Thursday, July 06, 2023

மாமன்னன் 

-----------------------------




 மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் 

உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழைப்பதை கேட்டிருக்கிறீர்களா ? என்றார் மாரி செல்வராஜ் தன்னுடைய செவ்வி ஒன்றில். This is the one line for the movie !!!! அதன் சம்பந்தமாக அவருடைய கவிதையும் இதோ: 


மனிதர் பக்காவான ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கிறார். அதில் தங்கர் பச்சான்  படம் பார்ப்பது போல ஒரு உணர்வையும் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு, தன் மனதுக்கு பிடித்த நடிகர்களை வைத்து, தனக்கு மிகத்தெரிந்த ஒரு சப்ஜெக்டை , தனக்கே உரித்தான அருமையான திரைமொழியில்  எடுத்திருக்கிறார். 

தம்பி வெள்ளைக்கார படமா பாத்து பாத்து ரொம்ப கெட்டுப் போயிருக்குது :-) superb Inserts.

வசனங்கள் அருமை.  பரியேறும் பெருமாளில் குமுறித் ததும்பிய  கோபம், மெல்ல மெல்ல பின் வரும் படங்களில் ”லாவா”  கணக்காக உருகி வருகிறது.   Hope he does not consider caste oppression as his only USP. கமலை வத்துக்கொண்டே தேவர் மகனைப் பற்றிய விமரிசனம் செய்து சூட்டைக் கிளப்பாமல் இருந்திருந்தாலும் கூட இந்த படம் ஹிட்டாகி இருக்கும். படமுதலாளிக்கு இந்தப் படத்தின் மூலமாக வரும் பணத்தை விட மற்ற விஷயங்கள் முக்கியம் என்பதால் அவரும் வசூலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டு இருந்திருக்க மாட்டார்.  மாரி சொல்வது போல  ”உட்கார வைத்து”  பேசுவதும் அரசியல்தான் ;-) 

படத்தைப் பார்த்து நான் ஃபஹத் பாசிலின் வெறித்தனமான ரசிகனாகிப் போனேன். அசப்பில் என் சின்னா சித்தப்பா போலிருக்கும் ஃபகத் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார். பணமும் , ஜாதியும், அரசியல் பவிசும் கலந்து மின்னும் ஒரு ஃபியுடலிச ராட்சஸன். அவருக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். 

வடிவேல் பண்பட்ட நடிப்பைத் தந்திருக்கிறார். இசக்கியிடம் வெளிப்பட்ட அப்பாவித்தனம் இல்லை. பட்டியல் இனத்து அரசியல்வாதியிடம் வெளிப்படும் ஒரு இயலாமை, உள்ளூறும் ஒரு குமுறல், அவ்வப்போது வெளிப்படும் பாடல் என்று இயல்பாக நடித்திருக்கிறார். மீட்டருக்கு மீறாத வார்ப்பு. கேட்டு வாங்கிய  மாரிக்கு  ஒரு சபாஷ். 

படத்தில் வரும் மற்ற யாவருமே இந்த மேலே குறிப்பிட்டவர்களுக்கு  துணையாக நின்றிருக்கிறார்கள் - ரஹ்மான், கீர்த்தி, லால்  உள்பட. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் கூட உறுத்தவில்லை. தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கிறது. 

படத்தில் உதயநிதி பன்றி வளர்ப்பதையும், அவர் அம்மா அந்த பன்றிக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதையும் பார்க்கும்போது நமக்கு வருகிறதே ஒரு உணர்வு - அதைப் போக்கவே மாரி செல்வராஜ்கள் ஆயிரம் படம் எடுக்க வேண்டும். பாரதிராஜா “ அன்னக் கொடியும் கொடி வீரனும் “ படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த கதானாயகன் பன்றி  வளர்ப்பதாக காட்டி இருப்பார். ”இந்தாளுக்கு மனசு பெரிய ம*ருன்னு நெனப்பு. இந்தக் காலத்துல யார் பன்றி வளர்க்கிறா. அவங்கள்ளாம் எப்படி முன்னேறி வந்துட்டாங்க தெரியுமா” என்று கோபத்துடன் கேட்டார் என் வீட்டம்மிணி. மற்றவர்கள் இழிவென காட்டுவதை தன் அடையாளமாக தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு ”நீலம்” பலம் பெற்றிருக்கிறது. பொறுப்போடு கூடிய பலம் தான் இந்த சமூகம் வேண்டுவது 

வாழ்த்துகள். வளர்க. வெல்க.  


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...