Thursday, September 22, 2005

நாணயமில்லா விகடன்


இப்போதுதான் முதல் இதழ் வந்திருக்கிறது. அதிலேயே பெரிய டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறது நாணயம் விகடன்.

"செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்ற வரிகளோடு அரம்பிக்கும் ஒரு கட்டுரையை இந்த வசதியை உண்மையிலேயே கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பார்த்தால் ரத்தக்கண்ணீர் விட்டு விடுவார்கள்.

காரணம்...கண்டுபிடித்த "விஞ்ஞானி" ஷங்கர் நாராயணன் எங்கள் இந்திய கம்பெனியில் பணிபுரிந்த மார்க்கெட்டிங் மேனேஜர் ஷங்கர். அவருக்கும் மல்ட்டிமீடியாவுக்கும் இத்த்னை தொடர்பு இருக்கிறதென்று விகடன் பேட்டி வரை அவருக்கே தெரியாதென நினைக்கிறேன். அவரோடு நான் பேசி இருக்கிறேன். பழகி இருக்கிறேன்.

இங்கு வந்தது கூட எங்கள் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் கம்பெனி முதலாளி கால்யா மூலமே வந்தார். Emuze என்பது கால்யாவின் கம்பெனி. அந்த ஈம்யூஸிலே செல்ஃபோன் காமிராவிலே உபயோக்கப்படும் Compression Software கண்டுபிடித்தார்களென்று தெரியும். அதனால் அந்த நிறுவனத்தை Flextronix என்ற நிறுவனம் வாங்கியதென்று தெரியும் அதில் இவர் துணைத்தலைவரா என்பது கூட கேள்விக்குரியது என்கிறார்கள் அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.

யுனிகோட் (தமிழை) கண்டுபிடித்தவர் தமிழா முகுந்தராஜ் என்பவர் என்பது எவ்வளவோ அபத்தமோ, அதை விட ஆயிரம் மடங்கு அபத்தம் "செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்பது.

சங்கர் ..சரி பண்ணிடுங்க..!! இல்லாட்டி நாணயம் ( விகடன்) படுத்துரும்.

12 comments:

 1. பத்திரிக்கை தர்மம் வாழ்க. நண்பருகு தெரியாமல் புகைப்படத்துடன் செய்தி வருமா என்ன?

  ReplyDelete
 2. எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் திருமலைராஜன் மூலம், இந்த செய்தி ஏற்கனவே ஷங்கருக்கு தெரிவிக்கப்பட்டது பத்மா.

  உங்கள் தகவலுக்காக.

  ReplyDelete
 3. இப்படி வருவது புதிதல்ல. நீங்கள் கூட கலிபோர்னியா ஆளுநரின் கணினித்துறை ஆலோசகர் என்று சொன்னால் குடும்ப படத்துடன் போட்டுவிடுவார்கள், அடுத்த முறை இந்தியா போகும் போது
  முயற்சி செய்து பாருங்கள் :)

  ReplyDelete
 4. போற போக்கைப் பார்த்தா எந்தேந்த பத்திரிகையிலே எதெல்லாம் தவறான செய்தின்னு எழுதவே ஒரு வாரப் பத்திரிகை ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே! என்ன ரவி, ஆசிரியர் பதவி ஓ.கேவா? :-)

  ReplyDelete
 5. ராம் வோச்சர் மாதிரி ஒவ்வொருவரும் துவங்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 6. ரம்யா, ரவிக்கு சரியான வேலையை பிடிச்சிருக்கீங்களே. பாவம்..தமிழ் பத்திரிக்கைகள். விட்டுடுங்க. :-)

  கொண்டோடி, வலைப்பூ எல்லாமே வோர்ல்ட் வோச்சர்னு தான் இதுவரை நினைச்சுகிட்டு இருந்தேன். தனித் தனியா ஒண்ணொத்துக்கும் எதுக்கு வோச்சர்..?? :-)

  ReplyDelete
 7. அட மக்கா அவ்வளவும் பொய்யா. நானும் உண்மைன்னு நெனைச்சேனே :-(
  மொபைல்ல வீடியவ வச்சது இவரு இல்லேன்னு நெனச்சாலும் அந்த driver software எதாவது எழுதியிருப்பாருன்னு நெனச்சேன். சரி tech ki கூட இல்லையா... marketing ஆளா? எழுதியிருந்தத பாத்து ஏதோ சபீர் பாட்டியா போல கம்பெனி வச்சு புதுசா ஏதோ செஞ்சு பைசா பாத்துட்டாருன்னு நினைச்சேன் :-(
  அம்புட்டும் டுபாக்கூரா?

  ReplyDelete
 8. மாண்டீ,

  நன்றி ஹை..:-)

  ReplyDelete
 9. படிச்சேன். நன்றி!

  ReplyDelete
 10. //யுனிகோட் (தமிழை) கண்டுபிடித்தவர் தமிழா முகுந்தராஜ் என்பவர் என்பது எவ்வளவோ அபத்தமோ, அதை விட ஆயிரம் மடங்கு அபத்தம் "செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்பது.//

  இன்னைக்குத் தான் கூகிள் வழியா இந்த லிங்க் அகப்பட்டது.
  அடபாவமே... வேற உதாரணமே உமக்கு கிடைக்கலையா!!!

  -தமிழா முகுந்தராஜ்

  ReplyDelete
 11. அடடே கால்யா இனும் உசுரோட இருந்தா எனக்கு செட்டில் செய்ய வேண்டிய பழைய பாக்கியை கொடுக்க சொல்லுங்க ... நான் வேலை செய்த முதல் ஐ.டி கம்பெனி என்னை எப்படியெல்லாம் பழிவாங்கியதோ அது தனி வரலாறு நீங்க சொன்ன அந்த ஐ.டி கம்பெனி. ஹும் நீங்க சொன்ன அந்த எம்யூஸ்டிக்கும் எனக்கும் கூட தொடர்பு இப்போ இருக்கு எப்படீன்னு கேக்கறீங்களா அத அப்புறமா சொல்றேன்

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...