Wednesday, February 16, 2005

நீங்களும் சேர்ந்து குழப்ப...

இரண்டாவது கார் வாங்க, உங்கள் ஆலோசனை தேவை.



Accord - 2000

என்னுடைய முதல் கார் ஹோண்டா அக்கார்ட் ஈ.எக்ஸ் v-6. லெதர் ஸீட்டுடன், சன் ரூஃப், மூன் ரூஃபோடு 2000 ஆம் வருடத்தில் வாங்கியது. விலையே அதிகமென்றாலும், லோன் வாங்கின இந்த்ரெஸ்ட் எல்லாம் கட்டி முடிந்தபோது அய்யோ என்றிருந்தது. ஏனெனில் என்னதான் ஜப்பான் காராக இருந்தாலும், என்ன கருமமாக இருந்தாலும், முதல் மூன்று வருடங்களில் அதன் மதிப்பு 40% குறைந்து விடுகிறது. எனவே இரண்டாவது கார் வாங்கினால் இரண்டு மூன்று வருட பழசுதான் வாங்க வெண்டும் என்று நினைத்திருந்தென்.



Mini Van

முதலில் மினி வேன் வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் மூட்டைப் பூச்சியை நீளவாக்கில் தரையில் தேய்த்த மாதிரி உள்ள அதன் தோற்றத்தை பார்த்தவுடன் சின்ன தடுமாற்றம். ஆனால் வீட்டு வேலைகளுக்கும், ஊரிலிருந்து அம்மா அப்பா வந்தால் அழைத்துப் போகவும் அதுதான் வசதி. ஆனால், ஏற்கனவே பெரிய கார் வைத்திருப்பதால், இந்த ஒரே வசதிக்காக மினி வேன் வாங்க முடியாது. தவிரவும் உடனே 30000$ கொடுத்து வேன் வாங்கி இன்னொரு கடனாளியாய் ஆக வேண்டாம் என்றுதான் ஒரு குட்டியூண்டு கார் வாங்கலாம் என நினைத்தேன்.



Beetle



Mini Cooper

அதை நினைத்தவுடனெயே ஹோண்டா , டொயோட்டா என்று தேசி மாடலாக வேண்டாம் என்று வோக்ஸ்வாகன் பீட்டில் இல்லாவிட்டால் மினி கூப்பர் வாங்கலாம் என ஆசை. பீட்டில் அதிக வேலை வைக்கும் கார் என்பதால் கூப்பருக்கு முடிவானது. ஆனால் கூப்பர் விலையை பார்த்தால், அதற்கு கொஞ்சம் கூட காசு போட்டு மினி வேனே வாங்கி விடலாம். நடு நடுவில் BMW 3 Series மேலும் கொஞ்சம் மையல் வந்து போனது

என்ன குழப்புகிறேனா..?? அதான் பிராப்ளம். ஒரு வழி சொல்லுங்கள்.

இல்லாவிட்டால் ஒரு டொயோட்டா கரோலா வாங்கிவிட்டு, ஒரு வருடம் கழித்து அதை விற்று விட்டு மினி வென் வாங்கிக் கொள்ளட்டுமா..??

ஆலோசனை உதவியும், உங்கள் நண்பர்கள் யாராவது கரோலா விற்கும் யோசனையில் இருந்தால் இங்கே தள்ளி விடவும். வெகுமதிகள் உண்டு. ( வெகுமதி - நீங்கள் என்னதான் இறகு பிய்ப்பது மாதிரி சொற்களை பிய்த்துப் பிய்த்துப் போட்டு கவிதை எழுதினாலும், நான் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டேன் - மரவண்டு இல்லாமலேயே :-) }

12 comments:

  1. மாருதி 800 வாங்குங்க பாசு :))

    ReplyDelete
  2. அலோ..வ், இததான் நாஆஆஅக்கல்ன்னு சொல்றதா..??

    நல்லா இருங்க...!!!

    ReplyDelete
  3. Corvette - இது எப்படி வசதி? :P
    PT Cruiser - இல்லேன்னா இது? :P

    Murano கொஞ்சம் பெருசு, பரவாயில்லையா? :P

    எங்கெ சுத்தினாலும் கடைசில இங்கெதான் வந்து நிக்கப் போவுது(புதுசோ பழசோ) :P

    ReplyDelete
  4. அன்புள்ள சுந்தர்,

    ரெண்டாவது வண்டின்னா 'டொயோட்டா கரோல்லா' நல்லது. நம்பகமான வண்டி. குளிர் சமயத்துலே
    நின்னு போய் காலை வாராத வண்டி.

    நம்ம ரெண்டாவது வண்டி இதுதான். 'எக்ஸ் ரெண்டல்'3 வருஷப் பழசு வாங்கினோம். எனக்கு ஷாப்பிங், பசங்களை
    இங்கே அங்கே கொண்டு போறது, பூனைங்களை வெட் க்ளீனிக் கொண்டுபோறது இத்தியாதி லோகல் ரன்னுக்கு
    நல்லா உதவுது. இப்ப வீடு மாத்தறதுக்கு சாமான்கள் அதுலேதான் கொண்டு வர்றேன். ஹேட்ச் பேக்!

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  5. Checkout a subaru...my forester has been a great vehicle for the past three years - reliable, bigger than car (cargo room wise), drives like car and winter-friendly.

    Or if you want to go green and spend green you could get in line for a prius...

    ReplyDelete
  6. 19 வருடங்களாய் நுகர்வோர் இதழ் (consumer reports) படித்து,அதனால் முன்னுறுத்தப்பட்ட பொருட்களை,மகிழ்வூர்தியிலிருந்து மண்ணாங்கட்டி (manure) வரை வாங்கி வருகிறோம்.இதுவரை ஏதும் சோடை போனதில்லை.ஆர்வமிருந்தால் வருடம் 21 வெள்ளி கொடுத்து வாங்கி படிக்கலாம்.
    இவ்வகையில் 94 ல் வாங்கிய-1993 Volvo 850 இன்றுவரை நன்றாக ஓடுகிறது.சொல்லப்போனால்,பரவாயில்லை என்ற ரகத்தில் consumer reports ஆல் தள்ளப்பட்டிருந்த 2001 Dodge Grand Caravan சவ சவ என்றே ஓடுகிறது.சப்பானிய கார்களை வாங்க கூடாதென்ற வீராப்பு காற்றில் அடுத்த வருடம் பறந்து போகலாம்
    அக்கூயுரா TL என்பதன் வழியால்.

    புதிய,பழைய சிறந்த கார்களுக்கான
    தனி அத்தியாயம் உண்டு,c.reportsன்
    வருடாந்திர சிறப்பு வெளியீட்டில்.லாபம் கருதி வெளியிடப்படவில்லை
    http://www.consumerreports.org/

    ==

    ReplyDelete
  7. நண்பர்களுக்கு நன்றி. இந்த வார இறுதியில் carmax.com போகப்போகிறேன் ஒரு டோயோட்டா சியானாவையும், கரோலாவையும் ஓட்டிப் பார்க்கப்போகிறேன். அப்போது மண்டையில் 'நட்டு ' எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து முடிவு எடுக்கப்படும் :-)

    ReplyDelete
  8. Lexus RX 330 or
    some hybrid version

    ReplyDelete
  9. மூர்த்தி "அண்ணா",

    அமெரிக்காவில் கார் என்பது சைக்கிள் மாதிரி தினசரி வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்பது நண்பர்களுக்குத் தெரியும் என்ற நினப்பில் எழுதினேன்.

    உங்களைத் தவிர மற்ற ஸ்நேகிதர்கள் அதை சரியாகவே புரிந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

    கடவுள் யாக்கையோடும், இரண்டு கால்களோடும் சேர்த்து தெளிவான மனசையும் உங்களுக்கு அருளட்டும்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. I also Suggest Toyota Corolla. Ezhaigalin iniya car!

    ReplyDelete
  11. கார் வாங்குவதில் இந்த இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்:
    1. பணத்துக்கு தகுந்த பணியாராம்

    2. வாங்கி, பதிவு எல்லாம் முடிந்த பிறகு, 'அடாடா அந்த காரை வாங்கியிருக்கலாமே' என்று னீங்களாக னினைபீர்கள் அல்லது வேறு யாராவது சொல்லி னோகடிப்பார்கள்.

    ஏற்கனவே ஒரு னல்ல கார் வைத்திருப்பதால் பழையதாக ஒன்று வாங்கலாம். பை னிறைய பணம் இருந்தால் Toyota Prius போன்ற hybrid வாங்கலாம். எரிபொருள் செலவு குறைவு. உள்ளூர் பயனுக்கு சிறந்தது. வரிவிலக்கும் கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கும் உங்களாலான கைங்கர்யம்.

    சனிக்கிழமை NPR Car Talk show
    ல் Click & Clack சகோதரர்களை கூப்பிட்டுக் கேளுங்கள். ஆலோசனை கொடுக்கிறார்களொ இல்லையோ, உங்கள் புண்ணியத்தில் என்னைப் போன்றவர்களை சிரிக்கவாவது வைப்பார்கள்.

    ReplyDelete
  12. "அண்ணா",

    1. நீங்க தவறுன்னு சொன்னதா நான் சொல்லவே இல்லை. "ரெண்டாவது கார் வாங்க போறேன்னு பொது மனைல வந்து பீத்திக்கறான் பாரு" என்று நீங்கள் சொல்ல விழைகிறீகள் என்று நினைத்தேன். ஏனெனில் உங்கள் முதல் மறுமொழிக்கும், நான் ஆலோசனையாக கேட்டிருந்த விடயத்துக்கும் சம்பந்தமே இல்லை.
    அப்படி நீங்கள் நினைக்கவில்லை என்று சொன்னால், சந்தோஷம்.

    2.உண்மை. நான் சிங்கப்பூரில் இருந்த 16 மாதங்களில் எனக்கும் அந்த அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் சிங்கப்பூரில் அற்புதமான போக்குவரத்து வசதிகள்.

    3. உங்களுடைய விசாலமான பார்வைக்கு என் வந்தனங்கள்

    4.அய்யோ BMW என்னால் ஆகாது.

    5. நன்றி

    6.இங்கே மறுபடியும் வே.மு.ஏ.வி!!!!

    திருமலை ரா.கா.கி யிலும், மரத்தடியிலும் ஜம் மென்று எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு பயந்து போய் அவர் எங்கேயும் ஓடிவிடவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன பங்காளி சண்டையா..?? நீங்கள் சொல்கிற மாதிரி நினைக்கும் அளவுக்கு நான் மடையன் கிடையாது.

    எழுத்தாளர் பா.ராவைப் பற்றி நீங்கள் அடிக்கிற இந்த கமெண்ட் அருவருப்பானது. கண்டிக்கத் தக்கது. எல்லா இடத்திலும் சிறு பிள்ளையைப் போல இதை நீங்கள் மறுபடி மறுபடி கூறிக்கொள்வது உங்களுக்கு அழகல்ல. அப்படியே நீங்கள் ஏதேனும் வில்லத்த்னம் செய்து அவர் அதனால் " எனக்கு கிழக்கு போதும். இணையமே வேண்டாம் " என்று ஒதுங்கினால் அதுகூட அவருக்கு நல்லதே. மாறாக, மறுபடி பறுபடி, இந்த வாக்கியத்தை கழுத்தில் எழுதி மாட்டிக் கொண்டு போகுமிடமெல்லாம் நீங்கள் பிரகடனம் செய்தால், வில்லன் ஸ்தானத்திலிருந்து நீங்கள் மாறி காமெடியன் ஆகி விடுவீர்கள்.

    உங்கள் ந்ன்மைக்காக சொல்கிறேன். இப்படி எல்லாம் பேசாதீர்கள்.

    "பதில் சொல்லாமல் போகிறவர்கள் எல்லாம் பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்று நீங்கள் சொல்வதால் இந்தப் பதில் எழுதினேன். இதை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால், நானும் "பெரியவர்கள்" லிஸ்டில் சேர்ந்து விடுவேன் என்பதை அறிக நண்பரே...:-)

    இப்படிக்கு
    "கழக உடன்பிறப்பு"

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...