Friday, April 01, 2011

ஆனந்த விகடனின் சேவை


ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு.. ஆனந்த விகடனுக்கு? ஒரேயடியாக விஜயகாந்தை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு இருக்கிறது? மறைமுகமாக அம்மாவுக்கு ஆனந்தக் கும்மி வேறு?


தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை அடித்ததாக பிரச்சினை கிளம்பி, அதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை இவர்கள் இந்த வார கட்டுரையில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சி இந்த க்ளிப்பிங்ஸில் எக்ஸ்ட்ரா சத்தம் சேர்த்து, லூப்பில் போட்டு ஆகாத்தியம் செய்கிறார்கள் என்றால், ஆ.வி இதை இல்லவே இல்லை என்று தாண்டவமாடி இருக்கிறது . இவர்களுக்கும் மக்கள் டீவிக்கும் என்ன வித்தியாசம்?


ராமதாஸை, கேப்டன் கேள்விகளாக கேட்டால் விகடனுக்கு குதூகலம் கொப்பளிக்கிறது. இதே ராமதாஸ் கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் மு.க வை கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தபோது அவரை நாயகனாக்கி விளையாடிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு சாணக்கியனோ விஜயகாந்தின் அடிதடி மேட்டரை இதை “ஒரு மேட்டரே இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.


மு.கவின் குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்கள் கண்களுக்கு சசிகலாவும், சுதீஷும், பிரேமலதாவும், அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களாக தெரிகிறார்கள் போலும்.


மு.க இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தினால், புலி ஆதரவு, சட்டம் ஒழுங்கு மோசம் என்று நடனம் ஆடுவார்கள். பத்மநாபா கொலைக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த ஆள்தான் காரணம் என்று கமிஷன் கமிஷனாக இழுப்பார்கள். சர்வதேச அமுத்தல்களுக்கு பயந்து இந்திய அரசே இலங்கை விவகாரத்தில் விழி பிதுங்கி நின்று விலை போனபோது, தமிழக அரசு என்னவோ அமெரிக்க அரசாங்கத்தின் அங்கம்போல அதன் செயலற்ற தன்மைக்கு குறை கூறியதோடு நில்லாமல் தமிழினத்தையே ஏமாற்றி விட்டதாக கூக்குரல் இட்டார்கள்.


எம்.ஜி.ஆர் இலவசங்களை அறிவித்தால் அவரை பொன்மனச் செம்மல் என்பார்கள். கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மு.க அதை மாற்றினால் மு.க மக்களை பிச்சைக்காரர் ஆக்குகிறார் என்று நாக்கில் நரம்பில்லாமல் புளுகுவார்கள். சொல்லிவிட்டு அம்மையார் அதையே காப்பி அடித்து தன் தேர்தல் அறிக்கையில் போடுவதையும் ராஜ தந்திரம் என்று மெச்சி உச்சிமோர்ந்து ஆனந்த பாஷ்பம் பெருக்குவார்கள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், எல்லாக் கால கட்டங்களிலும் மு.கவின் எதிரணியில் இருப்பவர்களை பத்திரிக்கைகள் என்ன காரணத்துக்காகவோ போஷாக்குடன் வளர்த்து வந்திருக்கின்றன. காரணம் அவரவர்களுக்கு தெரியும்.


தமிழக அரசியலில் ஊழல் கறை படியாத அரசியல்வாதிகள் வெகு சொற்பம். சமூகத்தில் குறிப்பிட்ட அளவு மாறுதல்களை கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் பணிகள் மூலம் கொண்டு வந்ததற்காக கருணாநிதியின் ஊழல்களை அவர் தனக்காக வசூலித்துக் கொண்ட சர்வீஸ் சார்ஜ் ஆகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் இருந்ததன் அடையாளம் அவர் இல்லாமல் போகும்போதுதான் தெரியப் போகிறது. அவர் மறைவுக்குப் பின தமிழர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும். அவருடைய கடைசி தேர்தலை கேவலபடுத்தி விட்டால் பழையனூர் நீலியின் புத்தம்புதிய காட்சிகள் மறுபடியும் தமிழக அரசியலில் அரங்கேறும்.

17 comments:

 1. தங்களின் பார்வை நன்று.
  அன்புடன்,
  அமுதவன்.

  ReplyDelete
 2. நன்றி அமுதவன். எத்த்னை பேர் இந்தக் கட்டுரைக்காக என்னை போட்டுத் தாக்கப் போகிறார்களோ :-)

  ReplyDelete
 3. //சர்வதேச அமுத்தல்களுக்கு பயந்து இந்திய அரசே இலங்கை விவகாரத்தில் விழி பிதுங்கி நின்று விலை போனபோது,
  //
  என்ன சொல்ல வருகிறீர்கள்? சற்று விளக்கவும்! உலக நாடுகள், கடைசி கட்டத்தில் அப்பாவி தமிழ் சிவிலியன்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டது உண்மை தானே! இந்தியாவுக்கு ஒரு 'அமுத்தலும்' இருந்ததாகத் தெரியவில்லை! இந்தியா ஜஸ்ட் கண்டு கொள்ளாமல், நாடகம் ஆடிக் கொண்டிருந்ததும் உண்மை தானே!

  ReplyDelete
 4. நமது பள்ளிப்பருவங்களில் - இந்துநேசன், விருந்து, சரோஜாதேவி போன்ற புத்தகங்களை ஆனந்த விகடன் குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் உள்ளே வைத்து படிப்பதுதான் வழக்கம்..
  அதனாலோ என்னவோ, இன்று ஆனந்த விகடன் ஆபாச விகடனாகவும், குமுதம் குலுக்கல் நடிகைகளின் படங்கள் போடும் பத்திரிக்கைகளாகவும் ஆகிவிட்டன.
  விஜயகாந்த் அரசியல்கட்சி தொடங்கியவுடன் அவருடன் ஊர் ஊராக அலைந்து வாக்கு சேகரித்தவன்தான் இந்த ஆபாச விகடன்.
  ஒவ்வொரு நடிகனையும் பெண்கள் கல்லூரிக்கு அழைத்து சென்றும், நடிகைளின் பயோடேட்டாவை இரண்டு மூன்று பக்கங்கள் போட்டும் மாமா வேலை பார்ப்பவன் சினிமாக்காரனுக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பான் என்று எத்ரிப்பற்பது நமது அறிவீனம்.
  இது போன்ற ஆபாசகுப்பை புத்தகங்களை பொருட்படுத்தாமல் இருந்தாலே முக்கால்வாசி சீர்திருத்தம் வந்துவிடும்..

  ReplyDelete
 5. நமது பள்ளிப்பருவங்களில் - இந்துநேசன், விருந்து, சரோஜாதேவி போன்ற புத்தகங்களை ஆனந்த விகடன் குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் உள்ளே வைத்து படிப்பதுதான் வழக்கம்..
  அதனாலோ என்னவோ, இன்று ஆனந்த விகடன் ஆபாச விகடனாகவும், குமுதம் குலுக்கல் நடிகைகளின் படங்கள் போடும் பத்திரிக்கைகளாகவும் ஆகிவிட்டன.
  விஜயகாந்த் அரசியல்கட்சி தொடங்கியவுடன் அவருடன் ஊர் ஊராக அலைந்து வாக்கு சேகரித்தவன்தான் இந்த ஆபாச விகடன்.
  ஒவ்வொரு நடிகனையும் பெண்கள் கல்லூரிக்கு அழைத்து சென்றும், நடிகைளின் பயோடேட்டாவை இரண்டு மூன்று பக்கங்கள் போட்டும் மாமா வேலை பார்ப்பவன் சினிமாக்காரனுக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பான் என்று எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
  இது போன்ற ஆபாசகுப்பை புத்தகங்களை பொருட்படுத்தாமல் இருந்தாலே முக்கால்வாசி சீர்திருத்தம் வந்துவிடும்..

  ReplyDelete
 6. அடடே பாலா.. சீனாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்காகவா பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழ்லில் அதிகபட்சம் மு.கவின் எதிர்ப்பு ஆட்சித் துறப்பாக மட்டுமே இருந்திருக்க முடியும்.அவர் ஆட்சியை துறந்திருந்தாலோ, அல்லது நடுவண் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றிருந்தாலோ, வன்முறையும், அவலமும், உயிர்த்தியாகமும் நிரம்பிய 33 வருடத்து போரில் வெற்றி கிடைத்திருக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை.

  மர்மயோகி - நன்றி

  ReplyDelete
 7. உண்மைத்தாண். ஆனந்தவிகடன் நாடுநிலை தவறி வெகுநாள் ஆகிவிட்டது.அதன் ஆசிரியர் இதை கவனிக்கிறாரா,இல்லையா.

  ReplyDelete
 8. முருகன், அவரை “கவனிக்கிறார்கள் “ நன்றி

  ReplyDelete
 9. நன்றி அத்திரி.

  ReplyDelete
 10. சுந்தர்

  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்தை வாசித்ததில் மகிழ்ச்சி....

  தமிழக பத்திரிக்கைகள் என்று கலைஞரை பாராட்டி இருக்கிறது?

  கலைஞரின் அரிசி திட்டம், மலிவு விலை உழவர் சந்தை, சமச்சீர் கல்வி, குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்வி இலவசம், வீடுமனை திட்டம், 108 சேவை, மருத்துவ காப்பீட்டு வசதி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இப்படி அருமையான திட்டங்களை எந்த பத்திரிக்கையாவது பாராட்டி எழுதி இருக்கிறதா?

  கலைஞர் ஆட்சி மீண்டும் வரும் என்று நம்புவோம்!

  நன்றி
  மயிலாடுதுறை சிவா..

  ReplyDelete
 11. நன்றி சிவா. //கலைஞர் ஆட்சி மீண்டும் வரும் என்று நம்புவோம் // அவருக்கே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. பேச்சில் லேசாக விரக்தி தெரிகிறது. சாவதற்குள் இலவசங்களை அள்ளி விட்டு அவரும் பொன்மனச்செம்மலாகலாமா என்று பார்த்தார். அவர் என்ன எம்.ஜீ.ஆரா? :-)

  ReplyDelete
 12. அன்புள்ள சுந்தர்,

  ஜெ-வின் முதல் இன்னிங்ஸ் ஆட்சி மு.க.வை உத்தமராக்கியது ; மு.க முதல்வரானார்.
  மு.க-வின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்சி ஜெ.வை மகா உத்தமியாகவே ஆக்கிவிட்டது.

  'சோ'ணக்கியர் வழக்கம்போல 'நெருப்பை அணைக்க சாக்கடை' என்ற பழைய பல்லவி பாடுவார் போல. (சாக்கடை என்று சொல்லிவிட ரத்தம் இடம் கொடுக்குமா என்பது வேறு விஷயம்)

  இடையில் ஜானிவாக்கர்காந்த் வேறு கொடூர காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்.

  மக்களுக்கேத்த தலைமைதானே அமையும் !!

  பாவம் ... தமிழ்நாடு ரொம்ம்ம்ம்ம்ப பாவம்.

  அன்புடன்
  முத்து

  ReplyDelete
 13. //ஜானிவாக்கர்காந்த்// ஹி ஹி...

  நன்றி முத்து.

  ReplyDelete
 14. //சீனாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்காகவா பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
  //
  You know I am not talking here about Pak or China. Most of the European countries and even USA were working for stopping the war at that stage. India conveniently used the excuse of Pak/China to keep quiet when it had known a blood bath was imminent & thats the fact!

  ReplyDelete
 15. The pendulum has swung far enough on one side .. it has to come back .. that doesn't necessarily mean that the other side is the correct side ..but eventually it would balance out ..

  ReplyDelete
 16. ரஜினி தமிழக அரசியலில் அவரது தாக்கம் செய்து இருக்கிறான். திட்டங்கள் சூப்பர்ஸ்டார்களின் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...