Wednesday, April 04, 2007
வியர்டு
ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா நம்மளை எல்லாம் கூப்பிடறாங்களேன்னு.
படிக்கிறவங்களுக்கு அதை விட... :-) :-) :-)
தேடிச்சோறு நிதந்தின்று ...... ..... வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற பாரதியில் தெரிவது நம் எல்லாரிலும் துணுக்காய் தெரிகிறதோ என்றொரு எண்ணம். எல்லாருக்கும், மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.
கடவுள் படைப்பு ரகசியமே நாம் எல்லோரும் வியர்டாக, ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் பேசிக்கொண்டே இருக்கும் பையனுக்கு பேசா மடந்தையைப் பிடிக்கிறது. வெண்ணைக்கட்டி அழகிகளுக்கு பனைவெல்லத் தூண்களைப் பிடிக்கிறது. நெட்டைக் கொக்குகளுக்கு சுண்டுவிரல் சுந்தரிகளையும், பயந்தாங்கொள்ளி கோழைகளுக்கு நெஞ்சுர நாயகிகளையும் பிடிக்கிறது. இத்தனை வியர்ட் கலவைகளுக்கு பிறக்கின்ற வியர்டுகள் வியர்டாகத்தானே இருக்க வேண்டும்.
அதனால்தான் சாரு நிவேதிதா லூசு மாதிரி எழுதுகிறார். கலைஞர் ஜேகேவைக் கூப்பிட்டு முரசொலி விருது கொடுக்கிறார். அவரும் அதை வாங்கிக் கொண்டு தமிழ் சிஃபியில் உப்புத்தாள் குரலில் முழ நீளத்துக்கு சுகதேவுக்கு வழாவழா கொழ கொழா விளக்கம் கொடுக்கிறார்.
அதனால்தான் உலகம் சுவாரசியமாக இருக்கிறது.
சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை விளையாட்டாகவும், விளையாட்டாக எடுத்துக் கொள்கிற விஷயங்களை சீரியஸாகவும், தினமும் ஆபிஸுக்கு வேறு வேறு பாதைகளில் போகின்ற விருப்பம் இருந்தாலும் செக்கு மாடு மாதிரி தெரிந்த ரூட்டிலேயே செல்வதையும், பெண்களுடன் ரொம்ப மரியாதையாக, கண்ணியமாக பழகுகிறவன் என்கிற மாதிரி நடந்து கொண்டு உள்ளுக்குள் அல்பத்தனமாய் நினைப்பதையும், டீ.ராஜேந்தர் சிட்டிபாபுவுடன் சரிக்கு சரி சவடால் விடுவதை திட்டிக் கொண்டே அந்த மாதிரி பஜாரித்தனம் செய்ய முடியாத தன் கோழைத்தனத்துக்காக ரகசியமாக குமைவதையும், சாப்பிடுவதில் அதீத ரசனை இருந்தாலும், " உணவை ரசித்து உண்பது பாவம். இந்த வெண்டைக்காய்க்காகவே மோர்க்குழம்பை நக்கி நக்கி சாப்பிடலாம் என்பது, அவ மாருக்காகவே அவளை லவ் பன்ணலாம் என்று சொல்வது போல குரூரமானது" என்று யாரோ ( பாலகுமாரன்???!!! ) சொன்னதற்காக கஷ்டப்பட்டு உணவு பற்றிய ரஸனை குறைந்து விட்டதாக காட்டிக் கொள்கிற அயோக்கியத்தனத்தையும், மாய்ந்து மாய்ந்து லவ்வி விட்டு அல்வாவியதும் அதற்காக கட்டுக் கட்டாக தன்னிரக்கக் கவிதைகளும் எழுதிவிட்டு தான் உண்மையாகத்தான் நேசித்தோமா என்கிற அறிவுஜீவித்தனமான ஆத்ம விசாரத்தையும், இணையத்தில் எப்போது நல்ல "கலர்ப்படங்கள்" பார்த்தாலும் லஜ்ஜையில்லாமல் My pictures ல் சேகரித்துக் கொள்கிற சபலத்தையும், தனக்கு எதிரியாயிருக்கிறவர்களின் திறமைகளை ரசிப்பதையும், ரொம்ப நெருக்கமானவர்களின் அருகாமையை அலட்சியமாக நினைப்பதையும் வியர்டு என்றெல்லாம் நான் நினைக்கவில்லை :-)
கட்டுப்பெட்டி சமத்துக் கடைக்குட்டியாக, மடிநாயாக வளர்க்கப்பட்டு, கல்லூரி சுதந்திரம் கிடைத்ததும் முதல் ஒன்றரை வருடம் அத்துமீறிப்போய் ஆட்டம் போட்டு விட்டு பயந்து போய் மறுபடியம் டே ஸ்காலராகி, சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்ததால் காதல் கத்தரிக்காய் என்று அலையாமல், கிடைத்ததும் அதிலும் நுனிப்புல் (சிறுவீட்டு மேய்ச்சல்!!!!! ) மேய்ந்து விட்டு, பிறகு சொந்த சாதியில் பந்தப்பட்டு பந்தாடப்பட்டு, எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு யாருக்காகவோ வாழ்வதாக பீலா விட்டுக் கொண்டு இருக்கும்
சர்...ர்ர்ர்ர்ரியான சராசரி.
நான் அதற்குமேல் எவ்வளவு பெரிய வியர்டு என்பது என்னுடன் புழங்குகிற புண்ணியாத்மாக்களுக்கு தெரியும்.
என் பெருமையை நானே எப்படி சொல்லிக் கொள்வதாம்.. !!!!!!!!!
நன்னி மதி.
இதுவரை கூப்பிடப்பட்டார்களா என்றெல்லாம் தெரியாது. நான் அழைக்க விரும்புபவர்கள் கீழே
சுந்தரவடிவேல்
தங்கமணி
டிசே தமிழன்
மீனாக்ஸ்
எம் கே குமார்
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
வம்பு தும்பு இல்லாம ஒதுங்கி இருக்க ஆளை இப்புடிப் புடிச்சு இழுத்து விடுறீயளே, இது ஞாயமா?:))
ReplyDelete//எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு// dito :))
வாங்க சுந்தர்.
ReplyDeleteபழம்பெரும் நட்சத்திரங்களை எல்லாம் சன் டீவில பேட்டி எடுக்கறதில்லையா..
அது மாதிரிதான்...
ம்...நடத்துங்க.
//மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.//
ReplyDeleteமெத்தச் சரியாகிப்போச்சுதடா.........:-)
வழக்கமான உங்கள் பாணி பதிவு. நல்லா இருக்கு.
ReplyDelete///எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு///
:))
நன்றி துளசி அக்கா / செல்வா
ReplyDelete:))
ReplyDeleteமதி
ReplyDelete:-} :-}}
( என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரிலை. உங்க கோட் வேர்டையே நானும் போட்டுட்டேன். புரியலைங்கிறது பிரச்சினையாயிடக்கூடாது பாருங்க. அதேன்...!!! ) ஹி..ஹி..
சுந்தர்:
ReplyDeleteஹிஹி ஒண்ணுல்ல. நல்லா சமாளிச்சிட்டீங்களேன்னு சொன்னேன்.
நீங்களும், பதிலுக்கு ஆமாம்மான்னு சொன்னதா கோர்ட் வேர்டை எடுத்துக்கிறேன். ஹிஹி.
-மதி
பி.கு.: ஆனா, படிக்க சுவாரசியமாகத்தானிருந்தது சுந்தர்..
அடிக்கடி எழுதுங்கய்யா.
நிர்வாண மரப்பெண் பிடித்திருக்கிறது ( புகைப்படம் ). நல்ல கற்பளை வளம். நீங்கள் எடுத்ததா? அல்லது எங்காவது சுட்டதா?
ReplyDeleteநிர்வாண மரப்பெண் பிடித்திருக்கிறது ( புகைப்படம் ). நல்ல கற்பளை வளம். நீங்கள் எடுத்ததா? அல்லது எங்காவது சுட்டதா?
ReplyDeleteஅப்பிடியே விருவிருன்னு இருக்கு நடை. சூப்பர்.
ReplyDeleteயோவ் இன்னா வூட்டுல படிக்கமாட்டாங்களா? எப்பிடிய்யா இதெல்லாம்...நமக்கும் சொல்லிக்குடுங்களேன்
Done, Thank you!
ReplyDeletehttp://bhaarathi.net/sundara/?p=308
மூக்கு சார்,
ReplyDeleteமதியின் வியர்டைப்படித்ததும் அடடா, நம்ம ஆளு லைனுக்கு வாறார்ன்னு இருந்தேன். தரணி படம் மாதிரி சும்மா 'தில்லுதூள்'ன்னு போகுது.
'வெண்ணெய்க்கட்டி அழகிகளும் பனைவெல்லத் தூண்களும்'ன்னு ஒரு கதை எழுதலாமுன்னு இருக்கேன்.:-)ஆனா நேரம் இருக்கான்னு தெரியலை!
"ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம்" - இது எனக்கும் பொருந்துமோ!
நன்றி, வருகிறேன்.
அன்பன்
எம்.கே.
//டீ.ராஜேந்தர் சிட்டிபாபுவுடன் சரிக்கு சரி சவடால் விடுவதை திட்டிக் கொண்டே அந்த மாதிரி பஜாரித்தனம் செய்ய முடியாத தன் கோழைத்தனத்துக்காக ரகசியமாக குமைவதையும்//
ReplyDeleteடீ.ஆர் பாத்து ஏக்கமெல்லாம் விடக்கூட ஆளிருக்கா? :)
ஆனா, நீங்க சொல்றது உண்மை. 'சராசரி' ஆளுங்க எல்லாரும் ஒருவிதத்தில் கோழைங்க தான்.
நளாயினி, சுட்ட பழம்தான். கூகிள் மரம்தான்..:-)
ReplyDeleteடுபுக்கு..அப்டி இன்னாய்யா எழுதிப்டேன்.என் ப்ளாக்கை ஊட்டம்மா படிக்கிறதுண்டு சாமி. மேக்கப் போட்டுக்கினே குட்த்த்னம் பண்ண முடியுமா..மனுசன் நிம்மதியா இருக்கத் தாவலை..!!!!!!!
ஆஹா..வடியேலும், சிங்குமாரும் மாட்டிக்கிட்டாங்கப்பா. வைரமணிக்கும், அசினரசருக்கும், Fairex மாப்பிள்ளைக்கும் யாராச்சும் தாக்கீது சொல்லுங்க ராசா.
மதி..ஒப்பேத்திட்டேன். அடிக்கடி எழுதினா சரக்கு பத்தாம கடிகடியாவது. அதனாலதான் கபீ கபீ எழுதறேன். :-) :-)
தல, வாத்தியாரூ சரியாதான் சொல்லியிருக்கார். இன்னாத்த சொன்னாரூ என்பதை நுனிப்புல்லில் என் வியர்ட் பதிவைப் படித்து தெரிந்துக் கொள்ளவும் :-)
ReplyDeleteசர்வேசா... டீ.ராஜேந்தர் நடிக்காம இருந்தா, அடுக்கு மொழில ஓஓஓஒவரா கடிக்காம இருந்தா அந்தாள் கிட்ட பாத்து ரசிக்க ஏராளமா விஷயம் இருக்கு.
ReplyDeleteவாங்க..மாமி..!! புதுமையான முறையில விளம்பர மன்னி..! படிக்கறேன்.
//இந்த அழகுல ஒருமுறை அம்பலம் சாட்டில சுஜாதா, எழுதுகிறவங்க எல்லாருமே கொஞ்சம் கிறுக்குதான்னு சொல்லிட்டார்//
ReplyDeletehttp://nunippul.blogspot.com/2007/03/weird.html
அப்டின்னு ஒரு கிறுக்கு சொல்லிச்சா..?? ஹி..ஹி..ஹி..
சுந்தர்:
ReplyDelete//நான் அதற்குமேல் எவ்வளவு பெரிய வியர்டு என்பது என்னுடன் புழங்குகிற புண்ணியாத்மாக்களுக்கு தெரியும்.//
இதுதான் இங்கயும். ஆனா இத அப்படியே ஒத்துக்கிட்டு சாதரணமா ஆயிட்டேனோன்னு ஒரு பக்கம்!
இத எல்லோருக்கும் சொல்லனுமா!
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதுறீங்களேன்னு வந்தா என்னையும் புடிச்சு இழுத்துட்டீங்களே! :)
//இதுதான் இங்கயும். ஆனா இத அப்படியே ஒத்துக்கிட்டு சாதரணமா ஆயிட்டேனோன்னு ஒரு பக்கம்!//
ReplyDeleteவருத்தம் ..ம்..ம்..!! எல்லாப் பயபுள்ளக்கிம் இதே வருத்தம்தான். சாதாரணமா இருக்கறதே சதாரணம்!!!
யாரும் சாதாரணம் இல்லை
"உன் விந்தை எனக்கில்லை, என் விந்தை உனக்கில்லை" அப்டின்னு வடியேல் சித்தரு செப்பி இருக்காரு.
நீங்களும் கெளப்புங்கோவ்.