Skip to main content

Posts

Showing posts from February, 2005

என் பங்குக்கு ....

இளவரசிகள் அழகாக
இருக்கிறார்கள்.
செல்வத்தில்
மிதக்கிறார்கள்
எல்லா இளவரசிகளும்
ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள்.
சோதனையாக அவர்களுக்கு
ஏழை வாலிபனைத்தான்
பிடிக்கிறது
வாலிபர்கள் கோழைகளாக
இருக்கிறார்கள்
ஆனால் ஆசை இருக்கிறது
அது கண்ணை மூடிக்கொண்டு
தேன் குடிக்கச் சொல்கிறது
கொஞ்ச நாள்.

மூழ்கியவர்கள்
"முருகன்" ஆகிறார்கள்

மீண்டவர்கள்
கவிதை எழுதுகிறார்கள்

ஹி..ஹீ..நேத்துதான் "காதல்" பாக்க ஆரமிச்சிருக்கேன்.

ஆஸ்கார் 2005

எந்தப் படங்கள் பார்க்கப்படவேண்டியவை என்ற தகவலுக்காகவும், யாரார் எப்படி எப்படி வருகிறார்கள் என்று பொது அறிவை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் ஆஸ்கார் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பதுண்டு. நேற்றும் பார்த்தேன்.E Channel ல் பார்க்க ஆரம்பித்தபோது விருந்தினர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேட்டி எடுத்த ஸ்டார் அம்மணி ஒவ்வொருவராக கூப்பிட்டு கலாய்த்துக் கொண்டிருந்தார். அம்மாவும், பொண்ணுமாக வரும் பேட்டியாளர்களைப் போல இல்லாமல் இவருடைய கேள்விகள் கொஞ்சம் சவ சவ என்று இருந்தன.

ஜெனிஃபர் லோபஸ், கேமரூண் டியஸ், டென்ஸல் வாஷிங்டன், டாம் ஹேங்கஸ், டாம் க்ரூஸ், நிகோல் கிட்மேன் போன்ற பெருந்தலைகள் மிஸ்ஸிங். க்ரிஸ் ராக் தன்னுடைய முன்னுரையில் புஷ்ஷை புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாமினேட் செய்யப்பட்டிருக்கும் படங்களை பார்த்தீர்களா என்று பொதுமக்கள் சிலரிடம் அவர் எடுத்த பேட்டி நடுவே ஒளிபரப்பப்பட்டது. நல்ல படங்களுக்கு ஹாலிவுடிலும் இருக்கும் "மதிப்பு" தெரிய வந்தது.

சில வருடங்கள் பரிசு வழங்கப்பட்டபோது, ஒரே படமே ஏகப்பட்ட பரிசுகளை …

செல்வமணிக்கு பிடிக்காத கவிதை

பச்சை நிற முட்களை
மறைக்கும் நினைவேயில்லாமல்
அடர்த்தியின்றி தளிர்த்திருக்கும்
இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா
வெள்ளை ரோஜா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்தபோது கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருக்கிறது.

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச் சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரே ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது

யாரும் பார்க்கும் முன்பு.

- பூமா. ஈஸ்வரமூர்த்தியின் " கடற்கரைக் கால்கள்" தொகுப்பில் இருந்து

நான் கொடுத்திருக்கும் தலைப்புக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் நிஜரோஜாவை பற்றிய இந்தக் கவிதை எழுதி இருக்கும் இதே கவிஞர்தான்

இருபது வரிகளில்
பதினைந்து வருஷம் முன்பு
கவிதையொன்று
எழுதியிருந்தேன்

என்று ஆரம்பித்து வெற்றுத்தாளில் முடியும் அந்த அடர்த்தியான, செறிவான, நிறைவான கவிதைக்கு சொந்தக்காரர். :-)

மின்னணு அரசியல்

" எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு முறையில் குறைபாடுகள் இருப்பதாக திரும்பத் திரும்ப சொல்லி இங்கே அரசியல் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.

அந்த மெஷின் வடிவமைப்பில் பங்கு கொண்டவன் என்ற முறையில் நான் சொல்கிறேன்.... இந்தச் சந்தேகம் தேவையற்றது. இந்த இயந்திரத்தின் உள்ளே இருப்பது ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர். அது ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் உள்ள ராம் என்னும் ரீட் ஒன்லி மெமரியில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அந்த ஈசனே வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒரு எழவும் தெரியாது. இந்த நம்பருக்கு இத்தனை வோட்டு என்று போடப்போடக் கூட்டிக் கொண்டே செல்லும். இறுதி யில் இன்னாருக்கு இத்தனை வோட்டு என்ற பட்டியலைத் துல்லியமாக அறிவிக்கும்.

வேட்பாளரின் கட்சியெல்லாம் அதற்கு பொருட்டல்ல. சீரியல் நம்பர்…

துள்ளித்திரிந்த காலம்

ஆடி மாதக் காவேரியில் குளித்த மாதிரி இருந்தது ஒரு வருடம் முன்பு.

நமக்கே நமக்கான இடம். அதிலே மற்றவர் கருத்தை தெரிந்து கொள்ள வசதி. நியாயமோ அநியாயமோ, தணிக்கை செய்யப்படாத கருத்துகள் என்று மிக சுதந்திரமாக இருந்தது. நிறைய எழுதினேன்.

என்னைப் பற்றி...என் நண்பர்களைப் பற்றி ... படைப்புகளைப் பற்றி ... கருத்து வேற்றுமைகள் பற்றி.

இப்போது கொஞ்சம் நிதானம் வந்திருக்கிறது( தா..??) . மனதில் எழும் உணர்வுகளை எல்லாம் எழுதுவது மட்டும் முக்கியமல்ல, அதை கூடியவரை நாசுக்காக தெரிவிக்க வேண்டும் என்கிற நிதானம். பளீரென்று முகத்தில் அறைந்தாற்போல எழுதுவது முன்னர் பிடித்த அளவுக்கு இப்போது பிடிக்கவில்லை. நமக்கு அது விடுதலை உணர்வை தந்தாலும், எதிராளிக்கு, சம்பந்தப்பட்டவருக்கு அது எப்படி இருக்கும் என்று சில தருணங்களில் புரிந்தது. சுற்றி சுழற்றி எழுதுவது தந்திரம்..அதில் உண்மையில்லை என நினைத்திருந்தேன். அது இப்போது கொஞ்சம் தணிந்து இருக்கிறது.

உலகத்தில் உண்மை என்றும், பொய் என்றும் நல்லதென்றும் கெட்டதென்றும் ஒன்றும் இல்லை. காலம் தான் எல்லாம். காலமே கடவுள்.

ஒரு வருட காலத்தை இன்றோடு கடந்திருக்கும் என் வலைப்பூ எனக்கு மறுபடியும் நினைவ…

அப்படியா..???

கொஞ்ச காலம் கழிச்சி நான் இப்படி இருப்பேனோ..??

நெனைக்கவே தமாஷா இருக்கு..!!!!

படம்: முரசொலி கதாநாயகர் EVKS இளங்கோவன்

மருத்துவர் மாலடிமைக்கு யோசனைகள்

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

பள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளை மூட வேண்டும்.
......
.......
.......

தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்

கோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.

விஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.

மேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.

பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.

பஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.

வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.

கட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.

மக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்

பாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவி…

ஷோபா டே

இது சாத்தான்குளத்து "டே" இல்லை. வேற டே.

பம்பாயில் இருந்தபோது எனக்கு மிட் டே ரொம்ப பிடிக்கும். ( அடச்சே இன்னொரு டே...) அதில் இவர் ரெகுலராக எழுதுவார். கொஞ்சம் குஜால் கலந்து, இந்தி கலந்த ஆங்கிலத்தோடு எழுதும் தைரியமான பெண்மணி என்று நினைத்துக் கொண்டு ரசித்திருக்கிறேன்.

குஷ்வந்த்சிங் எழுதி இருக்கிற இந்த கட்டுரையின் கடைசி வரி, அதை ஏன் என்று புரியவைத்தது. மேலைத்தாக்கம் அதிகம் இருக்கிற பம்பாயின் மேட்டுக்குடி பெண் ஒருத்தி எழுதியது, ஒரு கீழ்மத்தியதர மதராஸிக்கு எப்படி பிடிக்காமல் போயிருக்கும்...??

நன்றி. குரு சுப்ரமணியம்

விளம்பரநேரம்- 123shots.com

பரதேசிகளுக்கு ஒரு நற்செய்தி

வெளிநாட்டில் எடுக்கும் ஃபோட்டோக்களை, இணையத்தில் எங்காவது அப்லோடி, ஊருக்கு லின்க் அனுப்பினால் வேலைக்காவலை. மாயவரம் மாதிரியான ஊர்களில் அந்த ஆல்பத்தைப் பார்ப்பதற்குள், ஜெயேந்திரர் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் போலிருக்கிறது.

பழைய தோசைமாவில் கொஞ்சம் ஜெகஜ்ஜால வித்தை காட்டி, ஊத்தப்பம் ஆக்குவது போல, 123shots.com வேலை செய்கிறது. உங்கள் ஃபோட்டொக்களை இங்கே அப்லோட் செய்து, ஆல்பத்தில் லிங்கை அனுப்பி விட்டு, அங்கேயே Photo printsக்கான ஆர்டரும் கொடுத்து, உங்கள் ஊட்டு அட்ரசும் கொடுத்து விட்டால், photos உங்கள் வீட்டுக்கு போய் விடும்.

ஒரு முறை பரிசோதித்து விட்டு இதை எழுதுகிறேனாக்கும். :-)

பி.கு:

நல்லா இருக்கீங்களா...?? தமிழ்மணத்துல, இப்பல்லாம் நெறைய படிக்க கிடைக்கிறதால ஒண்ணும் எழுதத் தோணலை. ஏதாவது சுவாரசியமா கிடைச்சா எழுதுறேன்.

உன்ன யாரு கேட்டாங்கிறீங்களா...?? ஹி..ஹி..சும்மா ஒரு தகவலுக்கு.

நீங்களும் சேர்ந்து குழப்ப...

இரண்டாவது கார் வாங்க, உங்கள் ஆலோசனை தேவை.Accord - 2000

என்னுடைய முதல் கார் ஹோண்டா அக்கார்ட் ஈ.எக்ஸ் v-6. லெதர் ஸீட்டுடன், சன் ரூஃப், மூன் ரூஃபோடு 2000 ஆம் வருடத்தில் வாங்கியது. விலையே அதிகமென்றாலும், லோன் வாங்கின இந்த்ரெஸ்ட் எல்லாம் கட்டி முடிந்தபோது அய்யோ என்றிருந்தது. ஏனெனில் என்னதான் ஜப்பான் காராக இருந்தாலும், என்ன கருமமாக இருந்தாலும், முதல் மூன்று வருடங்களில் அதன் மதிப்பு 40% குறைந்து விடுகிறது. எனவே இரண்டாவது கார் வாங்கினால் இரண்டு மூன்று வருட பழசுதான் வாங்க வெண்டும் என்று நினைத்திருந்தென்.Mini Van

முதலில் மினி வேன் வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் மூட்டைப் பூச்சியை நீளவாக்கில் தரையில் தேய்த்த மாதிரி உள்ள அதன் தோற்றத்தை பார்த்தவுடன் சின்ன தடுமாற்றம். ஆனால் வீட்டு வேலைகளுக்கும், ஊரிலிருந்து அம்மா அப்பா வந்தால் அழைத்துப் போகவும் அதுதான் வசதி. ஆனால், ஏற்கனவே பெரிய கார் வைத்திருப்பதால், இந்த ஒரே வசதிக்காக மினி வேன் வாங்க முடியாது. தவிரவும் உடனே 30000$ கொடுத்து வேன் வாங்கி இன்னொரு கடனாளியாய் ஆக வேண்டாம் என்றுதான் ஒரு குட்டியூண்டு கார் வாங்கலாம் என நினைத்தேன்.BeetleMini Cooper

அதை நினைத்தவு…

இன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு

காதலர் தினம் வலைப்பதிவுகளில் தூள் பறந்து கொண்டிருக்கிறது. என்னதான் காதலர் தினம் கொண்டாடுவது நமது கலாசாரத்திற்கு சம்பந்தமில்லையென சொன்னாலும், உண்ணும் உணவு, உடுக்கும் உடை, பருகும் "நீர்" முதற்கொண்டு, மேற்கு நம்மை அண்டி தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காதலர் தினம் கொண்டாடுவதில் மட்டும் என்ன தவறு வந்து விட்டது..?? . காதலிகளுக்கு கொண்டாட்டம். காதலன்கள் பர்ஸுக்கு அன்று திண்டாட்டம் என்று சொன்னாலும் கூட சுகமான சுமைகள் அவை. வேண்டித்தான் இருக்கிறது. அதுவும் ஆண் பெண் ஈர்ப்புக்கு காரணமான ஒரிஜினல் அர்த்தங்கள், ( It is nature's way of ensuring pregnancy என்பார் சுஜாதா) இளைய தலைமுறைக்கு இத்தனை அப்பட்டமாக தெரிந்து விட்டபிறகு, காதல் போன்ற கனவு கலந்த பொன்னிறமான வஸ்துகள் கண்டிப்பாக வேண்டும்.

ஏனெனில் காதலில் புனைவையும் கனவையும் எடுத்து விட்டால், வெறும் உடம்பு மட்டும்தான். எனவே அவை ஜீவிதமாக இருக்கட்டும். கலந்தே இருக்கட்டும்.

அன்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் - கீழுள்ள பாலகுமாரன் கவிதையோடு

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற த…

தமிழும் தங்கமணியும்

ஒரு பெண் பெரியவளாகும்போது அதை வீடும் வெளியுலகமும் பார்க்கும் விதங்கள் வித்தியாசமானவை. வண்ணமயமானவை. தாய்மைக்காக இயற்கை நிகழ்த்தும் ரசவாதம் என்கிற கனிவான நோக்கோடு பார்க்கப்படுபவை. பெரியவளாக இருப்பதற்காக, அந்தக் குழந்தை அணைத்துக் கொள்ளப்படும் விதங்கள் இதமூட்டுபவை. லா.ச.ரா வின் "புத்ர" வில் இதை அழகாக சொல்லி இருந்தது பிடித்திருந்தது.ஒரு பையனுக்கு இது நிகழ்வது கிட்டத்தட்ட அவனுக்கே தெரிவதில்லை. ஜல்லடைக் கண்களின் வழியே இறங்கும் வெல்லப்பாகு போல மெல்ல மெல்ல நிகழ்கிறது இது. சில விவரமானதுகளைத் தவிர பெரும்பாலான விடலைச் சிறுவர்கள் இந்த விஷயத்தில் மக்குகள். சக மக்குகளிடம் பேசியும், தகுதியில்லா புத்தகங்களால் அறிவுறுத்தப்பட்டும், தனக்கு நிகழ்வதையே கூட்டி கழித்து புரிந்து கொள்வதிலும், சினிமாக்களைப் பார்த்து கிளுகிளுத்துக் கொள்வதிலுமேதான் அவனுடைய "அறிவு" விரிகிறதே தவிர சக வயதொத்த பெண்ணுக்கு கிடைக்கும் தனிப்பட்ட கவனிப்பும் அறிவுரைகளும் அவனுக்கு கிடைப்பதில்லை.

அப்படியொரு பையன் ஒம்போதாம்ப்பு தமிழ் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். பையன்கள் தங்களுக்குள் கிளுகிளூத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்ட…

செட் தோசை

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் காலதேச வர்த்தமானங்களைத் தாண்டியதென நினைக்கிறேன். இரண்டும் ஒரே சமயத்தில் திண்ணையில் பிரசுரமானது கண்டிப்பாய் தற்செயல் இல்லை போல ஒரு எண்ணம்.

மனைவியின் தோழனைப் பற்றிப் பேசும் கணவனின் கவிதை எங்கும் லேசாக ஒரு சந்தேக மூட்டமும், பொஸஸிவ்நெஸ் இருப்பதும் புரிகிறது. அதே சமயம் கணவனின் தோழியரைப் பற்றி பேசும் மனைவியின் கவிதையில், தன் உரிமைக்கான லேசான ஆதங்கத்தை தவிர வேறு சந்தேக சாயல் வீசவே இல்லை ( அல்லது கவிஞர் அதை முதன்மைப்படுத்தவில்லையோ..??.)

யார் வீக்கர் செக்ஸ்..?? ( Weaker Sex)

மேப் போடறான் ...மேப்

கூகிள் மேப்ஸ் புதிய வரவு.

zoom செய்யும் வசதியும், எலியை நகர்த்தி இருக்கும் ஏரியா பூரா மேய்வதும் செம வசதியாயிருக்கிறது. கொடுக்கும் Driving directions சுருக்கமான வழியா அல்லது வேகமான வழியா என்பது மட்டும் போகப் போக விளங்கும்.

நன்றி: Lazygeek

பசுவய்யா கவிதைகள்

வலைப்பூக்களின் வீச்சும் ரீச்சும் பல்கிப் பெருக்கொண்டிருக்கும் இந் நேரத்தில் கொஞ்ச நாள் படித்துக் கொண்டே இருந்ததில் வாய் பிளந்து கிடந்து விட்டேன். "ஒரு வாரம் ஸ்டாரானா, பத்து நாள் லீவா" என்று தனி மடலில் நங் என்று விழுந்தது ஸ்நேகத்திடமிருந்து ஒன்று.

மறுபடியும் மெல்லத் துவங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"கதவைச் சுண்டாதே தயவுசெய்து" என்று ஒரு கவிதையோடு

நான் இங்கு இருக்கிறேன்
இங்கு
இச்சிறிய அறையில், சிறிய சன்னல், சிறிது வெளிச்சம்

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பது தெரியும்

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும் பாரம் சரித்துவிட்டுப் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜன்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலில் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து

கவிப்பகைவன்

கே.வி.ராஜா கல்யாணத்துக்கு, போய்வந்தவர்கள் எல்லாம் விவரணைகளோடு , படங்களும் போட்டு மடலாடற்குழுக்களிலும் வலைப்பூவிலும் தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட மடல் இது. மரவண்டு கணேஷ் இதை எழுதியிருக்கிறார்.

" அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகின்றாய்என்னென்னவோ உன் ஆசைகள் " என்ற திரை இசைப் பாடல் (திருக்கல்யாணம்-ஜெயச்சந்திரன்&ஜானகி)என் நினைவுக்கு வந்தது .சொற்பமான எண்ணிகையிலான மக்களே கடற்கரையில் உலாத்திக்கொண்டிருந்தார்கள் , சுனாமியின் கோரச் சுவடுகள் ஓரளவுக்கு மறைந்துவிட்டன . அண்ணா சமாதியின்சுற்றுச் சுவர் மட்டும் கொஞ்சம் இடிந்த நிலையில் காணப்பட்டது , அதைப் பார்த்ததும் எனக்கு கவிதை கொப்பளித்துக் கொண்டு வந்தது ..உடனே மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது , அய்யய்யோ வேண்டாம் சாமின்னு மூடிட்டு இருந்துட்டேன் "

அவருக்கு மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது எதற்கென்று எனக்குத் தெரியாது. ஆனால் சொல்கின்ற இடத்தையும், பொருளையும் வைத்து அவர் சுனாமி மொழிகள் சம்பந்தமாக எனக்கும் கவிஞர் புகாரிக்கும் நடந்த மடலாட்டத்தை சொல்கிறார் என்று யூ…

பார்வைகள் பலவிதம்

தென்செய்தி தலையங்கம் கேரள எழுத்தாளர் சுகுமார ஆழிக்கோடு எழுத்தச்சன் விருதை புறக்கணித்திருப்பதன் எதிர்ப்புப் பின்னணியையும், புதுச்சேரி மாநில எழுத்தாளர்களின் மொழிப்பற்றையும் சொல்லி தமிழர்களுக்கு துணிவு வருமா என்று வினவி இருக்கிறது.

காஞ்சி சாமியார்கள் வி(வ)காரத்தில் பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் அறிக்கை உடனே ஞாபகம் வர, " ஏன் இப்படி கேட்கிறார் நெடுமாறன்..?? எழுத்தாளர்களுக்கு இங்கே ஏகப்பட்ட பொறுப்பு இருக்கிறதே" என நினைத்தேன்

சுளீரென்று சவுக்கடி பட்டாற்போலிருந்தது நேற்று படித்த எஸ்.ராவின் செவ்வியின் இந்த பதில்.

18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?

சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்…

சிங்கப்பூர் விஜயம்

I am visiting Singapore, Malaysia, Indonesia during Feb 2005. Those who want to contact mail me.

I am having a literary meeting with readers on coming Saturday 05 February at 2:30 PM at Woodlands Library, Singapore


என்று இங்கே சொல்லி இருக்கிறார் சாரு. நமது இணைய நண்பர்கள் பலருக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. சிங்கை நண்பர்கள் விருப்பம் இருந்தால் சென்று வாருங்கள்.