சும்மா சொல்லக்கூடாது. பயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஷங்கர் கண்டுபிடிப்பு, பாய்ஸிலேயே கதாநாயகனாயிருக்க வேண்டியது- ரங்கராஜன் ஸார் கைங்கர்யத்தில் ஸைட் ரோலுக்கு போனார். பின்ன, மல்லு மக்கள் தூக்கி விட, அண்ணன் காட்டில் இப்போ ஜோர் மழை. அரங்கேற்றம்/ அவள் ஒரு தொடர்கதை கமல் மூஞ்சி போல, பால் வடியும் முகம். நல்லா டான்ஸ் ஆடற பையன்னு நினைக்கிறேன் . முகத்துல சட் சட்டுன்னு மார்ற உணர்ச்சிகள், நயவஞ்சக சிரிப்பு, எகத்தாளப் பேச்சு என்று ஊடு கட்டி அடிச்சிருக்கார். ஓங்குதாங்கா இன்னோரு ஆள் படத்தில் ஹீரோவா நடிச்சிருந்தாலும், இவர்தான் ஸ்கோர் பண்றார். அதென்னங்க பக்கா தமிழ்முகம் உள்ள ஹீரோவுக்கு விஷால்ன்னு வடமொளியில பேரு..?? இப்போ அதுதான் விற்கும்னு தெரிஞ்சாலும், இப்படியா "கவர்" மாத்திக்கிறது..?? பொருந்தவே இல்லை. அருண்பாண்டியனின் தம்பி போல இருக்கும் விஷால், சரியா நடிக்கத் தெரியலைன்னா, அண்ணனையே ஃபாலோ பண்ணிடுவார். ஹீரோயினுக்கு ரொம்பத் திறந்த மனசு. அவ்வள்வுதான் சொல்ல முடியும்..ஹி..ஹி.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் தேவலை என்றாலும்
நிறைய பழைய சாயல் அடிக்குது. ஆரிய உதடுகள் என்னது பாட்டு கிட்டத்தட்ட கர்ணா படத்தில் வர்ற " ஏ ஷப்பா..ஏ ஷபபா..நெனச்ச கனவு பலிக்காதா " மாதிரியே இருக்கு. அதுவும் விஷாலுக்கு வெள்ளக்கார தொரை மாதிரி செம்பட்டை கலர் விக் வச்சி, விநோத காஸ்ட்யூம்லாம் போட்டு ஆட விடறாங்க. கோராமையா இருக்கு.
சின்னப் பையன் பரத் இதைவிட "காதல்" படத்தில் தூள் கெளப்பி இருக்கார்னு செய்திகள் வருது. அஜித், விஜய், தனுஷ்-சிம்புன்னு எல்லாரும் ஒரே இடத்தில் போய் ரேட்டை தூக்கி விடறதை விட்டுட்டு மக்கள் பரத், மணிகண்டன்னு ரசிச்சாங்கன்னா, அவங்களுக்கும் நல்லது. தயாரிப்பாளர் பாக்கெட்டுக்கும் நல்லது.
படம்: அஞ்சு பேர்ல வட்டமிடப்பட்ட மூணு பேர் தேறிட்டாங்க. பாக்கி இருக்கற தேவயானி தம்பியும், குண்டனும் என்ன ஆவப்போறாங்களோ..??
Mooker,
ReplyDeleteHope you will have better things to write than this.
akkinikunchu
Yes...if u don't have one, plz visit thinnai to write along with me :) :) :) :)
ReplyDeleteஅ.குஞ்சு,
ReplyDeleteஸ்ஸ்ஸ்...ஸீரியஸ்சா எழுதறதுக்கு உங்களை மாதிரி ஆளுக இருக்கும்போது, அப்பப்ப சின்னத்தனமா எழுதறதுக்கும் ஆள் வேணுமில்ல..
அதனாலதான்...ஹி..ஹி..
ரமேசு, எனக்கு என்ன வேற வேலை பொழப்பு இல்லையா..இணையத்துக்கு ஒரு 'மாயவரத்தான்' போதும்...:-)