Skip to main content

Posts

Showing posts from April, 2007

நிறை அன்பு I.A.S

விகடனில் சமீபகாலங்களில் வந்திருக்ககூடிய மிகக அற்புதமான தொடர் இது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதனையாளர்கள், திறமையாளர்கள் என்று வரிசை கட்டி ஆடுகிறார்கள்

மனதை மிகவும் கவர்கிற எழுத்துக்கள். நன்றி விகடன்

*****************

‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.

சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வி…

The Bridges of Madison County(1995)

ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.

அயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கி…

Pursuit of Happyness

Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், "This is just a Mov...vie. Why you are crying Dad..? என்றான்.

மூன்றாம் உலக நாடுகளில்/ ஏழை நாடுகளில் ஏழையாக இருப்பது பெரிதல்ல. அமெரிக்க போன்ற நாடுகளில் ஏழையாக இருப்பது, தங்க வீடில்லாமல், காரில்லாமல், பூப்போல ஒரு பிள்ளையை சுமந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இரவுகளில் அலைவது மிகக் கடினம்.

க்ரிஸ் கார்ட்னர் Bone density scanner என்று சொல்லப்படுகின்ற ஒரு வினோத வஸ்துவை தூக்கிக் கொண்டு அலையும் விற்பனை பிரதிநிதி. அந்த மெஷின் எங்கும் விற்பதில்லை. தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி. அரசுக்கு வரி பாக்கி. அவன் இயலாமையை சொல்லிச் சொல்லி இம்சிக்கும் மனைவி கடைசியில் பிள்ளையை அவனிடம் விட்டு விட்டு நியூயார்க் போய் விடுகிறாள். போனபின் நிலைமை இன்னமும் மோசம். வீட்டை விட்டு மோட்டலுக்கு வருகிறான். காரை விற்கிறான். மோட்டலுக்கும் காசு தர முடியாமல் ரோட்டுக்கு வருகிறான். ஐந்…

வியர்டு

ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா நம்மளை எல்லாம் கூப்பிடறாங்களேன்னு.

படிக்கிறவங்களுக்கு அதை விட... :-) :-) :-)


தேடிச்சோறு நிதந்தின்று ...... ..... வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற பாரதியில் தெரிவது நம் எல்லாரிலும் துணுக்காய் தெரிகிறதோ என்றொரு எண்ணம். எல்லாருக்கும், மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.

கடவுள் படைப்பு ரகசியமே நாம் எல்லோரும் வியர்டாக, ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் பேசிக்கொண்டே இருக்கும் பையனுக்கு பேசா மடந்தையைப் பிடிக்கிறது. வெண்ணைக்கட்டி அழகிகளுக்கு பனைவெல்லத் தூண்களைப் பிடிக்கிறது. நெட்டைக் கொக்குகளுக்கு சுண்டுவிரல் சுந்தரிகளையும், பயந்தாங்கொள்ளி கோழைகளுக்கு நெஞ்சுர நாயகிகளையும் பிடிக்கிறது. இத்தனை வியர்ட் கலவைகளுக்கு பிறக்கின்ற வியர்டுகள் வியர்டாகத்தானே இருக்க வே…

ஏக்கம்

வெருண்டோட மான்களில்லை
காயமாற நக்கி சலிப்பதில்லை
கடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்
தனியே எதிர்கொள்ளும் சாபமில்லை
வயிற்றுக்கு பதிலாய்
வேட்டையாடும் வேலையில்லை
அசைபோட்டு படுத்திருக்க
ராணிதரும் உணவில்லை
செல்லக்கடி கடித்து முயங்க
குட்டியில்லை குடும்பமில்லை
வண்ண விளக்கு நடுவே நான்
கர்ஜித்து வாய்பிளக்க
கண்கொட்டா மனிதரில்லை
சாட்டையின் சொடுக்கிற்கும்
இசையின் வேகத்துக்கும்
கரவொலி காதுகிழிக்க
சுற்றிச் சுழன்று வருகின்றேன்.
ஆழத்தில் கானகம்.