Monday, September 19, 2005

பார்வையின் மறுபக்கம்

தலைமுறை இடைவெளியின் விளைவால் என் தகப்பனாருடன் சிறு சிறு ஊடல் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா, அது வேறு ஒன்றும் அல்ல. தமிழ்நாட்டின் பழமையான சைவமடத்தில் தன் ஓய்வுக்காலத்தில் பணிபுரியும் அவர், அந்த மடத்தின் விழுமியங்களை சுவீகரித்து, பழைய நம்பிக்கைகளின் பாற்பட்டு சில - எனக்கு அபத்தமாகப் படும் - விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய, சாதி சம்பந்தமான, சைவம் சம்பந்தமான பெருமிதங்களின் மூலத்தை குறித்து தமிழிணைய பாதிப்பில் அவருடன் பேசப்பேச தீப்பொறி பறந்து விட்டது

அவ்வளவே ...

அவர் மட்டுமல்ல. நமக்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் எல்லாருமே பெருவாரியாக இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தான் என்பது தெரிகிறது. இணையம் மூலம் எனக்கு பரிச்சயமான என் மலேசிய நண்பர் ஒருவர் தன் மலேசிய ( இந்திய) அனுபவங்களை தனிமடலில் என்னுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதிலும் சாதியம் சார்ந்த நம்பிக்கைகள், மலேசியாவில் இந்தியர்களின் நிலை என்று சுவாரசியமான -அதிர்ச்சியான விஷயங்கள். அவர் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என எண்னுகிறேன்.

ரெடி..ஜூட்....

3 comments:

  1. //நமக்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் எல்லாருமே பெருவாரியாக இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தான் //

    எங்கள் தலைமுறையிலும் , கொஞ்சம் குறைவெனினும் இத்தகைய எண்ணங்களுடனானவர்கள் இருக்கிறார்கள். எந்தத் தலைமுறையாயினும், காலத்துக்கொவ்வாத கருத்து உள்ளவர்களுடன் கதைக்கையில் விவாதம்தான்!

    சின்னதாய் அட! இதுதானா உங்கள் சிந்தனை என்று மனதில் ஒரு ஏமாற்றம் வருமே... கொஞ்சம் வலிக்கும்!

    //அவர் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் //

    ம்ம்ம்! எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  2. எழுதுங்க சுந்தர்

    -மதி

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...