இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். என்னுடைய பழைய பதிவு ஒன்றில் அகஸ்மாத்தாக நான் அமெரிக்க "ஆல் பவர்ஃபுல்" அம்மையார் காண்டலீசா
ரைஸைப் பற்றி சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா என்று கேட்டிருந்தார்.
என்னுடைய சோம்பேறித்தனம் தான் ஜகப் பிரசித்தம் ஆயிற்றே. தவிரவும் இந்த மாதிரி ஆ.....ஆழமாக எழுதி எனக்குப் பழக்க்மும் இல்லை. இதோ..அதோ என்று இழுத்துக் கொண்டே போய், கடைசியில் அனுப்பி வைத்தேன். அது இந்த வாரம் அழகாக எடிட் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர் ஸ்டான்ஃபோர்டில் வேலை செய்ததையும், அவரைப் பற்றி இப்போது வந்திருக்கும் hillary vs Clinton புத்தகத்தைப் பற்றியும், அவருக்காக (அதிபர் தேர்தலுக்கு) ஆதரவு திரட்ட ஆரம்பித்திருக்கும் வலைத்தளங்கள் பற்றியும், அவரை "விவரமில்லாத புஷ்" எத்தனை நம்பி இருக்கிறார் என்பதையும் பற்றி எழுதி இருந்தது மட்டும் கத்தரிக்கப்பட்டு இருக்கிறது.
நம்ம மக்கள் பார்த்துவிட்டு ரெண்டு மொத்து மொத்தினால் சந்தோஷம்.
இந்தக் கட்டுரை எழுத முடிந்ததற்கு காண்டலீசாவுடனான என்னுடைய தனிப்பட்ட நட்பும், அமெரிக்க அரசியலில் என் அறிவும், குடியரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் என் கூர்ந்த பார்வையும்....வெயிட்..வெயிட்..வெயிட்டீஸ்..
கட்டுரைத் தகவல்களுக்காக இணையத்துக்கு நன்றி. விகடனுக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
அடடே.... வாழ்த்துக்கள் பசுபதிராயரே...
ReplyDeleteCongrats! தலை, நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா? கூடிய சீக்கிரம் வலைப்பூவுக்கு குட்பையா?
ReplyDeleteநன்றி பெரகாசு.
ReplyDeleteராம்கி, வலைப்பூவை விட முடியுமா..?? நானென்ன புரபசனல் எழுத்தாளனா- உங்களைப்போல :-)
டாங்க்ஸ் பா.
வாழ்த்துக்கள் சுந்தர்
ReplyDeleteThanks Padma
ReplyDeleteவாழ்த்துக்கள் சுந்தர்.
ReplyDeleteஎங்கியோஓஓஓஓஓஓ போயிட்டீங்க.
நல்லா இருங்க.
துளசியக்கா..நன்னி.
ReplyDeleteஎங்கயும் போகலை. இங்கேயே தான் :-)
நல்ல செய்தி. பாராட்டுகள். இன்னும் நிறைய உங்கள் படைப்புகள் அச்சிலேற வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன்
சுந்தர்.
நன்றி சுந்தர்
ReplyDeletesecond innings ...
ReplyDeletecongrats
Mey,
ReplyDelete:-)
இன்னிங்ஸா..?? வயசாயிப்போச்சு மெய்.
Thanks Jsri
ReplyDeletewhen she visited a military camb / base in Germany, a magazine article went in detail describing her high heels and overcoat as a symbol of power and sex. Also there were articles complaining about her shopping when new orleans was sinking.
ellam Internet ubayam...!!!!!
மேலும் நிறைய - தொடர்ச்சியாக - எழுத வேண்டுகிறேன்.
ReplyDeleteThanks Badri.
ReplyDeleteசான்ஸ் கிடைத்தால் தொடர்ச்சியாக எழுதலாம். நானாக விஷயங்களை தேர்வு செய்து எழுதி அனுப்ப வேண்டுமென்றால், நிறைய எழுதி அனுப்ப வேண்டும். அதற்கு கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டும். அந்த நேரத்தில் அசின் போட்டொ போட்டு ஜிலு ஜிலுன்னு நாலு பதிவு போடலாம் :-)
ஊக்கத்துக்கு நன்றி.
என்னுடைய வாழ்த்துகளையும் பிடிங்க..தொடர்ந்து எழுதவும் தான்!
ReplyDeleteமூக்கரே வாழ்த்துக்கள். இருங்க, இருங்க. உங்க நண்பர் சிவஞானம் , அவள் விகடனுக்கு எழுத கேட்டு இருக்காங்கன்னு ஒரு வருடத்திற்கு முன்பே நீங்க சொன்னதாய் ஞாபகம்? சரியா?
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகட்டுரை 'சும்மா நச்சு'ன்னு இருக்கு. :-)
பாரா, என்.சொ, பத்ரியைத்தொடர்ந்து இன்னொருவரா?
///அசின் போட்டொ போட்டு ஜிலு ஜிலுன்னு நாலு பதிவு போடலாம் :-)///
இதானெ வேணாங்கிறது!
எம்.கே.
நன்றி ரம்யா.
ReplyDeleteமாமி, அதே நண்பர்தான். என் கல்லூரி சீனியர்.யப்பா..என்ன ஞாபக சக்தி உங்களுக்கு :-)
ReplyDeleteஎம்.கே.கே கவிஞரே ..தாங்கஸ்பா
வாழ்த்துக்கள் மூக்கரே.
ReplyDeleteவாழ்த்துக்கள், சுந்தர் ! கட்டுரை சுவாரசியமாக இருந்தது.
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன்
பாலா
Yet to read.
ReplyDeleteCongrats. write more
Anbudan
Rajkumar
வாழ்த்துகள் சுந்தர்! மேலும் அடிக்கடி எழுதுங்கள்.
ReplyDeleteகாசி, ராஜ், பாலா, இராதா,
ReplyDeleteமிக்க நன்றி.
வாழ்த்துகள் மூக்கு சுந்தர்.
ReplyDeleteஎழுத்துப் பணி தொடரட்டும்
அருமையாக எழுதுகிறீர்கள். மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteMadhumitha and Bharathi,
ReplyDeleteThanks.
சுந்தர், கட்டுரை அப்படியே விகடன் ஸ்டைலில் இருந்தது. இனிவரும் கட்டுரைகளில் உங்கள் ஸ்டைலை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநன்றி தங்கமணி.
ReplyDeleteவலிந்து ஸ்டைல் மாற்றிக்கொண்டு இடத்துக்கு தகுந்தபடி எழுதும் "திறமை" எனக்கு இல்லை. நான் வழக்கம்போலவெ எழுதி அனுப்பி வைத்தேன். அதை அவர்களுக்கேற்றார்போல் மாற்றிக் கொண்டார்கள். உங்களுக்கு விருப்பமெனில், நான் எழுதி அனுப்பியதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் :-)
நல்லாகீதுப்பா கட்டுரை..!! படு சோக்காகீது...!!
ReplyDelete(அது சரி.. விகடனுக்கு காசு கொடுத்து பாஸ்வேர்டு வாங்க வேண்டியிருக்குண்ணு முன்னே ஒரு தபா நீங்க புலம்பியதா நியாபகம் (?!) ***நீங்க தான்னு நெனைக்கிறேன்.. இல்லைன்னா கோச்சுக்காதீங்க!***... இப்போ எப்படி?!) :)
அடடே..அண்ணாவா..?1!!! வாங்கோ வாங்கோ மாயவரத்தான்.:-)
ReplyDeleteபுலம்புனது நாந்தான். புலம்பிண்டே நானும் சப்ஸ்க்ரிப்ஷன் வாங்கிட்டேன்.
வேற வழியேது ஸார்..!!
உங்கள் கருத்துக்கு நன்றி
சூப்பர்.. அது சரி, காசு கட்டிணது க.மு.வா? இல்லாட்டி க.பி.யா?! (* கட்டுரைக்கு முன்னா அல்லது கட்டுரைக்கு பின்னா?!) ;) ஆயுள் மெம்பர்ஷிப்பா?!
ReplyDeleteஅடடா, நான் தப்பாகச் சொல்லவில்லை. ஆசிரியர் குழுதான் அப்படிச்செய்திருக்கும் என்று தெரியும். மேலும் சுஜாதா, ராமகிருஷ்ணன் போன்றவர்களின் நடையை அப்படியே அனுமதிக்கும் விகடன் ஏன் இது போன்ற கட்டுரைகளை மட்டும் தங்கள் மோல்டுக்குள் கொண்டுவருகிறார்கள் என்று யோசித்துவிட்டு, அது அவர்களின் பாலிஸியாக இருக்கலாம் என்று இங்கு குறிப்பிடாமல் விட்டேன்.
ReplyDeleteஅவ்வளவுதான்.
காசு கட்டி ஆச்சு ஒரு வருஷம். அதனால கண்டிப்பா க.மு தான்.நமகென்ன ரமேஷ். இதெல்லாம் புதுசா..? அதான் காலேஜ் டயத்துலயே ஆரமிச்சாச்சே..!!
ReplyDeleteஅது சரி..என்ன இப்பல்லாம் உங்க தேர்ட் விஷன்ல எழுதறதில்லையா..??
கருணாநிதி ஒரே சோகத்துல கீராராம்.
நீங்களும் அவரை மறந்துட்டீங்கன்னா, அவர் பாட்டுக்கு டெய்லி குடுக்கற சன் டீவி அறிக்கையோட, நம்ம எல்லாருக்கும் மெயில் வேற போட்டுட போறாரு.?!!
வேற எங்கங்க எழுதறீங்க..?? :-)
கொஞ்ச நாளா கொஞ்சம் பிஸி.. இதோ தேர்டு விஷனை கவனிக்க வேண்டியது தான்.
ReplyDeleteவேற எங்கே எழுதறேன்?!
கடைசியா விகடன் தீபாவளி மலருக்கு தம்மாத்துண்டு எழுதியிருந்தேன். அம்புட்டு தான்.
நன்றி செல்வநாயகி.
ReplyDeleteவாழ்த்துகள் சுந்தர். அவள்ல வாசிக்கும் போது கவனிக்கவில்லை. இங்கே பார்த்துதான் தெரிந்தது. மஸ்தி இல்லாத உங்க எழுத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை! :-)
ReplyDeleteநிர்மலா.
நன்றி டீச்சர்.
ReplyDeleteமஸ்தியா..? நானா..?? இந்த மஸ்திதான வெண்டாங்கிறது..:-)
வாழ்த்துக்கள் மூக்கு சுந்தர், ஆமா ஏன் இந்த பேர்னு சொல்லலாமா :-)
ReplyDeleteசோ.பையன், நன்றி.
ReplyDeleteஎன் ப்ளாக் தலையெழுத்தைப் பாக்கலியா..?? :-)