Friday, February 25, 2005

செல்வமணிக்கு பிடிக்காத கவிதை



பச்சை நிற முட்களை
மறைக்கும் நினைவேயில்லாமல்
அடர்த்தியின்றி தளிர்த்திருக்கும்
இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா
வெள்ளை ரோஜா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்தபோது கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருக்கிறது.

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச் சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரே ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது

யாரும் பார்க்கும் முன்பு.

- பூமா. ஈஸ்வரமூர்த்தியின் " கடற்கரைக் கால்கள்" தொகுப்பில் இருந்து

நான் கொடுத்திருக்கும் தலைப்புக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் நிஜரோஜாவை பற்றிய இந்தக் கவிதை எழுதி இருக்கும் இதே கவிஞர்தான்

இருபது வரிகளில்
பதினைந்து வருஷம் முன்பு
கவிதையொன்று
எழுதியிருந்தேன்

என்று ஆரம்பித்து வெற்றுத்தாளில் முடியும் அந்த அடர்த்தியான, செறிவான, நிறைவான கவிதைக்கு சொந்தக்காரர். :-)

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...