Skip to main content

Posts

Showing posts from 2011

பிஷிங்

வளர்ந்த குழந்தை போலத் தான் இருந்தான் பிரசாத். நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. நெற்றியில் குங்குமத் தீற்றல். வெள்ளைச் சிரிப்பு. முழுக்கை சட்டை. அதன் நிறத்துக்கு ஒவ்வாத ஒரு பேண்ட். எல்லாரையும் ஜி..ஜி என்று விளித்துக் கொண்டு, Campion பள்ளியில் தன்னுடன் படிதத பையன்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு காரைக்குடி கல்லூரி ஹாஸ்டலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

பால்குடி மறக்காத சுடுகுஞ்சுகளே கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்ததும் வால் முளைத்த குரங்கு குட்டிகளாகி விடுகிற அதிசயத்தில் இது எங்களுக்கு தீராத ஆச்சரியம்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அந்த அதிசயம் பழக்கமாகி விடவே “ ப்ரசாத்துன்னா இப்படித்தான் மச்சி” என்று சொல்லிவிட்டு எங்கள் துரத்தல்களில் பிசியானோம்.

எல்லா வளர்சிதை மாற்றங்களையும் தோற்கடித்துவிட்டு, லேப்களில், டூர்களில், கேண்டீன்களில், கல்லூரி கலைவிழாக்களில், இரவு நேர சென்னைப் பயணங்களில், குறும்பு மிக்க வகுப்புத் தோழிகளின் அலப்பரையில் பிரசாத் நடத்தும் பால்யத் திருவிளையாடலகள் எங்கள் காதுகளுக்கு வந்தபடியே இருந்தன. ஆனால் எல்லோருக்கும் இனியனாக, படிப்புகளில் துடியாக, வம்புகளில் சிக்காதவனாக, நடிகை சரோஜாதேவி ஸ்டைலில் …

கருவின் கவிதை

ஆச்சரியமாக இருக்கிறது...
எப்படி ஆரம்பித்தது வாழ்க்கை.?
குவளையில் பிறந்து
ஆருரில்
கையெழுத்து பத்திரிக்கை நடத்தி
தமிழ்க்காதல் தொடங்கியது
திராவிடம் நோக்கி திரும்ப
வெண்தாடி வேந்தரையும்
வெள்ளைமனத் துரையையும்
தலைவர்களாய் வரித்து
தமிழும், சமுதாயமும்
அரசியல் நோக்கி நகர்த்த
தொடங்கிய பயணம்..
எத்தனை போராட்டங்கள்
எத்தனை ஊர்வலங்கள்
எத்தனை பாராட்டுரை எத்தனை ஏற்புரை
எத்தனை பட்டங்கள் பதவிகள் மாலைகள் பொன்னாடைகள் மகிழ் விழாக்கள்
எததனை தேர்தல்கள்
எததனை துரோகங்கள்
எத்தனை எத்தர்கள்
அவர்களிடம் கற்றறிந்த பாடங்கள்
எததனை தொண்டர்கள்
குழி பறிக்கும் சீடர்கள்
எத்தனை நடிகர்கள்
கடந்து சென்ற தென்றல்கள்
வேர்விட்ட உறவுகள்...விழுதுகள்..
எல்லாம் தாண்டி .......
தகப்பன் என்ற பெயர் மட்டும் மிச்சமின்று

இந்த தேர்தல் முடிவு
எனக்கு மாலையா...? மலர்வளையமா???

ஆனந்த விகடனின் சேவை

ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு.. ஆனந்த விகடனுக்கு? ஒரேயடியாக விஜயகாந்தை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு இருக்கிறது? மறைமுகமாக அம்மாவுக்கு ஆனந்தக் கும்மி வேறு?

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை அடித்ததாக பிரச்சினை கிளம்பி, அதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை இவர்கள் இந்த வார கட்டுரையில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சி இந்த க்ளிப்பிங்ஸில் எக்ஸ்ட்ரா சத்தம் சேர்த்து, லூப்பில் போட்டு ஆகாத்தியம் செய்கிறார்கள் என்றால், ஆ.வி இதை இல்லவே இல்லை என்று தாண்டவமாடி இருக்கிறது . இவர்களுக்கும் மக்கள் டீவிக்கும் என்ன வித்தியாசம்?

ராமதாஸை, கேப்டன் கேள்விகளாக கேட்டால் விகடனுக்கு குதூகலம் கொப்பளிக்கிறது. இதே ராமதாஸ் கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் மு.க வை கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தபோது அவரை நாயகனாக்கி விளையாடிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு சாணக்கியனோ விஜயகாந்தின் அடிதடி மேட்டரை இதை “ஒரு மேட்டரே இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

மு.கவின் குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்கள் கண்களுக்கு சசிகலாவும், சுதீஷும்…

Kizakku Vaasal - Song by Sundar Pasupathy