Friday, February 04, 2005

கவிப்பகைவன்

கே.வி.ராஜா கல்யாணத்துக்கு, போய்வந்தவர்கள் எல்லாம் விவரணைகளோடு , படங்களும் போட்டு மடலாடற்குழுக்களிலும் வலைப்பூவிலும் தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட மடல் இது. மரவண்டு கணேஷ் இதை எழுதியிருக்கிறார்.

" அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகின்றாய்என்னென்னவோ உன் ஆசைகள் " என்ற திரை இசைப் பாடல் (திருக்கல்யாணம்-ஜெயச்சந்திரன்&ஜானகி)என் நினைவுக்கு வந்தது .சொற்பமான எண்ணிகையிலான மக்களே கடற்கரையில் உலாத்திக்கொண்டிருந்தார்கள் , சுனாமியின் கோரச் சுவடுகள் ஓரளவுக்கு மறைந்துவிட்டன . அண்ணா சமாதியின்சுற்றுச் சுவர் மட்டும் கொஞ்சம் இடிந்த நிலையில் காணப்பட்டது , அதைப் பார்த்ததும் எனக்கு கவிதை கொப்பளித்துக் கொண்டு வந்தது ..உடனே மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது , அய்யய்யோ வேண்டாம் சாமின்னு மூடிட்டு இருந்துட்டேன் "

அவருக்கு மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது எதற்கென்று எனக்குத் தெரியாது. ஆனால் சொல்கின்ற இடத்தையும், பொருளையும் வைத்து அவர் சுனாமி மொழிகள் சம்பந்தமாக எனக்கும் கவிஞர் புகாரிக்கும் நடந்த மடலாட்டத்தை சொல்கிறார் என்று யூகிக்கிறேன்.

சுனாமி மொழிகள் சம்பந்தமாக நான் சொன்னது அது மரத்தடியில் இடப்பட்டதாலும், அந்த சமயத்தில் நான் மரத்தடி உறுப்பினனாகவும் இருந்ததால்தான். சொன்ன கருத்து கவிதையின் மீதே ஒழிய கவிஞர் மீது அல்ல.
இன்றளவும் புகாரியின் கவிதைகள் எனக்கு தனிமடலில் வந்துகொண்டு தான் இருக்கிறது. அக் கவிதை பற்றி சொன்னது கூட சொற்குற்றமென்றோ, பொருட்குற்றமென்றோ, சொல்லவில்லை. உணர்வுரீதியாக, அந்த உணர்வை வெளிப்படுத்திய விதம்பற்றிய என் புரிதல்கள் மட்டுமே. அந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது ஒன்றும் எழுதாத மக்கள் நான் இணைய தாதா ஆக விரும்புகிறேன் என்று இன்னொருவர் சொன்னாரென்று (?!!) வேறு சந்தர்ப்பங்களில் தன் நிஜமுகத்தை தரிசனப்படுத்துகிறார்கள்.

நண்பர் மரவண்டு கணேஷ் மூக்கு சுந்தரை பற்றி எல்லாம் கவலைப்பட்டு மூடிக்கொள்ளும் அளவுக்கு மூக்கன் தாதா இல்லை. இவ்விடம் நல்ல கவிதைகளுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று நான் உபதொழில் ஏதும் செய்யவில்லை.

எனவே யாராருக்கு என்னென்னெ எழுத வேண்டுமோ அத்தனையும் எழுதிப் பார்க்கலாம். இந்த சமயத்தில் நான் எழுதிய கவிதைகள், நான் ரசித்த நம் இணைய நண்பர்களின் கவிதைகளை எல்லாம் எடுத்துப் போட்டு
நானும் கவிரசிகன் தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புகிறேன்.

2 comments:

  1. அட! நீங்களும் நம்ம கேசுதானா? எப்ப மரத்தடில இருந்து வெளில வந்தீங்க???

    ReplyDelete
  2. //அட! நீங்களும் நம்ம கேசுதானா? எப்ப மரத்தடில இருந்து வெளில வந்தீங்க???//

    ஒண்ணுமே பிர்யலே ஒலகத்துலே, இன்னாமோ நடுக்குது மர்மமாய் இர்க்குது, ஒண்ணுமே பிர்யலே ஒலகத்துலே....

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...