Skip to main content

Posts

Showing posts from September, 2005

அழகாய் இருக்கிறாய்..பயமாய் இருக்கிறது

ங்கொப்புரானே..சத்தியமான உண்மைங்க இது.

ஏதோ தமிழ்ப் படத்தோட பேரு இந்தப் பதிவோட தலைப்பு . வெச்சவனுக்கு சத்தியமா லவ்வுன்னா என்னான்னு தெரிஞ்சுருக்குங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி சுஜாதாவோட பிரிவோம் சந்திப்போம் முதல் பாகம் படிச்ச சமயத்தில - " கையை அப்பா உட்கார்ந்த நாற்காலியின் முதுகில் முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தாள் மதுமிதா. நிலவின் தயவில் அழகாகத் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்து ரகுவுக்கு வயிற்றுக்குள் திடுக் என்றிருந்தது" என்று எழுதி இருந்த வாத்தியாரோட கைக்கு முத்தா குடுக்க வேண்டும் போல இருந்தது. அனுபவிச்சவனுக்கு தெரியுமே..!! மாட்டிக்கப்போறோமேன்னு நினைச்சுகிட்டே கிட்டக் கிட்ட போயி உழுவுற விஷயமுள்ள இது. அதனால்தான் மேற்சொன்ன படத்தலைப்பை கேட்டதும் அப்...புடி இருந்தது.

விஷயம் என்னன்னா, இப்போ பிரிவோம் சந்திப்போம் கதையே படமா வருதாம். "செல்லமே" காந்திகிருஷ்ணா எடுக்கறார்னதும் கொஞ்சம் கவலையா இருந்தது. செல்லமே சுவாரஸ்யமான படமென்று ஒத்துக் கொண்டாலும், நல்ல படமென்று சொல்ல முடியாதபடிக்கு கமர்ஷியல் ஜரிகை கொஞ்சம் தூக்கல்தான்.
பிரிவோம் சந்திப்போம் ஜீவன் கெடாதபடிக்கு எப்படி எடு…

ஹி..ஹி

கிழட்டு அனுபவங்கள்(4) - மலேசியா ராஜசேகரன்

இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட NEW ECONOMIC POLICY சொன்ன காலத்தில் முடிவடையவில்லை. வெவ்வேறு காரணங்கள சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தோடு இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்று சட்டமாக்கப் பட்டதோடு நின்றுவிட்டது. மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் எல்லா நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறிவிட்டது.

அரசாங்க வேலைகளில் தொண்ணூறு சதவீதம் மலாய்க்காரர்களுக்கு என்று ஆகி விட்டது. ஆரம்பத்தில் அரசாங்க டென்டர்களில் மலாய் நிறுவனங்களின் விலை பதினைந்தௌ சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் பாதகமில்லை, ப்ராஜெக்டுகள் அவர்களுக்கே வழங்கப் பட வேண்டும். விலை வித்தியாசம் அதையும் மிஞ்சினால் மட்டுமே மற்ற இனத்தவருக்கு ப்ராஜக்ட் வழங்கப் படவேண்டும் என்று ஒரு கொள்கை இருந்தது. ஆனால் தற்பொழுது எல்லா அரசாங்க டெண்டர்களுமே மலாய் நிறுவனங்களுக்கு ம்ட்டும்தான் என்று ஆகி விட்டது.

அதேபோல் பல்கலைக்கழக நுழைமுக படிப்பு - மலாய் இனத்தவருக்கு மெட்ரிக்குலேசன் என்ற கல்விமுறையின் கீழ் சொல்லிக் கொடுக்கும் அதே கல…

ஹாலிவுட் அபூர்வராகங்கள்

மே-திசம்பர் தம்பதிகள் என்றால், அமெரிக்காவில் வாயைச் சுழித்துக் கொண்டு மர்மப்புன்னகை பூப்பார்கள் வெள்ளைக்காரர்கள். மே மாதம் பிறந்த ஆணும், திசம்பர் மாதம் பிறந்த பெண்ணும் கணவன் மனைவியாக்கும் என்பதன் கூட,
மே மாசம் பிறந்த வயதாகிவிட்ட ஆண், தோற்றத்துக்கும் இளமைக்கும் மட்டுமே மதிப்புக் கொடுத்து ஒரு சின்னப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டான் என்பதும், அந்த சின்னப் பெண் கிழவனாரிடம் இருக்கும் டப்புக்காக, அவரை கல்யாணித்துக் கொண்டாள் என்பதும்தான் அந்த இளக்காரச்சுழிப்புக்கு காரணம்.

இதிலும் இங்கே புரட்சி.நாற்பத்திரண்டு வயதான பேரிளம்பெண் டெமி மூர் இருபத்தேழு வயதான ஆஷ்டன் கெட்சர் என்ற குட்டி நடிகனை மூன்றாவது கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்களாம். நேற்று லாஸேஞ்சலீசில் கல்யாணம். கல்யாணத்துக்கு இரண்டாவது புருஷன் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் ப்ரூஸ் வில்லிஸ் மூலம் பிறந்த டீன் ஏஜ் குழந்தைகளுடன் அம்மணி கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.அந்த குழந்தைகளில் ஒன்று தன் புது அப்பாவை MOD ( My other Daddy) என்று கூப்பிடுகிறதாம்.

நாம் அங்கே குஷ்புவை மன்னிப்பு…

நாணயமில்லா விகடன்

இப்போதுதான் முதல் இதழ் வந்திருக்கிறது. அதிலேயே பெரிய டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறது நாணயம் விகடன்.

"செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்ற வரிகளோடு அரம்பிக்கும் ஒரு கட்டுரையை இந்த வசதியை உண்மையிலேயே கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பார்த்தால் ரத்தக்கண்ணீர் விட்டு விடுவார்கள்.

காரணம்...கண்டுபிடித்த "விஞ்ஞானி" ஷங்கர் நாராயணன் எங்கள் இந்திய கம்பெனியில் பணிபுரிந்த மார்க்கெட்டிங் மேனேஜர் ஷங்கர். அவருக்கும் மல்ட்டிமீடியாவுக்கும் இத்த்னை தொடர்பு இருக்கிறதென்று விகடன் பேட்டி வரை அவருக்கே தெரியாதென நினைக்கிறேன். அவரோடு நான் பேசி இருக்கிறேன். பழகி இருக்கிறேன்.

இங்கு வந்தது கூட எங்கள் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் கம்பெனி முதலாளி கால்யா மூலமே வந்தார். Emuze என்பது கால்யாவின் கம்பெனி. அந்த ஈம்யூஸிலே செல்ஃபோன் காமிராவிலே உபயோக்கப்படும் Compression Software கண்டுபிடித்தார்களென்று தெரியும். அதனால் அந்த நிறுவனத்தை Flextronix என்ற நிறுவனம் வாங்கியதென்று தெரியும் அதில் இவர் துணைத்தலைவரா என்பது கூட கேள்விக்குரியது என்கிறார்கள் அவருடன் இப்போதும் தொடர்பி…

கிழட்டு அனுபவங்கள்(3) - மலேசியா ராஜசேகரன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்கி 1940 வரை இந்தியர்கள் மலாயாவிற்ககு கூலி வேலைக்காகவும், தொழில் புரிவதற்காகவும் சரமாரியாக வந்துகொண்டு இருந்தனர். பிறகு இரண்டாம் உலகப் போர் வந்தது. இந்தியர்கள் இங்கு வருவதும் நின்றது.

ஆரம்பத்தில் இந நாட்டில் இந்தியர்களின் நிலை ஒரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேதுறையிலும், சாலை நிர்மாணிப்புத்துறையிலும் கூலி
ஆட்களாக வேலை செய்து வந்தனர், சிறிது படித்ததவர்கள் அரசாங்க வேலைகளில் - ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியன்களாகவும் பணி புரிந்தனர். பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர். ஆக எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந் நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு, என் காலத்திலேயே நான் பார்க்க இருந்தது.

பிறகு 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி, இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனவரது தலைஎழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு வரலாறு படைக்கு…

வானளாவிய ரைஸ்

காந்தலீசா ரைஸ் என்ற பெயரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கன்சர்வெட்டிவ் கட்சி மற்றும் சிவில் லிபர்ட்டியில் அந்தளவு நம்பிக்கை அற்ற குடியரசுக் கட்சியில் ஒரு கறுப்பின மாது, இத்தனை உயரங்களுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்து நான் ஆச்சரியப்படுவதுண்டு.

ஜார்ஜ் புஷ் மூச்சா போக வேண்டுமென்றால் கூட இவரைத்தான் கேட்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வழக்கம்போல, அதிபருக்கு சங்கடமூட்டும் இந்த சேதி அமெரிக்க ஊடகங்களால் மழுப்பப்பட்டது.

சொரணை

இந்த நெளிவு சுளிவுன்னு ஒரு சமாசாரம் இருக்கு. எல்லா சைடையும் தட்டி விட்டுகிட்டே, எல்லா சமரசத்தையும் பண்ணிகிட்டே, அப்படியே சைடுல பொழப்பையும் பாத்துக்கிறது. இலக்கியத்தோட வேற "ஏதும்" கலக்கும் முன்னாடி, இலக்கியவாதிகளும் எழுதுபவர்களும் நெளிவு சுளிவு இல்லாத ஏமாளியாகத்தான் இருந்தார்கள். எப்போ, மத்த கேட்டகிரி எல்லாம் இதுல எறங்கிச்சோ, அப்பவே தந்திரமும், ஆள்காட்டித்தனமும், தனக்குன்னு ஆள் சேத்துகிடுறதுக்காக எந்த லெவலுக்கு வேணா இறங்கறதும், மனசாட்சியைக் கயட்டி வெச்சுட்டு அதுக்கு விரோதமா ஜல்லி அடிக்க இறங்கறதும், இன்னமும் மத்த அலங்காரங்களும் சேந்துடுச்சி

கெவின், கெவின்னு எங்க ஆபீஸ்ல ஒரு ஆள். சரியான மண்டைன்னு மக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நான் அந்தளவு பழகினது இல்லை. நான் வரதுக்கு முன்னயே வேற டீமுக்கு போய்ட்டாராம். ஆனா பாக்கும்போதே கொஞ்சம் ரிசர்வ்டு டைப்புனு - முசுடுக்கு Euphemism - தோணற முகம். அவர் எழுதிவெச்ச ஷெல் ஸ்க்ரிப்டுதான் இன்னைக்கு வரை ஜே ஜேன்னு ஓடிகிட்டு இருக்கு.

ஆனா பாருங்க..அவருக்கு மேலே சொன்ன சமாசாரம் ப்ராப்ளம். நெளிவு சுளிவுங்கறதே சுத்தமா கிடையாது. அவருகூட சண்டை வராத ஆட்களை…

பலாப்பழம் - இதயக்கனி..??

சந்தேகமே இல்லை. அரசியலில் கண்டிப்பாக ஜெயித்து விடுவார்.

இதுவரை கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகங்களையும் எல்லாரும் களைந்து விடலாம். பின் என்ன..?? பண்ருட்டி ராமச்சந்திரன் அ.கொ.தீ.....ச்..சீ.. தே.மு.தி.கவில் இணைந்து விட்டாராம்..!! அதிமுகவில் எம்.ஜி.ஆர் சகல செல்வாக்குடன் இருந்த காலகட்டங்களிலேயே டெல்லி வேலைகளுக்கு பண்ருட்டியாரைத் தான் நம்பி இருந்தாராம். திமுகவுக்கு நாஞ்சில் மனோகரன் போல, அதிமுகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் என்று சொல்லப்பட்டது அந்தக் காலத்தில்.

அது சரி..ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் நம்ம கப்பித்த்தான் எதற்கு பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிறார்..?? காரணம் ரொம்ப சிம்பிள். எதை (கி)ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தாலும், முதலில் அரசியல் தரகர்கள் - பச்சையாக புரோக்கர்கள் - முக்கியம். பவுடர் மூஞ்சிகளை வைத்துக் கொண்டு வசனம் பேசலாமே ஒழிய பாலிட்ரிக்ஸ் பண்ண முடியாது என்பது கப்பித்தானுக்குத் தெரியும். இதே காரணத்துக்காகத்தான் "காலத்தின் கட்டாயம்" புகழ் ஆர்.எம்.வி சூப்பரை சூடேற்றிக் கொண்டிருந்தார். அவரை நம்பியதற்கு இவரை நம்பி இருந்தாலாவது.......பொறுங்கள் ...... பொறுங்…

கிழட்டு அனுபவங்கள் - மலேசியா ராஜசேகரன்

இதுவரை படிக்காதவர்களுக்காக - முதல் பகுதி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தான் இந்தியாவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் மலாயாவிற்கு பிரிட்டீஷ்காரர்களால் இங்கு உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வற்காக கொத்தடிமைகளாக கொண்டுவரப் பட்டனர். ஒரு மேஜயை போட்டு 'விருப்ப பட்டவர்கள் மலாயா போவதற்கு பதிந்து கொள்ளலாம்' என்று பிரிட்டீஷ்காரர்கள் தங்களின் முதல் ஆள்சேர்ப்பு வேலையை மேற்கொண்டதே மதராஸ் துறைமுகத்தில்தான்

இப்படி வந்தவர்கள் எத்தகைய மக்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? பொருளாதாரம் என்று எதுவுமே இல்லாதவர்களும், தாழ்த்தப் பட்டவர்கள் என்று ஒதுக்கப் பட்டவர்களும், குடும்பம் குட்டி என்று பாரம்பரியம் எதையும் சுட்டி காட்ட முடியாதவர்களும் தான் வந்தவர்களில் பெரும்பாலோர். அதனால்தான் இன்றளவிலும் இந்தியர்கள் உலகம் முழுவதிலும் 96 நாடுகளில் குடியேறி நல்ல பொருளாதார நிலைகளில் இருந்தாலும், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மட்டும் நலிந்து போய் கிடக்கிறார்கள். காரணம் அடிப்படையிலேயே இங்கு வந்து சேர்ந்த தமிழ் இனத்தின் தரம் சிறிது கம்மியானதாகப் போனதனால் தான்.

மலேசியாவில் சிறையில் உள்ளவர்களில் 45% இந்…

கிழட்டு அனுபவங்கள் - மலேசியத் தொடர்

பெற்றோர்கள் ஊருக்குப் போன அலுப்பில் இருந்த நான், அமெரிக்க வாழ்க்கை ஏற்படுத்தும் தம்னிமை உணர்வையும், ஊருக்குப் போய் விடலாமா என்று தோன்றுவது பற்றியும் எழுதி இருந்தேன். கடந்த நூறு வருடங்களாக மலேசிய மண்ணில் செட்டில் ஆகி இருக்கும் என் நண்பர் அதற்கு எழுதிய பதில், அவர் வார்த்தைகளிலேயே "கிழட்டு அனுபவங்கள்" என்ற தொடராக உருப்பெற்று விட்டது.

இனி " மலேசியா" ராஜசேகரன் பேசுகிறார் .....

நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் (நானும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவில் உள்ள 500 உறவினர்களில், 90 விழுக்காட்டினரும்) இங்கு NRI ஆக இருப்பதில் ஒன்றும் பெரிதாய் பெருமிதம் கொள்ளவில்லை.

மலேசியாவில் இன்னமும் நாங்கள் second class citizens தான். இங்கு முதல் சலுகை bumiputra என்று அழைக்கப் படும் மலாய் இனத்தவருக்குத் தான். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கு கொடுக்கப் படும் சலுகை அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. யுனிவர்சிட்டி நுழைவுத்தேர்வில் துவங்கி , கல்லூரி பரிட்சை வரை, அவர்களுக்கு வேறு படிப்பு முறை வேறு பரிட்சை, மற்ற இனத்தவருக்கு வேறு பரிட்சை. இரண்டு பரிட்சையின் தரங்களிலும் மலைக்கும், மடுவுக்க…

பார்வையின் மறுபக்கம்

தலைமுறை இடைவெளியின் விளைவால் என் தகப்பனாருடன் சிறு சிறு ஊடல் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா, அது வேறு ஒன்றும் அல்ல. தமிழ்நாட்டின் பழமையான சைவமடத்தில் தன் ஓய்வுக்காலத்தில் பணிபுரியும் அவர், அந்த மடத்தின் விழுமியங்களை சுவீகரித்து, பழைய நம்பிக்கைகளின் பாற்பட்டு சில - எனக்கு அபத்தமாகப் படும் - விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய, சாதி சம்பந்தமான, சைவம் சம்பந்தமான பெருமிதங்களின் மூலத்தை குறித்து தமிழிணைய பாதிப்பில் அவருடன் பேசப்பேச தீப்பொறி பறந்து விட்டது

அவ்வளவே ...

அவர் மட்டுமல்ல. நமக்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் எல்லாருமே பெருவாரியாக இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தான் என்பது தெரிகிறது. இணையம் மூலம் எனக்கு பரிச்சயமான என் மலேசிய நண்பர் ஒருவர் தன் மலேசிய ( இந்திய) அனுபவங்களை தனிமடலில் என்னுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதிலும் சாதியம் சார்ந்த நம்பிக்கைகள், மலேசியாவில் இந்தியர்களின் நிலை என்று சுவாரசியமான -அதிர்ச்சியான விஷயங்கள். அவர் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என எண்னுகிறேன்.

ரெடி..ஜூட்....

பாட்டுக்கதை

1999ம் வருடம் வரை ஆடியோ சிடிகளை கன்ணால் கூட பார்த்ததில்லை. வெறும் கேசட்டுகள்தான் அதற்கு முன்பு வரை. படம் பார்த்து விட்டோ, அல்லது புது கேசட் வாங்க முடிந்த செல்வச்சீமான்கள் யாராவது சொல்லியோ, நல்ல பாடல்களை கேட்டு, அதை மெனக்கெட்டு எழுதி, மியூசிக் கடையில் கொடுத்தால், அவன் அதை பதிவு செய்து கொடுக்க நான்கு நாட்கள் ஆகும். அந்த நான்கு நாட்களிலும், அவன் சொல்லும் " இன்னம் ஆகலை சார்" என்கிற பதில்களே எண்ணிக்கையில் நாற்பதை தாண்டி விடும். பாட்டு மீது - குறிப்பாக - சினிமாப் பாட்டு மீது பைத்தியமாக இருந்த காலங்கள் அவை. போகும் பஸ்ஸை கூட "பாட்டு பஸ்" என்று செல்லமாக வகைப்படுத்தி வைத்திருந்த தோழ/தோழியர் கூட்டம். ஏதாவது புது படம் வந்தால், வாஞ்சையுடன் ஹாஸ்டலுக்கு எடுத்து வந்து, கூட்டத்தினின்று என்னை கடத்தி ரூமுக்கு கூட்டி வந்து உட்கார வைத்து, தனிமையில் பாட்டு கேட்க வைத்து மகிழ்ந்த சக லூஸுகள். பிரியப்படவர்களுடனான என் அந்தரங்கத் தருணங்களை கூட நான் பாட்டு வடிவத்திலேயே ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன் - தென்றல் வந்து என்னைத் தொடும் -- etc etc

சிங்கப்பூர் வந்து இறங்கியவுடன் முதலிரண்டு நாட்க…

Monster-in-Law

Meet the parents பார்த்து இன்ஸ்பயர் ஆகிப் போய் எடுத்த படம் போல ஒரு படம் இது. அதில் மாமனார் மருமகன் என்றால் இதில் மாமியார்-மருமகள் குடுமிபிடி. அவ்வளவே. ஆனால் அதைப் போலல்லாமல், கொஞ்சம் நம்பமுடியாத காட்சிகளும், நிறைய ஓவர்-ஆக்டிங்கையும் போட்டு தாளித்து விடுகிறார்கள்.

கொடிகட்டிப்பறந்த ஒரு புகழ்பெற்ற பெண்மணியை வயதைக் காரணம் காட்டியும், இளைய தலைமுறையை உள்ளே விட்டும், வேலையை விட்டுத் துரத்தி விடுகிறார்கள். பாட்டியம்மா (ஜேன் ஃபாண்டா) படா டென்ஷனாகிப் போய், கடைசியாக இண்டர்வியூ எடுத்த பாட்டுக்கார குட்டியை பேட்டி எடுக்கும்போதே பாய்ந்து கடித்து எடுக்கும் அளவுக்கு கொலாப்ஸ் ஆகி விடுகிறார். ஏற்கனவே நாலுமுறை விவாகரத்தாகி, இப்போது வேலையும் போய் இருப்பவருக்கு, புள்ளாண்டான் தான் ஒரே பற்றுக்கோல். விதி விடுகிறதா..??

அவனும் ஒரு சோக்கான நாய் வாக்கரை( ஜெலோ) கண்டதும் காதலாகி, முதன் முதலாக அவளை அம்மாவிடம் அறிமுகப்படுத்த அழைத்துவரும்போதே, அவள் முன்னிலையிலேயே ப்ரபோஸ் பண்ணுகிறான். போச்சு. இவனும் நம்மை விட்டு விடுவான் போல என்று பயந்து கொண்டு, மகனின் காதலை உடைக்க தாயம்மா பேயம்மா ஆகி நாயம்மாவை அவுட் ஆக்க ஆடும் நாடகம் சொ…

மாற்றம்

911ல் பாதிக்கப்பட்ட அத்தனை ஜீவன்களுக்கும் அஞ்சலிகள்.சமீபத்திய நியூயார்க் பயணத்தின்போது நேராக பார்த்த உலகவர்த்தக மையம் - இருந்த இடம் என்னுள் ஏற்படுத்திய சலனங்கள் சொல்ல முடியாதவை

இரவில் சூரியநமஸ்காரம்

தலைக்கு தேய்க்கும் எண்ணை சிந்தி
பாத்ரூம் டைல்ஸ் பிசு பிசுக்கவில்லை
பக்கெட் வைத்திருந்த பாட்ரூம் Tub
காலியாயிருக்கிறது
"கால் கழுவ" வைத்திருந்த mug ம் இல்லாமல்
பேப்பர் டிஷ்யூ பார்த்து சிரிக்கிறது எனை
சன் டீவி சீரியல்களின் கொடுமை
இல்லை சாயங்காலங்களில்
எப்போதாவது தென்படும் அரிசி
சாதமும் குழையாமல்
கொஞ்சம் விதையாகவே இருக்கிறது
எனக்குப் பிடித்த மாதிரி
கார்ப்பெட்டில் காப்பிக்
கறைகள் இல்லை
வாசலில் காவிவேட்டியுடன்
கையில்லா பனியனோடு
காத்திருக்க ஆளில்லை
பறிக்க ஆளில்லாமல்
செம்பருத்திப் பூக்களும்...

படுத்திருந்த முன்னறை கார்ப்பெட்டும்
நீங்கள் கஷ்டப்பட்டு சீட் பெல்ட்
போட்டுக் கொண்ட
என் காரின் முன் சீட்டும்
துணிகளை நீங்களே நிதமும்
துவைத்து அலசிக் கொண்ட
கொல்லையும்
கட்டிய துணி கொடியும்
பாட்டா செருப்பு பரவிக்கிடந்த
ஷூ ஸ்டாண்டும்
வெறுமையாக இருக்கிறது
என் மனதைப் போலவே

எப்போதும் போல நான்
என் சோகத்தை
டமாரமடித்துக் கொண்டிருக்கிறேன்அப்பா அம்மா ஜூலை 5 ஆம் தேதி வந்துட்டு நேத்தி ரரத்திரிதான் ஊருக்குப் போனாங்க.வழக்கம்போல நான் ...

மிஸ் பண்ணிட்டேன்...

என்னை மட்டும் விட்டுட்டேளே..??இது ஞாயமா..?? ஆதிகேசவன், செரினா, சதுர்வேதி, ஜெயலட்சுமி, ராமர்பிள்ளை, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ், ஜீவஜோதி மற்றும் குட்டி சாமியார் பரணிதரனை விட நான் என்ன குறைஞ்சுட்டேன்..சொல்லுங்கோ...!!!!

சானியாவுக்கு இந்த சோதனை தேவையா..?

இந்திய டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் இப்படி விளையாடினால் சரியா போகுமா பிரச்சினை..??

மும்தாஜ், சதா, ஜீனத் அமன், நக்மா, போன்ற கவர்ச்சி நடிகைகளின் உடை(இல்லா) க்கு வராத எதிர்ப்பா சானியா மிர்ஸாவுக்கு..??

என்னவோ போங்க. ஒண்ணியும் பிரியலை..!!!!
ப்ளாக்கருக்குள் வந்து கால காலமாகி விட்டது போல ஒரு பிரமை. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெற்றோருடன் மல்லுக் கட்டுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

கொஞ்சம் தெளிந்து எழுந்து பார்த்தால் ஏகப்பட்ட மாற்றங்கள். புது முகங்கள். அதே பிரச்சினைகள். (ஆனால், வேறு வசனங்கள் )

பாப்போம்..இனிமேலாவது ஏதும் எழுத முடியுதான்னு. இல்லாட்டி தமிழ்த்தாய் உய்ய வழி ஏது..?

ப்ளாக்கரின் புது புகைப்பட சேவையை உபயோக்கப்படுத்த அப்லோடிய போட்டோ நம்ம ஜூனியரோடது.