Friday, April 06, 2007

Pursuit of Happyness


Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், "This is just a Mov...vie. Why you are crying Dad..? என்றான்.

மூன்றாம் உலக நாடுகளில்/ ஏழை நாடுகளில் ஏழையாக இருப்பது பெரிதல்ல. அமெரிக்க போன்ற நாடுகளில் ஏழையாக இருப்பது, தங்க வீடில்லாமல், காரில்லாமல், பூப்போல ஒரு பிள்ளையை சுமந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இரவுகளில் அலைவது மிகக் கடினம்.

க்ரிஸ் கார்ட்னர் Bone density scanner என்று சொல்லப்படுகின்ற ஒரு வினோத வஸ்துவை தூக்கிக் கொண்டு அலையும் விற்பனை பிரதிநிதி. அந்த மெஷின் எங்கும் விற்பதில்லை. தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி. அரசுக்கு வரி பாக்கி. அவன் இயலாமையை சொல்லிச் சொல்லி இம்சிக்கும் மனைவி கடைசியில் பிள்ளையை அவனிடம் விட்டு விட்டு நியூயார்க் போய் விடுகிறாள். போனபின் நிலைமை இன்னமும் மோசம். வீட்டை விட்டு மோட்டலுக்கு வருகிறான். காரை விற்கிறான். மோட்டலுக்கும் காசு தர முடியாமல் ரோட்டுக்கு வருகிறான். ஐந்து வயசு பிள்ளையுடன் இரவு தங்க இடமில்லாமல் BART ஸ்டேஷன் கழிப்பறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டு தங்குகிறான்.

அவனுக்கும் ஒரு நாள் விடிகிறது. விடியல் சேதி கேட்டவுடன் கண்கள் குளமாகின்றன. ஓடிவந்து தன் ரத்தத்தை கட்டிக்கொண்டு விசும்புகிறான்.மனசு கனத்துப் போகிறது. அதற்குப் பிறகு அவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக இருந்த க்ரிஸ் நிஜ நாயகராம். இது அவருடைய உண்மைக் கதையாம். நமக்கெல்லாம் வில் ஸ்மித் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார்

தவறவிடக்கூடாத அறிமுகம்...

7 comments:

 1. Scary coincidence. Just finished the movie and some of the extras in the DVD.

  தெருவிளக்கில் படித்தார் என்போம். அனாதரவாக நண்பர்களில்லாமல், பற்றுதலுக்கு தோள்களின்றி, இரண்டு வேலை பார்த்துக்கொண்டு, குழந்தைக்கும் வேண்டிய அளவு நேரம் ஒதுக்கி, churchஇன் சத்திரத்தில் விளக்கெல்லாம் அணைந்த இருட்டில் பங்குச்சந்தை/பொருளாதாரத் தேர்வுகளில் பெரு மதிப்பெண் எடுக்குமாறு, படித்து பணக்காரனாகிறார் என்பதைப் பார்த்தவுடன்...

  கடவுள் இப்படியெல்லாம் எனக்கு சோதனை கொடுக்கலையே என்றும் பயம் கலந்த நன்றியுணர்ச்சி; தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் பிசாத்து காசுகளைக் கூட வரி கட்டும்போது கழித்து பணம் சேர்க்கும் ஆசை; தன்னார்வ நிறுவனங்களில் சேவை செய்வோரை 'அன்பே சிவ'மாக கை கூப்பி நெகிழ வைத்த இடம்....

  ReplyDelete
 2. //கடவுள் இப்படியெல்லாம் எனக்கு சோதனை கொடுக்கலையே என்றும் பயம் கலந்த நன்றியுணர்ச்சி; //

  உண்மை பாலாஜி...சத்தியமாக நினைத்தேன். இம் மாதிரி நல்ல எண்ணங்கள் மட்டும் கற்பூரம் மாதிரி எளிதில் கரையாமல் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

  சுழி...சும்மா இருக்க விடுதா..??

  ReplyDelete
 3. அவங்களோட குடும்பம் பற்றிய சென்டிமென்ட் ஆச்சர்யமாயிருக்கும். தன்னுடைய தகப்பனை 25ற்கு மேற்பட்ட வயதில் தான் பார்த்ததாகவும் அதனால் தன் பையனுடன் இருக்க வேண்டுமென்று நினைத்தாகவும் சொல்லுவார் ஒரு இடத்தில்.

  பளீரென்று நினைவில் வந்தது சின்டிரெல்லா மேன். ஜேம்ஸ் ப்ராட்டாக் எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய குழந்தகள் தன்னைவிட்டு பிரியக்கூடாதென்று நினைப்பார்.

  ------------------------

  நிச்சயமாக ஒருமுறை பார்க்க வேண்டியப் படம் தான்.

  ReplyDelete
 4. நிஜம். அமெரிக்காவில் ஏழையாய் இருப்பது கொடுமை. வறுமை கோட்டின் கீழே இருக்கும் மக்கள் உலகேங்கும் ஒரே மாதிரி வஞ்சிக்கப்படுகிறார்கள். நேரில் பார்க்கும் போது அவர்களின் கபடில்லாத வாழ்த்துக்களை பெறும்போது நெகிழ்ந்து போகும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

  ReplyDelete
 5. மோகன், நமக்கெல்லாம் நல்ல சிதறிபோகாத குடும்ப அமைப்பு/வாழ்க்கை வாய்த்திருபதால் உறவுகளின் மதிப்பு புரியவில்லை. அமெரிக்க குழந்தைகளுக்கு அது ஒரு சாபம். அதனால்தான் இங்கே இப்போதெல்லாம் டிவோர்ஸ் ஆன பின் கூட, குழந்தைகளை இவர்கள் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

  சிந்த்ரெல்லா மேன் பார்க்கவில்லை.

  அவன் தனியாக கஷ்டப்படுதல் கூட விஷயமில்லை. ஹெச்.சி. எல் ல் வேலை பார்த்தபோது நான் கூட ஒரு ஃபேக்ஸ் மெஷினை துக்கிக் கொண்டு பம்பாயில் விற்பனையாளனாக அலந்திருக்கிறேன்.
  கல்லூரி நாட்களில் ஏதோ வேலையாக வந்து விட்டு சென்னை எக்மோரில் இரவைக் கழித்திருக்கிறேன். மனைவியும் விட்டுப்போன சுஷ்டநிலையில், கையில் ஒரு பிஞ்சுக் குழந்தையை வைத்துக் கொண்டு, தங்க்க்கூட இடமில்லாமல், தன் கஷ்டம் கொஞ்சம் கூட அந்தப் பிள்ளையை பாதிக்காமல், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு முன்னேறி பேஒராடி ஜெயிக்க எவ்வளவு வைராக்கியம் இருந்திருக்க வேண்டும்..?? நினைத்தால் ஒரு ஜேப்படி திருடனாகவோ, தாதாவின் அடியாளாகவோ, இரவு விடுதிகளில் பவுன்ஸ்ராகவோ, கஞ்சா கடத்தல் காரனாகவோ ஆக எவ்வள்வு நேரம் ஆகி இருக்கும். அவன் பிள்ளை மேல் வைத்திருந்த அன்பும், பிடிப்பும், நல்லிதயமும் அவன் கனவுகளை துரத்த வைத்திருக்கிறது.

  பத்மா,

  //இல்லாமை இல்லாத நிலை வேண்டும் // நல்ல கனவுதான். ஆனால், நாள் பிடிக்கும் கனவு. அதுவரை தன்னிலும் எளியாரை, மெலியாரை கனிவுடன் பார்க்கும் இதயம் வேண்டும். அது இல்லாதவரை, நமக்கு விடிமோட்சமே கிடையாது

  ReplyDelete
 6. venkeysubu@gmail.com5:09 AM

  உங்களோட விமர்சனம் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 7. நன்றி வெங்கி.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...