என் எண்ணங்கள் பலவற்றை மாற்றியது. அதுநாள் வரை என் நிறத்தைப் பார்த்தும், பாட்டு, படிப்பு, பேச்சு என்று சுற்றுவதைப் பார்த்தும் யாராவது என்னை பிராமணப்பையன் என்று நினைத்துக் கொண்டு பேசினால், அதை மறுக்க மனம் வராமல், சந்தோஷப்பட்டுக் கொண்டு, வாங்கோ, போங்கோ என்று பேசிக் கொண்டிருந்த நான், பின் திடமாக "இல்லை...நான் பிராமணன் இல்லை. இப்படி எல்லாம் இருந்தா பிராமணணாதான் இருக்கணுமா" என்று எதிர்க்கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இன்றுகூட இனையத்தில் தலித்துகளைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும், பிற்பட்டோர் நலன் பற்றியும் அந்த வகுப்பினரே பேசாக் காரணம் தன் அடையாளங்கள் தெரிந்துவிடுமோ என்று யோசிப்பதுதான். அவர்கள் மட்டும் இல்லை, பிராமணர்கள் கூட தான் இன்னார் என்ற…

தமிழ்தாகத்தில் விக்கினால் விக்கி படிய்யா...

வெங்கட் நட்சத்திர வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிட்டதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இதில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுவரை ஒரு தூசியைக் கூட இந்த விஷயத்தில் தூக்கவில்லை. காரணம் உங்களுக்குத் தெரியும்.

இந்த விஷயத்தில் நான் பங்கெடுக்க ஆர்வம் காட்டியதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. என் வலைப்பதிவின் மூலம் என்னைக் கண்டுகொண்ட பழைய ஸ்நேகிதி ஒருவர், தனக்கும் வலைப்பதிய ஆர்வம் இருப்பதாக சொல்ல, அவருக்கு உதவ வேண்டி, ப்ளாக்கர் மூலமாக ஒரு பதிவைத் துவக்கினேன். ஏற்கனவே நான் இதையெல்லாம் என் மூக்குக்காக செய்திருந்தாலும், நிறைய விஷயங்களை மறுபடியும் யோசித்து யோசித்து செய்ய வேண்டி இருந்தது. (உதா: இயங்கு எழுத்துரு, டெம்ப்ளேட் மாற்றம், தமிழ் பின்னூட்டம் மற்றும் அவருக்கான அடிப்படை விளக்கங்கள்) . ஏற்கனவே நண்பர்கள் பலருக்கு இதை செய்திருந்தாலும், இந்த முறை செய்யும்போதுதான், இதற்கான எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் இல்லை என்கிற உண்மை உறைத்தது. ஒரு இடத்தில் இருந்தால், புதிதாக வலைப்பதிய விரும்பும் மக்களுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்பது விளங்க, காசியை தொடர்பு கொண்டேன்.

இதற்கான…

மெளனம் பேசியதே....

என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவீங்கன்னு பார்க்கிறேன். ஒண்ணுத்தியும் காணும்.

அடப் போங்க ஸார்..என்னத்தை எழுதறது. வர்ற நியூஸ்லாம் படிச்சிகிட்டுத்தான் இருக்கேன். ஒரே கில்ட்டியா இருக்குது.

அட என்னய்யா..நீர்..!! சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்கீர்..அவனவன் பண்ண வேண்டியதை பண்ணிபுட்டு, ஜே..ஜே ன்னு பொது வாழ்க்கைக்கு திரும்பிட்டான்.
நீர் என்னடான்னா...??

ஆமாய்யா..ஆமாம். அது அதிர்ச்சியிலிருந்து மீளுவது அவங்க அவங்க மனசு மெச்சூரிட்டியை பொறுத்ததுன்னு ஒருத்தர் சொல்லிட்டார். எனக்கு மெச்சூரிட்டி இல்லையின்னு வெச்சுக்கோயேன்.

மெச்சூரிட்டி குறைச்சல்னாலும், உமக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்றாங்கய்யா..?? இன்னம் சொல்லப்போனா, இந்திரா காந்தி செத்துப்போன சமயத்தில் ரகளை பண்ணி அராஜகம் பண்ண அட்டுழீயக் கூட்டத்தில் ஒரு ஆளா ஆக்கிட்டாய்ங்க..

சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. இதுக்காக, சுனாமிய சாக்கா வச்சி, எந்த விதமான அடிப்படை நாகரீகம் கூட இல்லாம, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி சுனா…

வாழ்த்தவோ..???

புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல என்று ஸ்பெஷலாக ஒன்றும் தோன்றாவிடினும், இந்த செய்தி கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இயற்கையின் சீற்றத்துக்கு எல்லை வகுக்க முடியாவிட்டாலும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிவாரணப்பணிகள் ஆறுதல் அளிக்கின்றன. ராம்கியின் மடல்கள் உற்சாகமூட்டுகின்றன. குப்பைகளுக்கு போகும் உணவுப்பொட்டலங்களையும், பழைய துணிமணிகளையும் படங்களில் பார்த்தால், ஒரு பக்கம் வருத்தம் வந்தாலும், இன்னொரு பக்கம் மக்களுக்கு இவை எல்லாம் ஏற்கனவே இவை கிடைத்து இருக்கின்றன என்பதை நினைத்து கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

"கடலோரத்தில் இருந்தால்தான் அவன் மீனவனா" என்ற தலைப்பில் ஜூவியில் வந்த கட்டுரை எதிர்காலத்தில் தமிழகத்தில், மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பிலாமல் மீன்பிடி தொழிலை எப்படி நடத்தலாம் என்று பேசுகிறது. அவர்கள் உயிருக்கும், படகுக்கும் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் உருவாகின்றன.சுனாமியின் வெறியாட்டத்தில், ஏகப்பட்ட குடும்பங்கள் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன. மேலே காணும் ஃபோட்டொ, எதோ ஒரு முகாமில் எடுக்கப்பட்டது என நம்புகிறேன். வீட்டில் ஏகப்பட்ட வெஞ்சனங்களோடு ஒரு கையில் த…