Tuesday, January 11, 2005

கோ.கா --- க.கா கண்ணாலம்

நண்பர் கொஸப்பேட்டை குப்ஸாமிக்கு கண்ணாலமாம். மரத்தடி ராஜா மெயில் போட்டிருக்கிறார். ( ஹி..ஹி..இருவரும் ஒருவரே...)

நண்பர் ராஜாவும் இணையம் மூலமாகத்தான் பழக்கம். எங்க ஊர்க்காரர் என்பதால் தனி பாசம். இந்த வலைப்பூவை ஆரம்பித்து, இயங்கு எழுத்துரு/ தனிக் குறியீடு என்றெல்லாம் தண்ணியில்லாமலே தள்ளாடிக்கொண்டிருந்தபோது, ஆபத்பாந்தவன், அனாத ரட்சகனாக சவூதியில் இருந்து உதவிக்கரம் நீட்டினார். அவர் சொன்ன சில ஜிகிடிகள் புரியாததால், என்னுடைய பயனர்/ கடவுச்சொல்லையே அவரிடம் கொடுத்து விட, கன்னிப்பெண்ணை கைவைக்காமல் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்ட வயசுப்பிள்ளை போல், பொறுப்பாக நடந்து கொண்டார். அவருக்கு கண்ணாலம். கன்னி ராசிக்காரருக்கே கண்ணாலமென்றால் பெர்ரிய விஷயம்தான். ஆளை கொஞ்ச நாள் காணவில்லையே எனக் கேட்டபோது, "அவருக்கு தலைப்பூவை பற்றி யோசிக்கவே நேரமில்லை. வலைப்பூவுக்கென்ன அவசரம்" என்றார் பாய்.

காதல் திருமணமென்று நினைக்கிறேன். பத்திரிக்கை சின்னதாக, கச்சிதமாக, இந்தக் காலத்து செல்ஃபோன் போல இருக்கிறது. கலர் கொஞ்சம் "அடிக்கிற" கலர். பத்திரிக்கையை தளபதியே வடிவமைத்திருக்கிறார் போல. - கண்ணாலப் பத்திரிக்கையில் வெண்பா எழுதி விளிக்கிற தமிழ்மனசு வேறு யாருக்கிருக்கிறது..?

தங்கர்பச்சான் பட ஹீரோ மாதிரி, சிதம்பரத்தில் கல்யாணம். சென்னையில் வரவேற்பு. இணைய நண்பர்கள் பெருமளவில் திரண்டு போய் அசத்துவார்கள் என நினைக்கிறேன். நான் வழக்கம்போலவே கரைக்கு இக்கரையிலிருந்து வாழ்த்திவிட்டு, தாலி கட்டப்போகும் ஜனவரி 27 ஆம் தேதி முகூர்த்த நேரத்தில், தம்பிக்கு மானசீகமாக வாயில் சர்க்கரை போட்டு விட வேண்டியதுதான்.

கோமதியின் காதலனும், கள்வனின் காதலியும் எல்லாவித சீரும் சிறப்புகளும் பெற வாழ்த்துவோம்.

பி.கு:

ஜனவரி தாண்டி இன்னும் ரெண்டு மூன்று இணைய இளசுகள் சம்சாரக்கடலில் குதிக்கப்போகிறார்கள். எப்போது ரகசியம் உடையப்போவுதோ..???!!!

3 comments:

 1. இல்லறவாழ்வில் தொபுக்கட்டீர் எனக் குதிக்கும் எங்கள் ஆருயிர் நண்பர் கேவிராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //ஜனவரி தாண்டி இன்னும் ரெண்டு மூன்று இணைய இளசுகள் சம்சாரக்கடலில் குதிக்கப்போகிறார்கள்

  யாருங்க அது... இத்தனை பேரு இருக்கிறப்பவே எல்லாரும் malekindமேல பாயறாங்க.. இதுவும் குறைஞ்சுபோய்ட்டா ம்ஹும்..

  ReplyDelete
 3. ராசா,

  அதெல்லாம் தனியா சொல்றேங்ணா...!! அது சரி..நீங்க எப்ப இறங்கப்போறீங்ணா..?? :-)

  Malekindல பாயறாங்களா..?? எதுக்கு..?? புரியலையே..

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...