
வெருண்டோட மான்களில்லை
காயமாற நக்கி சலிப்பதில்லை
கடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்
தனியே எதிர்கொள்ளும் சாபமில்லை
வயிற்றுக்கு பதிலாய்
வேட்டையாடும் வேலையில்லை
அசைபோட்டு படுத்திருக்க
ராணிதரும் உணவில்லை
செல்லக்கடி கடித்து முயங்க
குட்டியில்லை குடும்பமில்லை
வண்ண விளக்கு நடுவே நான்
கர்ஜித்து வாய்பிளக்க
கண்கொட்டா மனிதரில்லை
சாட்டையின் சொடுக்கிற்கும்
இசையின் வேகத்துக்கும்
கரவொலி காதுகிழிக்க
சுற்றிச் சுழன்று வருகின்றேன்.
ஆழத்தில் கானகம்.
பழிப்பது போல் புகழ்வதும், புகழ்வது போல் பழிப்பதும் புலவர்களுக்கு சொல்லித் தெரிவதில்லையே! அருமையாக இருக்கிறது.
ReplyDeleteThanks for your comments
ReplyDelete