Skip to main content

Posts

Showing posts from May, 2016

குப்பத்து ராஜா

இதுதான் ஊடக அறமா என்ற தலைப்பில் மதுரைப் பல்கலைகழகத்தின் இதழியல் துறைப் பேராசிரியர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.  யாருக்கு நாற்காலி என்கிற தலைப்பில் விகடன் ஏடு வெளியிட்ட கட்டுரை எவ்வாறு திமுக சார்பு நிலை எடுத்திருக்கிறது என்பதையும் விகடன் ஏன் மக்கள் நலக்கூட்டணியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும்  கேள்வி கேட்டு இருக்கிறார்.



தமிழ்மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்கிற ஒரு பத்திரிக்கை தமிழர்களின் கருத்தை மாற்றி அமைக்கிற, தன் சார்பு நிலை பற்றி சொல்கிற வேலையிலிருந்து வெளிவந்து மாமாங்கம் ஆயிற்று பேராசிரியர் அவர்களே. தற்கால வெகுஜன ஊடகங்கள் ( அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டோ / நடத்தப்பட்டோ வெளிவருபவை தவிர)  பொதுமக்கள் நினைப்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளும் நுகர்வோர் கலாசாரத்தின் கூறாகி விட்டன.  விகடனில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பங்கு இப்போது இருக்கிரது என்ற அடிப்படையில் பலருக்கு கட்டுரையைப் பற்றிய  சந்தேகம் வந்தாலும் கடந்த பல தேர்தல்களாக விகடனின் குரல் எப்படி எதிரொலித்து இருக்கிறது என்று கூர்ந்து அவதானித்தால் உண்மை விளங்கும்

மக்கள்…

கவனம் தி.மு.க !!!

தேர்தலையொட்டி  எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறையின் விவரணைகளும், பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் பேச்சுகளும் ஜெயலலிதாவின் பதட்டமும் ஒன்றை நாசுக்காக சுட்டுகின்றன.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு ஆதரவாக வரப்போவதையே அவை சொல்லுகின்றன.

பெரிய கட்சிகளுக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்ப்ட்ட ம.ந.கூ தலைவர்களின் உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளால் பிசுபிசுத்து விட்டது. பா.ஜ.க தனித்து விடப்பட்டது. பா.ம.க அடுத்த தேர்தலில் பேரம் பேசும் வலிமையை பெறுவதற்கே தேர்தலை சந்திக்கிறது. சீமான் அடுத்த வை.கோ. இந்த சூழலில் ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தியை முழுக்க முழுக்க அறுவடை செய்யும் கட்சியாக தி.மு.க எஞ்சுகிறது. வெற்றி பெற்றால் அக் கட்சி செய்ய வேண்டுவன என்று  ஒரு பொதுஜனத்தின் பார்வையில் பார்த்தோமானால் :

கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது. கட்சித்தலைவர் / ஆலோசகர்  பதவியில் இருந்து கொண்டு ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும்.  அது அடுத்தகட்ட தலைவர்கள் தலையெடுக்க வழி வகை செய்யும். முதல்வரை  மாற்றும் வல்லமை கட்சித் தலைமைக்கு இருக்க வேண்டும் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்க்கப்படவேண்டும…