Skip to main content

Posts

Showing posts from May, 2005

காஞ்சிக் கூத்து

என்ன ஸ்வாமி இது..இடைத்தேர்தல் முடிவு இப்படி ஆய்டுச்சே..??

பரவால்லே கொழந்தே...!! ஜெயலலிதா தான் காஞ்சி காமாட்சின்னு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டா போறது..!! இவ்வளவு நாள் அரசியல் பண்றயே..இது தெரியாதா நோக்கு..?? என்னமோ போ..!!

பொறி பறந்தது...

தமிழ்புத்தாண்டு விழா சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தால் மே 14 அன்று கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ்க்கை முறையை பெரிதும் விரும்புவது மனைவியரா..?? கணவன்மார்களா..?? என்றொரு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசினேன். நேடுநாள் கழித்து மேடையேறும் வாய்ப்பு என்றாலும், ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு பேசி விட்டேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.


அது சரி...தீர்ப்பு என்னாச்சு என்கிறீர்களா..?? எங்கள் அணியின் இரண்டாவது ஆசாமி திரு.இராதாகிருஷ்ணன் பேசிய பிறகு, நிகழ்ச்சி நடந்த பள்ளி அரங்கில் நெருப்புக்கான அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் பாதியிலேயே பட்டிமன்றம் முடிந்து விட்டது.

பொறிபறக்க பேசுவது என்பது இதுதானோ..??

இடைத்தேர்தல்...??

தமிழ்நாட்டுச் செய்திகளில் இப்போது முதலிடம் பிடிப்பது காஞ்சிபுரம்/ கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்தான். நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகள், வீடியோ ஆதாரங்கள், ஜே.எஸ்.ராவ் அறிக்கைகள் என்று துள் பறந்து கொண்டிருக்கிறது. போட்டி இடும் கட்சிகளில் ஒன்று மாநில ஆளுங்கட்சி. இன்னோன்று மத்திய அரசின் கூட்டணிக்கட்சி. கேட்கவா வெண்டும்..???

கருணாநிதி ஆட்சியில் இல்லாதபோது நடக்கும் எல்லா இடைத்தேர்தல்களிலும் இப்படித்தான் குற்றச்சாட்டுகள் கிளம்பும். தான் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்வோமோ, அதை எல்லாம் இவர்கள் செய்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இவர் ஓவராக சவுண்டு விட, பிரச்சினை தீப்பற்றி எரியும். இப்போதும் அப்படித்தான் நடக்கிறது என நினைக்கிறேன்.

அதற்காக ஆட்சியில் உள்ள அம்மாவும் லேசுப்பட்டவரில்லை. அவரும் எல்லா விதமான தேர்தல் தில்லுமுல்லுகளுக்கும் பேர் போனவர்தான். ஆனால் ஒன்று மட்டும் இவர்களுக்கு புரியவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பேர் இருந்தால், எத்தனைதான் கள்ள ஓட்டு போட்டாலும் தேர்தலின் முடிவை மாற்றி விடமுடியாது. வார்டு தேர்தல், மாநகராட்சி தேர்தல் போன்ற சிறிய அளவிலான தேர்தல் முடிவை மட்டுமே கள்ள ஓட்டினால் மாற்றியம…

நிறமிழந்த வானவில்

ஆனை வந்தது முதலில்

அப்புறம் கலைந்துபோனது

குதிரை மீதில் ஒருவன்

கொஞ்ச நேரம் போனான்

பாட்டன் புரண்டு மல்லாந்தான்

பானை வெடிச்சு மரமாச்சு

அலையாய்ச் சுருண்டது கொஞ்சம்

மணலாய் இறைந்தது கொஞ்சம்

கணத்தில் மாறிடும் மேகம்

உண்மையில் எது உன் ரூபம்

மேகத்தைப் பற்றி மாலன் எழுதிய கவிதை, இந்த சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் பற்றிய என் அபிப்ராயங்களுக்கு உருவம் கொடுப்பது மாதிரி இருப்பது வெறும் தற்செயல்தானா..?? :-)