Skip to main content

Posts

Showing posts from November, 2005

வேட்டை

பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்கும் தட்டுப்பட்டு கலவரத்தை கிளப்பியது. லெதர் சோஃபாவும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் ஒயர்களும் நினைவுக்கு வந்து கலவரமாக்கின. போதாதற்கு சிநேகிதி வீட்டில் வாஷருக்கு வரும் தண்ணீர் பைப் கடிக்கப்பட்டு வீடெல்லாம்
"தமிழ்நாடு" ஆன செய்தி பீதியைக் கிளப்பியது.

ஊரிலென்றால் தேங்காய் துண்டத்தையோ, மற்ற கவிச்சிகளையோ பொறியில் வைத்தால் லபக்கென்று ஓரிரவில் பிடிபடும். இங்கே பரிட்சை அட்டைக்கு போடும் க்ளிப் போல கிடைத்த ஒரு பொறியில், சீஸ் வைத்து காலையில் பார்த்தால், சீஸ் மட்டும் தின்னப்பட்டு காலியாய் கிடந்த பொறியை பார்த்தபோது வெறியாய் வந்தது. போனாப்போகுது என்று ஒரு பூனை வளர்க்கலாமா என்று கூட ஒரு யோசனை. கரப்பு இருந்தாலாவது, அழுக்கு இருப்பதை நாசுக்காக, அதர்ஷ்டக்கரப்பு/லக்ஷ்மிவண்டு என்று சொல்லிக் கொள்ளலாம். எலி இருப்பதை எப்படி சொல்ல..??. எலி விஷம் வைத்து பிடிக்கலாம் என்றால், அது பாட்டுக்கு எங்கேயாவது மறைவிடத்தில் போய் மரித்து விட்டால், பிறகு நாற்றம் தாங்காதே என்றும் ஒரு தலைவேதனை வேறு.

இறுதியாக டார்கெட் ஸ்டோரில் ஒரு ஸ்டிக்கர் அட்டை ( Glue pad) கிடை…

விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்

கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் நான் இந்தியாவின் மீதுள்ள என் மனத்தாங்கலைக் கூறி " என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்று எழுதிய வரிக்கு, ஒரு நண்பர் 'இவர்கள் இந்தியர்கள்' என்ற தலைப்பில் ஒரு வசைக் கட்டுரையே பதித்திருந்தார் . அந்த வரியை எழுதும்போதே இதனால் தமிழிணைய நண்பர்கள் கோபப் படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களின் கோபம் ஒரு நாகரீக வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்கிற பெரும்போக்கான நினைப்பில் தான் நான் அந்த பதிப்பை எழுதியிருந்தேன். ஆனால், வயது வித்தியாசம் பாராமல், சிலருடைய வசை சொற்கள் சிறிது எல்லை மீறியனவாக அமைந்திருந்தன.

தொடர் முடிந்தவுடன், நான் எழுதியதை குறித்த தர்க்கத்தை வைத்துக் கொள்வோம் என்று பொதுவாக நானும் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். இது நடந்து ஒரு மாததிற்குமேல் ஆகிறது. "சரி நடந்து முடிந்த கதை, இதை எதற்கு பெரிது பண்ண?" என்று என் வழியிலே போகலாம் என்று பார்த்தால், அதற்கு தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. ஆதலால் வேறு வழி தெரியாத நிலையில்தான் இந்த கட்டுரையை எ…

கிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி

அறிவிப்பு

ஒன்று இரண்டுமூன்றுநான்குஐந்துஆறுஏழு எட்டுஒன்பதுபத்து


மலேசியாவின் நடைமுறை நிலைமை, பூமிபுத்ரர்களுக்கான முதல் சலுகை, பல்கலைக்கழக படிப்புமுறை, இங்குள்ளவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான காரணங்கள், மலேசியத் தமிழர்களின் அவலநிலை, இங்கு இந்தியர்கள் எப்படி வந்து சேர்ந்தனர் என்பதை உணர்த்தும் பூர்வாங்க சரித்திர விளக்கம், சுதந்திரத்தை ஒட்டிய காலக் கட்டம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறை, 1969ல் நடந்த இனக் கலவரம், அதையடுத்து அமல்படுத்தபட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை (நியூ இக்கோனோமிக் போலிசி) அதன்பிறகு இன உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், சீன வம்சாவளியினர் மலாயா வந்து சேர்ந்ததை உணர்த்தும் விளக்கம், வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார வளப்பம், அவர்களின் கலாச்சார நடைமுறை இயல்புகள், ஒரு தெளிந்த செட்டியாரின் அறிவுரை, "வேறு எந்த நாட்டிலாவது புலம் பெயரலாமா?" என்று எங்கள் மனங்களில் ஓடிய எண்ண ஓட்டம், குடும்பத்தில் நடந்த விபத்து, அதையடுத்து புலம் பெயரல் பற்றி நாங்கள் எடுத்த முடிவு, தொழில்புரிவது என்று கிளம்பி நான் அடைந்த தோல்வி, வளைகுடாவில் வேலைக்கு சென்றது, அங்கு பிற NRI களோடு எ…

ஐடியா ..??

அடுத்த ஷங்கர் + சுஜாதா காம்பினேஷனுக்கு கரு (?!!) ரெடி என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்.

இந்த தலைமுறையிலோ அல்லது போன தலைமுறையிலோ இருக்கின்ற/இருந்த அறிவுஜீவிகளை "அப்படியே" வேண்டுமென்றால் க்ளோனிங்.. க்ளினிங் என்றெல்லாம் போக வேண்டும்.

சரி..அவர்கள் விந்துவையாவது சேமித்து வைத்து குட்டி அறிவுஜீவிகள் வேண்டுகின்ற அம்மாக்களுக்கு அளிக்கலாம் என்று ஆரம்பித்த யோசனையாம்..:-)

நிஜமாகவே சுவாரஸ்யமான கருதான் :-)

நன்றி : ஜில்லி அண்ணா என்றழைக்கப்படும் டீ.ஏ.அபிநந்தனன்

கிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டுமூன்றுநான்குஐந்துஆறுஏழு எட்டுஒன்பது

கருவிலேயே மாண்ட ஏற்றுமதி பிசினஸ்

எனக்கு 24 வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில் குமாஸ்தா நிலையில் இருந்து எக்ஸ்போர்ட் எக்ஸிக்யூட்டிவாக உயர்ந்திருந்தேன். சம்பளமும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகள் ஆகியிருந்ததால் சம்பள உயர்வுக்கு மேல் குடும்பச் செலவுகள் அதிகரித்திருந்தன. வேலை செய்வது போக பகுதி நேரத் தொழிலாக, இந்தியாவில் இருந்து ' கோஸ்டியும் ஜுவல்லரி ' தருவித்து ஏஜண்டுகள் வைத்து வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தோம். தொழில் ஒர் அளவுக்கு நன்றாகவே நடந்து வந்தது. இருந்தாலும் மிகவும் சிறிய தொழில் என்பதனால், அதிலிருந்து சொற்ப வருமானமே பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் centralisation of operation என்று கூறி என் நிறுவனத்தினர் நான் வேளை செய்த எக்ஸ்போர்ட் துறையை கோலாலம்பூரில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றினர். என்னால் கோலாலம்பூரில் இருந்து வேறு எங்கும் பெயர முடியாத நிலை. ஆனால் மற்றோரு பக்கம் நான் வாங்கிய சம்பளத்திற்கு ஒத்த சம்பளம் கோலாலம்பூரில் எனக்கு வேறு எங்கும…

அவள் விகடன் கட்டுரை

இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். என்னுடைய பழைய பதிவு ஒன்றில் அகஸ்மாத்தாக நான் அமெரிக்க "ஆல் பவர்ஃபுல்" அம்மையார் காண்டலீசா
ரைஸைப் பற்றி சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா என்று கேட்டிருந்தார்.

என்னுடைய சோம்பேறித்தனம் தான் ஜகப் பிரசித்தம் ஆயிற்றே. தவிரவும் இந்த மாதிரி ஆ.....ஆழமாக எழுதி எனக்குப் பழக்க்மும் இல்லை. இதோ..அதோ என்று இழுத்துக் கொண்டே போய், கடைசியில் அனுப்பி வைத்தேன். அது இந்த வாரம் அழகாக எடிட் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர் ஸ்டான்ஃபோர்டில் வேலை செய்ததையும், அவரைப் பற்றி இப்போது வந்திருக்கும் hillary vs Clinton புத்தகத்தைப் பற்றியும், அவருக்காக (அதிபர் தேர்தலுக்கு) ஆதரவு திரட்ட ஆரம்பித்திருக்கும் வலைத்தளங்கள் பற்றியும், அவரை "விவரமில்லாத புஷ்" எத்தனை நம்பி இருக்கிறார் என்பதையும் பற்றி எழுதி இருந்தது மட்டும் கத்தரிக்கப்பட்டு இருக்கிறது.

நம்ம மக்கள் பார்த்துவிட்டு ரெண்டு மொத்து மொத்தினால் சந்தோஷம்.

இந்தக் கட்டுரை எழுத…