Friday, February 25, 2005
மின்னணு அரசியல்
" எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு முறையில் குறைபாடுகள் இருப்பதாக திரும்பத் திரும்ப சொல்லி இங்கே அரசியல் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.
அந்த மெஷின் வடிவமைப்பில் பங்கு கொண்டவன் என்ற முறையில் நான் சொல்கிறேன்.... இந்தச் சந்தேகம் தேவையற்றது. இந்த இயந்திரத்தின் உள்ளே இருப்பது ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர். அது ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் உள்ள ராம் என்னும் ரீட் ஒன்லி மெமரியில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அந்த ஈசனே வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒரு எழவும் தெரியாது. இந்த நம்பருக்கு இத்தனை வோட்டு என்று போடப்போடக் கூட்டிக் கொண்டே செல்லும். இறுதி யில் இன்னாருக்கு இத்தனை வோட்டு என்ற பட்டியலைத் துல்லியமாக அறிவிக்கும்.
வேட்பாளரின் கட்சியெல்லாம் அதற்கு பொருட்டல்ல. சீரியல் நம்பர்தான் முக்கியம். இந்த சீரியல் நம்பர் ஆங்கில அகர வரிசைப்படி கொடுக்கப் படும். இதன் செயல்பாட்டை எந்தக் கட்சியும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாது. காரணம், அந்தக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு நம்பரில் இருப்பார்கள். இந்த மெஷினை ஒரு தட்டு தட்டினாலே வேறு ஒருத்தருக்கு வோட்டு போய்விடும் போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் கோர்ட்டில் சொல்லப் பட்டபோது குபீரென்று சிரிப்பு வந்தது. மிக எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த மெஷினிடம் பொய்யோ, வஞ்சமோ, லஞ்சமோ கிடையாது. இது அமெரிக்கத் தேர்தல் முறையைவிடத் துரிதமானது. இதிலிருந்து பழைய வாக்குச்சீட்டு முறைக்குப் போவதென்ற பேச்சே தேவையற்றது.’’
என்ன கோபம் வருகிறது பாருங்கள் சயின்ஸ் வாத்தியாருக்கு..!!!. அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்...
தாத்தாவின் புத்தகம் ஒன்றில், கேரளாவில் உள்ள பரூரில் முதன் முறை சோதனை முறையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி எழுதி இருந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதை பரவலாக உபயோகப்படுத்தி, வெற்றியும் பெற்று விட்ட இத்தனை ஆண்டுகாலம் கழித்து ஜெ இதை ஒரு பிரச்சினையாக கிளப்பி, தங்கள் பாராளுமன்றத்தேர்தல் தோல்விக்கு காரணம் தேடிக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இப்படியெல்லாம் நொட்டை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஜெ பேசாமல் இன்னும் உருப்படியாக ஏதாவது செய்தாலே போதும். இன்னும் எத்தனை போலி சாமியார்களும், சந்தனக்கடத்தல்காரர்களும், சைக்கிள் பாகங்களுக்கு தமிழ்பேர் தெரியாத மாஜி சைக்கிள் கடைக்காரர்கள் இருக்கிறார்கள். ??? :-)
அமெரிக்க தேர்தலில் இந்த இயந்திரத்தால் நடந்த குளறுபடிகளை காரணம் காட்டும் நம்ம அரசியல் அபிஷ்ட்டுகள் இதை எல்லாம் படித்தார்களா என்று தெரியவில்லை. எப்படியோ அம்மா சொன்னதற்கு ஜால்ரா ( சுப்புவின் பேட்டி) அடித்தால் போதும் என்பதுதான் பாதிபேருக்கு தினசரி வேலையாக இருக்கிறது.
சுஜாதாத்தா ஜாக்கிரதையாக இருக்கவும். அம்மாவின் தொண்டர்கள் ஆட்டோ ஆட்டென்று ஆஆஆ...ட்ட்டி விடப் போகிறார்கள்...பாவம். வயசான காலத்தில் இதெல்லாம், இத்தனை கோபம் அவருக்குத் தேவையா..??
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
Who is this Raja?
ReplyDelete//அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்...//
// Who is this Raja?
ReplyDelete//அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்...//-//
காசி, சுஜாதா ஸ்டைலில் சொன்னால் 'அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் மாதிரிதான்' - இல்லையா மூக்கன்? அதற்கு விடை இருக்கிறதா எங்கேயாவது?
மற்றப்படி: கந்தன் புத்தி கவட்டுக்குள்ள என்பார்கள். ஆனாக்க அந்த மடம், ஆகாட்டி சந்த மடம். ஜெயலலிதா ஜெயித்திருந்தால் மஞ்சத்துண்டு இதே கூப்பாடு போட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயலலிதா வசிப்பது ஒரு தனி உலகம். அதற்கென்று தனி நியதிகள் - வேறென்ன சொல்வது!!
//அம்மாவின் தொண்டர்கள் ஆட்டோ ஆட்டென்று ஆஆஆ...ட்ட்டி விடப் போகிறார்கள்...//
ReplyDeleteஅந்த லட்சணம்தான்இங்கே தெரிகிறதே: கட்டிக்கொண்டு வா என்றால் ..ட்டிக்கொண்டு வந்துவிடமாட்டார்கள்?
காசி,
ReplyDeleteகுவளகுடி சிங்கமய்யங்கார் என்பது சுஜாதாவின் பாட்டனாரா, பூட்டனாரா தெரியவில்லை. "சிங்கமய்யங்கார் பேரன்" என்று ஒரு தடவை இதைப் பற்றி எழுதினார் அவர். ஸ்ரீஈரங்கத்தில் வெதபடாசாலை வைத்து ஏழை வைஷ்னவக் குழந்தைகளுக்கு பிரபந்தம் சொல்லிக் கொடுத்த வமிசம் என்று பெருமையாக சொல்வார். அவருடைய பையபிரசாத்களில் ஒருவர் ஜப்பான் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டதி பற்றி விசனப்பட்டபோது கூட இந்த சிங்கமய்யங்கார் வமிசம் குறுக்கே வந்தது.
பாம்பு, மஞ்சத்துண்டு தோற்றுப் போயிருந்தால்" தமிழனுக்கு சொரணை கெட்டு விட்டது. அவன் வாழை மட்டை. மாற்றாரின் பசப்பலுக்கு மடங்கி விட்டானவன்" என்று சொல்லி இருப்பாரே தவிர ஓட்டு இயந்திரம் பற்றி அவர் ஏதும் சொல்லமாட்டார். தெரியாததை தெரிந்த மாதிரி பாவ்லா காட்டுவதில் ஜெ தான் ஜித்தர்.
தங்கமணி, பாம்பு, ராதாகிருஷ்ணன். என் நன்றிகள்.
"என்ன கோபம் வருகிறது பாருங்கள் சயின்ஸ் வாத்தியாருக்கு..!!!. அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்... தாத்தாவின் புத்தகம்..."
ReplyDeleteசுஜாதா அவர்களின் கருத்தோடு ஒத்துப் போகும்போது கூடவா அவர் ஜாதியை இழுக்க வேண்டும்? ஏன், 15 நிமிடப் புகழுக்கு ஆசையா? தாத்தா அவர்கள் இந்த வயதில் இருக்கும் சுறுசுறுப்பு நமக்கு அந்த வயதில் இருந்தால் அது நாம் செய்தப் புண்ணியம் என்றுதான் கொள்ள வேண்டும்.
"அவருடைய பையபிரசாத்களில் ஒருவர் ஜப்பான் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டதி பற்றி விசனப்பட்டபோது கூட இந்த சிங்கமய்யங்கார் வமிசம் குறுக்கே வந்தது."
ஒரு சராசரித் தகப்பன் விசனப்பட்டுக் கொள்வதைக் கிண்டல் தொனியில் எழுதுவதைப் பற்றி என்னக் கூற?
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு ராகவன்,
ReplyDeleteகண்டிப்பாக கிண்டல் தொனியில் அவர் ஜாதியை/பெயரை உபயோகப்படுத்தவில்லை.
தான் குவளகுடி வம்சம் என்று எங்கு பார்த்தாலு அவர் எழுதிக் கொண்டால் அதில் ஒன்றுமில்லை??? அதையே நான் அதை எழுதினால் அவரை இழிவுபடுத்துகிறேன் என்று அர்த்தமா..??
இது சரியில்லை ஸார். Please dont get in to skewed interpretations..
I have grat respect for Mr.Rangaraajan.
EVM எனப்படும், இந்த எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் பற்றி தமிழ்நாட்டில் நடக்கும் விவாதங்கள் ஒருபுறம். கொஞ்சம் பொறுங்கள்! இரண்டு நாளில் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வௌதயானாதும் - கருத்துக் கணிப்புகள் சொல்வது போல, லாலு அதில் பெருந்தோல்வி அடைந்தால் அடுத்த பூதம் இன்னும் கொஞ்சம் பெருசாகக் கிளம்பக் கூடும். ஏற்கெனவே லாலு, EVM பற்றி 'Expert comment' சொன்னவர்தான். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் கட்சி காங்கிரஸுடன் சேர்ந்து அங்கு அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுவிட்டனர். அதனால் தப்பியது EVM. இல்லாமல் போய் இருந்தால் அப்போதே இந்தப் பிரச்னை தலையெடுத்திருக்கும். இப்போதும் ரெண்டு நாள்.... Just ரெண்டே நாள் பொறுங்கள்.
ReplyDeleteஅடுத்த வாரம் 'அம்மா'வோடு கை கோர்த்துக் கொண்டு லாலு ஆட்டம் போட நேர்ந்தால் ஆச்சரியப்படாதீர்கள். 'கோர்ட்டுக்கு போகிறோம்' என்று கூட கிளம்புவார்கள். ஆனால் ஒன்று! கோர்ட்டுக்கு போனாலும் இந்த விஷயத்தில், இனி தப்பு அரசியல்வாதிகளால் எதையும் சாதிக்க முடியாது. காரணம் - இந்த EVM ஏற்கெனவே பலமுறை கோர்ட்டு படியேறி... இறங்கி... வெற்றி பெற்றுதான் இப்போதைய இடத்தை அடைந்துள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் (கோர்ட் படியேறிய சமாச்சாரம்) பெற விரும்புபவர்களுக்கு 1999ல் முதன்முறையாக ஒரு மாநிலம் முழுக்க (கோவா) நடக்கும் தேர்தலுக்கு EVM பயன்படுத்த முடிவு செய்தபோது நான் எழுதிய கட்டுரை 'எப்படி ஜெயித்தது எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?'க்கு http://www.ambalam.com/idhal/podhu/1999/may/podhu23_02.html இணைப்பு தந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து, கருத்து சொல்லலாம்.