Skip to main content

Posts

Showing posts from March, 2006

திங்கள் சூசகம்

ஹி..ஹி..
111இடங்களில் தனித்துப் போட்டி
இவருக்கு அதுக்குள்ள ரிசல்ட் எப்படித் தெரிஞ்சது..??
டேய் ..மூக்கு..!! ஜாக்கிரதை. என் நெலமை உனக்கும் வந்துரப் போவுது...!!

சாகஸ ஞாயிறு

ஒரே திருவிழாக் கூட்டம்தான். அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா நெடுஞ்சாலைகளும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டி, திக்கித் திணறின. ஏழெட்டு மைல் முன்பிருந்தே மினுக்கும் பலகைகள் வேறு வழிகளை நாடச்சொல்லி கெஞ்சின.
மக்கள் கேட்கவில்லை.குளிர்காலம் முடிந்து வெய்யில் கிட்டத்தட்ட "சுள்"ளென்று உறைக்குமாறு அடிக்கும் நேரம். எல்லோரும் ஓவர்கோட் போட்டுக் கொண்டு, முன்னெச்சரிக்கையாக சன்ஸ்கிரீன் பூசிக் கொண்டு(ம்), மடக்கு நாற்காலிகள், பெட்ஷீட்டுகள், குளிர் கன்ணாடிகள், சிப்ஸ்/பிஸ்கட், குழந்தை குட்டிகளுடன் பெரிய்ய்ய பேரணியாகவே கிளம்பி விட்டார்கள்.

மாயூரத்தில் அஞ்சாம் திருவிழாவுக்கு தேர் பார்க்கப் போவது போல இருந்தது.

இது அமெரிக்க விமானப் படையின் முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் தொடர்புக்கு அருமையான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்லுவேன். சாக்ரமண்டோவில், மேத்தர் ஃபீல்ட் என்ற இடத்தில் உல்ள ஏர்ஃபோர்ஸ் பேஸில், எல்லா வகையான பறக்கும் ஊர்திகளையும் கொண்டு வந்து வானில் சாகஸம் நிகழ்த்திக் காட்டும் ஏர் ஷோ. தலைக்கு 15$.
இத்துடன் கார் பார்க்கிங், மற்றும் உள்ளே சுற்றுலா பொருட்காட்சி திடலில் சாப்பாடு விற்பது ப…

லல்லல்லா...லாலு

இந்திய அரசியலில் உச்சபட்ச கேலிக்கு உள்ளாகும் ஆட்களில் லாலுவும் ஒருவர் என்பது புதிய செய்தி இல்லை. அவருக்காகவே ஸ்பெஷலான ஜோக்குகள், அவருடைய பேட்டி க்ளிப்பிங்குகள், அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை என்று எல்லாமெ நமக்கு ஜோக்குதான்.என்னுடைய காலேஜ் சீனியர் - ஐ.ஆர்.எஸ் நண்பர் பாலா, தன்னுடைய பேட்ச்சில் இருந்த பீஹார் நண்பர்கள் லாலுவின் மேல் வைத்திருந்த அபார மதிப்பை, எனக்கு ஒரு காலத்தில் சொன்னார். மீடிவாவின் சித்தரிப்புக்கு மாறாக லல்லு எவ்வளவு நல்ல மனிதர் என்றும் அவர் சொன்னபோது நம்பவில்லை.

இந்த வார விகடனில் வந்திருக்கும் கலக்குறாரு லாலு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பார்வைக்கு :


ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்’ என்று யாராவது கேட்டால் தடுமாற வேண்டிய தேவையே இல்லை. சும்மா ‘லாலு’ என்று சொன்னாலே போதும்! சிரிப்பு தானாகவே வரும்! அப்படி ஒரு காமெடியனாக பலராலும் சித்திரிக்கப்பட்டு வருகிறவர்தான் முன்னாள் பீகார் முதல்வரும் இந்நாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்! அப்படிப்பட்டவர் கடந்த இரண்டு வருட காலமாகப் பலரும் பாராட்டும் அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துக் கொண்டிருப்பது, ஆச்சர்யத்திலும…