" நம்ம ப்ளஸ் மைனஸொடு, நாம யாருன்னு காட்டிகிறதுக்கு என்னைக்கும் வெக்கமே படக்கூடாதுடா" என்று கல்லூரி நாட்களில் என் நண்பன் "தடியன்" தியாகு சொல்லி இருக்கிறான். தமிழையே தடவித் தடவிப் பேசும், பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவுமே வாசித்தறியாத அவனிடம் இருந்து அந்த வாக்கியத்தைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வாக்கியம்தான் என் எண்ணங்கள் பலவற்றை மாற்றியது. அதுநாள் வரை என் நிறத்தைப் பார்த்தும், பாட்டு, படிப்பு, பேச்சு என்று சுற்றுவதைப் பார்த்தும் யாராவது என்னை பிராமணப்பையன் என்று நினைத்துக் கொண்டு பேசினால், அதை மறுக்க மனம் வராமல், சந்தோஷப்பட்டுக் கொண்டு, வாங்கோ, போங்கோ என்று பேசிக் கொண்டிருந்த நான், பின் திடமாக "இல்லை...நான் பிராமணன் இல்லை. இப்படி எல்லாம் இருந்தா பிராமணணாதான் இருக்கணுமா" என்று எதிர்க்கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இன்றுகூட இனையத்தில் தலித்துகளைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும், பிற்பட்டோர் நலன் பற்றியும் அந்த வகுப்பினரே பேசாக் காரணம் தன் அடையாளங்கள் தெரிந்துவிடுமோ என்று யோசிப்பதுதான். அவர்கள் மட்டும் இல்லை, பிராமணர்கள் கூட தான் இன்னார் என்று சொல்லிக் கொள்வதில் கூச்சப்படுகிறார்கள் . என் நண்பர் ஒருவர் கமலைப் பற்றி அடித்த ஜோக் ஒன்று - நீங்க கமல் கிட்ட உன் பேர் என்னன்னு கேட்டாக்கூட, என் தந்தை எனக்கு வைத்த பார்ப்பனப்பெயர் கமலஹாசன் என்று
தேவை இல்லாமல், ஸ்டண்ட் அடிப்பது மாதிரி தன்னை இழிவாகச் சொல்லிக் கொள்வார் என்றார். தான் இன்னார் என்று காட்டிக் கொள்வதில் மக்களுக்கு இருக்கும் தாழ்வுணர்ச்சியை இந்தக் கவிதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
ஜாதிய அமைப்புகளில் உள்ள வெறுப்பின் பாற்பட்டு தன் ஜாதியைப் பற்றி பேசத் தவிர்ப்பவர்கள் வேறு விதம். அவர்களைப் பற்றி ஏதும் கேள்விகள் இல்லை.
ஆதவன் தீட்சண்யா கவிதைகளை பற்றி இங்கே ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
Good view.
ReplyDeleteI agree with you. Kamal always criticising himself about his caste unnecessarily.
akkinikunchu
ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. இதே கவிதையை முன்பே படித்திருந்தாலும் நீங்கள் சுட்டிய பின் மீண்டும் சென்று படித்துப் பார்த்தேன். இன்னும் நன்றாகப் புரிந்தது. அவரது கவிதைகளில் இருக்கிற உணர்ச்சிகளும் கோபங்களும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.
ReplyDelete//பிராமணர்கள் கூட தான் இன்னார் என்று சொல்லிக் கொள்வதில் கூச்சப்படுகிறார்கள்//
ReplyDeleteIdhellam too much sir!!!
ரமேசு,
ReplyDeleteஉம்மை சொல்லலைங்காணும்.:-) நீர் வேற டைப்புனு எனக்கு நல்லாத் தெரியும். உமக்கு எதுக்குமே கூச்சம் கிடையாது. இதப் படிச்சேன் ஏற்கனவே - http://mayavarathaan.blogspot.com/2004/12/blog-post_110451228892867288.html
நடத்துங்கோ மாயவரம் மைனர்...
வாங்க செல்வராஜ் மற்றும் அ.குஞ்சு.
ReplyDeleteநன்றி.
//உமக்கு எதுக்குமே கூச்சம் கிடையாது//
ReplyDeleteADHU..!! (ajith style(!?!)-il padikkavum!!!