Saturday, July 08, 2023

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து 

-----------------------------------------------------------------------------------

ஃபெட்னா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு திரு அப்துல் ஹமீது முன்னிலையில் பாடி அவரிடம் “ கணீர்” குரல் என்ற பாராட்டு பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.  ஆனால் நான் ஏதோ ”சிறப்பு அனுமதியின்”  பேரில் அந்த நிகழ்ச்சியின் உள்ளே புகுந்ததை போல சிலர் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனை விளக்கவே இந்த பதிவு. 

நான் எந்த தேதியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தேன் என்று நினைவில்லை. ஆனால் ஜூன் 21, 2023 அன்று அதிகாலை எனது ஈமெயில் கேட்டு புலனச் செய்தி வந்தது. 

பின்   நான்  “ வெயிட் லிஸ்ட்டில் இருப்பதாக எனக்கு பதில் வந்தது. அதற்கு நான் பதில் அனுப்பினேன் என்றுதான் நினைத்தேன்.   ஆனால் ஜூன் 25 அன்று பெட்னா இணை ஒருங்கிணைப்பாளர்  மலர்மகள் அகிலன் எனக்கு தொலைபேசி ”நான் பதில் போடவில்லை”  என்று நினைவுறுத்தினார், மேலும் நான் வெயிட் லிஸ்டில் எல்லாம் இல்லை. you are confirmed.  எனவே உடனே பதில் அனுப்பவும்”  என்றார், 

அதன் பின்தான் நான் மலருக்கு ஜூன் 25 அன்று பதில் அனுப்பினேன். பின் மேலே உள்ள புலனச்செய்தியில் பதில்  அனுப்பியதையும் தெரிவித்தேன்.அதையும் நீங்கள் பார்க்கலாம்    

ஜீமெயில் விபரம் கீழே: 


பின் நான் நிகழ்ச்சிக்காக  தயாராக ஆரம்பித்தேன். ஜூன் 30 அன்று மலர் என்னை பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்காக  உருவாக்கிய ஒரு வாட்ஸப்  குழுவில் சேர்த்தார். 




 நிகழ்ச்சி நாள் ஞாயிறு  அன்று, எனக்கு  காலையில் மரபுக்கலைஞர் முத்துச்சந்திரன் அவர்களின் தோல்பாவைக் கூத்து இணை அமர்வு இருந்தது   மதியம் கொஞ்சம் தாமதமாக சாப்பிடச் சென்றேன். பின் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி முடிந்து இரவு உணவை முன்னமேயே சாப்பிட்டு விடலாம்  என்று  உணவை டப்பாவில் போட்டுக் கொண்டு வந்து அரங்கின் முன்னே  வெளியே அமர்ந்து விஜயா ரமேஷுடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது Roseville மரகதவேல் எனக்கு போன் செய்து ” மலர்  உங்களை உடனே மற்ற பங்கேற்பாளர்களுடன் backstage ல் நிகழ்ச்சிக்கு 30 நிமிடம் முன்னே ரெடியாக இருக்க வேண்டும் என்று சொல்ல சொன்னார்”  என்று நினைவுபடுத்தினார். நிகழ்ச்சி நாள் அன்று போட்டியாளர்களின் பெயர், அவர்கள் சார்ந்திருக்கும் தமிழ் மன்றம் போன்ற விவரங்களை மற்ற போட்டியாளர்களுடன் அதில் பதிவு செய்தேன்.   


பின்  அவசரம்   அவசரமாக ஓடி வந்து ஜேசு, மருதுபாண்டியன், விசாலி , பிரார்த்தனா போன்ற மற்ற போட்டியாளர்களுடன் காத்திருக்க ஆரம்பித்தேன். 
ஒவ்வொரு போட்டியாளராக செல்ல செல்ல அடுத்து என்னைக் கூப்பிடுவார், அடுத்து என்னைக் கூப்பிடுவார்  என்று தேவுடு காத்துக் கொண்டு இருந்தேன். 
விசாலி போட்டியிலிருந்து வெளியேறியதும் ஹமீது அவர்கள் பிரார்த்தனாவிடம் ”நீங்கள்தான் இறுதி போட்டியாளர் என்பதால் நீங்களே வெற்றியாளர்.” என்று நிகழ்ச்சி முடிந்ததாக திடீரேன்று சொன்னபோதுதான் எனக்கு உறைத்தது - ஏதோ குழப்பம் நடந்து விட்டதென்று. 

சகபோட்டியாளர்கள் என் பதட்டத்தினை பார்த்துவிட்டு அவர்களுக்கு  நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் இருந்து கிடைத்த லிஸ்டை மொபைல் போனில்  பார்க்க அதில்  என் பெயர் இருந்தது. உடனே  மேடையில் அப்போது இருந்த  Program Committee Chair  Mahesh Babu என்ன ஏது என்று கேட்டார். நிலைமையை விளக்கினேன். உடனே அவர் திரு அப்துல் ஹமீது அவர்களிடம் கேட்டார்.  முதலில் நேரமில்லை என்று தயக்கம் தெரிவித்த ஹமீது அவர்கள் பின் அவரிடம் கொடுக்கப்பட்ட லிஸ்டில் என் பெயர் விடுபட்டதை அறிந்து என்னை பாட அனுமதித்தார். 


பின்,  நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் மேடையிலேயே மலர்மகளிடம் கேட்டேன் - என்ன என் பெயரை விட்டு விட்டீர்களா - என்று. அதற்கு மலர்மகள்  ” நான் சரியான லிஸ்டைத் தான் கொடுத்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை”  என்றார்.  மன்றத்தில் ஒருவர் செய்த தவறை , மன்றத்தில் இருந்த இன்னொருவரே ( மகேஷ்பாபு)  சரிசெய்து விட்டதால்  அதை பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன். 

நிலைமை இப்படி இருக்க நான் ஏதோ சலுகை பெற்று, சண்டை செய்து , ஆட்டத்தை கலைக்க  முயற்சி செய்தது போன்று என் ”நண்பர்கள்”  சிலர் காதைக் கடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அதற்கே இந்த விளக்கம். 

என்னை அறிந்தவர்களுக்கும், என் மனச்சாட்சிக்கும் தெரியும் . காரியம் முக்கியமில்லை. வீரியம் பெரியதென்று வாழ்பவன்  நான். எனக்கு இருக்கும் விருப்பங்களுக்கும், திறமைகளுக்கும், சமூகதொடர்புகளுக்கும் நான் நினத்து இருந்தால் எத்தனை எத்தனையோ வாய்ப்புகளை பெற்று இருக்கலாம். பிறப்பிலேயே கூட வந்த தன்மானமும் சுயகெளரவமும் என் காரியத்துக்காக யார் முன்னும் பணிந்து, வாலைக் குழைத்து நிற்பதை தடுப்பதால் நேரான வழியில் எனக்கான   இடத்தினை பெற்று வருகிறேன். 

இந்த நிகழ்ச்சியில் மேலும் விவரம் தேட விருப்பம் உள்ளோர் மேற்குறிப்பிட்ட நம் நண்பர்கள் அனைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அங்கங்கே இதற்கான மடல், புலனச்செய்தி போன்றவையையும் இணைத்துள்ளேன். 
என் நோக்கம்- பட்டியலில் என் பெயர் இருந்ததால் பாடலாம் என்று போனேனே தவிர யாரிடமும் போட்டி போட்டு அவர்கள் வாய்ப்பைக் குலைக்க அல்ல. தமிழ் மன்றம் செய்த குளறுபடியால் அப்படி ஒரு தோற்றம் என்னைப் பற்றி ஏற்பட்டு விட்டது . என் நேரம் :-( 

நன்றி வணக்கம்  


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...