Skip to main content

Posts

Showing posts from July, 2004

கவசம்

======முகமூடி கிழித்து
முகமது பார்த்தால்
முகமே தேவலை
என்று தோன்றுமோ
இருப்பினும்
எந்த வதனம் எதிர்வந்தாலும்
முகத்திரை மெலிதாய் அசைவதேன்..?
உடனே கிழித்து எறிந்திட
கைகளும் பரபரப்பதேன்..?

விடு.
முகமூடியில்லா முகம் என்பது'
குழந்தையின் வசமின்றி எங்குமில்லை
எவரும் என்றும் அணிந்தே உள்ளனர்
அவரவர்க்கு ஏற்ற கவசம்
வெவ்வேறு நிறத்தில் கவசம்
நீயும் நானும் விலக்கல்ல

ஆனால் கவசம் கழற்றிக் களைப்பாற
ஒரு உயிராவது உடன் வேண்டும்
மூடியற்ற முகம் பார்த்தும்
நேயமுற்றிடும் துணை வேண்டும்

நன்றி : கவிஞர் சிவசுந்தரிபோஸ், தினம் ஒரு கவிதை

சீனிஅபு, சரவணபவன், சுமா உப்பிலி, சா.கணேசன், பரமசிவம்பிள்ளை, அபிராமிபட்டர், குட்டி ஹமாம், ஆப்பு, இட்லிவடை, காயாம்பூ, கவிதா மாரிமுத்து, டைனோ பாய், திராவிட், இணையக் குசும்பன் முதலாக நாட்டாமை வரைக்கும் அத்த்...த்த்னை முகமூடிகளுக்கும் சமர்ப்பணம்.

கவிதை இன்னும் கொஞ்சம் உள்ளேயும் போகிறது....

உங்களுக்கு புரிகிறதா..??
இரண்டு படங்கள் -  ஒரு அபத்த விமர்சனம்
=========================================

  வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன். அது அப்புறம். ஏனெனில் பழைய படத்துக்கு பலநாள் கழித்து எழுதப்படும் விமரிசனம் வெஓநிகே எனபது என் எண்ணம்.

     குமுதம் தீராநதியில் ஆய்தஎழுத்துக்கு ஒரு விமரிசனம் வந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் கூட விமரிசனம் எழுதவேண்டுமா..?? என்று யோசிக்க வைத்த விமரிசனம் அது.  இருவர் படத்தையும், ஆய்தஎழுத்தையும் ஒப்பிட்டு, இரண்டு படங்களுமே திராவிட ஆட்சியை எதிர்த்து, பிராமணியத்தை மறூயிர்ப்பு செய்ய வந்த படங்களாக சொல்கிறார் விமரிசனம் செய்த ( யார்..??) பிரகஸ்பதி. என்ன அபத்தம் இது..??  அதோடு , இந்த இரண்டு படங்களையும் வாசகன் சரியாக "பார்க்க"வில்லை என்றும் சொல்கிறார். அதாவது, தோண்டித் துருவி, குடைந்து பார்த்ததால் தனக்கு புலப்பட்ட அந்த "உண்மை" தமிழ்நாட்டில் பாக்கி இருக்கும் அத்தனை சனத்துக்கும் தெரியாது போயிற்றாம்.  கதை எளிய கதை.  நிகழ்காலத்திலிருந்து உருவி, அதை தன் ஸ்டீரியோடைப் காட்சி அமைப்புகளோடும், வசனங்களோடும் ( இருநூறு மில்லி சாராயத்துகாக முழு சாராயக்க…
பிரசவக்காட்சி
============

   அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் கொடுத்து வைத்தவர்கள். நம்மூர் போல அல்லாமல், இங்கே லேபர் ரூம் உள்ளே கணவனுக்கும் அனுமதி உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கூட இருந்து, பிரசவ அனுபவத்தில் அவளுக்கு உதவி செய்யவும், அவளுடைய வலியை பகிர்ந்து கொள்ளவும், உணர்வு ரீதியாக ஒத்தாசை செய்வதும் தான் இதன் குறிக்கோள். என்னுடைய பல நண்பர்கள் தங்கள் குழந்தை பிறந்தவுடன் மூன்று நாளைக்கு பேயறைந்தது போல கிடப்பதை பார்த்திருக்கிறேன்.   என்னளவில் இது அநியாயம். தேவையற்ற வீண்வேலை. என்னுடைய தமக்கைகளின் பிரசவத்தின்போது,  பிரசவ வார்டுக்கு வெளியே நின்று அவர்களின் குரல்களைக் கேட்பதற்கே அடி வயிறு கலங்கிப் போனது. அதற்குப் பிறகு அம் மாதிரி விஷப்பரீட்சைகளில் இறங்குவதில்லை என முடிவெடுத்து விட்டேன். என் சூர்யா பிறந்தபோது நான் இந்தியாவிலேயே இல்லை.

    நான் சொலவதை கேட்பதற்கு ரொம்ப பிற்போக்குத்தனமாகவும், அரக்கத்தனமாகவும் தான் தோன்றும். ஆனால், ஒரு ஆணின் மனநிலையையும், பெண்ணின் மனநிலையையும் ஒப்பிட்டால், பெண்கள் பன்மடங்கு திடசித்தம் கொண்டவர்கள். இது தெரிந்துதான்  இயற்கை அவர்களுக்கு இ…
"மணி"யானவர்கள்
================

   நண்பர் சுந்தரவடிவேலின் முயற்சிகளைப் போலவே பலரும் இணையத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்தும்,  குடந்தை தீ விபத்துக்காகவும் பெருமளவில்
உதவி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழைந்துள்ளனர்.

இன்று குடாப்பகுதி தமிழ்மன்றத் தலைவர்  மணி.மு.மணிவண்ணன் அவர்களிடம் இருந்து கீழேயுள்ள மடல் வந்தது.

உங்கள் பார்வைக்கும், பங்குக்கும் இங்கே பகிர நினைத்தேன்.

Dear Friends,

We are grateful to the generous members who have already responded to this appeal from the Tamil Manram by sending in their checks. The Collector of Thanjavur has responded to our offer of support (see http://www.bayareatamilmanram.org ).  One of the first life-members of Tamil Manram, Dr. S. S. Rajaram, is currently in Tamil Nadu and he is sending in his first-hand reports.  According to him, the burn victims are being treated by first rate hospitals like JIPMER-Pondicherry, CMC-Vellore, Apollo Hospitals of Madras, MMC-Madras in addition to Thanjavur Hospital.

 Right now, the med…

தருணங்கள்

===========மனைவியோடு
பயணிக்கிறபோதுதான்
பழைய காதலியை
பார்க்க நேர்கிறது

இங்கு
மாதக் கடைசியில்தான்
புத்தகக்கண்காட்சி
நடத்தப்படுகிறது

கடைசிக் காசில்
சிகரெட் பற்றவைத்துத்
திரும்பும்போதுதான்
கை நீட்டுகிறார்கள்
பிச்சைக்காரர்கள்

வெகுநேரமாகியும்
வராத பேருந்து
பழைய நண்பர்கள்
எதிர்ப்படுகிற
பொழுதிலெல்லாம்
வந்து தொலைக்கிறது

எப்பொழுதாவது
கவிதை எழுத
உட்காரும் பொழுதுதான்
எங்கிருந்தாவது
காதில் விழுகிறது
மரணச்செய்தி

கவிஞர் காற்றுத்தேவன் தி.ஒ.கவிதை யில் எழுதியது.

மரணம் பற்றியே மூன்று நாட்களில் எத்தனை கவிதை எழுதிவிட்டார்கள் நம் கவிஞர்கள்..!!!

கவிதையோடு காரியமும் தேவை என்று காசி சொன்னதை அருண் தவறாக புரிந்து கொண்டு இருப்பார் போல.
பொய்யாய் பழங்கதையாய் போன புனிதக் கணங்கள்
=================================================  பயத்தோடும் மனப்படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித்துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள்.  ' பாத்து..பாத்து' என்றார் அம்மா. மங்கலான மருத்துவமனை விளக்கொளியில் மயங்கிக் கிடக்கும் ராட்சசப் புழுப்போல அது நெளிந்தது.  சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டி சிதறிவிடும் போல இருந்தது.  எனது வலது உள்ளங்கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெது வெதுத்ததை உணர முடிந்தது

       இமையிலும், கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ்சிவப்புச் சாயம் பூசினாற்ப்போல தெரிந்தது.  உடலிலிருந்து பச்சை மண்ணிண் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னுமிருந்தன போலும்.  தலையின் ரோமங்களில் இன்னமும் கூட பிசுபிசுப்பு.  உதடுகள் விரிநது கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல நிகழ்ந்தது.  எங்கள் அனைவரின் வாய்களும் பிளந்து மூடின.

   யார் உருவாக்கினார்கள்.? நானா..? என்னால் எப்படி முடிந்திருக்கும்.? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா..?? பென்சிலால…
இந்தியா ஒளிர்கிறது
==================

    பிள்ளைகறி கேட்டிருக்கிறார் கடவுள். வாரிக் கொடுத்துவிட்டு, மறந்துபோக மற்றொரு விபத்து. எரிந்த தீ ஜுவாலையில் எத்தனை கலாம்களோ..?? எத்தனை சிதம்பரங்களோ..??  கரிக்கட்டைகளாய் கிடக்கும் இந்தியாவின் பிஞ்சுகளை உலகம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. புத்தகம் வாங்கவும், இலக்கியம் படைக்கவும் முனையும் எம்மில் எத்தனை பேருக்கு ஓலைக்கூரை பள்ளிகளை காங்க்ரீட் கட்டிடமாக்க சித்தமிருக்கிறது..??

 முதல்வர் ஜெ பள்ளிகளுக்கெல்லாம் ஓலைக்கூரை மாற்றும் திட்டம் கொண்டுவருவாரா..அல்லது மதிய உண்வுக்கான சமையறைளை பள்ளியினின்று விலக்கி கட்டப்போகிறாரா..

எழுத வேறொன்றுமில்லை..உள்ளே ஓலமிடுவதைத் தவிர...


தொழுத கையுள்ளும்...
======================

சண்டியர் படத்தைப் பார்க்கும்போது மனதில் எல்லோருக்கும் ஒரு இனம்புரியா சோகம் இருந்து கொண்டிருந்தது. விருமாண்டியின் கோபம், அவன் வெறி, மனதில் பட்டதை பளிரென்று எதிராளியிடமே போட்டுடைக்கும் தன்மை, நம்பினவர்கள் தனக்கே குழி பறித்ததும் அவன் பதைப்பு, என்று அவன் பாத்திரத்தன்மை அழகாக வடிக்கப்பட்டிருந்தது. குழந்தை மனசு கொண்ட அவன் அலைக்கழியும் தருணங்களில், "ஆஹா...எல்லாமே இவன் வாயால் தானே வந்தது " எனு தோன்றினாலும், கள்ளமில்லா உள்ளத்துக்கு சொந்தக்காரனான அவன், சதி வலைகளினின்றும் தப்பிக்க வேண்டும் என்று தோன்றிக்கொன்றே இருந்தது. உங்களுக்கும் தோன்றி இருக்கும்.

மனிதர்கள் பல வகைப் பட்டவர்கள்.உணர்ச்சிக் குவியலாய் வெடித்து, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், படாலென்று பேசி விட்டு , பிறகு சட்டென்று அதை மறந்து, குழந்தை போல குதிப்பவர்கள் ஒரு வகை. கோபம் இவர்களின் ஊனமென்றாலும் நம்புதற்கு உரியவர்கள். இவர்கள் ஒரு வகையில் அனுதாபத்துக்கு உரியவர்கள். இன்னோரு வகை எல்லா உணர்ச்சிகளையும் சரியாக கையாண்டு, தேவையானவற்றை , தேவையான தருணங்களில் வெளிப்படுத்தி, எமோஷனல் இந்டெல…
கருணை காட்டுங்கள்
===================

சமீபத்தில் என் சகோதரியுடன் தொலைபேசிக்கொண்டிருந்த போது கேட்டேன் "என்ன படிக்கிற லல்லி இப்போ " என்று. "கீழ்வீடுப் பாட்டி நேத்து ஒரு புக்கு கொடுத்தாங்கடா..அந்தப் புத்தகத்தைத் தான் படிக்கிறேன் . பேர் "ப்ரதோஷ மகிமை" என்றாள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது மாதிரியான புத்தகங்கள் படிப்பது பாபமல்ல என்று எனக்குத் தெரியும் :-). ஆயினும் என் தமக்கையின் டேஸ்ட் இந்த மாதிரி அத்தை பாட்டி புத்தகங்களின் பக்கம் போய் விட்டதா என்று கேட்டபோது, "போடா..திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளைப் படிச்சு எனக்கு போரடிச்சுப் போச்சு... சரி.கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். விஷயம் தெரிஞ்சாற்போலவும் இருக்கும் அப்டீன்னுதான் இதைப் படிக்கிறேன் இப்போ" என்று சொன்னாள். உடனே நான் கடந்த மூன்று வருடங்களாக நான் இணையத்தில் தெரிந்து கொண்டவற்றில் (நல்ல விஷயங்களை...) கொஞ்சம் சொல்லி, "முற்றிலும் புது மாதிரியான தளத்தில், உயர்ந்த ரசனையோடு எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகங்களை நான் உனக்கு வாங்கி அனுப்பி வைக்கிறேன்" என்று வாக…
குணா - கோதண்டராம பிரசாத் கொல்லிப்பாரா
==========================================

"நானும் நீங்களும் நம் வீட்டில் நிறைய பூச்செடிகள் வளர்க்கலாம். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விதமாக சமூக சேவை புரியலாம். இதை உன்னோடு செய்தால் என் வாழ்க்கை ஒளிரும்" என்று ஒரு பெண்ணிடம் பேசி தன் நேசத்தை வெளிப்படுத்தியவனை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..??

நெற்றியில் எப்போதும் திருநீறு போல குங்குமத்தை இட்டுக் கொண்டு, பெரிய மீசையோடும்,முரட்டு உடம்போடும் அதற்கு சம்பந்தம் இல்லாமல் குழந்தை போல சிரித்துக் கொண்டு, கூடப் படிப்பவர்களையே "வாங்க..போங்க " என்று படித்த நான்கு வருடமும் மரியாதை தவறாமல் பழகியவனை, "இத்தனை வெகுளித்தனம் இருக்கவே சாத்தியமில்லை..இவன் நடிக்கிறான்" என்று என்னைப் போன்றவர்களை சந்தேகிக்க வைத்த அந்த நல்லவனை, கல்யாணமான பின்னால் பழைய கல்லூரி (ஆண்) நட்புகளை தொடரக்கூடாது என்று மிகுதியும் நினைக்கும் பெண்களே தொடர்ந்து நட்பு வைத்திருந்த அந்த எளியன், விதிவசத்தால் நேற்று இங்கே, பாஸ்டன் அருகே உயிரிழந்தான்.

அடுத்த வாரத்தில் குழந்தை பிறக்கப்போகும் தன் மனைவி…
உயர்தனிச் செம்மொழி
=====================

அபிப்ராயங்களைக் கட்டமைக்கும் பணியிலும், பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் நம்மாட்கள் கை தேர்ந்தவர்கள். எந்த மாதிரி அபிப்ராயங்களை உருவாக்கவும், எந்த வகையிலான பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் இவர்கள் தன் எழுத்துத் திறமையும், புகழையும் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி.

ராயர் காப்பி க்ளப்பிலே பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்களது கவிதைகளை, ( எஸ்.வைத்தீஸ்வரன், பி.ஏ.கிருஷ்ணண், சுஜாதா) கடிதங்களை முன்னிப்பு செய்வது வழக்கம். தேர்ந்த எழுத்தாளரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரையை சிஃபிராயர் இப்போது இட்டிருக்கிறார் இப்போது. "தமிழ செம்மொழி ஆகி விட்டதால் புதிதாக ஒன்றும் விளைந்து விடவில்லை. மாறாக சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் வந்துள்ளன ' என்று அவர் எழுதப்போக, மதுரபாரதி "உவகை பெருவெள்ளத்தில் அடித்துப் போகப் படாமல் உணர்ச்சி வசப்படாமல்" இதை எழுதிய இ.பா வுக்கு ஒரு ஷொட்டு கொடுத்திருக்கிறார். வக்கீல் பிரபுவோ இந்த ஆட்டத்திற்கெல்லாம் மயங்காமல், படாரென்று ஒரு எசப்பாட்டு பாடியிருக்கிறார்.கிட்டத்தட்ட உவகைப் பெருவெள்ளத்தில் அகப்பட…
டக்கீலா..டக்கீலா
================

மெக்ஸிகன் சாராயத்தின் செல்லப் பெயர் இது. டக்கீலா ஷாட் என்றால் சிலபேருக்கு பளிச் என்று புரியும்.சனிக்கிழமை சாயங்காலம் ஏழு நாற்பத்தைந்து வரை எனக்கு இதன் மகிமை புரியாது இருந்தது. Jose carvos என்று எழுதப்பட்ட ஒல்லி பாட்டிலில் அந்த தங்க நிற திரவம் அசைந்தாடிக் கொண்டிருக்க, எதிரே என் நண்பர் எலுமிச்சம்பழத் துண்டுகளை அடுக்குக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தட்டில் உப்பு. ஷாட் க்ளாஸ் என்று சொல்லப்படும் அளவை ஒரு பக்கம். கலப்பதற்கு எதுவும் தேவை இல்லை என்று சொல்லி விட, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல ஒரு நெடுங்காலக் குடியனிடம், இப்படி 'பிலிம்' காட்டுகிறாரே என்று உள்ளூர எரிச்சல் வேறு.

கையிலே க்ளாஸை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்னோரு கையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே எலுமிச்சம்பழத்தை தேய்க்கச் சொன்னார். மேலே அவரே கொஞ்சம் உப்புப் பொடி தூவினார். ஷாட் க்ளாஸில் அளந்த சரக்கை, கடக்கென்று என் தம்ளரில் ஊற்றி மடக்கென்று விழுங்கிய சூட்டோடு, கயில் உப்பு / எலுமிச்சை தேய்த்த இடத்தை நக்கிக் கொள்ள சொன்னார்.
மஜாவாக இருந்தது. கிக்…
இதற்கென்ன அவசியம்..அதுவும் இங்கு..??
========================================

காலை வேலையில் எழுந்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சமீபகாலங்களில் மனநிறைவைத் தரும் விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் சூர்யாவுக்குத் தான் இம்மாதிரி கவனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுடன் சேர்ந்து வீடும் தோட்டமும்.

அம்மாதிரியான ஒரு காலை நேரத்தில், அதைச் செய்தவாறு வீட்டு வாசல்புறம் நின்றிருந்தேன். திருமலை நாயக்கர் தூண் மாதிரி மெகா சைஸில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரும், அவர் சிநேகிதியும் "ஹாய்..ஹவ் ஆர் யூ..? " என்றார்கள். இந்தியர்களைப் பார்த்தால் கடுவன் பூனை போல வைத்துக் கொண்டும், இங்குள்ளவர்களைப் பார்த்தால் காது வரை விரியும் வாயோடும் பேசும் நமது தேசி மனப்பான்மை எனக்கும் கொஞ்சம் ஒட்டிவிட்டது போலும்... நானும் சந்தோஷமாக வார்த்தையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கூட சந்தேகமே வரவில்லை. ஒரு ஐந்து நிமிடம் பேசிய பின்னர். 'பாவிகளை ரட்சிக்க பூமிக்கு வந்தவரைப் பற்றியும், அவரது பிரதாபங்கள் பற்றியும் பேச பேச ஓ...இது தினகரன் ( பெரியகுளம் தினகரன் அல்ல..காருண்யா தினகரன்....காலை வேளையில் ராஜ் டீவியில் &q…