Skip to main content

Posts

Showing posts from April, 2004
குழலூதி மனமெல்லாம்
=================

மகரந்தத்தின் புண்ணியத்தில் தும்மிக் கொண்டே காலையில் கைக்குட்டை சளியனாக அலுவலகம் வந்தேன். வெளியில் நின்று புகையூதிக் கொண்டிருந்த கேத்தி ட்யூபெட்ஸ் " ஹாய்..சுண்டா " என்றாள் வழக்கம் போல் "ர்" தொலைத்து. இங்கெல்லாம் பெண்கள்தான் அதிகம் சிகரெட் குடிக்கிறார்கள். அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். நம்மூரில் சிகரெட் பிடிப்பது ஆண்மையின் அடையாளமோ என்று மெல்லிசாக ஒரு மயக்கம் உண்டு. சீனியர் ஓபராய், சிசர்ஸ் குடித்துக் கொண்டே பைக் ஓட்டுவதைப் பார்க்க அந்தக் காலத்தில் ஒரு கூட்டமே உண்டு. ரஷ்யாவில் நம்மூர் சார்மினாருக்கு ஸ்த்ரீ சம்போகமே சித்திக்குமாம்.

அது மட்டுமல்ல. என் ஸ்நேகிதிகளிலேயே கொஞ்சம் பேருக்கு சிகரெட் வாசனை(?!!) கொஞ்சம் பிடிக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிழல் நிஜமாகிறது சஞ்சீவி விடும் வளையங்களை மறக்க முடியுமா.. ... என்று சொல்வார்கள் கண்ணில் கிறக்கத்துடன். "சில நேரங்களில் சில மனிதர்கள்" கங்காவுக்கும் இதே விருப்பம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும்.

ஆசை யாரை விட்டது......

என் லீலா விநோதங்களில் மேற்சொன்ன ஆறா…
யாக்கை திரி
=========

மேற்கண்ட பாடலை எழுதிய பாடலாசிரியர் யாராயிருந்தாலும் , என்னை கொஞ்ச நாள் முன்பு பார்த்திருந்தால், சூடாக நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதற்கிருந்த அவசியம் போய் விட்டது.

போதுவாக நான் அலுவலகத்தில் யாஹூ சாட்டில் இருப்பதோ அல்லது ஹெட்ஃபோனை காதில் வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதோ கிடையாது. இன்று அபூர்வமாக ஆய்த எழுத்து பாட்டுக் கேட்க வேண்டும் என்று தோணிப்போக, ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்திருந்ததை ( பாட்டு கேட்காதவனுக்கு டவுன்லோடு எதற்கு என்று கேட்பவர்களுக்கு - நான் அலுவலகத்தில் தான் பாட்டு கேட்க மாட்டேன். காரிலும், வீட்டிலும் கேட்பேன். அவ்ளோ தொயில் பக்தி...) கொஞ்சம் கேட்டேன்.

யாக்கை திரி என்ற பாடலைக் கேட்டு விட்டு நண்பர்கள் அர்த்தம் கேட்டபோது , நடுவில் 'த்' இருப்பதாக நினைத்துக் கொண்டு நான் கொனஷ்டையாக கொடுத்த விபரீத அர்த்தம் நினைவுக்கு வந்தது. பாட்டு அப்படி இல்லை...

யாக்கை (என்பது) திரி (என்றால்) காதல் சுடர் (ஆகும்)

இப்படியே கீழே மற்ற வரிகளையும் படிக்கவும்..

ஜீவன் நதி காதல் கடல்
பிறவி பிழை காதல் திருத்தம்
இரு…

எழுதாக் கவிதை

============

காலையில் அரக்கப் பரக்க
வாக்கிங் போய்
கிடைத்தை தின்று
பார்க்கிங்
லாட் மூடுவதற்குள்
காரை உள்செலுத்தி
ஓடி வந்து காலை மீட்டிங்
தாமதமாய் உள்நுழைந்து
பணியிடத்தில் கூப்பிட்ட
குரலுக்கு ஓடியாடி
மாலை மனையாள் பணிக்கு
விடை கொடுத்து
காய்கறி வாங்கி அடுக்கி
பெற்ற செல்வத்தின்
சாக்கர் க்ளாஸ¥க்கு
போய் வந்து
அதன் முகம் கழுவி
கால் துடைத்து
உடை மாற்றி
சோறும் நீரும் கொடுத்து
தான் குளித்து
மீண்டும் தின்று
மனைவியை
அழைக்க
பணியிடம் சென்று
பின்னிரவில்
வீடு மீள
தோன்றியது .....

இன்று
கவிதை எதுவும்
எழுதவில்லை.

தூக்கத்தில் புரண்டு
'ஐ லவ் யூ டாடி' என்று
கனவுக்குள்
சிரித்தது கவிதை.


மனசு வானம்தான்
==============

காதல் கவிழ்ந்தால் தாடி வருகிறதோ இல்லையோ, கவிதை வருகிறது என்று கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு ஜோக் சொல்வார்கள். இப்போது அதற்குக் கூட நேரம் இல்லை...அடுத்த காதல் செய்ய நேர்ந்து விடுவதால். எதுவும் கவிழாமலேயே, கவிதை, அதுவும் உருப்படியான கவிதை எழுதுவதற்கு ஒரு தனி மனசு வேண்டும்.

அது இருக்கிறது ராஜ்குமாருக்கு.

ராஜ்குமார் என் கல்லூரி நண்பன். மகா கோபக்காரன். உணர்ச்சிக் குவியல். அனிச்சம் பூ மனசு. உணர்ச்சி வசப்படும் பொழுது மூக்கு 'சிங்கார்' குங்குமத்தை அப்பியது மாதிரி சிவந்து விடும். என்னை காலேஜில் 'சுள்ளான்' என்றுதான் கூப்பிடுவான். தீவிர ரஜினி ரசிகன்.அடிக்கடி அவனை உசுப்பி விட்டு, இர்ரிடேட் பண்ணி கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறேன். வலிக்க வலிக்க மூஞ்சுக்கு நேரே உண்மை பேசுவான். பெண்கள் கூட பழகுவதில் கூச்சம் என்பதால், நான் அவனை "போலிச்சாமியார்" என்றுதான் கூப்பிடுவேன்.

ராஜ்குமார் கல்லூரி நாட்களில் இருந்தே கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான். அத்தனையும் மனசுக்கு புரிகிற மாதிரி பூமிக்கு வந்து நிசம் பேசும் கவிதைகள். NIIT Madras ல் பிஸினஸ் மானேஜராக …
வீடு வாங்கலையோ வீடு
==================

நான் பிறந்த்போது எங்கள் குடும்பம் சென்னை அஷோக்நகரில் இருந்தது. மூன்று சகோதரிகளுடன், கடைக்குட்டியாகிய என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர். அஷோக்நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். ரொம்பச் சின்ன வீடுதான். நடுவில் கம்பி போட்ட முற்றம் இருக்கும். சுற்றி தாழ்வாரம். தாழ்வாரத்தை ஒட்டி வெவ்வேறு போர்ஷன்கள். கொல்லையில் கிணற்றடி , தென்னை என்று இந்தக் கால மெட்ராஸ் குடித்த்னக்காரர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத லக்ஸூரி.

சொந்த ஊர் மாயவரம் என்றாலும், வேலைவாய்ப்புத்துறையில் பணி புரிந்த என் தந்தையை பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களுக்கு , மூன்று வருடத்துக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருப்பார்கள். எனவே எங்கும் வாடகை வீடுகள்தான்.குழந்தைகள் வளர, வளர, எங்காவது ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் கட்டிய வீடு மாயவரத்தில்.

அதை வீடு என்று ( இப்போது) சொல்ல முடியவில்லை. குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர், நான்கு குழந்தைகளுக்கு தகப்பன், தன்னுடைய குறைந்த பட்ச தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வீடு கட…
வித்தியாசமான டைரக்டரும் ஒரு விளக்கெண்ணை ஹீரோவும்
=============================================

வார இறுதியில் வர்ணஜாலம் படமும் பார்த்தேன்.

தன் குடும்பத்தை சின்னா பின்னமாக்கிய போலீஸ் அதிகாரியின் குடும்பத்தை கதாநாயகன் "அடுத்துக் கெடுக்கும்" கதை. ஸ்ரீகாந்த். சதா, குட்டி ராதிகா, நாசர் ஆகியோர் நடிப்பில் நகுலன் பொன்னுச்சாமி ( யாருப்பா இது..புது ஆளா..??) டைரக்ட் செய்திருக்கும் படம். படத்தின் டைட்டில் காட்சியில் இருந்து, கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாமல் நன்றாக சிரத்தை எடுத்து செய்திருக்கும் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு. கதையில் ஸ்ரீகாந்த் மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தார் என்றால் படம் எங்கேயோ போயிருக்கும்.

கோபம், காதல், ஜாலி, சீற்றம் ஆகிய எல்லா உணர்ச்சிகளுக்கும் , ஒரே மாதிரி முகபாவங்கள். குரலில் ஒரே மாதிரி மாடுலேஷன் என்று வெறுப்பேற்றுகிறார் ஸ்ரீகாந்த். "ஆள் ஸ்மார்ட்டா மட்டும் இருந்தா போதாது ஸார்..கொஞ்சம் நடிக்கவும் செய்யணும்" என்று யாராவது இவருக்கு சொன்னால் தேவலை. இவருக்கு ரெண்டு ஹீரோயின் வேறு. குட்டி ராதிகா படம் முழுக்க வந்தாலும் , ஸ்கோர் செய்வது சதா தான். ஜெயம் படத்தில் …
சாக்ரமண்டோ தமிழ்மன்றம் - புத்தாண்டு விழா
=======================================

போன வாரஇறுதியில், சாக்ரமண்டோ தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு போக நேர்ந்தது. குடாப்பகுதி , லாஸ் ஏஞ்சல்ஸ், நியூஜெர்சீ தமிழ்ச்சங்கங்களோடு ஒப்பிடுகையில் வந்திருந்த கூட்டம் குறைவுதான். சாக்ரமண்டோவில் இருக்கும் தமிழன்பர்கள் எண்ணிக்கையே குறைவு என்பதால்.

ஓக்மாண்ட் ஹைஸ்கூல் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், எல்லா தமிழ்சங்க கூட்டங்களின் கல்யாணகுணங்களை ஒட்டி இம்மி பிசகாமல் நடந்தேறியது. விழா ஏற்பாடுகளை ஜெயந்தி ஸ்ரீதர், முருகேஷ் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் சாக்ரமண்டோவில் அவ்வப்போது தமிழ்ப்படங்களை திரையிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

விழா ஆரம்பித்த முதல் இருபது நிமிடங்கள், காலமாகிப்போன ஆக்டிவ் உறுப்பினர் ஜார்ஜுக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். மக்கள் சரியாக உட்காராமல், ஒரே களேபரம். இறுதியில் ஒரு வழியாக எல்லோரும் உட்கார்ந்து நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இளம்பெண்கள் கலர் கலராக உடுத்திக்கொண்டு , நளினமாக நடனித்து பெருமூச்சு விடச்செய்தார்கள். குழந்தைகள் திரு தி…
அன்றும் ..... இன்றும் ......

==================

ராயர் காப்பி கிளப்பில் மறுபடியும் இரா.மு வுக்கு அழைப்பு விடுக்கும் திரி ஓடிக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக நடந்த காயிதப் பரிமாற்றங்கள் அந்தக் கால நிகழ்வுகளை கொஞ்சம் கண்முன் கொண்டு வந்தன. கசிந்தது உள்ளம். உங்கள் தகவலுக்கு....

நா. கி:

இங்குள்ள மற்றவர்கள் மீதும் (உங்க¨ளையும் சேர்த்து) நல்ல அபிப்ராயங்கள் உள்ளன. பா.ரா வோ, ரெ.காவோ, இரா.கியோ. ஹரிகிருஷ்ணனோ, பிரபுராஜதுரையோ, நாகூர் ரூமியோ, வெங்கடேஷோ, வெங்கட்டோ, திருமலையோ,பத்ரியோ (விடுபட்டவர்களுமிருக்கலாம், தயை கூர்ந்து மன்னிக்கவும்), இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மிகச்சிறப்பாக எழுதும்போது நமது சந்தோஷத்தை ஏதோவொருவகையில் தெரியபடுத்தத்தானே வேண்டும். புதுமுகமெனக் களமிறங்கி, எல்லாவற்றையும் நேர்த்தியாக, சோர்வின்றி மடலில் வெளிப்படுத்த முனைந்த சுரேஷைக்கூட நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். இது எழுத்துக்கு நாம் கொடுக்கின்ற குறைந்த பட்ஷ வெகுமதி. இந்த வெகுமதிகளுக்காக அவர்கள் கையேந்தி நிற்பதில்லை. இது மறைத்துக் கொடுப்பதற்கு கையூட்டுமல்ல, உரிய நேரத்தில் வெளிப்படையாகக் கொடுப்பது நியாயமென்றே நினைக்கிறே…
பழங்கஞ்சி
==========

நேற்று இரவு விருமாண்டி பார்த்தேன். எல்லோரும் படம் பார்த்து, விமரிசனம் எழுதி, திட்டி, சிலாகித்து சொன்னது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போன நேரத்தில், நேற்று பார்க்கக் கிடைத்தும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று.

படம் பார்த்து முடித்த பின் மனசுள் தேங்கிய மிச்சங்களை நேராக இங்கே தந்திருக்கிறேன்.* பட ஆரம்பம் கொஞ்சம் பழைய பட நினைவுகளை கொண்டு வந்தது. பேய்க்காமனை காட்டியபோது, ' அட இவர்தானா அது என்று நினைத்துக் கொண்டேன். Typical தமிழ்நாட்டு போலீஸ் கண்முன் வந்து நிற்கிரார், அந்த டிரேட்மார்க் தொப்பையோடு.

* பசுபதி. டைரக்டராக கமல் பெரு வெற்றி பெற்றிருக்கும் பாத்திரம். கண்களில் நயவஞ்சகமும், வெறியையும் வைத்துக் கொண்டு ஒரு தென்மாவட்ட கிராமத் தேவனை அநாயாசமாகக் கொண்டு வந்திருக்கிறார்.பாதி நேரம் அவர் பசுபதி என்பதே மறந்து போகிறது

* கதை சொல்லியிருக்கும் உத்திக்காக , எடிட்டிங் அற்புதமாக கையாளப்பட்டிருக்கறது. பசுபதி சொல்லும்போது , எங்கு வெட்ட வேண்டுமோ அப்படி வெட்டி இருக்கிறார்கள். அதே கதையை கமல் சொல்லும்போது விட்ட காட்சிகளோடு , சொன்ன எல்லாவற்றையும் கோர்த்தால் போர் அடிக்குமே என்பதற்காக,…
முரட்டு இலக்கியம்
==============

குமுதம் நண்பர் பாபா வலைப்பதிவில் மரபுஇலக்கியம் யாஹூ குழுவின் விளம்பரம் பார்த்தேன். லிங்கைப் பிடித்து போய் நான்கு மடல்கள் வாசித்து விட்டு வந்தேன். மற்ற மடற்குழுமங்களில் வெண்பா வடித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மொத்தமாக செர்ந்து அங்கேயே வடித்துக் கொள்ளலாம் இனிமேல். கவிதை பிடிக்காது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்ட நம்ம பாரா சார் கூட ஒரு வெண்பா வடித்து உள்ளே நுழைந்திருந்தார். ஹரி அண்ணா மிரட்டி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.' அடேங்கப்பா..பெரியாளுக புழங்கும் இடம் ' என்று ஓடி வந்து விட்டேன்.

தமிழாசிரியர்களுடனும், தமிழ் இலக்கணத்துடனும் என்னுடைய உறவு பள்ளி நாட்களில் எல்லாம் இணக்கமாகவே இருந்திருக்கிறது. என்னுடைய தமிழ் விடைத்தாள்களில், ' அழகரசரே...கதை விட வேண்டாம். வினாவுக்குரிய விடையை மட்டும் எழுதினால் போதும் ' என்று என் தமிழாசிரியர்கள் பர்சனல் கமெண்ட்டோடு மார்க் போட்டிருப்பார்கள். தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பதனால் தான் இவ்வளவு காலம் கழித்தும் , தட்டச்சு கூட சரிவரத் தெரியாமல் தப்பும் தவறுமாக இணையத்தில் தமிழ் எழுதி கொண்டிரு…
பிரபலங்களின் அருகே
======================

சினிமாவிலும், டீ.வி யிலும் வரும் பிரபலங்களை நேரில் பார்ப்பது தமிழனுக்கு ஒரு பரவச அனுபவம். தான் பிரபலமாகி, புகழ் பெறாத ஆற்றாமையை , இப்படிப்பட்டவர்களிடம் ஆட்டோகிரா·ப் பெற்றாவது தீர்த்துக் கொள்வோம் என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு.

கல்லூரியில் படிக்கும்போது ரொம்ப அறிவுபூர்வமாக பேசும் என் நெருங்கிய நண்பன் ஒருவன் சூப்பர் ஸ்டாரைப் பார்க்கப் போய்விட்டு, அவரைப் பார்த்தவுடன் தன்னுள் நிகழ்ந்த பரவச உணர்ச்சியை கண்கள் மின்ன சொல்லிக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ரஜினி ராம்கியின் வலைப்பூவிலும் அவர் அத்தகையதொரு அனுபவத்தையே எழுதி இருக்கிறார்.

நான் முதன் முதலில் டைரக்டர் டி.ராஜேந்தரை என் தெருவில் பார்த்தேன். மாயவரத்தை ( என் சொந்த ஊர்) சேர்ந்த அவர் அவர் பிரபலமாவதற்கு முன், மகாதானத்தெரு வீட்டு திண்ணைகளில் எல்லாம் தாளம் தட்டி பாட்டு பாடிக் கொண்டே இருப்பாராம். கோதண்டபாணி என்ற ஜோசியர் வீட்டில் தன் டிரேட்மார்க் தாடியோடு உட்கார்ந்து கொண்டு " என்னடா...சினிமா டைரக்டரை பாக்க வந்தீங்களா" என்றார் கர கர குரலில் . டவுசர் வயசில் இருந்த நான் வெட்க…
ஹாலிவுட்டில் தங்கரு
================

மென்மையாக படம் எடுக்கத் தெரிந்தாலும், தன் திறமையால் குறுகிய காலத்திலேயே கூர்ந்து கவனிக்கப்படும் டைரக்டர் ஆனாலும், நம்ம தங்கர் பச்சான் பிரச்சினைக்குரிய தன் வாயினால் அவ்வப்போது அல்லலில் மாட்டிக் கொள்வதுண்டு. ' நான் பேச தேவையில்லை. என் படங்கள் பேசும் " என்று அநியாயத்திற்கு மெளனம் சாதிக்கும் மணிரட்னத்துக்கு தங்கர் அப்படியே ஆப்போசிட்.

ஹாலிவுட்டிலும் இம்மாதிரி ஆட்கள் இருக்கிறார்கள்.

போன வருஷம் ஆஸ்கார் அவார்டு விழாவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மைக்கேல் மூர் என்ற டைரக்டருக்கு வ்ருது கிடைத்தது. இராக போரின் விளைவால , அதில் இறக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையால், நாடெங்கும் பதட்டம் கிளம்பி இருந்த காலகட்டம் அது. பரிசு வாங்க வந்த அவர் மேடையிலேயே, Shame on you Bush . your time is up என்று தன் எதிர்ப்புக் குரலை பதிவு செய்து விட்டுச் சென்றார். அப்போதுதான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன்.
Bowling for coumbine என்ற அவருடைய படம், அமெரிக்காவின் வன்முறையை , துப்பாக்கிக் கலாசாரத்தை பற்றி உரத்துப் பேசி பரிசு பெற்றது. FAHRENFEIT 911 என்ற அவருடைய புது படம் செ…
என் மதிப்புக்குரிய பாலமுருகன்
=======================

என்னுடைய முந்தைய வலைப்பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறைய அடிபட்ட பெயர் இது. கோயமுத்தூரில் தற்போது இந்திய கலால்துறை உதவி கமிஷனராக இருக்கும் திரு.பாலமுருகன் அவர்களை முறையாக அறிமுகப்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன்.
நான் படித்த்து காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியற் கல்லூரியில் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சையிலிருந்த எனக்கு காய்ந்து கிடந்த செம்மண் பூமியான காரைக்குடி ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை. நான்காவது வருடம் படிப்பு முடித்து விட்டு வேலைக்காக காரைக்குடியை விட்டு வெளியே வரும்போது, காலேஜ் மெயின் பில்டிங் முன்னால் நடு ரோட்டில் கட்டாந்தரையில், அதே செம்மண் பூமியில் விழுந்து வணங்கி கண் கலங்கி விட்டு வந்தேன். அவ்வளவு மாற்றங்களை உண்டாக்கிய வருடங்கள் அவை.

பாலா எனக்கு ஒரு வருஷம் சீனியர். லால் பகதூர் சாஸ்திரி உயரம். பட்டை ஃப்ரேம் கண்ணாடி. புஸ்தி மீசை. குறும்பு கொப்பளிக்கும் கண்கள். அதிரடி குரல். எனக்கு அவர் அறிமுகமானது காலேஜ் டேலன்ட்ஸ் டே விழாவில். அவருக்கும் தமிழ் மீத…
சாப்பாட்டு வரிசையில்
================

இன்று மேஷ ராசி, அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு, பட்டினி என்று எழுதி இருக்கிறது போல.

மாதாந்திர அலுவலக மீட்டிங் நடக்கும்போது வரும் எங்கள் வைஸ் பிரசிடெண்டுக்கு மஸ்கா அடிக்க , வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நாங்கள், அந்தந்த நாட்டு உணவு வகைகள் கிடைக்கும் ரெஸ்டாரெண்டை தெரிவு செய்வது வழக்கம்.இந்த மாதம் மீட்டிங் இன்சார்ஜ் சோழிப் பல்லோடு சிரிக்கும் என் பிலிப்பினோ நண்பன் டானி பர்னாஹா.

இதற்கு முன் மெக்ஸிகன், தாய், இத்தாலி, மெடிட்டரேனியன், இந்தோனேசியன், சைனீஸ் உணவு வகைகளை ருசி பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இந்திய ரெஸ்டாரெண்டுகளுக்கு போவது ரொம்ப அபூர்வம். அப்படியே போனாலும், சுவை ஒரே மாதிரி இருப்பதாய் ஒரு எண்ணம். தவிரவும், பஃபே டைப் அயிட்டங்கள் ரீசைக்கிள் பண்ணப்பட்டு இன்னொரு ஹோட்டல் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.

விஷயத்துக்கு வருகிறேன்.

இன்று போன இடம் பிலிப்பினோ ரெஸ்டாரெண்ட். வட்ட வடிவ டேபிள் போட்டு நடுவில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு சக்கரம் இருந்தது. அதில் ஒரு பிளேட்டில் , 20 சுருட்டு மாதிரி சமாசாரங்களை வைத்திருந்தான். அது பசியூட்டி ( ஹி…
ருசி கண்ட பூனை
=============

நண்பர்கள் மன்னிக்கவும். முக்கியமான காரியமாக நேற்று அலைய வேண்டி இருந்ததால் ஏதும் எழுத முடியவில்லை. குளித்துமுடித்து, ஒன்பது மணிக்கு மேல், என் வலைப்பதிவை பார்த்தபோது ஏதோ இழந்தாற்போல இருந்தது நிஜம்.

எழுத ஆரம்பித்த இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே, என்னுள் படரும் நிம்மதியை, லேசாக எனக்குள் படரும் தெளிவை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார் போலிருக்கிறது. லேசாக சீட்டி அடித்துக் கொண்டே, பூந்தூறல் அடிக்கும் மலைப்பாதையில், மனசுக்குப் பிடித்தவளின் சூடிதார் துப்பட்டாவை பிடுங்கி இடுப்பில் கட்டிக் கொண்டே அவளுடன் நடப்பது போலிருக்கிறது

'தமிழ் இத்தனை காலம் எனக்கு சோறு போட்டது. தமிழுக்கு நான் இப்போது சோறு போடுகிறேன் " என்று கவிப்பேரரசு ஒருமுறை சொன்னாராம். அவரைப் பார்த்து எனக்கு பரிதாபமாக சிரிக்கத் தோன்றுகிறது. தமிழை வைத்து பாட்டெழுதிப் பிழைத்து விட்டு, கையில் காசு சேர்ந்தவுடன் இப்படிச் சொல்லுவது அவரின் அதீத நம்பிக்கையா அல்லது அறியாமையா என்று தெரியவில்லை. ஆனால் துளியூண்டு பொடியன் , எனக்குத் தோன்றும் இந்த விடுதலை உணர்வு அவருக்கும் …
தேடிச்சோறு நிதந்தின்று
==================

வெகுநாட்கள் கழித்து விகடன் வெப்சைட் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் விஜயகாந்தை கொண்டுவந்து அடுத்த பரபரப்புக்கு அடிகோலியிருக்கிறது
ரஜினிகாந்த் திமுக-பாமக கூட்டணிக்கு எதிராக போவதைப் பார்த்து , கருணாநிதி விஜயகாந்தை அரசியலுக்கு இழுக்கிறாராம். மக்கள் சப்போர்ட் தனக்கு இருக்கிறதா , இல்லையா என்று நாடி பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கேப்டன், ஜெயிக்கும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து களமிறங்குவாராம்.

சிரிப்பதா , அழுவதா என்றே தெரியவில்லை. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் இளைஞன் முதல் சீனில் க்ளாப் அடிக்கும்போது "கடவுளே...நல்லா நடிச்சு, பணம் சம்பாதிச்சி, காரும் பங்களாவும் வாங்கணும் ' என்று வேண்டிக்கொள்வான். இப்போதெல்லாம் ' கடவுளே...நடிச்சி, தமில்நாடு முதலமைச்சரா ஆகணும் ' என்று வேண்டிக்கொள்வான் போலிருக்கிறது. சரி...அவனுக்குத்தான் ஆவலாதி என்றால், வெட்கங் கெட்ட மீடியாக்களும் ( என்னயும் சேர்த்துதான்.....) இந்த மாதிரி கொம்பு சீவிவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

விஜயகாந…

ஸ்நேகத்துக்கு .......

===============


சுற்றி எல்லாம் சுபம்

இவ்வுலகத்துக் காலம்
என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது

நடுச்சாமம் முழுதும்
எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு
ஈன்றிருக்கிறது

வழியெங்கும்
அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற
சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது

கஷாயம் போலிருக்கும்
முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க
எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்
காதற்பாடல்களை ஒலிக்கிறது

நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்
சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன
அங்கு
கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி
சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.

பலசாதிச் சிறுவர்கள்
தோள் மேல் கை போட்டுக்கொண்டு
தபாலில்லாத ட்ரவுசருடன்
பள்ளி செல்கிறார்கள்

சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்

சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய
கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது
மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்
இரவு கவிகிறது

எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

-oOo-

ஹரன் பிரசன்னா இந்தக் கவிதையை எழுதிவிட்டு ,திருநெல்வேலி செல்கிறார் தன் திருமணத்துக்கு.

இந்த மாதிரி மனநிலயில் கல்யாணம் செய்து கொள்வது ஒரு வரம்.

கவிதை மனசும், கற்பூர புத்தியும், உயர்ந்த ரஸன…
செஸ்னா - கால்யா - நெக்ஸஸ் - கரீம்நகர்
=================================

மும்பையில் ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். மும்பையின் அவசர வாழ்க்கை, பணிக்கு தினமும் நான் செல்ல வேண்டி இருக்கும் தூரம், மும்பையின் நாகரீகமோகம் நிரம்பிய வாழ்க்கை, 90 ரூபாய்க்கு அபார்ஷன் செய்யப்படும் என்று கூவிக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் எல்லாம் அவர்களை சஞ்சலப்படுத்த ' மெட்ராஸூக்கு சீக்கிரம் வந்து சேரு ' என்று அன்பாக மிரட்டி விட்டு , ஒரு மழை நாள் இரவில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்பிப் போனார்கள்.

அவர்களிடம் சொன்னபடி அடுத்த இரண்டு மாதத்தில் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்ற சென்னை கம்பெனியில் சேர்ந்தேன். கம்பெனியைப் பற்றிய அறிமுகமே மிரட்டலாக இருந்தது. முப்பதாயிரத்த்துக்கும், இருபதாயிரத்துக்கும் கணிணிகள் மலிவுவிலையில் கிடைத்த அந்தக் காலத்திலேயே நெக்ஸஸ் அறுபது/எழுபதாயிரத்துக்கு விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவைக்காகவும், டெக்னாலஜி உதவிகளுக்காகவும் அந்த விலை கொடுத்தும் கம்ப்யூட்டர் வாங்க ஏராளமான வாடிக…

பிள்ளைக்கு

===========

வாழ நினைத்த வாழ்க்கை பற்றி
நினைக்கையில்
பொங்கி வந்த துக்கம்
மறந்து
உன் சிரிப்பினில் நான்
உலகம் மறப்பினும்

தன் வயதில் தனக்கெட்டா
வசதியும் செல்வமும்
உனக்கு வேண்டும் என்று
என்ணி எண்ணி
தூக்கம் விலக்கினும்

படிக்கும் வயதில்
குடும்ப சூழலால்
தானிழந்த வேடிக்கையும்
விளையாட்டும்
நீயிழக்கலாகாதென்று
என் சுபாவம் மாற்றி
உப்போடு அப்பாய்
உணர்ந்து கலப்பினும்

கண்களை லேசாய் நீ
சிமிட்டினாலே
தூசியோ தும்போவென
பதைத்திடினும்
உனக்காக என் வாழ்க்கையயே
மாற்றி வைத்து
இழந்தவளை உன்னில்
கண்டிடினும்

பணிநேரப் பிரிவில்
உன் அன்னை
உனைப் பிரிந்து
வெளிச்செல்ல
என்னுடன்
பேசி பழகி
சிரித்து களித்து
மகிழ்ந்து நீ
ஆடித்திரிந்த அந்த
மூண்று மணி நேரமும்
என்னை
அம்மா அம்மா வென்றே
அழைத்தாயே...

நான் தாயுமானவானா..??
இல்லை
தந்தை என்ற பொறுப்பையே
இதுநாள்வரை
தட்டிக் கழித்திருந்தவனா..??

தெரிந்திதை செய்தனையோ...
அல்லது
என் மனசாட்சி விழித்ததுவோ..

சொல்லப்பா
என் ஸ்வாமிநாதா..


இன்றைய கவிதை உபயம்

என் செல்வன். ஸ்ரீமான். சூர்யா சுந்தர்ராஜன்

கார் காலக் கதைகள்
====================

அமெரிக்காவில் ஆடு கூட கார் ஓட்டும் என்று சுஜாதா எங்கோ எழுதி இருக்கிறதாய் ஞாபகம்.

அது ஒருவகையில் உண்மை. நம்ம ஊர் கார்களைப் போல் இங்கு க்ளட்ச் கிடையாது. ஆட்டோ கியர் சிஸ்டம் வேறு. பார்க் மோட், ரிவர்ஸ் மோட் , டிரைவ் மோட் என்று ஹாண்டிலை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். கார்களும் விலைக்கேற்ப, பாதுகாப்பு வசதிகளுக்கு ஏற்ப, உயர் ரகம்.

கார் ஒட்ட தேவர் ஃப்லிம்ஸ் ஆடு சிரமப்படாது. ஆனால் கார் லைசன்ஸ் வாங்க, என்னைப் போல விளையாட்டுப் பிள்ளைகள் பட்ட பாடு இருக்கிறதே....அதை எழுத ப்ளாக்கர் போதாது. மரணவேதனை. இந்தியாவில் முறையாக கற்றுக்கொண்டு நான் அவ்வளவாக கார் ஓட்டியதில்லை. கார் டிரைவிங் க்ளாஸ் போய்விட்டு, முதல்நாளே அந்தாள் பண்ணின அலட்டல் தாங்க முடியாமல் ஓடி வந்து விட்டேன்.கார் மட்டுமல்ல,எந்த வாகனத்தையும் (சைக்கிளைத் தவிர) நான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. முதல் முறை ஓட்ட ஆரம்பித்ததே சொந்தக் காரில்தான். முதல் கியர் போட்டுவிட்டு க்ளட்சை விடத்தெரியாமல் விட, ஒரு துள்ளு துள்ளி கார் பெட்ரோல் வாசமடிக்க கார் நின்று போனது. போராடி, அதை ஒருவழியாக தோது பன்ணி …
கோவில் - ( சிம்பு சினிமா விமரிசனம் அல்ல)
===================================

கும்பகோணம் கோயில்களுக்கு பேர் போனது என்றாலும் , பொதுவாகவே பழைய தஞ்சை மாவட்டத்து ஊர்கள் எல்லாமே பாடல் பெற்ற ஸ்தலங்கள் தான். சீர்காழி சட்டையப்பர், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி, திருவாரூர் கமலாலயம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி, தஞ்சை பிரகதீஸ்வரர் , வைணவத் தலங்களில் ( 108 திருப்பதிகளில்) பெரும்பான்மை, நவக்கிரக ஸ்தலங்கள், அட்ட வீரட்டாணங்கள் என்று எங்கெங்கு காணினும் கோயில்கள் தான். எனவே சின்ன வயசில் அப்பாவுடன் போனது பாதி நேரம் கோயில்களுக்குத்தான்.

ஆனாலும், அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம் ( துலா…
வயசுப்பசங்க சமாசாரம் - பகுதி 2
==================================

முதல் வெளிநாட்டுப் பயணம்.

மே 3, 1999 மதியம் சென்னை விமானநிலையத்தில் வீட்டாருக்கு விடை கொடுத்து 'ஏர்-இந்தியா' பிடித்து மாலை சிங்கப்பூர் 'சாங்கி' யில் இறங்கி, 'பொடாங் பாசிர்' மெய்யப்பன் செட்டியார் தெருவில் உள்ள வீட்டில் தங்குகிறேன்.மூன்று நாட்கள் கழித்து தமிழ்முரசு பத்திரிக்கை வரிவிளம்பரங்களை படிக்கையில், மசாஜ் பார்லருக்கு ·போன் செய்து, "கட்டணம் என்ன என்று கேட்டேன்" என்று சொன்னால் நம்புவீர்களா..??

செய்தேன்.

சிங்கப்பூர் என்றதுமே எனக்கு 'ப்ரியா' வில் தேங்காய் சீனிவாசன் மசாஜ் பார்லரில் அடிக்கும் கூத்துக்கள்தான் நியாபகம் வந்தன. ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த என் கல்லூரி நண்பர்கள் இந்த மாதிரி தீரச்செயல்கள் எல்லாம் புரிந்து 'கதை' சொல்லி இருந்தார்கள். கெட்ட காரியம் பண்ணும்போது மட்டும் கூட்டணியே கூடாது என்ற தர்மத்திற்கேற்ப அந்த நாளுக்காக காத்திருந்தேன். சிஙகப்பூரில் வேறு பகுதிகளில் எல்லாம் தாய்லாந்து பாணி மசாஜ் இருந்தாலும் ( அதுதான் ஒரிஜினல் மசாஜ் !!) , சிட்டி ஹால் ஸ்டேஷனை ஒட்டி தம…
எரிச்சல் தாங்கலை சாமி....
====================

விருமாண்டி, தென்றல், ஆட்டோகிராஃப் என்று பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் ' கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற புதுப்படமும் சேர்ந்திருக்கிறது. சாக்ரமண்டோ தேசி ஸ்டோர்களில் இந்தப் படங்களின் அடர்தகடு வந்து சேருவதற்குள் எனக்கு சதாபிஷேகம் பண்ணி விடுவார்கள் போலிருக்கிறது.
க.மெ.படவேண்டும் டைரக்டர் ஜானகி விஸ்வநாதன் ஏற்கனவே 'குட்டி' என்ற படம் எடுத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். குட்டி படம் குழந்தைத் தொழிலாளர் கொடுமையை மனம் கனக்கும் வண்ணம் சொல்லிச் சென்ற படம். காட்சியமைப்புகள் சற்றே செயற்கையாக இருந்தாலும், கனிவும் கருணையும் மிக்க டைரக்டரின் மனசுக்காக , அது அந்தப் படத்தில் வெளிப்பட்ட விதத்துக்காக, எனக்குப் பிடித்தது. நாசர், தன் மகளோடு அந்தப் படத்தில் பாடும் ஒரு பாடல் கொஞ்ச நாளைக்கு மனசை என்னமோ செய்து கொண்டிருந்தது.

இந்தப் படத்தின் கருவும் சீரியஸ் ஆன 'தேவதாசி' விஷயத்தை ஒட்டியதுதான். பல கதைகளில், பல திரைப்படங்களில் எல்லோரும் தொட்டதுதான். ஜானகிராமனின் அம்மிணி, பாலகுமாரனின் 'அகல்யாவில்' சிவசுவின் அம்மா, வாழ்வே மா…
நேசமுடன் வெங்கடேஷ்
====================

சிஃபி வெங்கடேஷ் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் யோசிப்பவரல்ல. எப்போதும் அவரிடம் இருந்து ஏதாவது அறிவிப்பு மடல்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய விஷயங்களைக் கூட வித்தியாசமாக செய்து எல்லோரையும் வியக்க வைப்பதில் அவர் "இணையப் பார்த்திபன்".

அவரிடம் தனிமடல்கள் அனுப்பினால் மறந்து விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வது மட்டுமல்ல, ஆலோசனையும் வழங்கி, கடைசியில் 'நேசமுடன் வெங்கடேஷ்' என்று கையெழுத்திடுவார். என் நண்பரகள் வட்டாரத்தில் வார்த்தையாடும் போது கூட 'நேமுடன்' வெங்கடேஷ் மெயில் போட்டாருய்யா என்று சொல்வதே வழக்கம்.

போன வார இறுதியில் 'நேசமுடன்' மடலிதழ் வழியே எல்லோருடனும் பேசப் போவதாக அவர் அறிவிப்பு இட்டதும் ' ஆஹா..சரியான பெயர் ' என்று நானே உரக்கச் சொல்லிக் கொண்டேன். இன்னமும் சப்ஸ்க்ரைப் செய்யவில்லை. விரைவில் செய்ய வேண்டும். ஆனால், மடலாடற்குழுக்களில் எழுதுபவர், வலைப்பூ வைத்திருப்பவர், ஏற்கனவே வெப்சைட் வைத்திருப்பவர், அதையெல்லாம் விடுத்து, அவரே அறிவிப்பில் சொல்லி இருக்கும்படி ரிவர்ஸில் ஏன் போக வேண்டும் என்று …

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
===============

பக்தி

மாலை கோவில் போக வேண்டும்
மறக்காமல் அர்ச்சனை செய்ய.

அரளியில்லா கதம்பம் வேண்டும்
அரளிபட்டால் அரிக்கும் இவளுக்கு.

கனிந்த வாழைப்பழம் வேண்டும்
காலையில் இரண்டு நாளாய்க்
கழிவறை போகவில்லை.

முத்திய தேங்காய் நல்லது
திரும்பும் ஒற்றை மூடி
தோசைக்குச் சட்டினியாகும்.

அய்யருக்குச் சில்லரை தேவை
ஐந்தாய்த் தட்டில் போட்டால்
மீதி தரமாட்டார்.

உண்டியலுக்குத் தேவையில்லை
போனமுறை சில்லரையின்றி
முழுரூபாய் போட்டான் உதவாக்கரை.

செருப்பை மறக்காமல்
பிரித்து விட வேண்டும்.


என்னதான் எழுதி இருக்கிறார் என்று கனடா வெங்கட்டின் தளத்தில் இன்று மேய்ந்தேன். கண்ணில் பட்ட இரண்டு கவிதைகளில், எனக்குப் பிடித்தது இதுதான் என்று நான் இங்கே எடுத்த்துப் போட்டால், என் அறிவின் எல்லைகளும், எதை நோக்கி என் மனம் போகிறது என்பதும் அன்பர்களுக்கு ஒருவாறு விளங்கும் என்பதே என் நோக்கம்.

என்னுடைய கருத்துக்கள் இவ் விஷயத்தில் மாறலாம். வலைப்பூக்களைப் பற்றியும் இப்படித்தான் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். கிண்டல் அடித்தேன். இப்போது முழு வேகத்தில் வலைப்பதிந்து கொண்டிருக்கிறேன். வளர விருப்பம் உள்ளவர்களுக்கு எதுவும், எக்காலத்தில…
இந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா
=====================================================

கனடா வெங்கட் தன் வலைப்பதிவிலும், ராயர் காப்பி கிளப்பிலும் என் மூக்கை ஏகத்துக்கு சேதாரப்படுத்தி இருக்கிறார். என்மீது கோபப்பட அவருக்கு உரிமை இருப்பது போலவே அவருக்கு பதில் சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. என் பதிலினால் அவருக்கு கோபம் ஏற்பட்டால் அதற்கு நான் வருந்துவதை தவிர ஏதும் செய்ய இயலாது.

அவர் பெரிய விஞ்ஞானி. படிக்கும் காலத்திலிருந்தே ஏக காலத்தில் ஏகப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய ஆர்வமும், அதீத சக்தியும் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு சராசரியின் வலைப்பதிவில் எழுதி இருக்கக்கூடிய விஷயங்களை முழுதாக, சரியாக படிக்காமல், வேக வேகமாக வார்த்தைகளை வீசி இருக்கிறார்.

புரட்சி வெடிக்கிறது..?? என்று தலைப்பிட்டால் இளப்பமா..?? எள்ளலா..?? இது எந்த ஊரில்..? நான் எழுதும்போது எனக்குத் தோணாத விஷயம், படிக்கும்போது ஒருவருக்குத் தோன்றி இருந்தால் அது அவர் பார்வைக் கோளாறு என்றுதான் நினைக்க முடியும். அந்தக் கேள்விக்குறிகள் என்னுடைய ஐயத்தை, சந்தேகத்தை, மட்டுமே வெளிப்படுத்துவதாக நினைத்து நான் எழுதி…
சாக்ரமண்டோ - என் புத்தக அலமாரிக்கு ஒரு விசிட்
=====================================


திடீரென்று கிடைத்த இந்த லீவில், புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தலாம் என்று இறங்கினேன். ' என்னுதா இதெல்லாம்..எப்ப வாங்கினேன் ' என்று மூளையக் கசக்கி யோசித்தாலும் நினைவுக்கே வராதபடிக்கு கீழ்க்கண்ட புத்த்கங்கள் அனைத்தும் காணக் கிடைத்த்ன.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற்போல உள்ள அந்தப் பட்டியல் இதோ :

1. நிஜங்கள் - டாக்டர் ருத்ரன்
2. சோ என்கிற இரட்டை நாக்குப் பார்ப்பனர் - கலி.பூங்குன்றன்
3. மெளனமே காதலாக - பாலகுமாரன்
4. தமிழர் தலைவர் தந்தை பெரியார் - சாமி.சிதம்பரனார்
5. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - பாகம் 2/3 - தொகுப்பு - விட்டல் ராவ்
6 .நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - தொகுப்பு - சிவசங்கரி
7. கடற்கரைக் கால்கள் - பூமா. ஈஸ்வரமூர்த்தி
8. பசுவய்யா 107 கவிதைகள்
9. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
10. தீ பரவட்டும் - சி.என்.அண்ணாதுரை
11. மரபுகளின் அருவி - பாபா
12. அபிதா - லா.ச.ரா
13. 406 சதுர அடிகள் - அழகிய சிங்கர்
14 .இறகுகளும் பாறைகளும் - மாலன்
15. யாருடனு…
மூன்று வருடங்களுக்குப் பிறகு.......
===============================

மேனேஜனிடம் சொல்லிக் கொள்ளாமல், முன்னறிவிப்பு இல்லாமல், எந்த முகாந்திரமும் இல்லாமல் 4 மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு சட்ட விரோதமாக லீவ் எடுத்தே ஆக வேண்டும். இதை கடந்த 10 வருடங்களாக ஒரு தவம் மாதிரி செய்து கொண்டிருக்கிறேன்.

இன்று அம் மாதிரி இரு நாள்.

லேட்டாக எழுந்து கழிவறைக்குள் தினசரி பிரவத்துக்கு செல்லும் போது , அவசரமாக புத்தக அலமாரியை பீராய்ந்ததில், 'நிஜங்கள்' என்ற புத்தகம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கும் முன் சென்னை மவுண்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸில் , அலமாரி அலமாரியாக பொறுக்கிக் கொண்டிருந்தபோது வாங்கிய ஒரு ஒல்லி புத்தகம்.

ருத்ரனை நீங்கள் எல்லாம் காலை நேர ராஜ் டீவில் பார்த்திருக்கலாம். விளம்பர தாத்தாக்கள் போல நேர்த்தி தாடியாக இல்லாமல், ஏராளமாக நிஜ தாடி வைத்துக்கொண்டு, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு, தீட்சண்யமான கண்களோடு காலை நேரத்துக்கு சம்பந்தம் இல்லாமல் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பார். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பது விகடன் நண்பர் ம.கா.சிவஞானம் மூலம் பிறகு தெரிந்தது.

இன்று அந்தப் புத்தக…
திசைகள் - ஏப்ரல்
============

திசைகள் இதழ் நல்ல கனமாக வ்ந்திருக்கிறது. சூடாகவும் இருக்கிறது.

சேவியர் கவிதை 'ஊர்ப்பேச்சை ' எள்ளல் செய்கிறது. நம்பியின் கவிதை இணையத்தமிழை வம்புக்கு இழுக்கிறது.இரண்டுமே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் ரகம்.

எம்.கே.குமார் வலைப்பதிவிலும், மடற்குழுவிலும் இட்ட ஆட்டோகிராஃப் விமர்சனததை திசைகளிலும் மாலன் பதிப்பித்து இருக்கிறார். நம்பியின் கவிதையும் அவ்விதமே என்று கொசப்பேட்டை குப்ஸாமி சொல்கிறார். திசைகளுக்காகவே பிரத்தியேகமாக எழுதப்பட்ட படைப்புகளை பிரசுரிப்பது நலம்.

வாசகர் கடிதம் பகுதியில்தான் காரம் ஜாஸ்தி.

தன் படைப்புக்கு பின்னூட்டமாய் வந்த ஜீவமுரளியின் கடிதத்தை, சந்திரவதனா பிரசுரித்து, அதற்கு தன் பதிலையும் அளித்துள்ளார். அவருடைய கதையை நான் படிக்கவில்லை ஆயினும், அவர் கடித்திலிருந்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க் முடிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இந்தியர்கள் சற்று இளக்காரமாக்த்தான் பார்க்கிறார்கள் என்று நானும் கருதுகிறேன். வளர்ப்பு சார்ந்தும், படிப்பு சார்ந்தும்தான் குணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நாம் என்னதான் தத்துவம் பேசினால…
துறை சார்ந்த பதிவுகள் - புரட்சி வெடிக்கிறது...???
======================================

எங்கே ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சுந்தரவடிவேல், வெங்கட், பிரகாஷ் என்று எல்லாரும் துறை சார்ந்த வலைப்பதிவுகளைக் கொண்டுவந்து, அந்தந்தத் துறை விற்பன்னர்களை தமிழிலேயே வெளுத்துக்கட்ட வைத்து விடுவது என்று இறங்கி இருக்கிறார்கள்.

என்னை Networking பற்றி தமிழில் எழுதச் சொன்னால், போங்கப்பா என்று சொல்லி விடுவேன்.

காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை பற்றி சாயந்திரமும் என்னால் வலைப்பதிவில் எழுத முடியாது. அது என் மேனேஜனுக்கு நான் ரிப்போர்ட் கொடுப்பது போல ஆகிவிடும். மேலும் என் திருப்திக்காக, நான் எழுதிப் பழகுவதற்காக, என் பணி தவிர்த்த ஜன்னல் வழியே நான் எட்டிப் பார்ப்பதற்காக வைத்திருக்கும் என் பதிவை , உலக நன்மைக்காக பயன்படுத்தும் சக்தி என் எழுத்துக்கு இப்போது இல்லை.அந்த உத்தேசமும் எனக்கு இல்லை.அதை எழுத்தில் ஏற்கனவே பல பரிட்சார்த்த முயற்சிகள் பண்ணி ஜெயித்தவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

ரங்கோலி போடுபவர்கள் ரங்கோலி போடட்டும். கோலத்தில் திரிகோணமிதி சொல்லித் தர விரும்புபவர்கள் அதைப் பண்ணட்…
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் கெய்க்வாட்...?
=======================================

"அண்ணாமலை" யில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். தன்னுடைய நிலத்தை அடைய விரும்பும் லோக்கல் எம்.எல்.ஏ வின் வீட்டு ஹாலில் மாடுகளை கட்டி விட்டு, வியர்த்த முகத்தோடு ' நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டு இருக்கேன். தேவையில்லாம என் வழியில வந்தீங்கன்னா, நான் சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் " என்று அவர் பேசப் பேச மாநில ஆட்சியின் மீது வெறுப்புற்றிருந்த மக்கள் தியேட்டரில் ஆவேசமாக விசிலடித்துக் கைதட்ட , படமும் ஓட்டமாக ஓடியது. அன்று ஆரம்பித்தது ரஜனியின் அரசியல் ஆசை....இல்லை..இல்லை..அரசியல் வசனங்கள்.

எதைக்கண்டாலும் பயந்து கொண்டு, ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, எதிரியை வேகமாக வளரவிடும் பலவீனம் நமது அரசியல்வாதிகளுக்கு "ரிக்ஷாக்காரன்' காலத்திலிருந்தே இருந்து வருகிறது.அப்போதைய முதல்வரும் விதி விலக்கா என்ன..?? சும்மா இருந்த சங்கை,அவரும் ஊதிக்கெடுத்தார் தன் பேச்சினால்...!. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆசை இருந்ததை தனது பத்திரிக்கையில் எழுதி, அவருடைய ஆரம…

வழியனுப்பல்

=============

வாடிக் கிடக்கிறது முகம்
கவளம் கவளமாய் விழுங்கிய நீ
ஸ்பூன் ஸ்பூனாக கஞ்சி
குடிக்கிறாய்
உரத்து பேசி ஊர்மடக்கியவன்
மூச்சு விடவே திணறுகிறாய்
மலமும் நீரும் பிரிவது
உனக்குத் தெரிகிறரதோ இல்லையோ
எனக்குத் தெரிகிறது
அதையெல்லாம்
நான் துடைப்பது மட்டும்
உன் விசும்பலில்
எனக்குத் தெரிகிறது
வெடித்து அழாமல்
இன்னமும்
அழுத்தி வைத்துத்தான்
உள்ளுக்குள் கலைந்து போகிறாய்
ஊர் ஊராய் சுற்றியாகி விட்டது.
வைத்தியம் எல்லாம்
பார்த்தாகி விட்டது
குலதெய்வ பூஜையும்
சாமியார் விபூதியும்
வீடு கொள்ளா
மூணு பந்தி சனமும்
நீ பிழைக்க வேண்டி
இல்லை
என்பது தெரியுமா
உனக்கு..?

நாலு வால்வும் வலது
சிறுநீரகமும்
உதவாது போயிற்றாம்.

சிரமப்படாமல்
கம்பீரமாய் செத்துப் போ
என் பிரிய அப்பாவே..

உன் சாயலில்
உன்னிடம்
நான்
கேட்ட என் அவனை
நானே தேடுவேன் இனி
இரா.முருகன் அவர்களுக்கு ஒரு பாமரனின் பகிரங்கக் கடிதம்
===============================================


" ஞானபீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் படித்தேன்.

அனந்தமூர்த்திக்கு முன்னால் இந்த மாதிரித் தப்புத் தப்பாக சிந்தித்து அரசியல் அரங்கில் நுழைந்ததுமே க்ளீன் போல்ட் ஆன கன்னட எழுத்தாளர்கள் உண்டு. எண்பதுகளில், அனந்தமூர்த்தி போலவே ஞானபீட விருது பெற்ற இன்னொரு பிரசித்தமான கன்னட எழுத்தாளர் சிவராம கராந்த் உத்தர கன்னடத் தொகுதி ஒன்றில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். கய்கா அணுமின்நிலையத்தை எதிர்த்து இவர் ஆவேசத்தோடு பேசிப் பிரசாரம் செய்ததைக் கேட்க மேடையிலேயே ஆட்கள் இல்லை. இன்னொரு பிரசித்தமான கன்னடக் கவிஞரான பேராசிரியர் கோபாலகிருஷ்ண அடிகாவும் மாநிலச் சட்டசபைக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜாமீன் இழந்தார்.

துரதிருஷ்ட வசமாக, அனந்தமூர்த்திக்கு அறிவுரை சொல்லித் தடுத்தாட்கொள்ள இந்த இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனாலும் என்ன? இவர்கள் சார்பில் மத்தளராயன் தரும் ஆலோசனை இதோ -

அனந்…
ஜூனியர் விகடன் நினைவுகள்
======================

சமீபத்தில் அமீரக ஷேக் ஆசிஃப் மீரான் எழுதிய ஒரு மடலில் , தான் ரமேஷ்பிரபாவை, விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்ட கூட்டத்தில் எடக்கு மடக்காக மடக்கியதை எழுதி இருந்தார். அட , இவரும் முன்னாள் ஜூ.வி நிருபர்தானா என்று சந்தோஷப்பட்டேன்.

மடற்குழுவிலும், பத்திரிக்கைத் துறையிலும், சினிமா டைட்டில்களிலும், விகடன் ஆசிரியர் குழு பட்டியலிலும்
மாணவப்பத்திரிக்கையாளர்களாக இருந்து , எழுத்துத் துறையிலேயே தொடர்கிறவர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும் - பிழைத்துக்கொண்டார்களே என்று. இன்னொரு பக்கம் வருத்தமாக இருக்கும் - நாம் விட்டுவிட்டோமே என்று.

மற்ற கல்லூரிகளில் எப்படியோ, எங்கள் கல்லூரியில் ஜூ.வி பத்திரிக்கையாளர் என்பது ஒரு கவுரவம். நான் படித்த காரைக்குடி அழகப்பச்செட்டியார் கல்லூரி பசும்பொன் மாவட்டத்தில் உள்ளது என்பதால், அந்த மாவட்டத்தை ரெப்ரசண்ட் செய்ய விகடனால எடுக்கப்படும் மாணவர் அதே மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து விண்ணப்பம் செய்திருக்கும் மாணவர்களை முதல்கட்ட எழுத்துத்தேர்வுகளில் வெற்றி கொண்ட பிற்கே இ…
தேர்தல் ஜூரம்
===========

தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் அடிப்பது போல் வலைப்பூக்களிலும் அங்கங்கே அடித்துக் கொண்டிருக்கிறது. கருத்துக்கணிப்பு எடுக்கிறார்கள். தொகுதியிலுள்ள வேட்பாளர்களின் தராதரத்தைப் பற்றி அலசுகிறார்கள். ரஜினியின் வாய்ஸ் எடுபடுமா என்று பேசுகிறார்கள்.

எல்லாம் சரிதான்...

ஆனால், தமிழ்நாட்டில் மாநில ஆட்சி மீது நிலவும் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்கிறார்கள்.யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மக்கள் கருணாநிதி என்று சொன்னால் ' ந்மக்கு குறுகிய மனப்பான்மை வந்துவிட்டது. ' என்று வெங்கடேஷ் எழுதி இருக்கிறார். பின்னூட்டம் அளித்திருக்கும் 'படித்த' பெரும்புள்ளிகளும் நம் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு விசனப்பட்டிருக்கிறார்கள்

'சோனியா வேண்டுமா..வாஜ்பாய் வேண்டுமா' என்பதுதான் கேள்வியாய் இருந்திருக்க வேண்டும் என்றால், அந்தக் கேள்வி கேட்க காங்கிரஸூம், பா.ஜ.க வும் இந்தியாவெங்கும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித் தனியாக நின்று தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். எப்போது அது நடக்கவில்லையோ, எப்போது அவர்கள் மாநிலக்கட்சிகளின் கூட்டணியை நாடினா…
த பார்ரா....ஜப்பான் கம்ப்யூட்டர்
==============================

In Japan, they have replaced the impersonal and unhelpful Microsoft error messages with Haiku poetry messages. Haiku poetry has strict construction rules - each poem has only 17 syllables; 5 syllables in the first line, 7 in the second and 5 in the third. They are used to communicate a timeless message, often achieving a wistful, yearning and powerful insight through extreme brevity.Here are 15 actual error messages from Japan that are the essence of
Zen:

-------------------------------------------

Your file was so big.

It might be very useful.

But now it is gone.

---------------------------------

Cannot be located, ----------

The Web site you seek but

Countless more exist.

--------------------------------------------

Chaos reigns within.

Reflect, repent, and reboot.

Order shall return.

--------------------------------------------

Program aborting:

Close all that you have worked on.

You ask far too much…