Skip to main content

Posts

Showing posts from November, 2004

இருள்நீக்கி சுப்ரமணிய சேவை

கருணாநிதி செய்யாததை ஜெ செய்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டேன். பெரியார் செய்ய முடியாததை இருள்நீக்கி சுப்ரமணியன் (எ) ஜெயேந்திரர் செய்து விடுவார் போலிருக்கிறது. இன்று காலை உஷாவைப் பற்றியும், அனுராதா ரமணணைப் பற்றியும், ஸ்வர்ணமால்யாவைப் பற்றியும், இன்னமும் சந்தேக லிஸ்டில் இருக்கும் பல அழகிகளைப் பற்றியும் என் மராட்டிய நண்பரிடம் பிரஸ்தாபித்த போது, " அட...விஸ்வாமித்ரரே மேனகையிடம் மயங்கலையா..?? இதற்கெல்லாம் புராணத்திலேயே முன்னுதாரணங்கள் இருக்கிறதே" என்றார் குசும்பாக சிரித்தவாறே.

"வென்றால் அண்ணா வழி. தோற்றால் பெரியார் வழி" என்பார் கருணாநிதி அடிக்கடி. சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கத்தாமல், பிராமணர்களின் ஓட்டுகளுக்காக சங்கரமடத்துக்கு பரிதாபப்படுவது போல நடித்து ஓட்டுப் பொறுக்கி வேலை பார்க்காமல், இதைப் போல ஜெ எடுத்திருக்கும் உருப்படியான நடவடிக்கைகளையும் குறை சொல்லாமல் கட்சி நடவடிக்கைகளையும், தேர்தல் ஜாலங்களையும் உருப்படியான ஆட்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, ரிடையராவது நல்லது.

இல்லாவிட்டால் மக்கள் 2005 தேர்தலில் அனுப்பத்தான் போகிறார்கள்.


வெகுநாள் கழித்து.....

அப்படி ஒன்றும் பெரிய ஊர்சுற்றல் இல்லை கடந்த நான்கு நாட்களில். ஆயினும் குடாப்பகுதி வரை செல்ல வேண்டி வந்தது. சென்னையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் B1 விசாவில் வேலைவிஷயமாக வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, வசமாக Blade போட்டுவிட்டு, வந்ததற்கு Mysteryspot மற்றும் Santacruz Beach பக்கமாக ஒதுங்கிவிட்டு, வரும் வழியில் இரவில் CA-17 மலைப்பாதை வழியாக அவரை பயமுறுத்திக்கொண்டேகாரை ஒட்டிவந்து, தமிழ் வழக்கப்படி நண்பனின் வீட்டில் மாயவரத்தானால் "பாடல்" பெற்று வரும் சன் டீவி பார்க்க நேர்ந்தது. ( ஹப்பா...ஹப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய வாக்கியம்...)சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து…

உடன்பிறப்பே...மகிழ்ச்சி...

அமெரிக்காவில் நியூயார்க் மாநகரிலே வருடா வருடம் நன்றியறிவித்தல் தினத்தன்று ஒரு பேரணி நடக்கும். அண்ணாவும், நானும், பெரியாரும் நடாத்திய பேரணி போலல்லாமல், குழந்தைகள் மனத்தை கொள்ளை கொள்ளும் விதமாக நையாண்டி முக நாயகர்களும், நளின உடை நாரீமணிகளும் , அலங்கார ஊர்திகளும், வண்ண வண்ண பலூன்களும் அணிவகுத்து வரும். இரண்டே முக்கால் மைல் நீளமாய் வந்த அந்த பேரணியிலே, இன்று "ஷககலக்க பேபி,...ஷக்கலக்க பேபி " என்று தமிழன் இசையமைத்த பாட்டுக்கு மங்கையரும், காளையரும் இந்திய முறையில் நடனமாடி, உடல் குலுக்கி, ஆடிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழன் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடாமல், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பாடியது நயவஞ்சக நெஞ்சம் கொண்ட வடவரின் சதி என்றாலும், தமிழன் வரும் காலங்களில் அதையும் முறியடிப்பான் என்று கூறி , உன்னை நான் வாழ்த்துகிறேன் இந்த நாளில்.

- மு.க

( சொன்ன ஆள்தான் நம்ம ரீலு. நியூஸ் நெஜம்தானுங்க...வசுந்தரா தாஸ் வந்திருக்காங்க என்று எல்லே வில்லோன் சொன்னதுக்கும், இதுக்கும் ஏதும் லிங்க் உண்டுங்களா..?? ஹி..ஹி..)
என்ன தேடறீங்க..??

Thanksgiving Dinner ல் கட்டாயம் இடம்பெறும் ஐட்டங்கள் வரிசையில் வான்கோழிக்கும், பூசணி கேக்கிற்கும், சோளரொட்டிக்கும் பெரிய இடம் உண்டு. பொங்கல் அன்று பானையைப் போல், தீபாவளியன்று பட்டாசைப் போல், காரடையான் நோன்புக்கு கயிறு போல் ( அடை போல்..??!!) , இங்கே இன்று வான்கோழி.

இப்போ படம் புரிகிறதா... ?? டின்னர் டேபிளுக்கு போக பயந்து, வேறு டேபிள் லாம்ப் ஆக கோழி.

ஸார் கீழே தேடிக் கொண்டிருக்கிறார்.

Thanksgiving Holidays

அடுத்த நான்கு நாட்களுக்கு அமெரிக்காவில் விடுமுறை. இன்னொரு நீள்வாரயிறுதி. இன்னொரு Sale மேளா. இன்னொரு பரபரப்பு நெடுஞ்சாலைத் தினங்கள். வான்கோழியோடு விருந்துகள்.

இந்த விடுமுறையின் அர்த்தம் தெரிய வேணுமாயின்,

இங்கே க்ளிக் குங்கள்.

Happy Thanksgiving Holidays...!!!

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிம…

எல்லே ராம் - யார்..??

தட்ஸ்டமில்.காம் என்கிற தமிழ் வலைப்பக்கத்தில் நைட் எஃபக்ட்டில் ஏஞ்சல் ராமச்சந்திரன் என்று(ம்) அழைக்கப்படும் எல்லே ராமின் பேட்டிக்(?)கட்டுரை.
அன்றும், இன்றும் - அவரே -

ச்சே..காலம்தான் எத்தனை குரூரமானது - ஆள் இப்படி மாறிட்டாரே...

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வே…

லேட்டா அடிச்ச ஷாக்

வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.

ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!

'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட…

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

அட..அட..அட...

கலர் என்னமா மாறீட்டுது...

( முதல்வரோட பச்சை கலர், திருமதி ரஜினி புடைவையில்....அதைச் சொன்னேன்)

எப்படி கட்டுப்படியாகிறது...???

காரைக்குடி காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். சுப்ரமணியபுரம் சுகுமார் பில்டிங் அருகே உள்ள ஒரு ஷாப் கடையில் ( ஹி... ஹி..நடு செண்டர், க்யூ வரிசை மாதிரி) ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். 15 ரூபாய். வீட்டுக்கு கொண்டு வந்து இங்க் போட்டுவிட்டு, சட்டைபையில் செருகிக் கொண்டு காலேஜ் போனேன். போய் இறங்கியவுடன் பார்த்தால், பாக்கெட் எல்லாம் இங்க். என்னடா இது என்று டென்ஷனாகிப்போய், சாயங்காலம் மறுபடியும் அதே கடைக்குப் போய், " என்னங்க இது..?? நேத்துதான் உங்க கடையில பேனா வாங்கிப்போனேன். இப்படி ஒழுகுதே. இப்படி ஏமாத்தலாமா நீங்க..? " என்று நியாயம் கேட்க, அந்த வீணாப்போன கடைக்காரன் ஒரு முன்னாள் ரெளடியாம். கடையை விட்டு வெளியே வந்து ஓங்கி ஒரு அறை விட்டான். " என்னடா சொல்ற...?? ஏமாத்திட்டேன்னா..?? ஆமாம்..இப்ப என்னங்கிற..என்ன வேணா பண்ணிக்கோ.." என்றான் பாதகன். நேராக போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, பிரச்சினையாக்கிய பின், ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, புது பேனா கொடுத்தான். பின்னாளில் என் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியபோது கூட " என்னா மச்சி ..இப்படி விட்டுட்ட..ஒரு வா…

மரத்தடி தந்த யோசனை

மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.

இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைக…

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நி…

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பண…

என்னமோ நடக்குது

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நடந்திருக்கும் கைது சம்பவம். அதே சமயத்தில் எந்த அளவுக்கு இது போகப்போகிறது...என்பதும் புரியவில்லை. ஹிந்து மதம் என்றால் அது சங்கரமடம் என்று நினைப்பவர்களின் நம்பிக்கையில் பெரிய அடி விழுந்திருக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான். ஹிந்து மதத்திற்கும், கடவுள்களுக்கும், சுலோகங்களுக்கும், ஆசார அனுஷ்டானங்களை பேணுவதற்கும் நாங்கள்தான் அத்தாரிடி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் ஜெயேந்திரரை போற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் "அவா" என்கிற பொதுபெயரில் அருண் சொன்ன வலைப்பதிவர் அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். மற்றபடி,
வகுப்பு வித்தியாசம் இல்லாமல், யோசிக்கத் தெரிந்த எல்லாருமே காலம் காலமாக ஜெயேந்திரரின் நடவடிக்கைக்களை கண்டித்தே வந்திருக்கிறோம்.
திருவாளர் சோ கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் சாமியாரை இந்த வழக்கில் கோர்க்க வலுவான சாட்சியங்கள் கிடைத்த பிறகே அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.

ஹிந்து மதத்தை சாமியார்களின் பிடியிலிருந்தும், மடங்களின் பிடியிலிருந்தும் விடுவிக்க காலமும் நேரமும் கூடி வந்திருப்பது போல தோன்றுகிறது. இறை வழிபாட்டின…

சென்னையில் அபார்ட்மெண்ட் தேவை

சென்னை அமிஞ்சிக்கரை/அண்ணாநகர் பகுதியில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு Single Bedroom Apartment தேவை. சிஸ்கோவில் பணிபுரியும் என் நண்பன் பணி விஷயமாக சென்னை வருகிறான். தனது குடும்பத்துடன் அங்கே தங்க உத்தேசித்துள்ளான். திசம்பர் முதல் தேதியிலிருந்து கிடைத்தால் வசதியாக இருக்கும். வேறு வழிகளிலும் முயற்சி செய்யப் போகிறேன்.இருந்தாலும் இங்கே போட்டு வைக்கலாம் என்றொரு எண்ணம். அபார்ட்மெண்ட் மட்டுமல்ல, அதை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ஸிகள்/ புரோக்கர்கள் இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

சூட் போட்ட நரகாசுரன்

நேத்து நவன் பகவதியோட வலைப்பூவில் Sorry சொல்லும் நூற்றுக்கணக்கான ஃபோட்டோக்களை பார்த்ததும், எனக்கு எலெக்ஷன் ரிசல்டைப் பற்றி ல்ண்டன் டெய்லி மிர்ரர் போட்ட கவர் தான் நினைவுக்கு வந்தது. அது கீழே :விஷயம் அதோடு முடியவில்லை. இன்று காலை NPR சானலில் கேட்ட பல தகவல்கள் அண்ணனின் பிரதாபங்கள் இன்னமும் எத்தனை தூரம் போகப் போகிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருந்தன. தன்னை Conservative என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்ட, அவர்கள் எடுக்கும் நிலைகளுக்காக பாடுபடுகிற ஒரு அதிபர் இரண்டாம் முறை பலத்த செல்வாக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், என்னென்ன செய்யப்போகிறார் என்று பழுத்த கன்சர்வேட்டிவ் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். வயிற்றுக்குள் ஆட்டோ ஓடியது.

பிறகு பொருளாதார வல்லுநர் ஒருவரிடம் அமெரிக்காவின் வரலாறு காணாத 425 பிலியன் டாலர்கள் பற்றாக்குறை பற்றிக் கேட்கப்பட்டது. மேலும் பேபிபூமர்களின்( Baby Boomers) முதல் அலை ஓய்வுபெறும் போது, பற்றாக்குறை ஆகக்கூடிய ஃபெடரல் அரசாங்கத்தின் கையிருப்பும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும்..?? அத்தோடு புஷ் அரசாங்கம் கொடுக்கும் வரி விலக்கும் கஜானாவை காலி செய்து விடும…

வாங்க பாய்...

Toastmaster, எம்.ஜி.ஆர், கஸல், இந்திப்படங்கள், கானா, அமீரகவாழ்க்கை, "தினம் ஒரு கவிதை" கவிதைகள், மார்க்க சிந்தனை, திர்லக்கண்ணி, யாத்கார் பாயா, மரத்தடி, ராயர் காப்பி க்ளப், OTIS போன்றதொரு ரகளையான கலவைக்கு சொந்தக்காரர் அபுல் கலாம் ஆசாத். ரா.கா.கி யில் என்னுடைய அந்த நாள் சகா. மடலாடற்குழுக்களையும், கவிதைகளையும் தொடர்ந்து வாசிப்போருக்கு அறிமுகமான பெயர். வயதில் அனுபவத்தில் பெரியவர்களிடத்தில் அவர் காட்டும் மரியாதையை தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு "அது பசப்பலோ..? " என்ற் சந்தேகம் கூட சில சமயங்களில் வரும். ஆனால் கொஞ்ச நாள் பாய் சாஹேபை தொடர்ந்து கவனிப்பவர்க்கு அது அப்படி தெரியாது. பாய் எழுதிய கானாக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. வாத்தியார் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கானாக்களுக்கும், வெண்பாவுக்கும் சொந்தக்காரர். எழுத்துகளில் தெரியும் மனித நேயத்துக்காகவும், பழசை மறக்காத பண்புக்காகவும், இந்தியனாக தன்னை உணரும் முஸ்லிமாக இருப்பதாலும். நாப்பது வயசு என்பதெ பிரதிபலிக்காத துள்ளல் எழுத்துக்காகவும் ஆசாத் பாயை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த நதியும் இங்கே வந்து கலந்…

ஸ்பெஷல்

கன்னம் மட்டுமல்ல, எல்லாமே குண்டு குண்டா இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. கீச்சுக் குரலில் பேசுவாள். நடந்து போவதே உருண்டு உருண்டு போவது மாதிரிதான் இருக்கும். வயசுக்கு ஏத்த மாதிரியும், அதுக்கு மெலும் வாளிப்பா இருந்தாலும், மூஞ்சு மட்டும் குழந்தை மாதிரி இருக்கும். நான் காலேஜில் கடைசி வருஷம் படிக்கும்போது, முதல் வருஷ மாணவியா வந்து சேந்தா. மெட்ராஸ் பொண்ணு.

காலெஜில படிக்கும்போது இந்த மெட்ராஸ்கார பசங்க பண்ற அழும்பு தாங்க முடியாது. எல்லாரும் தயங்கி தயங்கி, பொண்ணுக கிட்ட பேச ட்ரை பண்ணும்போது, இவனுங்க சர்வ சாதாரணமா போய் கடலை போட்டுட்டு வருவானுக. கேட்டா இதெல்லாம் பெரிய விஷயமாங்கிற மாதிரி அல்ப ஜந்துவை பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. ஊருக்கு போவும்போது பஸ்/ட்ரெயின்ல சேந்து புக் பண்றதென்ன...வீக் எண்டுல சேந்து ட்ரீட் போறதென்னனு ஒரே அலம்பல்தான்...

நாலாவது வருஷம ஏதோ எக்ஸாம் எழுதறதுக்கு நான் மெட்ராஸ் போக வேண்டி இருந்தது. பாத்தா நம்ம பொண்ணும் பஸ்ல, ரெண்டு சீட்டு முன்னாடி அவ ஃப்ரெண்ட்ஸோட வந்திருக்கிறா. பேர்தான் ஃபைனல் இயர் பையனே ஒழிய, மனசுக்குள்ள இன்னமும் பால் ஐஸ் பொடியந்தான் நான். யார் வந்தா நமக்கென்னன்னு, நான…

வாசகன் படுத்தும் பாடு

காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். ஆபிசிலும் வெட்டி முறிக்கிறார் போல வேலை ஒன்றுமில்லை. மடலாடற்குழுக்களில் இருந்து, கவனிக்க மறந்த நல்ல பதிவுகள் வரை, ஒரே படிப்புதான். ராயர் காப்பி க்ளப் களைகட்டி இருக்கிறது. கொலட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து இரா.மு வரிசையாக இட்டுக் கொண்டு இருக்கிறார். தியோ வான்காவை பற்றி ஒரு திரி கிளம்பி வழகமான பாட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பொடிச்சியின் பதிவை முழுக்க படித்து முடித்தேன். அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த வலைப்பதிவிலும் சரக்குக்கு குறைச்சலில்லை. தொடர்ந்து படிக்கலாமெண்டு ...ஸாரி..படிக்கலாமென்று ஒரு உத்தேசம். ரா.சுப்புலட்சுமி முக்காட்டை விலக்கிய நேரத்தில் இந்த வீரலச்சுமி.....!! பாரா அடித்த கமெண்டில் இருந்த /- குறியை பதிவெங்கும் தேடிப்பார்த்தேன். அது, அந்தக் கமெண்டுக்கு பிறகு அழிக்கப்பட்டிருந்தால், அது அவரோ...? :-). இருக்கலாம். யார் கண்டது...!!

மக்கள் இப்படி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, நாமளும் என்னத்தையாவது எழுதணும் என்று தோன்றவே இல்லை. உள்ளுக்குள் இருக்கும் வாசகன் " பொத்திக்கிட்டு பேசாம படி முதல்ல " என்…

craiglist.org

தலைப்பில் உள்ள தளம் உங்களுக்குத் தெரிந்தால், இங்கே நேரத்தை வீணாக்காதீர்கள். இது உங்களுக்கல்ல....

இணையத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற classifieds தளம் இது. சான்ஃப்ரான்சிஸ்கோவில் வசிக்கும் க்ரெய்க் என்கிற ஒரு டெக்னோ ஆசாமியின் தளம். அமெரிக்க டெக்னிக்கல் ஆசாமிகளில் ரெண்டு வகை...!! ரெண்டே வகை. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நோட்பேட் உபயோகிக்கக்கூட தெரியாமல், இந்திய/சீன மென்பொருளாளர்களை மேய்த்துக் கொண்டு, மீட்டிங் போய் வந்து, வெகேஷன்களில் நடுவே ஆபீசுக்கு வருபவர்கள் ஒரு வகை என்றால், இரண்டாவது பஸ் மண்டை வகை. பயங்கர சீரியஸ் ஆசாமிகள் இவர்கள். தனக்குப் பிடித்த சப்ஜெக்ட் இதுதான் என இனம் கண்டுகொண்டு, அதன்மேல் சரியான வெறியோடு அலைபவர்கள்.
அதைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்குத் தெரியாது. நமது இந்திய ஆசாமிகளோ, பலபட்டறைகள். இன்னது என்றில்லாமல், நாய் வாயை வைத்த மாதிரி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தேவைக்கேற்றார் போல சட்டை உரித்துக் கொள்வார்கள். இன்று D2K , PB என்றால் நாளை VB , நாளன்னைக்கு java, c# என்று survival க்காக நிறம் மாறும் நிரலாளர்கள்…

அடுத்த கட்டம்

ராமதாஸ¤க்கு இத்தனை அரசியல் சாதுரியம் வந்ததற்கான காரணங்கள் விளங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மறதியையும், உணர்ச்சி வேகத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறுவதில் நம்ம அண்ணன், மோடி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறார். ஆதி காலத்தில் இருந்து, அவருடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்கின்றவர்களுக்கு இது தெளிவாகப் புரியும்.

வெறும் ஜாதிக்கட்சியாக ஆரம்பித்த வன்னியர் சங்கம், இன்று பாட்டாளி மக்கள் கட்சியாகி விசுவரூபம் எடுத்து நிற்பதற்கு, அவருடைய ஜாதிப்பாசம் மட்டும் காரணமல்ல. பதவி மீதும், பதவி தவிர்த்து கிடைக்கும் அதிகாரம் மீதும், பணபலம் மீதும் அவருக்கு இருக்கும் வெறியே என்பது வெளிப்படை. அதிமுக ஆட்சியில், எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டங்களில்தான், முதல் முறையாக வன்னியர் சங்கத்தின் போராட்ட அராஜகம் ஆரம்பித்தது. சரியாக செயல்படாத ஒரு அரசாங்கம், கனிவாக நடந்து கொண்டதால், அது அந்த ஜாதிக்கட்சிக்கு வெற்றியாக முடிந்தது. அங்கு ஆரம்பித்த அவர் பயணம், இன்னமும் கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது.

பின்னர் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியது கூட, ஜாதி ரீதியாக மட்டும் செயல்பட்டால், எல்லா மக்கள…

யாசர் அராஃபத்

யாசர் அராஃபத் அவர்களின் உடல்நிலை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ஏன் ஒரு மனிதரின் உடல்நிலை குறித்து இப்படிப்பட்ட புனைவுகள் கிளம்ப வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

முதலாவது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர் இறந்தே போனால் கூட அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தன் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடலாம். அராஃபத் இறந்து விட்டதனாலேயோ, நோய்வாய்ப்பட்டு விட்டதாலேயோ,அந்த இயக்கம் விழுந்து விடும் என்று நினைப்பது,தனிமனித கவர்ச்சிகளால் கட்சி ஆரம்பித்து வளர்க்கும் நம் தமிழக ரோஸ்பவுடர் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் கட்சி சிதறி விடும் என்று நினைப்பதற்கு ஒப்பாகும். அவர்கள்தான் இப்படி என்றால், இஸ்ரேல் அதற்கும் ஒரு படி மேல். Arafat is clinically dead என்று அவர்கள் தொலைக்காட்சியிலேயே அறிவித்து விட்டார்களாம். இந்த செய்தியில் அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு.

காலை NPR சானலில், வெற்றி பெற்ற அமெரிக்க முதலாளி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். எலெக்ஷன் வெற்றி மயக்கம் தீரவில்லை. "அராஃபத் மரணத்தை பற்றி உங்கள் ரியாக்ஷன் என்ன ..? எனற கே…

கேடுகாலம்

விளக்கெண்ணையை தேய்த்துக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பார்கள். அதுதான் கெர்ரிக்கும் நடந்திருக்கிறது. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கித் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் சமயத்திலே, இந்த லட்சணத்தில் ஓட்டளித்த மக்களைப் பற்றியே சந்தேகமும் வெறுப்பும் வருகிறது.நேற்றுகூட அலுவலகத்தில் என் குழுவில் உள்ள அமெரிக்க தாத்தா ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். புஷ்ஷினுடைய யோக்கியதை என்ன..?? எந்தக் காரணத்திற்காக அவர் மீது அமெரிக்கா நம்பிக்கை இழந்திருக்கிறது என்று ஒரு அரை மணி நேரம் விளக்கமாக பேசினார். பொதுவாக வயதானவர்கள் குடியரசுக்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்று அமெரிக்காவில் சொல்வார்கள். அந்த வயதான சமூகமே புஷ்ஷை விமரிசிக்கிறது என்று சந்தோஷப்பட்ட வேளையில்தான் பிகேஎஸ்ஸின் drudgereport.com எக்ஸிட் போல் கெர்ரிக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. சந்தோஷம் அதிகமாக, வீட்டுக்கு போய் டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

ப்ளோரிடா முதல் அடி. அது விழுந்தவுடன் விஸ்கான்சின், நியூஹாம்ஷையர் போன்ற மாநில நிலவரங்களும் திருப்தியாக இல்லாத நிலையில் ஓஹையோவை எதிர்பார்க்க ஆரம்பித்த நான் கொஞ்சம் ( சோகத்தில்) சரக்கு விட்டுக்கொண்டு த…