Wednesday, September 07, 2005

சானியாவுக்கு இந்த சோதனை தேவையா..?


இந்திய டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் இப்படி விளையாடினால் சரியா போகுமா பிரச்சினை..??

மும்தாஜ், சதா, ஜீனத் அமன், நக்மா, போன்ற கவர்ச்சி நடிகைகளின் உடை(இல்லா) க்கு வராத எதிர்ப்பா சானியா மிர்ஸாவுக்கு..??

என்னவோ போங்க. ஒண்ணியும் பிரியலை..!!!!

15 comments:

 1. வாங்க வாங்க மூக்கு சார் இப்பதான் கொஞ்சம் இளைப்பாறிக்கிட்டு இருக்கானுக நம்ம பயலுகள்
  நீங்க பத்த வச்சுட்டீகளா? முஸ்லீம் பொண்ணுங்க என்ன பண்ணனும் எப்படி உடை உடுத்தனுமின்னு
  எல்லாம் அவுக சொல்வாக நீங்க பேசமா உங்க அப்பா அம்மா கூட சண்டை போட்டமா பையனை படம் புடிச்சமானுட்டுப் போவியளா....

  ஓவர் டூ நல்லடியார்

  ReplyDelete
 2. அண்ணே, நாஞ் சொல்ரதை நல்ல வெதமா எடுத்துக்கோங்க ..

  பெரச்சினை தீர விளை சொல்லி இருக்கேனாக்கும். என்னையப் போயி பத்த வச்சிட்டேனு சொல்றீய..???!!

  ஒரு அப்பிராணியோட, ஞான சூன்யத்தோட உண்மையான சந்தேகம் அண்ணே...

  ReplyDelete
 3. ஏனுங்க இவ்வளவு அபத்தமா தீர்வு போட்டுருக்கீங்க... முகத்துக்கு பர்தா போட்டு மூடாதத சொல்ரேன். ஏன் மத்த பொண்ணுகளெல்லாம் பர்தா போட்டுகிட்டு நடக்கலையா? அதுபோல சானியாவும் பர்தா போட்டே விளையாடலாம். பர்தா போட்டு விளையாடகூடாதுன்னு எதுவும் விதி இல்லையே.
  :-)))

  ReplyDelete
 4. விளையாட்டுக்குள்ளும் மதம் மூக்கை நுழைப்பது துரதிருஷ்டவசமானது.

  தான் விளையாடும் விளையாட்டுக்குப் பொருத்தமான உடையணியும் உரிமை சானியாவுக்கு உள்ளது. இதைக் கண்டிப்பது அநாகரீகம்.

  ReplyDelete
 5. ஒரு பெண்ணைப் பெற்ற ராகவன் பேசுற பேச்சா இது?

  தொடையஒ காட்டித்தான் வெளயாடனும்ன்னா, ரம்பாவ டென்னிஸ் ஆடச் சொல்லுங்கோ.

  அவங்கவங்க வீட்டு குமரிப் பொண்ணுங்கள இப்படி தொடையைக் காட்டி ஆடச் சொல்லுங்க ராசா.

  தொடைய மறைக்கிறது டென்னிஸ் வெளயாட கஷ்டமா இருந்தா, நிர்வாணமா வெளயாடுறது அதைவிட பேஷா இருக்குமே?

  போங்கப்பூ...

  ReplyDelete
 6. ஒய்யாரே கொஞ்சம் நாகரீகமாக விவாதிக்கலாம். உங்களைப் போலப் பேச எனக்கு வராது.

  ஒரு விளையாட்டு வீராங்கனை தனக்கு வசதியாக இருக்கும் உடைகளைத் தானே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே என் கருத்து.

  மேலும் அவர் வளர்ந்து வரும் தாரகை. இந்த நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் அவருக்கு நல்லதல்ல என்பது என் கருத்து.

  மேலும், சானியாவை முஸ்லீம் பெண்ணாக நான் பார்க்கவில்லை. ஒரு இந்தியப் பெண்ணாக, எங்கள் குடும்பப் பெண்ணாகத்தான் நான் பார்க்கிறேன். தான் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்னுடைய சகோதரியாகத்தான் பார்க்கிறேன். உங்கள் கண்களில் கோளாறு இருந்தால் நீங்கள் நல்ல மருத்துவரைப் பார்ப்பது நன்று.

  ReplyDelete
 7. ராகவன் சொலதற்கு மேல் இது விஷயமாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. அவர் சொலவ்து கச்சிதம்.

  மேலும் இஸ்லாமிய நடிகைகள் விஷயத்தில் இது சம்பந்தமான கட்டுப்பாடுகள் எங்கே போயிற்று என வினவி இருந்தேன் - பதில் தர இயலாது என்று தெரிந்தே.

  அது வரையில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. //ஒரு விளையாட்டு வீராங்கனை தனக்கு வசதியாக இருக்கும் உடைகளைத் தானே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே என் கருத்து.//

  விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் மட்டுமல்ல யாரும் (ஆண்/பெண்) அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான உடைகளை அணியலாம்.

  ஒரே ஒரு சுய கட்டுப்பாடு மட்டும் இருந்தால் போதும். எந்த உடைகளை எங்கு அணியவேண்டும் என்பதே அது.

  நீச்சல் உடையை நீச்சல் குளம்/பீச்சுகளில் அணியலாம் அதையே ஆபிஸில் போட்டால் அது கண்டிக்கப்படவேண்டும் (அதுவும் அந்த ஆபிஸின் நடைமுறையப் பொருத்தது).

  சானியா என்ன டவுசரைப் போட்டுக் கொண்டு பரதமா ஆடினார்? அவர் அந்த விளைட்டுக்கு வசதியான உடையயே அணிந்தார். அப்படியே அவர் டவுசரில் பரதம் ஆடினாலும் அது அவர் விருப்பம். அவர் விரும்பியா அந்த மதத்தில் பிறந்தார்? (இது பெண்கள் மீது சாதி/சமய வன்முறை நிகழ்த்தும் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.)

  //மேலும், சானியாவை முஸ்லீம் பெண்ணாக நான் பார்க்கவில்லை. ஒரு இந்தியப் பெண்ணாக, எங்கள் குடும்பப் பெண்ணாகத்தான் நான் பார்க்கிறேன். தான் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்னுடைய சகோதரியாகத்தான் பார்க்கிறேன்//

  இதற்குமேல் யாரும் சொல்ல முடியாது. ராகவனின் நல்ல வார்த்தைகள் படித்தவுடன் நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. எல்லாத்தையும் சாதி சமயக் கண்னாடி கொண்டு பார்க்கும் அன்பர்களுக்கு/நண்பர்களுக்கு நிச்சயம் இது புரியப் போவது இல்லை.

  நீங்கள் அந்தப் பெண்ணை முஸ்லீமாத்தான் பார்ப்பேன் என்றால் ..." ஆகா எங்கள் முஸ்லீம் மதப் பெண்ணால் என் தாய் நாட்டிற்குப் பெருமை" என்று இறுமாப்பு கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு .....

  ReplyDelete
 9. ஐயா பெண்ணுரிமை பிதாமகன்களே,

  சானியா தொடையைக் காட்டி விளையாடிதான் நம்ம நாட்டுக்கு பெருமை சேர்க்கனுமா?

  இஸ்லாமிய நடிகைகள் - ஆகா கேட்கவே புல்லரிக்கிறது மூக்கையா. இஸ்லாம்னா அதுக்கு ஒரு அளவீடுகள் இருக்கு. மும்தாஜியும் குஷ்புவையும் இஸ்லாமிய முன்மாதிரியாகச் சொல்லி என்ன சார் அவங்க சேவை செஞ்சிட்டாங்க? என்னைக்கி வீட்ட விட்டு சினிமாவுல நடிக்க வெளியாகிட்டாங்களோ அப்பவே இஸ்லாத்தையும் விட்டு கிட்டத்தட்ட போயிட்டாங்க. தொழில் என்பதற்காக சாரயாம் காய்ச்சியும்,மாமா வேலை பார்த்தும் சம்பாதிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை சாரு.

  நீங்க எல்லாம் பெண்கள் உடைத்துறப்பதை சுதந்திரன் என்கிறீர்கள். ஆனா இந்த பழமைவாத இஸ்லாம், அம்மா நீங்கள் எல்லாம் எங்க கண்ணுங்க மாதிரி. அதனால கொஞ்சம் மூடி இருங்க என்கிறது.

  ஏதோ ஒரு மனுசன். உங்களப் பத்தி சொல்றதுக்கில்லை. மனிசனாவே தொடர்ந்து இருங்க என்பதுதான் என் வேண்டுகோள்.

  ReplyDelete
 10. ஓய்யாரோ,
  தொடையை காட்டற்துதான் சானியாவின் ஆசையாய் இருந்தால் நீங்கள் சொல்வது மாதிரி அவர் நடிக்க போயிருப்பார், டென்னிஸ் விளையாட அல்ல.

  ReplyDelete
 11. // Arvind Krish said... தொடையை காட்டற்துதான் சானியாவின் ஆசையாய் இருந்தால் நீங்கள் சொல்வது மாதிரி அவர் நடிக்க போயிருப்பார், டென்னிஸ் விளையாட அல்ல. //

  வாவ்!!!

  சானியா டென்னிஸ்தான் விளையாட வந்தார்; தொடையைக் காட்ட அல்ல.

  ஏன் தொடையைக் காட்டாம டென்னிஸ் வெளையாடக் கூடாதோ?

  ReplyDelete
 12. ஒசாமா பின்லாடனை ஏன் கண்டிக்கவில்லை என மட்டும் கேட்கும் இந்தக் கூட்டம். சானியா மிர்சாவைக் கண்டித்தால் கோபம் வருவது ஏன்? அது வலிக்குது இது இனிக்குதோ?

  ReplyDelete
 13. ஒசாமா =சானியா மிர்சா

  WOW !!!

  ReplyDelete
 14. http://www.tamilanexpress.com/
  qa/qa.asp

  ReplyDelete
 15. //ஏன் தொடையைக் காட்டாம டென்னிஸ் வெளையாடக் கூடாதோ?//

  ஆட்டத்தைப் பாருங்க சார்ன்னு சொன்னா தொடைய தான் பார்ப்பேன்னு அடம் பிடிப்பிங்க போல.

  அந்தம்மா இப்போ தான் நல்லா வெளையாண்டு முன்னேறி வருது, கொஞ்சம் ஆட விடுங்க சார்.

  விட்டா மூக்கரு கிராஃபிக்ஸ்ல போட்ட அளவுக்கு ஒரு உடையை மாட்டிவிட்டு ஆடுன்னு சொல்லுவிங்க போல.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...